Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 37 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 37)

சிவானந்தலஹரி ல 36 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 37வது ஸ்லோகம் பார்க்கலாம். 

आम्नायाम्बुधिमादरेण सुमनस्सङ्घाः समुद्यन्मनो

मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः ।

सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां

नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७॥

ஆம்னாயாம்பு³திமாத³ரேண ஸுமனஸ்ஸங்கா⁴꞉ ஸமுத்³யன்மனோ

மந்தா²னம்ʼ த்³ருʼடக்திரஜ்ஜுஸஹிதம்ʼ க்ருʼத்வா மதி²த்வா தத꞉ |

ஸோமம்ʼ கல்பதரும்ʼ ஸுபர்வஸுரபிம்ʼ சிந்தாமணிம்ʼ தீமதாம்ʼ

நித்யானந்த³ஸுதாம்ʼ நிரந்தரரமாஸௌபாக்³யமாதன்வதே || 37 ||

அப்படி னு ஒரு ஸ்லோகம். இதுல, பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைஞ்சு அம்ருதத்தை அடைந்தார்கள். கூட நிறைய ஆஸ்சர்யமான வஸ்துக்கள்லாம் வந்தது, ஐராவதம், உச்சைஸ்ரவஸ், கௌஸ்துபம், அப்படினு…

இந்த “அம்ருத மதனம்”ங்கிற கதை ராமாயணத்துலயே இருக்கு. 

ராமாயணத்துல, விச்வாமித்ரர் ராம, லட்சுமணாளுக்கு நிறைய கதைகள் சொல்லுவார். பகீரதன் முயற்சி பண்ணி கங்கையை பூமிக்கு கொண்டு வந்த கதை, அப்படினு நிறைய கதை சொல்லுவார்… அதுக்கு நடுவுல இந்த அம்ருத மதனம் கதையும் சொல்றார். இந்த அம்ருத மதனத்துக்கு பல விதமான philosophical  அர்த்தம்லாம் சொல்லுவா. இங்க ஆச்சார்யாள் சொல்றது, ரொம்ப ரொம்ப அழகா இருக்கு!

“ஆம்னாயாம்பு³தி⁴ம் ஆத³ரேண மதி²த்வா” அப்படின்னா…

“ஆம்னாய அம்பு³தி” –  வேதம் என்ற பாற்கடலை, 

“ஆத³ரேண” – ரொம்ப நம்பிக்கையோடு ஆதரவோடு  சில பேர் கடையறாளாம். 

எப்படி கடையறாளாம்? யார் கடையறாளாம்?…

“ஸுமனஸ்ஸங்கா:” – நல்ல மனசு உள்ள பக்தர்கள், 

“ஸமுத்³யந்மன:” – எந்த மத்தை  போட்டு கடையறானா, நல்ல முயற்சி உள்ள மனசு.. விடாமுயற்சி வேணும் பக்திக்கு… அந்த பகவானையடைய, அப்படிங்கிறத காட்றதுக்கு,

“ஸமுத்³யந்மனோ மந்தா²நம்” – முயற்சி உள்ள மனசை மந்தர மலையாக்கி, 

“த்³ருʼடக்திரஜ்ஜுஸஹிதம்” – த்ருடமான பக்தி!

என்ன கஷ்டம் வந்தாலும் விடறதில்லை அப்படினு, அந்த குரு சொன்ன மார்கத்துல பகவானுடைய த்யானம் பண்றது… ‘”த்³ருʼடக்தி’ என்ற கயிறை வச்சுண்டு, முயற்சி உள்ள மனசு, தூய்மையான மனசு அப்படிங்கிற மந்த்ர மலையை போட்டு, வேதமாகிய கடலை கடைந்து, என்ன அடைகிறார்கள் அப்படினா? 

அவா ரொம்ப புத்திமான்கள் – “தீமதாம்” ..  

தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது பல வஸ்துக்கள் வந்தது. அது ஒண்ணொண்ணும் தனித்தனியா வந்தது, உனக்கு, எனக்குனு அம்ருதத்துக்கு சண்டை வேற போட்டுக்கறா! இங்க எல்லாத்துக்கும் எல்லாமே அடங்கிய ஒரே பொருளை அடைந்தார்கள். அது என்ன ? 

“ஸோமம்” -ஸோமம்னா சந்திரன், பாற்கடலை  கடைஞ்ச பொது சந்திரன் வந்தது, இங்க “ஸோமம்” அப்டிங்கிறதுக்கு “உமயா ஸஹ” =  உமையோடு கூடியவரான பரமேச்வரன்.

“கல்பதரும் ஸுபர்வஸுரபிம் சிந்தாமணிம்” – அந்த பரமேச்வரனே கல்பதருவாகவும், “கல்பதரு” – கற்பக விருக்ஷம்,

“ஸுபர்வஸுரபிம் ” – காமதேனு, 

“சிந்தாமணி”ங்கிறது ஒரு கல்.. காமதேனுங்கிறது ஒரு பசு.. இதெல்லாம் கேட்டதைக் கொடுக்கும்.

அந்த மூணுமாவே இருக்க கூடிய பரமேச்வரன். 

அந்த பரமேச்வரன் இன்னும் என்ன என்னவா இருக்கார்னா ?

“நித்யானந்த³ஸுதாம்”,

அந்த அம்ருதம் கிடைச்சது, அந்த அம்ருதத்தால் நித்யானந்தத்தை கொடுக்க முடியாது. ஏதோ, அஜரர்களாகவும், அமரர்களாகவும் கொஞ்ச காலத்துக்கு ஆக்கும். பிரளயம் வந்தா அதுவும் கிடையாது. தேவர்களுக்கு நீண்ட ஆயுசு, வியாதியும் இல்லாம ஆக்கும். ஆனா இந்த பரமேச்வரன்ங்கிற அம்ருதம்,

“நித்யானந்த³ஸுதாம்” – பேரானந்தம் என்னும் அம்ருதம். அந்த அம்ருதத்தையும்…

“நிரந்தரரமாஸௌபாக்³யம் ஆதந்வதே”

 

‘நிரந்தரரமா’னா மோக்ஷலக்ஷ்மி,  அந்த புத்திமான்கள், முயற்சியுள்ள மனமாகிய மந்தர மலையை கொண்டு, த்ருட பக்தி என்னும் கயிறை வைத்து கொண்டு, வேத மார்க்கத்தில் சென்று, அதாவது வேதம் ஆகிய பாற்கடலை கடைந்து, பரமேச்வரன் என்கிற வஸ்துவை அடைந்தார்கள். 

அந்த வஸ்துவே கல்பதருவாவும், காமதேனுவாகவும், சிந்தாமணியாகவும், அம்ருதமாகவும், மோக்ஷலக்ஷ்மியாகவும் இருக்கு! அப்டினு ஒரு அழகான ஸ்லோகம். 

இந்த அம்ருத மதனத்துக்கு பல வகையான உடம்பு,  பஞ்ச புலன்கள், யாரதுல தேவர்கள், யாரதுல அசுரர்கள், பல விதமான esotoric அர்த்தங்கள்லாம் சொல்றா. அனா இந்த அர்த்தம் நமக்கு ஒரு ரொம்ப useful basically. எல்லாத்தையும் காட்டிலும் இந்த அர்த்தம் நம்ப எடுத்துண்டா, நம்ப ” குரு காமிச்ச வழில பக்தி பண்ணா பகவான் கிடைப்பார்”..அப்டிங்கிற அழகான ஒரு செய்தியை ஆச்சார்யாள் சொல்றார்..

அத அவ்ளோ கவித்துவம்மா சொல்றார். ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம். எனக்கு இதை படிச்சபோது, மூகபஞ்சசதீல, மந்தஸ்மிதத்தை பாற்கடல்லா நிறைய வாட்டி சொல்றார். ஓர் இடத்துல, “உன்னுடைய  மந்தஸ்மிதத்தை பாற்கடல் சொல்லலாம். தூய்மையா, வெண்மையா இருக்கறதுனால பாற்கடல்னு சொல்லலாம்,  ஆனா,  பாற்கடல்ல இருந்து ஒரு தடவை, ஒரு ரஸம் வந்தது, அத பரமேச்வரன் மடக்குன்னு குடிச்சுட்டார். அதாவது அம்ருதம்”, வேடிக்கையா சொல்றார். “ஆனா உன்னுடைய மந்தஸ்மிதம் என்னும் பாற்கடல்ல இருந்து இனிமை, மாதுர்யம் எனும் ரஸம் எப்பவும் வந்துண்டே இருக்கு. அத குடிச்சுண்டே இருக்கார்”னு சொல்றார். அதனாலதான் அந்த விஷத்தை தைரியமா குடிக்க முடிந்தது! ஏன்னா உன் மந்தஸ்மிதம் என்கிற அந்த  பாற்கடல்லேர்ந்து  வர்ற மதுரம்  என்னும் ரசத்தை குடிச்சா, அம்ருதத்தை குடுச்சா, அந்த விஷத்தை குடுச்சதுக்கு சரியாப்போயிடும் அப்படினு சொல்றா மாதிரி ஒரு  ஸ்லோகம் இருக்கு.

67வது ஸ்லோகத்துல,  

அந்த பாற்கடல், உன் மந்தஸ்மிதத்துக்கு சமம் ஆகாது. ஏன்னா அந்த பாற்கடல், ஒரு மஹாபுருஷருக்கு ஒரு தடவை லக்ஷ்மியை கொடுத்தது! உன்னுடைய மந்தஸ்மிதம் நமஸ்காரம் பண்ற எல்லார்க்கும், லக்ஷ்மியும், சரஸ்வதியும் கொடுத்துண்டே இருக்கு.. இன்னிக்கும், அப்படினு ஒன்னு சொல்வார். 

97 வது ஸ்லோகம் மந்தஸ்மிதத்துல,  இந்த 37 சிவானந்தலஹரி மாதிரியே ஓரளவு இருக்கு, ” பக்தர்கள் மனமாகிய மந்த்ர மலையையும், பக்தியாகிய கையிறையும் போட்டு கடைஞ்சு, பரமேச்வரன் என்கிற அம்ருதத்தை எடுத்து ஆஸ்சர்யமான ஒரு வஸ்துவை அடைகிறோம்னு” ஆச்சார்யாள் சொல்றார், 

மூககவி சொல்றார், 

चेतःक्षीरपयोधिमन्थरचलद्रागाख्यमन्थाचल-

क्षोभव्यापृतिसम्भवां जननि ते मन्दस्मितश्रीसुधाम् ।

स्वादंस्वादमुदीतकौतुकरसा नेत्रत्रयी शांकरी

श्रीकामाक्षि निरन्तरं परिणमत्यानन्दवीचीमयी ॥ ९७॥

சேதக்ஷீரபயோதிமந்த²ரசலத்³ராகா³க்²யமந்தா²சல-

க்ஷோபவ்யாப்ருʼதிஸம்பவாம்ʼ ஜனனி தே மந்த³ஸ்மிதஶ்ரீஸுதாம் |

ஸ்வாத³ம்ʼஸ்வாத³முதீ³தகௌதுகரஸா நேத்ரத்ரயீ ஶாங்கரீ

ஶ்ரீகாமாக்ஷி நிரந்தரம்ʼ பரிணமத்யானந்த³வீசீமயீ || 97 ||

 

இதுல,  ஹே ஜனனீ!  காமாக்ஷி!

“சேத:க்ஷீரபயோநிதிமந்த²ரசலத்³ராகா³க்²யமந்தா²சல

க்ஷோபவ்யாப்ருʼதிஸம்பவாம் ஜனனி தே  மந்த³ஸ்மிதஸ்ரீஸுதாம் “

உன் மனசாகிய,  “க்ஷீரபயோநிதி” – பாற்கடல்ல, பரமேச்வரன் கிட்ட பிரேமை,அநுராகம் அப்படிங்கிற, 

“மந்தா²சல” – மந்த்ர மலையை போட்டு கடையறதுனால, அதாவது பரமேச்வரனைக் குறித்து நினைத்த உடனேஉட,  உன் மனசுல பிரேமை என்கிற மலை வந்து உன் மனமாகிய பாற்கடலை கடையறது. அப்போ ஒரு அம்ருதம் அதுல இருந்து உண்டாகறது. அதுதான் 

“மந்தஸ்மித ஶ்ரீஸுதாம்” – மந்தஸ்மிதம் என்கிற உத்தமமான அம்ருதம்,  அந்த காந்தியை…

 “நேத்ரத்ரயீ ஶாங்கரீ” – பரமேச்வரனுடைய மூன்று கண்களும்,

“ஸ்வாத³ம்ஸ்வாத³முதீ³தபகௌதுகரஸா” – ரொம்ப ஆர்வத்தோடு, 

“ஸ்வாத³ம் ஸ்வாத³ம்” – அந்த மந்தஸ்மிதம் என்கிற அம்ருதத்த குடிச்சு குடிச்சு,

“நிரந்தரம் பரிணமதி ஆனந்த³வீசீமயீம்” = அந்த ஆனந்த அலைய விடாம பரிணமிக்கிறது -வெளிப்படுகிறது. அப்படினு ஒரு அழகான ஸ்லோகம்.

அப்படி நம்ம பரமேச்வரனிடம் பக்தி பண்ணி அவரை அடைஞ்சோமானா, அவர் அம்பாளோட  மந்தஸ்மிதத்த பருகி ஆனந்தமா இருக்கார். அப்படி ரெண்டு பேரும் ஒண்ணு தான்,  

“உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே”

அப்படின்னு “ஆபிராமி அந்தாதி”ல சொல்றா மாதிரி, “இவா ரெண்டு போரையும் த்யானம் பண்ணா,  நமக்கு மோக்ஷலட்சுமி கை மேல கிடைக்கும்!” அப்படி னு சிவானந்தலஹரி ஸ்லோகத்துல சொல்றார்.

 நம: பார்வதி பதயே.. ஹர ஹர மஹாதேவ…

Series Navigation<< சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை”

இந்த ஸ்லோகம் சிவானந்தலஹரில பாற்கடலை எப்படி தேவா அசுராள்ளாம் கடைந்து என்ன்வெல்லாம் அதிலேர்ந்து வந்தது அதிலேர்ந்து பரமேச்வரனையே பெற்றனர் என்பதனை விளக்கும் அழகான ஸ்லோசாரம் இ
முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒன்று கூடி மந்தர பர்வதத்தை மத்தாகவும் வாசுகியக் கயிறாகவும் வைத்துக் கொண்டு, பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து சந்திரன் கல்பகவிருக்ஷம், காமதேனு, சிந்தாமணி, லக்ஷ்மி, அம்ருதம் இவற்றையெல்லாம் பெற்றனர். அதுபோல் வித்வான்கள் வேதங்களாகிற சமுத்ரத்தை, மனமாகிற மத்தில் பக்தியாகிற கயிறு கொண்டு கடைந்து மேலே சொன்ன எல்லாப் பொருள்களையும் விட ச்ரேஷ்டமான ஸ்ரீ பரமேச்வரனைப் பெற்றனர்! ஸர்வ வேதங்களாலும் விளக்கப்படுபவர் ஸ்ரீ பரமேச்வரன் ஒருவரே! பாற்கடலில் பல பொருள்கள் தோன்றின. வேத சமுத்ரத்தில் ஸ்ரீபரமேச்வரன் ஒருவரே தோன்றினார். இங்கு ஸோம: எனும் வார்த்தை இரு பொருளில் வரும் இங்கு , கல்பக பார்வதியுடன் கூடிய பரமேச்வரன் என்ற பொருள்! காமதேனு கற்பக வ்ருக்ஷம் , சிந்தாமணி போல் விரும்பியவற்றை அளிக்கக் கூடியவர் பரமேச்வரனே எனப் பொருள்! பாற்கடலில் உண்டான அமிர்தம் அறிஞர்களுக்கு அழிவற்ற ஆனந்தத்தை அளிக்கக் கூடியது அன்று! அதுபோல் அங்குண்டான லக்ஷ்மியும் ஓரிடத்தில் நிலைத்து நிற்பவள் அல்ல ! ஆனால் பரமேச்வரன் எல்லாருக்குமளவற்ற ஆனந்தத்தை அளிக்கக் கூடிய்ச் நிலைத்து நிற்கும் முக்திலக்ஷ்மி ரூபமாயும் இருக்கிறாள் என்பதன் சாரம் இந்த ஸ்லோகம் .!
இங்கு மந்தஸ்மித சதகத்திலிரு ந்து பொருந்து மா போல் இரண்டு ஸ்லோகங்களையும் அளித்திருப்பது மிக ரம்யமா இருல்கு! உமையுமுமை ஒரு பாகனும் ஏக உருவில் வந்து அர்த்த நாரீஸ்வராகவுவமிப்பதும் மிக நன்று,! இதுதான் கணபதியின் விசேஷம் தக்க பொருந்துமாறு ஸ்லோகங்களைக் கொணர்ந்து நம்மிடம் பகர்வது! இதிலேயே முத்துக் குளிப்பதால் எங்கெங்கே எதைப் பொருத்த வேண்டும் என்ற அறிவு!
சிவாய நம:
ஜய ஜய ஜகதம்ப சிவே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.