Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 38 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 38)

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம். ரொம்ப அற்புதமான ஒரு கவிதை, இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள். ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே

இந்த ஸ்லோகதில் பரமேஸ்வரனை சந்திரனா சொல்றார். சந்திரன்ங்கிறதுக்கு எப்படி அர்தங்றத சொல்றேன்.

“ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉”

ப்ராக்னா –  கிழக்கு. கிழக்குதிக்கில்,

“புண்யாசல” – புனிதமான மலைகளின் நடுவில், அந்த மார்கத்தில்,

“த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉” – காணப்படும் அம்ருத வடிவானவர், இது சந்திரன்.

“ப்ரஸன்ன:” – ரொம்ப தெளிவான சந்திரன், எப்பவுமே ப்ரசன்னமா  இருக்கும். நமக்கு மகிழ்ச்சிய கொடுக்கும்.

“ஶிவ꞉” – மங்களவடிவம். நமக்கும் சந்தோசத்தை கொடுக்கறது.

“ஸோம꞉” – சந்திரனோடய ஒரு பெயர்.

“ஸத்³கு³ணஸேவித:” –  ஸாதுக்கள், அந்த சந்திரனை எப்பவுமே  சேவிக்கிறார்கள். மஹாபெரியவா எப்பவுமே சந்திர வெளிச்சத்திலேயே போய் உட்கார்ந்துண்டு லலிதா சஹஸ்ரநாமம் முழுக்க   பாராயணம்பண்ணுவா.

“ம்ருʼக³த⁴ர꞉” –  சந்திரன்ல ஒரு அடையாளமா ஒன்னு இருக்கும் இல்லையா, அது மான் மாதிரி இருக்கு அப்டிங்கறதால, சந்திரனுக்கு  ம்ருʼக³த⁴ர꞉ னு பேரு.

“பூர்ண:” – பதினாறு கலைகளும் நிரம்பியதால பூர்ணமானவர்.

“தமோமோசக꞉” – இருளை போக்குபவர். சந்திரன் வந்தா இருள் போகும்.

“சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேத்³” –  இப்பேர்ப்பட்ட சந்திரன் காணப்பட்டால்,
“ஆனந்த³பாதோ²நிதி⁴꞉ விஜ்ருʼம்ப⁴தே” – ஆனந்தம் என்கிற கடல் பொங்கும். சந்திரன் வந்தா கடல் பொங்கும். ஸாதுக்களுக்கு, இந்த மாதிரி சந்திரனை பார்த்தால் ஆனந்தம்ங்கிற கடல் பொங்கும்.

“ஸுமனஸாம்ʼ வ்ருʼத்தி: ஜாயதே” – பூக்கள் எல்லாம் நன்னா.. சந்திரன் வரும்போது பூக்கள், மூலிகைகள் எல்லாம் நன்னா வளரும்.

அப்படினு இது சந்திரனுக்கு… இதே பரமேஸ்வரனுக்கு பார்க்கும்போது..

“ப்ராக்புண்யாசல மார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉” – எத்தனையோ ஜென்மங்கள்ல பண்ண மலை போன்ற புண்ணியத்தின் காரணமாக காணப்படுகிற அமுத வடிவானவர் பரமேஸ்வரன்.

“ப்ரஸன்ன꞉” –  எப்பவும் ப்ரசன்னமா இருப்பார்.

“ஶிவ꞉” – மங்கள வடிவம். நமக்கும் மங்களங்களை அருள்பவர்.

“ஸோம꞉” → “உமயா ஸஹ” – உமையோடு கூடினவர்.

“ஸத்³கு³ணஸேவித:” – ஸாதுக்களால் பூஜை செய்யப்படுபவர்

“ம்ருʼக³த⁴ர꞉” – பரமேஸ்வரன், கைல மான் வெச்சிண்டு இருக்கார், இடது கைல….

“பூர்ண:” – பரிபூர்ண வஸ்து, பரமேஸ்வரன்

“தமோமோசக꞉” →  “மோசக:” – அக்ஞானத்தை போக்குபவர்.

இப்பேர்ப்பட்ட பரமேஸ்வரனை ஒருவர் கண்டால்,

“சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேத்” – அப்பேர்ப்பட்ட பரமேஸ்வரனுடைய தரிசனம் கிடைச்சா, நம் மனதில் ஆனந்தம்ங்கிற கடல் பொங்கும்.. மனம் ஆகிய பூ மலரும். அதாவது, சித்தம் ஸுத்தி ஆகும்.  அப்படினு ஒரு அழகான ஸ்லோகம்.

போன ஸ்லோகத்தில, மனமாகிய மத்தை கொண்டு, பக்திங்கிற கயிறால பாற்கடலை கடைஞ்சு, பரமேஸ்வரன் என்ற பேரானந்தத்தை கொடுக்கும் அமிர்தத்தை, முக்திலக்ஷ்மியும் பெறுகிறார்கள், புக்திமான்கள்னு சொன்னார்.

இந்த ஸ்லோகத்தில, பரமேஸ்வரன்ங்கிற சந்திரனை, அதிகமான புண்ணியம்ங்கிற, மலைக்கு நடுவுல உதயமாகும், அப்படினு சொல்லி…,  பரமேஸ்வரன்ங்கிற  சந்திரன தரிசனம் பண்ணலாம், அதிகம் புண்ணியம் பண்ணா, அப்படினு சொல்றார்.

அப்படி நம்ம, ப்ராக்ருதமா கண்ல பார்க்கர சந்திரன். அந்த சந்திரனோட compare பண்றார். இதே மாதிரி, மூக கவியும் மந்தஸ்மித்தை, சந்திரனுக்கு, ஒரு பத்து ஸ்லோகத்தில ஒப்புமை சொல்றார், ஆனா அத பார்க்கும்போதே, என்ன விசேஷங்கறதும் புரியறது. இப்ப 20வது ஸ்லோகம்  மந்தஸ்மிதம் ஷதகத்ல,

वक्त्रेन्दोस्तव चन्द्रिका स्मितततिर्वल्गु स्फुरन्ती सतां
स्याच्चेद्युक्तिमिदं चकोरमनसां कामाक्षि कौतूहलम् ।
एतच्चित्रमहर्निशं यदधिकामेषा रुचिं गाहते
बिम्बोष्ठद्युमणिप्रभास्वपि च यद्बिब्बोकमालम्बते ॥ २०॥

“வக்த்ரேந்தோ³ஸ்தவ சந்த்³ரிகா ஸ்மிதததிர்வல்கு³ ஸ்பு²ரந்தீ ஸதாம்ʼ

ஸ்யாச்சேத்³யுக்திமித³ம்ʼ சகோரமனஸாம்ʼ காமாக்ஷி கௌதூஹலம்|

ஏதச்சித்ரமஹர்நிஶம்ʼ யத³தி⁴காமேஷா ருசிம்ʼ கா³ஹதே

பி³ம்போ³ஷ்ட²த்³யுமணிப்ரபா⁴ஸ்வபி ச யத்³பி³ப்³போ³கமாலம்ப³தே ||”

அப்படினு சொல்றார். அதாவது, “வக்த்ரஇந்து” – முகமாகிய சந்திரனிடமிருந்து வெளிப்படும் நிலவாக

ஹே காமாக்ஷி! உன்னுடைய மந்தஸ்மிதத்தை,

“ஸ்மிதததி:” – அத சொல்லலாம், “யுக்திமித³ம்” யுக்தம் தான். ஏன்தெரியுமா ?

“ஸதாம்” – சாதுக்கள் என்ற “சகோரமனஸாம்” – சகோரபக்ஷினுடைய மனசு இந்த சந்திரன பார்த்த உடனே,

“கௌதூஹலம் ஸ்பு²ரந்தீ” –  இந்த சாதுக்கள் மனசு என்கிற சகோரப்பக்ஷி இந்த மந்தஸ்மிதமாகிய சந்திரிகைய தான் குடிக்கறது. வேற எதையுமே குடிக்காம இருக்கறதுனால, இது சந்திரிகைனு சொல்றது பொருத்தமா இருக்கு.

“ஏதச்சித்ரம்” –  ஆனா, இது ஒரு ஆஸ்ச்சர்யம். என்ன தெரியுமா? எது அஹர்நிசம் அதி⁴காமேஷா ருசிம்ʼ கா³ஹதே”

“அஹ :”  – பகல், “நிஷா” – இரவு,

இந்த சந்திரிகை உன் மந்தஸ்மிதம் சந்திரிகை இரவும் பகலும் அதிகமா ஒளிவிடுகிறதே!. .அப்படிங்கிறார். சந்திரன் ராத்திரில தான்ஒளிவிடும், பகல் வந்தா, தெரியவே தெரியாது. ஆனா, உன்னுடைய மந்தஸ்மித சந்திரிகை எப்பொழுதும் ஒளிவிடுகிறது.

“பி³ம்போ³ஷ்ட²த்³யுமணிப்ரபா⁴ஸ்வபி ச யத்³பி³ப்³போ³கமாலம்ப³தே” “பி³ம்போ³ஷ்ட²ம்” – கோவை பழம் போல உதடு, உதட்டுல இருந்து தான் மந்தஸ்மிதம் வருது, அந்த கோவைபழம்போல உதடுங்கிறது,

“த்³யுமணி” அப்படினு அழகான ஒரு வார்த்தைய use பண்றார்.  த்³யுமணி” னா பகலை உண்டாகிற  மணி, அதாவது சூரியன்.

இந்த கோவைப்பழம் போல இருக்குற உதடு சூரியன் மாதிரி இருக்கு. அந்த சூரியன் பக்கத்துல இருக்கற இந்த மந்தஸ்மித சந்திரிகை, ரொம்ப சூரியன்பக்கத்துல சந்திரன் இருந்தா தெரியவே தெரியாது,  ஆனா அந்த சந்திரன், மந்தஸ்மித சந்திரன், அந்த சூரியன் பக்கத்துல இருக்கும் போது கூட ரொம்ப அழகா ஒளிவிடுகிறது, அப்படினு சொல்றார்.

இந்த ஸ்லோகத்தை கொண்டு, அந்த  பரமேஸ்வரன்ங்கிற  சந்திரன், மந்தஸ்மிதம் என்கிற சந்திரிகை, அப்படிங்கிறது, நாம கண்ணால பார்க்கற சந்திரன் இல்ல. இந்த கண்ணால பார்க்கற சந்திரன், பகல்ல ஒளிவிடாது. அது வளர்ந்து, தேய்ந்து, அப்படி ஆயிண்டு இருக்கும். சூரியன் வந்தா மறைஞ்சிடும்.

அப்படிலாம், நம்மோடய material life மாதிரி இருக்கு அது. நமக்கு material life ல ஒரு சுகம், துக்கம்னு மேல, கீழ போயிண்டு இருக்கு. அதுக்கு ஏத்தா மாதிரி நம்மோடய மனசும் ஆடறது. நமக்கு ஒருசுகம் வந்ததுனு நெனைச்சாக்கூட, அத விட இன்னொருத்தர் சுகமா இருக்கார்னு நெனச்சாலே, நம்மோட சுகம் கொறஞ்சி போய்டறது.

இப்படிலாம் நம்முடைய material life இருக்கு. ஆனா, spiritual enlightment அப்படிங்கிறது.. அது தான், பரமேஸ்வரன் என்கிற சந்திரனாகவும், மந்தஸ்மிதம்ங்கிற சந்திரனாகவும் சொல்றார்.. கவிகளெல்லாம் சொல்றா. அது, மாறாத, துக்கக்கலப்பு இல்லாத, ஒரு பேரானந்தம். அதனாலதான், அத, இரவும், பகலும் ஒளிவிடும் சந்திரக்கைனு சொல்றா! ஞானம்ங்கிறது சூரியனா இருந்தா கூட, மஹான்கள், ஞானத்தினால இருளை போக்கிக் கொண்டு, அதோட இல்லாம.. சில… ரொம்ப உத்தமமான மஹான்கள்… மஹாபெரியவா மாதிரி இருக்கறவா, அந்த ஞானத்த அடைஞ்ச பின்னும், ஜனங்களோடயே க்ஷேமத்திற்காக, அந்த சந்திரன்ங்கிறது எப்படி… வெண்மையும், குளமையம், இனிமையுமா, மத்தவாளுக்கு தாபத்தை போக்குறதோ…

அந்த மாதிரி, அவா, உலகத்தில இருந்ததுண்டு… ஞானம் வந்த பின், அவாளுக்கு இந்த உலகத்தில ஆக வேண்டியதே ஒன்னும் இல்ல. இருந்தாலும், அவா…. அந்த சூரியன் பக்கத்தில இருக்கற சந்திரன் ஒளி விடுவது போல, ஞானத்தோடு இருந்தாலும், ரொம்ப குளுமையா, ஜனங்களுக்கு காட்சி குடுத்துண்டு, அவாளுடைய தாபத்தை போகிண்டு, அவாளோடயே அஃஞானத்த போக்கிண்டு… பரம ஷாந்தமா, இவ்வளவு ஆனந்தமா இந்த உலகத்தில இருக்கலாம்…. அப்படினு, காமிச்சிண்டு இருக்கா.

அதனால நம்மளும்..

“உடுக்கத் துகில் வேணும்,
நீள்பசி அவிக்கக் கனபானம் வேணும்…..,
….. உள் இருக்கச் சிறுநாரி வேணும்”. (திருப்புகழ்)

இப்படி…. இது  வேணும், அது வேணும்னு கேட்டுண்டு, இந்த உலகத்தில ஒரு குடும்பஸ்தனாகி, பெரிய ஸம்ஸார சக்ரத்தில மாட்டிண்டறோம்.

“க்ருபை சித்தமும் ஞான போதமும்
அழைத்து தர வேணும் ஊழ் பவ
கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே” –  (திருப்புகழ்)

அப்படினு முடிக்கறார் அவர். அந்த மாதிரி, இந்த ஸம்ஹாரங்கிற மலைல நம்ப சுத்திண்டே இருக்கறோம்.  இதிலிருந்து நம்மள விடுவிச்சு….,

“க்ருபை சித்தமும் ஞான போதமும் –  ஹே முருகா ! நீ என்னிக்கி கொடுப்பியோ, அந்த நாள் தான் ஒரு நாள்”, அப்டிங்கறார்.

நமக்கு முப்பது நாள்ல ஒரு நாள் தான் பௌர்ணமி வர்றது. அந்த மாதிரி இல்லாம, ஞானிகளுக்கு அந்த மந்தஸ்மித சந்த்ரிகை, அம்பாளோட மந்தஸ்மித சந்த்ரிகை, முப்பது நாளும் தெரிஞ்சிண்டு இருக்கு.

அந்த மாதிரி, எனக்கு ஞான போதம் எப்பவரும் ? அந்த நாளே ஒரு நாள். அந்த அனுக்ரஹம் இன்னிக்கே பண்ண மாட்டியா ?.. அப்படினு நாம நம்முடைய spiritual path ல complacency ங்கிற ஒரு சோர்வு அடையாம, ஏதோ கண்டுண்ட்டோம்னு நினைச்சுக்காம, ஒவ்வொரு நாளும், அந்த, “க்ருபை சித்தமும், ஞான போதமும் அழைத்து தர வேணும்” அப்படினு வேண்டின்டே இருக்கணும், அப்படினு தோன்றது.!

நம: பார்வதீபதயே ! ஹர ஹர மஹாதேவ !!

Series Navigation<< சிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை >>

7 replies on “சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை”

Shivaya namah
Just listening to the explanation gives a wonderful feeling. Very touching part is where,
one must not be complacent in looking up for gaining that true knowledge.
It is really an excellent tonic to listen to your explanation for a tired(mind) mundane life to tread in the devotional path.. 🙏 🙏 🙇 🙇 🌹 🌹 🌿

கிருபை சித்தமும் ஞான போதமும் என்ற நிலை அடைய நாம் பெரியவா சுவாமிகள் அளவுக்கு ஞானிகளா இருக்க வேண்டும்! அந்த ஞானம் பகவான் பாதாரவிந்தாத்தில் சரணாகதி அடைந்தால் , உலக பசு பாச பந்தம்
இவற்றிலிருந்து விடுபட்டு (total surrender,steadfast clinging to His Holy Feet ) என்று சொல்லும் அளவு மனம் வாக்கு காயம் இவற்றினால் அவரிடம் ஈடுபட்டால் அந்த கிருபையும் ஞான போதமும் கிடைக்கும் கிடைக்கும்,! அது தபஸ் !!
இதனை விளக்கமாக எடுத்துச் சொன்ன கணபதிக்கு நன்றி மிகப் பல.

Thanks for sharing this on this Pournami.
This one is special for Parameshwaran, tomorrow being Aarudhra dharshanam, we can recite these Shivananda lahari slokams and plead for his blessings to yearn and earn for “Nischala Bhakti” .
As usual your explanation takes me to a different plane, gives a different experience each time I listen. 🙏🙏🌹

மஹான்கள் ஶ்ரீ பரமேஸ்வர் தர்சனத்தால் உவகை அடைகிறார்கள் .இதனை உருவகப் படுத்தி ஆசார்யாள் இங்கு சொல்கிறார் ! பூர்ண சந்திரன் கிழக்குத் திக்கில் உதயமாகி, ஆகாயத்தில் தோன்றுகையில் சமுத்திரம் பொங்குகிறது. சந்திரன் உடல் அமிர்த.மயம் என்று கூறப்படுகிறது. சந்திரணிடம் மாசு ஏதும் இல்லை.ஆனந்தமலிப்பவன் ! நக்ஷத்ர கணங்களால் சூழப்பட்ட வன் . மானைத் தரிப்பவன் . இருளைப் போக்க வல்லவன் .
இங்கு சந்திரனாக உவமிக்கப் பட்ட ஶ்ரீ பரமேஸ்வரன், நம் முன் ஜென்ம புண்ய வசத்தால் மட்டுமே தோற்றம் கூடியவர். களங்கம் அற்றற்றவர் ! சர்வ வயாபி ! அஞ்ஞானத்தை அறவே ஒழிப்பவர். மனம் என்கிற ஆகாசத்தில் அவர் பார்க்கப்பட்டு விட்டால் ஆனந்தமாய் கடலில் மூழ்கிவிடலாம் !
எப்படிப்பட்ட வர்ணனை ! சிவ தியானம் இருந்தால் மேலே சொன்னா யாவும் நம்மை வந்தடையும் ,!
பெரியவா prathyaksha சாக்ஷி ! ஸ்வாமிகள் பெரியவா வாழ்ந்த நடைமுறை நமக்கு ஒர் படிப்பினை !
நாம் அந்த நிலை அடைய மனம் ஒன்றி தியானித்து வழிபட நமக்கு மஹாங்கள்தாம் வழிகாட்ட வேண்டும் !

மந்தஸ்மித சதகம் ஸ்லோகம் இந்தக் காட்சியை உறுதி படுத்துவதாக உவமித்திருப்பது சாலப் பொருத்தம் !
கணபதி தக்க உவமையுடன் ஒருங்கிணைத்து விளக்குவது அற்புதம்,!!
ஜய ஜய சங்கரா….
ஜய ஜய ஜகதம்ப சிவே…

ரொம்ப அருமையான உவமை.இவ்வளவு நாளா சந்திரனை பார்க்கும் போது அம்பாளை நினைக்க தோன்றும், பரமேசுவரோடு ஒப்பிட்டு,இரண்டுபேரையும் சேர்த்து அர்தநாரியாக தரிசனம் பண்ணவச்ச கணபதி சாரோட விளக்கம் அபாரம்.

மிகவும் அற்புதமான ஸ்லோகம். அருமையான விளக்கம். மூகபஞ்சசதி மேற்கோள் மிக அருமை.

போன ஸ்லோகத்தில் ஆச்சார்யாள் பரமேச்வரனை சந்திரனாகவும், அம்ருத ஸ்வரூபமாகவும் கூறிப்பிடுகிறார். இந்த ஸ்லோகத்திலும் பரமேச்வரனை சந்திரனாக கூறுகிறார். பரமேஸ்வரனுக்கும் சந்திரனுக்கும் அழகான ச்லேஷாலங்காரமாக சொல்கிறார்.

ஆச்சார்யாள் மனமாகிய தாமரையில் அம்ருத வடிவமாக பரமேச்வரனை தர்சிக்கிறார். போன ஜென்மங்களில் பண்ணிய புண்ணிய வசத்தால் இப்படிப்பட்ட தரிசனத்தை காண்பதாக கூறுகிறார் ஆச்சாரியாள்.

பரம்பொருளின் எண்ணமாக, ஆற்றல் சக்தியாக, பிராண சக்தியாக இருப்பவள் அம்பாள். ஜீவனுக்குள் இருக்கும் ஆற்றல் சக்தியும் அவளே. ஜீவனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் சக்தியை எழுப்பி பரமேஸ்வரனிடம் சேர்ப்பிப்தற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவையை அருளியிருக்கிறார். அதை நாம் மார்கழி மாதத்தில் பாராயணம் செய்கிறோம்.

அம்பாளை யோக மார்க்கத்தில் உபாஸனை செய்யும்போது முடிவாக சிரஸ் உச்சியில் ப்ராணசக்தி பரமாத்ம சக்தியோடு இரண்டறக் கலந்து மோக்ஷம் சித்திக்கும். அந்த ஸமயத்தில் அங்கே அம்ருததாரை பெருக்கெடுக்கும்.

அப்படிப்பட்ட தரிசனத்தைத்தான் இங்கே ஆச்சாரியாளும் தர்ஷிக்கிறார்🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.