சிவானந்தலஹரி ஸ்லோகம் 39 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 39)
धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥
த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
மானஸபுண்ட³ரீக நக³ரே – எனது மனத்தாமரையாகிய நகரத்தில் .. பட்டணத்தில்
மான்யே – எல்லாராலும் மதிக்கப்படும்
ராஜாவதம் ஸே – ராஜர்களுக்குள் ஸ்ரேஷ்டரான மஹாராஜனான பரமேஸ்வரன் கைவல்ய நாதே – தனி ஒரு ஏக சக்ரவர்த்தி .. அவருக்கு மேல ஒருத்தரும் கிடையாது.. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” னு சொன்ன மாதிரி .. எனக்கு தலைவன் பரமேஸ்வரன் அப்டின்னு அப்பர் பெருமான் சொல்றார். அந்த மாதிரி சங்கரர் சொல்றார். என் மனத்தாமரையில் நான் எல்லாருக்கும் மேலான ஏக சக்ரவர்த்தியாக கைவல்ய நாதனான பரமேஸ்வரனை ராஜாவாக நினைக்கிறேன். அப்படி இருக்கறதால, கைவல்ய நாதே ஸ்திதே… பரமேஸ்வரன் எனக்கு தலைவனாக நாதனாக இருப்பதால்
தர்மோ மே சதுரங்கசுரஸ்து சரித: – நாலு பாதங்களுடன் கூடிய தர்மம் நன்றாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு நல்ல ராஜா இருந்தான்னா அந்த தேசத்தில தர்மம் நன்னா அனுஷ்டிக்கப்படும்….காலா காலத்துல மழை பெய்யும். நல்லா பயிரெல்லாம் விளையும். பகைவர்களெல்லாம் தோற்கடிக்கப்படுவார்கள். துஷ்டர்கள் எல்லாம் அங்கேர்ந்து ஓடிப்போய்டுவார்கள். அதை வச்சிண்டு இந்த ஸ்லோகத்துல நாலு பாதங்களோடு கூடிய தர்மமானது .. தர்மத்துக்கு நாலு பாதங்கள் என்னன்னா “ தபஸ், சௌசம் , தயா, சத்யம் “, அதாவது தவம், சுத்தம்ங்ர சௌச்சம், தயை,சத்யம் ஆகிய நாலு பாதங்களில் நிற்கும் தர்ம தேவதை ஸுசரித்தஹ: .. நன்றாக அனுஷ்டிக்க முடிகிறது.
பாபம் விநாஶம் க³தம் – பாபம் என்ற எதிரி கொல்லப்பட்டுவிட்டான். காமக்ரோத⁴ மதாதை³ய: விக³லித:- காமக்ரோத மதம் போன்ற ரஜோ குணத்திலிருந்து ஏற்படக்கூடிய துஷ்டர்கள் எல்லாம் என்னுடைய மதத்திலிருந்து ஓடிப்போய்விட்டார்கள்.
காலா: ஸுகா² விஷ்க்ருதா: எல்லா காலங்களும் இன்பத்தை அளிக்கின்றன.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார்
அவர்க்கு மிகவே.
என்று திருஞானசம்பந்தர் பாடின மாதிரி நாம் மனசுல பரமேஸ்வரனை வச்சிருந்தால் பரமேஸ்வரனுடைய அடியார்களாக இருந்தால் எல்லா க்ரஹங்களும் எல்லா திதிகளும் எல்லா நக்ஷத்திரங்களும், எல்லா தெய்வங்களும் நமக்கு நன்மையே செய்யும். எல்லா நாளும் நல்ல நாளே அப்டின்னு அந்த சம்பந்தர் பாடின மாதிரி சங்கரர் சொல்றார்.
காலா: ஸுகா² விஷ்க்ருதா ஞானானந்த³ மஹௌஷதி – ஞானானந்தம் என்ற பயிர் சுபலித: நல்ல பலனை கொடுக்கிறது. அதாவது நன்னா விளையறதுனு சொல்ரார்.
ஸ்வாமிகள் சொல்வார். “நாடாளு நாயகா வயலூரா”னு அருணகிரிநாதர் பாடறார். நாடாளு நாயகன் முருக பக்தர்களுக்கு வயலூரன் தான் முருகப்பெருமான் தான்.. மற்ற இந்த காலத்தில இருக்கறவாளை பார்க்கவேண்டியதில்லை அப்டின்னு சொல்வார்.
அதே மாதிரி பரதன் ராமர் கிட்ட “யாவதா வர்த்ததே சக்ரம் யாவதீ ச வசுந்தரா | தாவத் த்வமிஹ சர்வஸ்ய ஸ்வாமித்வம் அனுவர்த்தயா ||“ எது வரைக்கும் கால சக்ரம் சுத்தறதோ, எது வரைக்கும் இந்த பூமி மலைகளோடும் நதிகளோடும் இருக்கறதோ அது வரைக்கும் நீயே எங்களுக்கு ராஜாவா இருக்கணும் ராமா னு வேண்டிக்கறான். .. பரதன் ராமர் வனவாசம் முடிச்சு திருப்பி வந்தவுடனே .. ராமரும் ததா அப்படியே ஆகட்டும் னு சொன்னார். அதனால ராம பக்தர்களுக்கு ராமன் தான் ராஜா. ராம ராஜ்யத்துல இருக்கும் போது நாம ராம மயமாக ஆனந்த மயமாக இருக்கலாம் அப்படின்னு சொல்வார் ஸ்வாமிகள். அது மாதிரி அவர் இருந்தார்.
ராமோ ராமோ ராம இதி ப்ரஜானாம் அபவன்.. கதா|
ராம பூதம் ஜகதபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி || ஸ்வாமிகள் அந்த 1950 லேர்ந்து .. அடுத்த 50 வருஷம் தான் நாஸ்திகமும் ப்ராமண த்வேஷமும் ரொம்ப ஜாஸ்தியா இருந்த ஒரு காலம். ஆனா ஸ்வாமிகள் எப்படி இருந்தார்னா எதையும் அவர் வெய்ய மாட்டார்.. எந்த ஒரு ப்ரச்சனைக்குள்ளயும் போக மாட்டார். எல்லாத்தையும் பொருத்துப்பார். ராமனை நம்பி இருந்தார். கொஞ்சம் கூட தைன்னியம் இல்லாம தைரியமா இருந்தார். அவரை பகவான் காப்பாத்தினார்.
இந்த மூகபஞ்சசதி பாதாரவிந்தத்துல ஒரு ஸ்லோகம் வரும். 72வது ஸ்லோகம்.
दधानैः संसर्गं प्रकृतिमलिनै: षट्पदकुलैः
द्विजाधीश श्लागाविधिषु विदधद्भिर्मुकुलताम् ।
रजोमिश्रै: पद्मैर्नियतमपि कामाक्षि पदयोः
विरोधस्ते युक्तो विषमशरवैरिप्रियतमे ॥72||
த³தா⁴னை꞉ ஸம்ʼஸர்க³ம்ʼ ப்ரக்ருʼதிமலினை: ஷட்பத³குலை꞉
த்³விஜாதீ⁴ஶ ஶ்லாகா³விதி⁴ஷு வித³த⁴த்³பி⁴ர்முகுலதாம் .
ரஜோமிஶ்ரை: பத்³மைர்நியதமபி காமாக்ஷி பத³யோ꞉
விரோத⁴ஸ்தே யுக்தோ விஷமஶரவைரிப்ரியதமே ||72||
ஹே காமாக்ஷி! விஷமஶரவைரிப்ரியதமே – பஞ்ச புஷ்ப பாணங்களை கொண்ட மன்மதனுக்கு எதிரியான பரமேஸ்வரனுடைய ப்ரியதமே.. அன்புக்குரியவளே.. உனக்கு இந்த தாமரைகிட்ட விரோதம் இருக்கு. அதாவது தாமரையோட அழகோட போட்டி போட்டுண்டு அழகா இருக்கா அப்டின்னு சொல்றார். இந்த விரோதம் “பத³யோ꞉
விரோத⁴ஸ்தே யுக்தோ” – பொருத்தமானது தான். ஏன் தெரியுமா. இந்த தாமரை “த³தா⁴னை꞉ ஸம்ʼஸர்க³ம்ʼ ப்ரக்ருʼதிமலினை: ஷட்பத³குலை꞉” எப்பவும் மலினமாம். “ஷட்பத³குலை꞉”- வண்டுகளின் கூட்டத்தோடு இந்த தாமரை “ஸம்ʼஸர்க³ம் த³தா⁴னை꞉” Friendship வச்சுண்டிருக்கு. .. “த்³விஜாதீ⁴ஶ ஶ்லாகா³விதி⁴ஷு” – த்³விஜாதீ⁴ஶ: அப்டினா சந்திரன். “ஶ்லாகா³விதி⁴ஷு” – சந்திரன் நன்னா உதிக்கும் போது “முகுலதாம் வித³த⁴த்³பி” – தாமரை வாடிவிடுகிறது. “ரஜோமிஶ்ரை:” – தாமரைல மகரந்தம் இருக்கு இப்படி ரஜஸோடு கூடியதாக இருக்கிறது.
இதுக்கு இன்னொரு வேடிக்கையான அர்தம் என்னன்னா..”ப்ரக்ருதி மலினை:” – ரொம்ப பாபத்தில் மலிந்திருக்கும் பேரோடு உன்னுடைய பாதம் என்னைக்கும் தொடர்பு வச்சுக்காது.. ப்ராமணர்களுடைய .. “த்³விஜாதீ⁴ஶ:” — அப்டிங்க்ரதுக்கு ப்ராமணர்களுடைய பெருமையை கண்டு அவாளுக்கு நன்மை ஏற்படுவதை கண்டு ரொம்ப சந்தோஷ படும்.. இது மாதிரி வாடாது.. “ரஜோமிஶ்ரை:” –ரஜஸ் என்பது காம க்ரோதத்துக்கு காரணமான அந்த ரஜோ குணத்தை உன்னுடைய பாதம் வெறுக்கும். எப்பவுமே சத்வ குணம் இருக்கறவா தான் உன்னுடைய பாதத்துக்கு பக்கத்துல வர முடியும். அப்படி அந்த… யாரோட சேரலாம்.. யாரோட விரோதம் பாராட்டணும் அப்டின்னு இந்த ஸ்லோகத்துல சொல்லிகுடுக்குறார் மூக கவி.
வேதத்தையும், தர்ம சாஸ்திரத்தையும், இதிகாச புராணங்களையும் கேலி பேசறது பாவம். அப்பேர்பட்ட பாவிகள் ப்ராமணர்கள்ட்ட த்வேஷம் பண்றவா, எப்பவும் காமக்ரோதத்துலயே மூழ்கி காமினி காஞ்சனத்துல இருக்கறவாளோடு தொடர்பு வச்சுக்க கூடாது.. அவாளோடு விரோதம் பாராட்டறதுல தப்பு இல்லை. விரோதம்னா நம்ப போய் அவாகிட்ட முட்டி மோத வேண்டாம்.. அவாள்ட்டேர்ந்து விலகி இருக்கணும். நம்ப அம்பாளோட சரணம் கிடைக்கணுமானால், நாம் நம்மை அம்பாளுக்கு ஆட்ப்பட்டவனாக அம்பாளுக்கு மட்டுமே அடிமையாக, அதனால என்ன வரதோ அது போதும்..
பாதய வா பாதாளே ஸ்தாபய வா சகல புவன சாம்ராஜ்யே |
மாத: தவபதயுகளம் நாஹம் முஞ்சாமி நைவ முஞ்சாமி ||
அப்டின்னு உன்னுடைய திருவடிகளை நான் விட மாட்டேன் அப்டின்னு அம்பாளையே சரணம் பண்ணிண்டு பரமேஸ்வரனையே தலைவனாக நினைக்கணும் அப்டின்னு இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்திலேர்ந்தும் இந்த மூக பஞ்சசதி ஸ்லோகத்திலேர்ந்தும் நமக்கு தெரியறது. மத்தவாளை பத்தின சர்ச்சையே நமக்கு வேண்டாம். அது எப்படியோ போகட்டும். நம்ப விடாம பகவானுடைய பஜனத்தையே பண்ணிண்டு பகவானையே நம்பி இருக்கணும். அப்டின்னு இந்த 39வது ஸ்லோகம் சிவானந்தலஹரியுடைய பொருள்.
நம: பார்வதி பதயே !!! ஹர ஹர மஹாதேவா !!!
2 replies on “சிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை”
நமஸ்காரம்.சிவானந்தலஹரி முதல் ஸ்லோகத்தில் இருந்து பொருளுரை கேட்க ஆவலாக உள்ளேன். லிங்க் அளிக்க வேண்டுகிறேன்.தற்செயலாக இன்று தான் இதைக்கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
http://valmikiramayanam.in/?p=3397
Use arrow keys on the side of the screen to go to the next post.