Categories
mooka pancha shathi one slokam

கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்


மந்தஸ்மித சதகம் 48வது ஸ்லோகம் பொருளுரை – கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

सूर्यालोकविधौ विकासमधिकं यान्ती हरन्ती तम-
स्सन्दोहं नमतां निजस्मरणतो दोषाकरद्वेषिणी ।
निर्यान्ती वदनारविन्दकुहरान्निर्धूतजाड्या नृणां
श्रीकामाक्षि तव स्मितद्युतिमयी चित्रीयते चन्द्रिका ॥

3 replies on “கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்”

ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்.
மந்தஸ்மிதத்திற்கு நேர் வார்த்தையாக உள்ளது குமிண் சிரிப்பு. அருமையாக உள்ளது உங்கள் விளக்கம்.
தாமரையிலிருந்து நிலவு மலர்ந்தது என்று கவி கற்பனை நம் உள்ளத்திலும் கற்பனை குதிரையை தட்டும் விதமாக இருக்கிறது.
பாண்டித்தியம் உள்ளவர்களை கண்டால் காமாக்ஷியிடம் கூடுதலாக மந்தஸ்மிதம் வெளிப்படும் என்றும்,, இந்த நிகழ்வை காமாக்ஷி என்னும் மஹா பெரியவாளுடன் ஒப்பிட்டது ரொம்ப பொருத்தம். அவர் பண்டிதர்களுடன் அளவளாவும் போது மந்தஸ்மிதததைக் காண முடிந்தது. இப்போது அவருடைய புகைப்படங்களில் இந்த முறுவலை பார்க்கலாம். அந்த பராசக்தி காமாக்ஷியும், மனித வடிவில் வந்த காமாக்ஷியும் நம்மை எல்லாம் ரக்ஷிக்கட்டும். 🙏🌹🌹

தலைப்பு கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பு! எவ்வளவு அழகான பொருத்தமான தலைப்பு!!

காமாக்ஷி ..உனது முகமாகிய தாமரையிலிருந்து வெளிப்படும்
புன்சிரிப்பென்னும் நிலவு, சூரியனைக் காணும்போது (அறிஞரைக்
காணும்போது)ஓளிமிகுந்தும், தன்னை உள்ளத்தில் நிறுத்தி
வழிபடும் அன்பர்கள் அறியாமையாகிய இருளைனீக்குவதும்
சந்திரனையே இகழ்வதாகவும் மாந்தரின் ஜடத்தன்மையைப்
போக்குவதாகவும் இருக்கிறது!!

ஏவ்வளவு பொருள் பொதிந்த ஸ்லோகம்! நிலவைப் பழிக்கும்
விதமாக அம்பாளின் புன்சிரிப்பு வர்ணிக்கப்படுகிறது!!.

இது பொதுவான அர்த்தம், ஆனால் கணபதி சொன்னது
போல் காமாக்ஷியின் முகமண்டலத்திலிருந்து வரும்
புன்சிரிப்பு பெரியவாளுக்கு எல்லாவற்றிலும் பொருந்துகிறது!
ஸூரியன் அறிவைக் குறிக்கிறது! அது போல் அறிஞரைக்
கண்டவுடன் பெரியவாளின் மந்தஹாஸம் பெருகுகிறதாம்!
பெரியவாளுக்கு அறிஞர்களிடம் மிகப் ப்ரியம்! அதை இந்த
இடத்தில் பொருந்துகிறாற்போல்கொண்டு சேர்த்து அழகான
ஒரு ப்ரவசனம் அளித்துவிட்டார் கணபதி!

நாம் யாவரும் காமாக்ஷி ந்னா பெரியவா, பெரியவ்வான்னா
காமாக்ஷின்னு சொல்வோமே தவிர இது போல் ஓர் அற்புத
விளக்கம் கொடுக்கத் தெரியுமா?

அற்புதமான சொற்பொழிவு!

ஜய ஜய சங்கரா…

ஜய ஜய ஜகதம்ப சிவே..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.