ஆர்யா சதகம் 43வது ஸ்லோகம் பொருளுரை – ஸதாசிவ ஸமாரம்பாம்
शर्वादिपरमसाधकगुर्वानीताय कामपीठजुषे ।
सर्वाकृतये शोणिमगर्वायास्मै समर्प्यते हृदयम् ॥
ஆர்யா சதகம் 43வது ஸ்லோகம் பொருளுரை – ஸதாசிவ ஸமாரம்பாம்
शर्वादिपरमसाधकगुर्वानीताय कामपीठजुषे ।
सर्वाकृतये शोणिमगर्वायास्मै समर्प्यते हृदयम् ॥
One reply on “ஸதாசிவ ஸமாரம்பாம்”
இந்த படத்தை போட்டதற்கு மிகவும் நன்றி🙏🌸
அற்புதமான ஸ்லோகம்! ரொம்ப அருமையான விளக்கம். அம்பாளை எப்பொழுதும் ஸாதனை புரியும் எண்ணற்றவர் – அபிராமி அந்தாதி மற்றும் கந்தர் அநுபூதி மேற்கோள்கள் அருமை👌🙏🌸
‘ஸர்வாக்ருதயே’ என்கிறார் மூக கவி. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ அதாவது ஜகத் முழுதும் விஷ்ணு ஸ்வரூபம் என்பதுதான் பொது வழக்கு. இங்கே மூகரோ ‘ஸர்வம் காமாக்ஷி மயம் ஜகத்’’ என்கிறார். மஹாபெரியவா, “அம்பாளும் விஷ்ணுவும் சகோதரர்களாக சொல்லப்பட்டாலும் இருவரும் ஒருவரே” என்கிறார். இருக்கிற ஒன்றே ஒன்றை(ப்ரம்மம்), இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு!🙏🌸
இப்படிப்பட்ட அம்பாளை சிவப்பு வர்ணமாக, வர்ணிக்கிறார் மூகர். ஆசாரியாள் ஸெளந்தர்ய லஹரியில், “நல்லதெற்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்ம வஸ்து. பரப்பிரம்மமாகச் செயலின்றி இருந்தால் போதாது என்று அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்குத்தான் அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு உலகைக் காக்கும் கருணையினால் அருண வர்ணம் கொண்டு வெற்றியோடு பிரகாசிக்கிறது – ‘ஜகத் த்ராதும் சம்போ: ஜயதி கருணா காசித் அருணா’” என்கிறார்.🙏🌸
இத்தனை ப்ரபஞ்சமும் ஒரே சுத்த ப்ரஹ்மத்திலிருந்து வந்ததுதான்; அதுவாகவே போய் முடிவதுதான்(அதனால்தான் சர்வன் என்ற நாமா போட்டார் போலிருக்கிறது)! அதுதான் பலவாறாக தோற்றமளிக்கிறது. அதுதான் கருணையின் நிறம் கொண்டு காமகோடி பீடத்தில் காமாக்ஷியாக விளங்குகிறது.
இந்த சத்தியம் குரு மூலமாகத்தான் தெரிகிறது. குருதான் நமக்கெல்லாம் ஈஸ்வரனை காண்பிச்சு கொடுக்கிறார். அதனால் உத்தமமான குருமார்களால் (முதல் குருவான சதாசிவன் முதல் இன்றைய குரு வரை) வரவழைக்கப்பட்ட காமாக்ஷி! அந்த காமாக்ஷிக்கு என் ஹ்ருதயத்தை அர்ப்பணம் பண்ணுகிறேன் 🙏🌸
குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி 🙏🌸