Categories
mooka pancha shathi one slokam

நின் குறிப்பு அறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி


கடாக்ஷ சதகம் 41வது ஸ்லோகம் பொருளுரை – நின் குறிப்பு அறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி

कामाक्षि सन्ततमसौ हरिनीलरत्न-
स्तम्भे कटाक्षरुचिपुञ्जमये भवत्याः ।
बद्धो‌
sपि भक्तिनिगलैर्मम चित्तहस्ती
स्तम्भं च बन्धमपि मुञ्चति हन्त चित्रम् ॥

3 replies on “நின் குறிப்பு அறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி”

மிகவும் அருமை 👌🙏🌸

பாதாரவிந்த சதகம் 94வது ஸ்லோகத்தில், “மனமென்னும் கிளிகுஞ்சை, உன் பாதமென்னும் கூண்டிற்குள் அடைத்து வை அம்மா!” என்று சொன்ன மூககவி, மனமென்னும் யானையை உன் கடாக்ஷ காந்தி என்னும் ஸ்தம்பத்தில், பக்தி என்ற சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறது என்கிறார்.

கட்டுண்ட போதே கட்டு (கர்வம், பந்தம்) விலகறதே னு ஆச்சரியமா சொல்றார். மஹா பெரியவா, இந்திரியங்கள் போடுகிற மணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டு, கடைசியில் பூரண நிம்மதி, சௌக்கியம், விடுதலை பெற வேண்டுமானால், சாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டு (இங்க பக்தி என்று வெச்சுக்கலாம்) போடணும் என்று சொல்வார். 🙏🌸

ஸ்வாமிகளுடைய கதையை கேட்க கேட்க, நாம எப்படி வாழணும் என்று நமக்காக வாழ்ந்து காட்டி இருக்கார் தோணறது. அவர் போன்ற மஹான் வாழ்ந்த காலத்தில் நாமளும் இருந்தோம்ங்கறதே  ஒரு பெரிய பாக்கியம்.🙏🌸

பக்தியோகத்தில் பகவான், (13&14)
அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய:
மய்யர்பிதமநோபுத்திர் யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:

எவன் எல்லா உயிரினங்களிடமும் வெறுப்பு இல்லாதவனோ, தன்னலமில்லாமல் எல்லோரிடமும் அன்பு கொண்டவனோ, காரணம் இன்றி இரக்கம் காட்டுபவனோ, மமகாரமற்றவனோ, அஹங்காரம் இல்லாதவனோ, இன்ப துன்பங்கள் நேரும்போது நிலை மாறாமல் சமமாக இருப்பவனோ, பொறுக்கும் இயல்புடையவனோ, எல்லாவிதத்திலும் திருப்தி உள்ளவனோ, மனத்தையும் புலன்களையும் தன்வசப்படுத்தியவனோ, என்மீது திடமான நம்பிக்கை வைத்து, என்னிடத்தில் மனம் புத்தி இவற்றை அர்ப்பணம் செய்தவனோ அவனே எனக்குப் பிரியமான பக்தன் என்கிறார்.🙏🌸

இது அப்படியே ஸ்வாமிகளுக்கு பொருத்தமா இருக்குனு தோணறது.🙏🙏🙏🙏

நம் பெரியவா சொல்வா நம் சம்சாரக்கட்டை நன்றாகக் கட்டப் பட்டுள்ள விறகு கட்டு என்று வைத்துக் கொள்வோம். அதன் பக்கத்தில் இறை பக்தி என்ற மற்றோர்மற்ற ஒரு கட்டை இருக்கப் போட்டு விட்டால் முன்னாடி போட்ட சம்சாரக்கட்டு நழுவி விழுந்துவிடும்! அஞான பந்தம் விலக ஜீவன் பக்தி என்னும் கயிற்றால் தேவியின் கடாக்ஷம் என்ன.தூணில். கட்டிக் கொள்ள வேண்டும் !!
நம் சித்தம் எனும் யானை அம்பாளின் கண்ணோக்கு காந்தியின் கூட்டத்தால் இந்திரா நீல இரத்னங்களான தூணில் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாக மூக கவி வர்ணிக்கிறார் ! சாதாரணமா யானையைக் கட்ட
நிகடம் என்ற முட்களால
ஆன சங்கிலியைை உபயோகபபடுத்துவார்கள் .. இங்கு மனம் என்னும் யானையை அம்பாளின் கண் என்னும்.சங்கிலி கட்டிப் போட்டுள்ளது!
அம்பாள் கன் நோக்கு அத்தகைய வலிவுடையது !
பட்டர் சொல்கிறார் நின் திருக் கோலத்தை மனதில் தியானம் செய்கிறேன். நின் திருவிழாக் குறிப்பால் யமன் வரும் நேர் வழி அறிந்து அவனை வராமல் தடுத்துவிட்டேன் என்ற பொருள் படும்படி !
உண்மை பக்தியின் இலக்கணம் அதுவன்றோ?
ஸ்வாமிகள் பணம் பதவி எதையும் பொருட்படுத்தாமல் ஈஸ்வர தியானத்தில் எளிமையாக வாழ்ந்து, எந்த இழப்பையும் மனதில் கொள்ளாமல் அவர் தியானத்தில் பூஜையில் வாழ்ந்து கடைசி காலத்தில்.இயலாத காலத்தில் நாம ஸ்மரணையுடன் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தது நம் யாவருக்கும் ஒரு போதனை !
எத்தனை பேரால் அப்படி வாழ இயலும்,?
குருவாயூரப்பன் விகரத்தைத் சொந்த குழந்தை போல் பாவித்த உளப்பாங்கு ஞானியருக்கே வரும் !
அவர் போன்ற ஞானிகள் வாழ்ந்த பூமியில் நாம் வாழ்கிறோம் என்பதே கொடுப்பினை !!
ஶ்ரீ தேவி சரணம் ..
குரு நாதா சரணம்

ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு அநேகக் கோடி நமஸ்காரங்கள் 🙏 🙏.
ஸ்ரீ மஹா பெரியவா அருளும், ஸ்ரீ காமாக்ஷியின் அருளும், ஸ்ரீ குருவாயூரப்பன் அருளும் ஒருங்கே கிடைத்த மஹாத்மா. அவரின் நிழலில் இருந்த உங்களுக்கு கிடைத்த அருள் ப்ரஸாதத்தை எங்களுடன் பகிர்ந்து அளிப்பதே ஓர் அரிய வரம்.
ஸ்ரீ ஸ்வாமிகள் தாமரை இலை தண்ணீர்
போல வாழ்ந்த வாழ்க்கை, ஜீவன் கடைத்தேற்ற முயற்சிப்பவர்க்கு ஒரு லக்ஷிய மாமனிதர்.
மிக அரிதற்கு அரிதான ஸ்ரீ ராமரின் குணநலன்களை பெற்றவராவார்.
எல்லோருக்கும் எல்லா வளங்களும்,
நலன்களும் பெற்று, பக்தி என்னும் கயிறு நன்றாக உறுதி பட ஸ்ரீ ஸ்வாமிகள் ஆசி நல்க வேண்டும். 🙏 🙏 🌺🌺

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.