சிவானந்தலஹரி ஸ்லோகம் 33 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 33)
சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 33 வது ஸ்லோகம்
नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः
पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम्।
स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते
का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ॥ ३३॥
நாலம் வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: ஸேவா நதிர்வா நுதி:
பூஜா வா ஸ்மரணம் கதா²ஶ்ரவணமப்யாலோகநம் மாத்³ருʼஶாம் ।
ஸ்வாமிந்நஸ்தி²ரதே³வதாநுஸரணாயாஸேந கிம் லப்⁴யதே
கா வா முக்திரித: குதோ ப⁴வதி சேத் கிம் ப்ரார்த²நீயம் ததா³ ॥ 33॥
அப்படீன்னு ஒரு ஸ்லோகம். பக்தியே முக்தி, அப்படீன்னு சொல்றார். ‘ஹே தேவ’, பரமேஸ்வரா, ‘ப⁴வத: ஸேவா’ – உன்னுடைய சேவை. உன் கோயில்ல போயி ஜலம் தெளிச்சு, கோலம் போட்டு அதெல்லாம் ‘நதிர்வா’ – உன்னை நமஸ்காரம் பண்றது ‘நுதி:’ – ஸ்தோத்ரம் பண்றது ‘பூஜா வா’ – பூஜை பண்றது, சிவாய நமஹ, பரமேஸ்வராய நமஹ அப்படீன்னு சொல்லி அவரை பூக்களை கொண்டு பூஜை பண்றது. ‘ஸ்மரணம்’ – உட்கார்ந்து சிவ நாம ஸ்மரணம் பண்றது. ‘கதா²ஶ்ரவணம்’ உன்னுடைய சிவபுராணத்தை படிக்கறது, சொல்றது, கேட்கறது. இந்த கதா ஸ்ரவணம் ‘ஆலோகனம்’ கோவிலுக்கு போய் ஸ்வாமி தரிசனம் பண்றது. இதெல்லாம் ஒரு தடவை பண்ணினாலே ‘மாத்³ருʼஶாம்’ என்னை மாதிரி இருக்கிறவாளுக்கு போறாதா? ‘நாலம் வா’ இந்த மாதிரி உன்கிட்ட பக்தி பண்ணிண்டு இருந்தாலே போருமே. ‘கா வா முக்தி’ இதை தவிர முக்தின்னு வேற என்ன இருக்கு? ‘இத: குதோ ப⁴வதி சேத்’ – இதன் மூலமாகவே அந்த முக்தி கிடைக்கும், அப்படீங்கறபோது ‘கிம் ப்ரார்த²நீயம் ததா³’ வேறென்ன வேண்டிக்கறது இருக்கு எனக்கு? ‘ஸ்வாமிந் அஸ்தி²ர தே³வதாநுஸரண ஆயாஸேந கிம் லப்⁴யதே’ வேற சாதாரண தெய்வங்களை போயி வழி படற ஆயாசம், அந்த ஸ்ரமப் பட்டு எனக்கு என்ன ஆகப் போறது? அப்படீங்கறார்.
இதுல ரெண்டு விஷயம் சொல்றார். உத்தம பக்திங்கறதே முக்தி அப்படீன்னு சொல்றார். இன்னும் ஒண்ணு ஏக பக்தி. ஈஸ்வரன் கிட்டயே ஏக பக்தியா இருக்கிறது.
இதை பார்த்தா எல்லாருமே இந்த மாதிரி தான் சொல்றான்னு தோணறது நமக்கு. ஆனா ஆதிசங்கரரை போன்ற ஒரு ஞானி, இந்த பக்தியே முக்தி, அப்படீன்னு சொல்றது, எப்படி நாம புரிந்து கொள்ள வேணும்னா,
மஹா பெரியவா, “சிவ சிவ பச்யந்தி ஸமம்’ அப்படீன்னு காமாக்ஷி கடாக்ஷம் கிடைச்சுதுன்னா, அவன் காட்டையும் மாளிகையையும் ஒண்ணாவே பார்ப்பான். பயமே போயிடும். மித்ரனையும் சத்ருவையும் ஒண்ணாகவே பார்ப்பான். கோபமே போயிடும். ஒரு யுவதியினுடைய உதட்டையும், ஓட்டாஞ்சில்லியையும் ஒண்ணாவே பார்ப்பான். காமமே அற்று போயிடும். காமாக்ஷியினுடைய கடாக்ஷம் கிடைத்தப் புருஷர்கள், அந்த மாதிரி குழந்தையாயிடுவா. ஞானியாயிடுவா, அப்படீன்னு சொல்றார். இது தான் பக்தியினுடைய அடைய வேண்டிய லக்ஷியம், goal. இதை அடையறதுக்கு இன்னொரு ஸ்லோகத்துல வழி சொல்றார்.
सत्कृतदेशिकचरणाः सबीजनिर्बीजयोगनिश्रेण्या ।
अपवर्गसौधवलभीमारोहन्त्यम्ब केsपि तव कृपया ॥97॥
ஸத்க்ருததேஶிகசரணா: ஸபீஜநிர்பீஜயோக நிஶ்ரேண்யா |
அபவர்க ஸௌதவலபீமாரோஹந்த்யம்ப கேபி தவ க்ருபயா ||97||
‘அம்ப கேபி தவ க்ருபயா’ அம்மா உன்னுடைய தயவுனால ஸத்க்ருத தேஶிகசரணா: – நல்லதொரு குரு நாதரை அண்டி, அவருடைய அநுக்ரஹத்துனால ‘ஸபீஜநிர்பீஜயோக நிஶ்ரேண்யா’ ஞானவானான அந்த குருநாதர் காண்பிச்ச ஸகுண நிர்குண உபாசனைகள் என்ற படி மூலமாக ‘அபவர்க ஸௌதவலபீமாரோஹந்தி’ மோக்ஷ மாடியில் ஏறுகிறார்கள். எல்லாம் உன்னோட கிருபைதான், அப்படீன்னு இந்த ஒரு ஸ்லோகம். அப்படி அடைய வேண்டிய லக்ஷ்யம் ஞானம் தான். அதை உதறி தள்ள முடியாது.
இந்த காலத்துல சில பேர், ‘அந்த காலத்துல மொட்டை அடிச்சுண்டு ஸந்யாசம்ன்னு சுத்திண்டு இருந்தா. எங்களோட ஆச்சார்யார் தான் உண்மையான பக்தினா என்னன்னு காண்பிச்சு கொடுத்தார்’, அப்படீன்னு பேசறா. ஆனா மஹாபெரியவா மொட்டை அடிச்சுண்டு காஷாயம் கட்டிண்டு தான் சுத்திண்டு இருந்தா. அவர் கண்ட, திளைச்சிண்டிருந்த அந்த பேரானந்தத்தை எல்லாரும் அடையணும், அப்படீங்கறதுக்காக அவா அந்த பக்தி மார்க்கத்துல சரியான வழி காண்பிக்கறா. அந்த மாதிரி ஆசார்யாளை தான் நாம பின் தொடரணும். மத்தவா பணத்துக்காகவும், கூட்டதுக்காகவும், பெருமைக்காகவும் இதே பக்திதான் முக்திங்கிறா, அதே பேச்சுதான் பேசறா. ஆனா நாராயண தீர்த்தர் ‘பக்தி, விரக்தி, ஞான த்வாரா முக்தி பலதே’ அப்படீன்னு சொன்னது, அப்படி அந்த ஞான அநுபூதி அடைந்த மஹான்கள் சொன்ன வார்த்தை வேற. மத்தவா சொல்ற வார்த்தை வேற. அவா கருணையினால சொல்றா.
போன சிவானந்தலஹரி ஸ்லோகத்தை சொன்ன போது பாதாரவிந்ததுலேர்ந்து 101 வது ஸ்லோகம் (புரா மாராராதி:) சொல்லி காரடையான் நோன்பு அன்னிக்கு இதை சொல்லி ஸதிபதிகள் ரொம்ப நாள் இந்த உலகத்துல சந்தோஷமாக கூடி வாழ்ந்து அப்பறம் அம்பாளோட சரணத்தை, பகவானை அடையணும்னு வேண்டிக்கலாம் அப்படீன்னு சொன்னேன். அதற்கு அப்பறம் பார்த்தா, அதற்கு அடுத்த இரண்டு ஸ்லோகங்கள்
पदद्वन्द्वं मन्दं गतिषु निवसन्तं हृदि सतां
गिरामन्ते भ्रान्तं कृतकरहितानां परिबृढे ।
जनानामानन्दं जननि जनयन्तं प्रणमतां
त्वदीयं कामाक्षि प्रतिदिनमहं नौमि विमलम् ॥102॥
”பதத்வந்த்வம் மந்தம் கதிஷு நிவஸந்தம் ஹ்ருதி ஸதாம்
கிராமந்தே ப்ராந்தம் க்ருதகரஹிதானாம் பரிப்ருடே |
ஜனானாமானந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்
த்வதீயம் காமாக்ஷி ப்ரதிதினமஹம் நௌமி விமலம் ||102||
அப்படீன்னு ஒரு ஸ்லோகம் ‘ பதத்வந்த்வம் மந்தம் கதிஷு’ நடக்கும்போது மெதுவா நடக்கிற அந்த இரண்டு பாதங்கள், ‘ நிவஸந்தம் ஹ்ருதி ஸதாம்’ ஸாதுக்களுடைய ஹ்ருதயத்துல எப்பவும் வசிக்கற அந்த காமாக்ஷியினுடைய பாதங்கள், இன்னும் வேற எங்க இருக்குன்னா ‘ கிராமந்தே ப்ராந்தம் க்ருதகரஹிதானாம் பரிப்ருடே’ ஒருவராலும் பண்ணப்படாத வேத வாக்கு என்ற சிகரத்துல உலாவும் அந்த பாதங்கள், ‘ ஜனானாமானந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்’ நமஸ்காரம் பண்றவாளுக்கு ஆனந்ததை கொடுக்கக் கூடிய அந்த பாதங்கள்
‘ஜனானாமானந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்’ ‘ஜனானாமானந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்’ ‘ஜனானாமானந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்’
இந்த ஒரு வரியை சொல்லிண்டே இருக்கலாம் போல இருக்கு. ‘ப்ரதிதினமஹம் நௌமி விமலம்’ அப்படி அந்த காரடையான் நோன்பு அந்த ஒருநாள் பண்ணா போறாது ‘ப்ரதிதினமஹம் நௌமி விமலம்’ தினமும் உன்னை ஸ்தோத்திரம் பண்ணுவேன் அம்மா, இந்த காமாக்ஷியினுடைய இந்த பாதாரவிந்த நூறு ஸ்லோகத்தை தினமும் சொல்லி நமஸ்காரம் பண்ணுவேன்னு அவர் சொல்றார்.
இதற்கு அடுத்த ஸ்லோகத்துலயும்
इदं यः कामाक्ष्याश्चरणनलिनस्तोत्रशतकं
जपेन्नित्यं भक्त्या निखिलजगदाह्लादजनकम् ।
स विश्वेषां वन्द्यः सकलकविलोकैकतिलकः
चिरं भुक्त्वा भोगान्परिणमति चिद्रूपकलया ॥103॥
இதம் ய: காமாக்ஷ்யாஶ்சரணநளினஸ்தோத்ரஶதகம்
ஜபேன்நித்யம் பக்த்யா நிகிலஜகதாஹ்லாதஜனகம் |
ஸ விஶ்வேஷாம் வந்த்யஃ ஸகலகவிலோகைகதிலகஃ
சிரம் புக்த்வா போகான் பரிணமதி சித்ரூபகலயா ||103||
அப்படீன்னு நித்யம் இந்த நூறு ஸ்லோகத்தை படிக்கின்றவன் நிச்சயம் காமாக்ஷியினுடைய வடிவமாகவே ஆகிவிடுவான் அப்படீன்னு சொல்றார். இப்படி உயர்ந்த அந்த நோக்கம், அந்த காமாக்ஷி வடிவமாக ஆகி காமக் குரோதங்கள் எல்லாம் அற்று, மஹாபெரியவா போன்ற ஸந்யாசிகள் எந்த பேரானந்தத்துல திளைச்சாளோ அந்த பேரானாந்தத்துல திளைக்கணும்னா.. நம்ம பக்தியை bed of roses னு நினைச்சுண்டு, சில பேர் சொல்ற மாதிரி நம்ம இஷ்டபடி இருக்கலாம்னு ஏமாந்து போகக் கூடாது. பகவான் கிட்ட பக்தி பண்ணனும்னா அவனுடைய வாக்கான வேதம், அதுல சொல்லியிருக்கின்ற ஸத்யம் வத, தர்மம் சர ல இருந்து ஆரம்பிச்சு எல்லா தர்மங்களையும் முடிஞ்ச வரைக்கும் பண்ணனும். முடியலையே அப்படீன்னா, பகவான் மன்னிப்பாரா இருக்கும். ‘அதெல்லாம் ஒண்ணும் follow பண்ண வேண்டியது இல்லை. பக்தி பண்ணுங்கோ’ அப்படீங்கறது தப்பான உபதேசம். அந்த மாதிரி வழிக்கு நாம போகக் கூடாது.
அதே மாதிரி ஸந்யாசிகளை பழிக்கறவா கிட்டயும் நாம போகக் கூடாது. ஏன்னா அந்த ஸந்யாசிகள் தாங்கள் உணர்ந்த அந்த பேரின்பத்தை, அனுபூதியை தான் பக்தி மார்க்கமா, அம்பாள் வழிபாடாக, பரமேஸ்வர வழிபாடாக, முருக வழிபாடாக, வேதத்து மூலமா பகவான் வெளிப்படுத்தினதை ஞானிகள் எடுத்துக் காண்பிக்கறா. அதனால அந்த ஞானிகளையும் பழிக்காம ரொம்ப humbleஆ நாம பக்தி பண்ணிண்டே போனா நமக்கு பெரிய ஒரு அநுக்ரஹம் கிடைக்கும் அப்படீங்கறது இந்த ஸ்லோகத்தினுடைய தாத்பர்யம்.
நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ
3 replies on “சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை”
அருமையிலும் அருமை
Sir, please continue Sivanandalahari. Regards, krishnaswamy
உமையோனே! ஒரு முறை மட்டும் உன் சேவை புரிதலும்,
உனை வணங்கிப் பாடவும், உன் பாதம் பணியவும்,
உனை எண்ணித் துதிக்கவும், உன் புகழ் கேட்கவும்,
உனைக்கண்டு மகிழவும் போதுமன்றோ எனக்கு
பேரின்பநிலைதனை அடைய அய்யனே! இவ்வழி
ஒன்றினை யானேற்றி அந்நிலையடைந்தால் வேறென்ன
வேண்டும் எனக்கு! நிலையற்ற தேவர்களைத் துதித்து
வேறேதும் பலனில்லை, உடல் தளர்வு ஒன்றே அன்றோ! 33