Categories
mooka pancha shathi one slokam

பவ ஜ்வரத்தை போக்கும் அருமருந்து

ஆர்யா சதகம் 53வது ஸ்லோகம் பொருளுரை – பவ ஜ்வரத்தை போக்கும் அருமருந்து (7 min audio giving the meaning of 53rd slokam from Arya Shatakam)

शम्पालतासवर्णं सम्पादयितुं भवज्वरचिकित्साम् ।
लिम्पामि मनसि किञ्चन कम्पातटरोहि सिद्धभैषज्यम् ॥

4 replies on “பவ ஜ்வரத்தை போக்கும் அருமருந்து”

பவ ஜ்வரத்தை போக்கும் அருமருந்து

அழகான ஸ்லோகம். நாராயணீயம் மற்றும் ராமாயண த்யான ஸ்லோக மேற்கோள்கள் அருமை 👌 🙏🌸

ஸ்வாமிகளுடைய வாழ்க்கையும் அவருடைய வாக்கும் நமக்கு வாழ்க்கைப் பாடம். “க்ருபை ஏற்பட்ட வரைக்கும் பஜனம் பண்ணிண்டே இருப்பேன்”🙏🙏🙏🙏 அதை நீங்கள் எடுத்துச் சொல்கிற விதம் மிக அருமை🙏🌸

மூககவி, காமாக்ஷியை “ஸம்ஸார ஜ்வரத்திற்கு, மின்னல் கொடி போன்ற நிறமுள்ள சித்த ஔஷதம்” என்கிறார்.

மஹாபெரியவா , “குமார ஸ்வாமியை அருள் மின்னல்” என்று சொல்வது ஞாபகம் வருகிறது. “மேகத்தில் நாம் பார்க்கிற மின்னல் ஜோதி வெளி இருட்டை மாத்திரம் வெகு சிறிது காலத்துக்கு நீக்குகிறது. எத்தனையோ ‘பவர் ஹவுஸ்’களில் ‘ஜெனரேட்’ செய்ய முடியாத அளவுக்கு மின்சாரத்தைப் பாய்ச்சி விடுகிறது. ஸுப்ரமண்யமோ, அருள் ஒளி – அருட்பெரும்ஜோதி. அது வெளியிருட்டு, உள்ளிருட்டு இரண்டையும் சாசுவதமாக நீக்குவது. மின்சாரம் ஒருத்தரை இழுத்துக்கொண்டால் எவராலும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாது. ‘எலெக்ட்ரோக்யூட்’டானால் மரணம்தான். இந்த அருள் மின்சாரம் இழுத்துக் கொண்டாலும் எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், இது அந்த ஜோதி ரூபமாகவே நம்மையும் ஆக்கி, அமரமாகச் செய்துவிடும்.” என்கிறார்.🙏🌸

‘ஸம்ஸார ஜ்வரத்திற்கு’, மின்னல் கொடி போன்ற ரூபத்தையுடைய காமாக்ஷி, நம்முடைய உள்ளிருட்டை போக்கி, அந்த ஜோதி ரூபமாகவே நம்மையும் ஆக்கி, ‘அத்வைத அநுக்கிரஹம்’ என்கிற ‘மஹாஔஷதமாக’ விளங்குகிறாள் என்று சொல்கிறாரோ?

அருமையான ஸ்லோகம்!! தேவி மின்னல் கொடி நிறத்துடன் கண்களைப் பறிக்கும் வெண்மை ஒளியுடன் ப்ரகாசிப்பதால் சித்த ஔஷத மூலிகை என்று கூறப்படுகிறது! இந்த மூலிகை பிறவிப் பிணி தீர்ப்படாகவும்,மருந்தாகவும் செயல்படுகிறது! குண்டலினி சக்தியாக மேலேறி வரும்போது ஆஞ்ஞாசக்ரத்தில் க்ஷண நேரமே உணரப்படும் மின்னல் போல் தோன்றுவதால் க்ஷண ஸௌதாமினிஎன்றும் ஸஹஸ்ராரத்தில் சிவனுடன் நிலைத்து நிற்பதால் ஸ்திர ஸௌதாமினி எறும்போற்றப்படுகிறாள்!
ஸதா அவள் த்யானத்தில் இருந்தால் எந்தவித உடல் பாதிப்பும் நம்மை ஒன்றும் அண்டாது!
பெரியவா அச்யுத அனந்த கோவிந்த என்ற நாமாக்களை ச் சொல்லி வந்தால் வியாதியில் கொடுமை நீங்கும் என்று சொல்வார்! ஜுரத்தால் அவதிப்படும்போது விஷ்ணு ஸஹஸ்ர நாமா பாராயணம் செய்யச் சொல்வார், ஜுரமும் விட்டுவிடும் ! இது பெரியவா தனக்கு ஜுரம்103. இருந்தபோது சில பக்தர்களை பாராயணம் செய்யச் சொல்லி ஜுரம் சரியாகி உடனே ஸ்னானத்துக்கும் சென்றார் என்று பிறர் சொல்லக்கேட்டிருக்கிறேன்!
ணாமாவளி என்பதற்கு அவ்வளவு வலிமை! வைத்ய நாதாஷடகம் சொன்னால் தீராத வியாதியும் தீருமென்பது பெரியவா வாக்கு!

நம்ஹிந்து மதம் அதனைச் சார்ந்த ஸ்லோகங்கள், மந்த்ரங்கள், வேத ஒலி எல்லாவற்றுக்கும்தனிச் சிறப்பு உண்டு!
அழகான விளக்கம் தக்க மேற்கோள்களுடன்!!

ஜய ஜய ஜகதம்ப சிவே…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.