பாதாரவிந்த சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை – அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும் (audio link)
यशः सूते मातर्मधुरकवितां पक्ष्मलयते
श्रियं धत्ते चित्ते कमपि परिपाकं प्रथयते ।
सतां पाशग्रन्थिं शिथिलयति किं किं न कुरुते
प्रपन्ने कामाक्ष्याः प्रणतिपरिपाटी चरणयोः ॥
One reply on “அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்”
அம்பாளுடைய பாதத்தில் சரண்புகுந்தவனுக்கு என்னவெல்லாம் செய்யறதுன்னு ஒரு பட்டியலே போடறார். எல்லாத்தையும் கொடுத்துட்டு கடைசில பாசக்கட்டையும் அவிழ்க்கும்னு சொல்றார். 🙏🌸
மஹான்கள் எல்லாரும் அதே கருத்தை தான் சொல்றான்னு அபிராமி பட்டர், அருணகிரிநாதர் பாடல்கள் மூலமா தெரியறது – அருமையான மேற்க்கோள்கள். 👌🌺
அபிராமி பட்டர் ‘தெய்வ வடிவம் தரும்’னு பாடறார். நாமும் அந்த தெய்வமும் வேறில்லைங்கிற அத்வைத ஸ்வரூபத்தை நமக்கு கொடுத்துடும்னு சொல்றார்.
உனக்கு வேறா இருக்கிற தோற்றத்தைப் போக்கிட்டா, நாம இது வேணும் அது வேணும்னு கேக்க மாட்டோம்.
‘என்னையே எனக்கு கொடு’ன்னு வேண்டிக்கணும்னு மஹாபெரியவா சொல்றது தான் ஞாபகம் வர்றது.
‘சிவ மானஸிக பூஜா’ ஸ்தோத்திரத்தில், ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள் சொல்றதை மேற்கோள் காட்டறார். ‘மஹ்யம் தேஹி ச பகவன் மதீயமேவ ஸ்வரூபம் ஆனந்தம்’ –
‘என் ஆனந்த ஸ்வரூபத்தையே எனக்குக் கொடு’னு பிரார்த்தித்திருக்கிறார் அவர்.🙏🙏
நாமளும் பஜனத்தை விடாம பண்ணிண்டு காமாக்ஷி சரண் புகுந்துட்டா உயர்ந்த மோக்ஷத்தை கொடுப்பா.🙏🌺