ஆர்யா சதகம் 96வது ஸ்லோகம் பொருளுரை – குண்டலினி யோகம்
जलधिद्विगुणितहुतवहदिशादिनेश्वरकलाश्विनेयदलैः ।
नलिनैर्महेशि गच्छसि सर्वोत्तरकरकमलदलममलम् ॥
ஜலதி⁴த்³விகு³ணிதஹுதவஹதி³ஶாதி³னேஶ்ரகலாஶ்வினேயத³லை꞉ |
நலினைர்மஹேஶி க³ச்ச²ஸி ஸர்வோத்தரகரகமலத³லமமலம் ||
இது ஆர்யா ஶதகத்தில் 96வது ஸ்லோகம். இதுல குண்டலினி யோகத்தை பத்தி சொல்லியிருக்கு.
ஹே மஹேஷி, காமாக்ஷி.
குண்டலினி யோகம்னு ஒண்ணு இருக்குனு கேள்வி பட்டு இருக்கேன். அதுல, நம்ப உடம்பில் ஆறு சக்ரங்கள் இருக்கு. மூலாதாரம்ங்கிற சக்கரத்தில், 4 இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும், மணிபூரகத்தில் 6 இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும், ஸ்வாதிஷ்டானத்தில் 10 இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும், அனாஹதத்தில் 12 இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும், விசுத்தியில் 16 இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும், ஆக்ஞ்யா சக்கரத்தில் 2 இதழ்கள் கொண்ட தாமரையும் இருக்கு. அம்பாள் ஒரு பாம்பு வடிவத்தில் மூலாதாரத்தில் இருந்து எழுப்பப்பட்டு, இந்த ஆறு தாமரைகளையும் பிளந்து கொண்டு தலையில் இருக்கும் சஹஸ்ராரம் அப்படிங்கிற 1000 இதழ்கள் கொண்ட தாமரையில் பரமேஸ்வரனோடு கூடி களிக்கிறாள். அப்படினு நான் படிச்சிருக்கேன்.
ஸ்வாமிகள் கிட்ட first போன போது குண்டலினி யோகம்னா என்னன்னு கேட்டேன். முதலில், உனக்கு அதுபற்றி என்ன தெரியும்னு கேட்டார். எனக்கு ஒண்ணு தெரியாது. ஏற்கனவே எனக்கு சின்ன வயசில் ரொம்ப உடம்பு படுத்தியது. polio, typhoid, smallpox, diphtheria னு எல்லாமே வந்துடுத்து. அதனால், யோகம்ங்கிற வார்த்தையே எனக்கு ஒத்துக்குமா அப்படிங்கிறா மாதிரி நான் ஆளு. அதனால் குண்டலினி யோகம் ஏதோ physical ஆக பண்ண வேண்டிய விஷயம்னு சொல்லிட்டு, அம்மா அப்பா லலிதா சஹஸ்ரநாமம் படிப்பார்கள். அதில் இந்த சக்ரங்கள் எல்லாம் பத்தி, விஷயங்கள் காதில் விழுந்துருக்கு, அப்படினேன்.
அதோட போதும்! மேலே, எதுவும் அதை பத்தி ஆராய்ச்சி பண்ணாதே. குண்டலினி யோகங்கறது நமக்கெல்லாம் கிடையாது. அதெல்லாம், யோகிகளுக்கு பகவான் கொடுக்கின்ற ஒரு பிரசாதம். நம்மால் பக்தி தான் பண்ண முடியும், என்று ஸ்வாமிகள் சொன்னார். இதை நான் அப்படியே கேட்டுண்டேன். அப்புறம், சிவன் சார் book கிடைத்தவுடனே, சிவன் சார் அப்படியே அதை எழுதியிருக்கார். சிவன் சாரை தெரிஞ்சிண்டு, அவருடைய ஏணி படிகளில் மாந்தர்கள்” புஸ்தகம் படிக்கறதுக்கு முன்னாடியே, அதில் இருக்கிற பல விஷயங்கள் ஸ்வாமிகள் சொல்லுவார்.
ஸ்வாமிகள் கிட்ட “உங்களுக்கு இவ்ளோ கஷ்டம் வருது, ரொம்ப பகவான் உங்களை சோதனை பண்றார், அப்படினு சொன்னா, “இல்லை இல்லை, சோதனை எல்லாம் மஹான்களுக்கு தான். நாம வினைகளை அனுபவிக்கின்றோம், அப்படினு சொல்லுவார். அதை சார் bookல எழுதி இருக்கார், “ஊழ்வினை”ங்கிற ஒரு chapterல.
அது மாதிரி ஸ்வாமிகள், அவரை வந்து புரிந்து கொள்வது கஷ்டம். ஆனால் சார், “பழக பழக தெவிட்டாத வசீகரம் உடையவன் சாது” அப்படினு எழுதி இருக்கார். அதனால் ல்ஸ்வாமிகள் கிட்ட பழகும்போது, ஒரு தனியான அவர்கிட்ட ஒரு பக்தி ஏற்படறது ஜனங்களுக்கு தெரியும். ஆனால் அங்க இருந்து வெளியில் வந்து உலகத்தவர்களோட எல்லாரும் பழகும் போது, அவா அவா ஒரு compromise பண்ணின்டு ஏதாவது ஒரு சங்கத்தில் இருப்பா. ஏதாவது ஒரு பொழப்பில் இருப்பா. அதனால் ஸ்வாமிகளுடைய மேன்மை வந்து, வாய் விட்டு சொல்லறதுக்கு மனசு வராது.
ஸ்வாமிகள் சொன்னார், “சார் book பார்த்த பின்ன தான் எனக்கு வந்து நிம்மதி ஆச்சு. நாம் இருக்கிறது சரியான வழி தான். ஒவ்வொருத்தர் சொல்றத கேட்டு சில சமயம் கலக்கம் வந்துடும்” அப்படினு சொல்லுவார். சார் bookல எழுதியிருக்கார்.” எவன் ஒருவன் பதவி ஸ்தாபனம் காணிக்கை போன்றவைகள் அனைத்தையும் துறந்து, தனித்து இயங்குகின்றானோ அவனே வைராக்கியவான் ஆவான். அத்தகையவனுடைய மேன்மையை உலகம், அதாவது, பொது மக்களால் அவ்வளவு சுலபமாக புரிந்து கொண்டு விட முடியாது”, அப்படினு எழுதியிருக்கார்.
அந்த மாதிரி ஸ்வாமிகளை ஜனங்கள் புரிந்து கொள்ளவில்லை, acknowledgeம் பண்ண வில்லை. அவரும் அதை பத்தி கவலை படவில்லை. அதனால், அவரை புரிந்து கொள்வதற்கு ரொம்ப நாளாச்சு. எவன் ஒருவன் மானிட ஜன்மாவின் குறிக்கோளை உணர்ந்து உலக ஈடுபாடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, தெய்வமே கதி என்று பகாவனிடத்தில் சரணடைகின்றானோ, அத்தகயவரைத் தான், தனது பாதாரவிந்தங்களில் ஏற்று கொள்ளும் பொறுப்பை பகவான் ஏற்கிறார், அப்படினு சார் எழுதி இருக்கார்.
“ஒரு சாதுவில் இருந்து தெய்வ சாதுக்கள் வகையினர் வரையிலும் உள்ளவர், செல்வதை அகற்றி வாழ்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்பை பகவான் எப்பொழுதும் ஏற்று வருகிறார். அதாவது, அவர்களுக்கு உதவ எவரையாவது அனுப்பிக்கொண்டே இருப்பார்.” இதுவும் ஸ்வாமிகள் வாழ்க்கையில் ரொம்ப ப்ரத்யக்ஷமா நடந்தது.
மந்திரத்தில் மாங்கா விழுமா? ன்னா ஸ்வாமிகளுக்கு விழுந்தது. அவர் பாட்டுக்கு உட்கார்ந்து ராமாயணம் படித்து கொண்டு இருந்தார். அவருடைய தேவைகளுக்கு யாராவது ஒருத்தர் வந்து, அந்த குடும்பத்தின் தேவைகள் எல்லாம் பூர்த்தி பண்ணிண்டே இருந்தா. ஜீவனத்தை உதறி தள்ளும் வைராக்கியன் ‘முற்றின விவேகி’ அப்படினு எழுதி இருக்கார். இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு பொருந்தும்.
ஸ்வாமிகள் வாழ்ந்த வாழ்க்கையை சார் bookயை வைத்து கொண்டு, ஸ்வாமிகள் ஒரு approval அப்படிங்கிறதை புரிந்து கொண்டார். அதையும் அவர் வெளியில் சொல்லவில்லை. இதை படித்த எனக்கு ஒரு நிம்மதி ஆச்சு, அப்படினு ஒரு வார்த்தை சொன்னார். சார் bookல ஹட யோகம் அதெல்லாம் சொல்லிட்டு, அதெல்லாம் முரட்டுதனமா பண்ண கூடாது, உடம்புக்கு கேடு வந்து விடும். நல்ல குரு வச்சுண்டு கத்துக்கணும். சாதாரண healthயை maintain பண்றதுக்கு, சில ஆசனங்கள் இருக்கு. அதெல்லாம் தெரிந்து கொள்ளலாம். அதெல்லாம் கூட ரொம்ப life முழுக்க பண்ணின்டே இருக்க கூடாது. அப்படி எல்லாம் warn பன்றார்.
அப்புறம் இதை சொல்றார், “ஆனால், சாஸ்திரத்தில் விளக்கப்பட்டு இருக்கும் குண்டலினி யோகம் என்பது, முற்றிலும் மாறுபட்டது ஆகும். இந்த யோகம் தன்னையும் துறந்த துறவிகளால், சார் bookல துறவி, ஞானி என்கிறது ரொம்ப highest level. அந்த தன்னையும் துறந்த துறவிகளால், பிரயத்தனத்தை கொள்ளாமலயே ஏற்கப்படுவது ஆகும். குண்டலினியை உயர்த்தி கொள்வதாக காட்டி கொள்ளும் சங்கத்தினர்கள், நினைத்த மாத்திரத்தில் ஒரே நொடியில் சிதம்பரத்தில் இருந்து சிகாகோவில் அமர்ந்து காட்ட முடியாது. பூட்டப்பட்டு இருக்கும் அறையில் இருந்து வெளியே வந்துவிட முடியாது. எனவே துறவிகளை தவிர மற்றவர்கள் குண்டலியின் மகத்துவத்தின் உரிமை ஏற்று விட முடியாது. குண்டலியின் மகத்துவம் என்பது, ஆத்மீக சக்தி என்பதும் ஒன்றே ஆகும்”, அப்படினு எழுதி இருக்கார். அதனால் குண்டலியின் யோகத்தை பற்றி, இந்த ஒரு ஸ்லோகத்தை படிக்கறதுக்கு மேல, நம்ப எதுவுமே பண்ண முடியாது. இந்த ஸ்லோகம், ஆனா ஒரு interesting ஆக technical ஆக 6 தாமரைகளை பற்றி சொல்லி இருக்கார்.
ஜலதி⁴த்³விகு³ணிதஹுதப³ஹதி³ஶாதி³னேஶ்ரகலாஶ்வினேயத³லை꞉ .
நலினைர்மஹேஶி க³ச்ச²ஸி ஸர்வோத்தரகரகமலத³லமமலம்
ஜலதி⁴னு ஆரம்பிக்கறது.
‘ஜலதி’னா சமுத்திரம்.
சமுத்திரங்கறது 4 திக்கில் 4 சமுத்திரம் இருக்கு. அதனால் 4 இதழ்கள் கொண்ட தாமரைக்கு, ஜலதிங்கிற சமுத்திரமும்.
அடுத்தது, த்³விகு³ணிதஹுதவஹ’
ஹுதவஹ’ னா – அக்னி. 3 அக்னி இருக்கு. அதை வந்து ‘த்³விகு³ணித’ double ஆக பண்ணிக்கோங்கோ. அதாவது ஆறு. அதனால் மணிபூரகத்துக்கு சொல்லும் போது 6 இதழ்கள் கொண்ட தாமரைக்கு 2 times அக்னி அப்படினு சொல்றார்.
அடுத்தது, ‘தி³ஶா’னா திசைகள். திசைகள் பத்து. அதனால் ஸ்வாதிஷ்டானத்துக்கு 10ங்கிறதை சொல்லும் போது ‘தி³ஶா’.
‘தி³னேஶ்ர:’ னா சூரியன். 12 ஆதித்யர்கள். அதனால் அனாஹதத்தை சொல்லும் போது’ தி³னேஶ்ர:’அப்படிங்கிற பதத்தை use பண்றார்.
‘கலா’ அப்படினா 16. விசுத்திங்கிற சக்ரத்தில் 16 இதழ்கள் கொண்ட தாமரை சொல்லும் போது. “கலா”ங்கிற பதத்தை use பண்றார்.
அஸ்வினி தேவர்கள் ரெண்டு பேர். அதனால, ஆக்ஞ்யா சக்கரத்தில் ரெண்டு இதழ்கள் கொண்ட தாமரை. அப்படினு வரும் போது,
‘ஆஶ்வினேய’ அப்படினு சொல்லிட்டு,
‘த³லை꞉ ‘ இத்தன நம்பர் of தலைகள் கொண்ட,
‘நலினை:’ தாமரைகள் மூலமாக,
‘ஸர்வோத்தரகரகமலத³லம் அமலம்’ அமலமான மிக தூய்மையான, ‘ஸர்வோத்தரகரககமலம்’ என்கிற சஹஸ்ரார கமலத்தை,
‘மஹேஶி க³ச்ச²ஸி’ ஹே காமாக்ஷி நீ குண்டலினி வடிவத்தில் சென்று அடைகிறாய்.
அப்படினு இந்த ஒரு ஸ்லோகம்.
இதை பாராயணம் பண்றதுக்கு மட்டும் தான் நாம் லாயக்கு.
மத்தப்படி குண்டலினி யோகம்ங்கிறது, துறவிகளால் ஏற்கபடுவது. சிவன் சார் மாதிரி துறவிகள், சதாசிவ ப்ரஹ்மேந்திராள், சேஷாத்திரி ஸ்வாமிகள் மாதிரி துறவிகள் அந்த நிலைமையில் இருந்தானு நினைத்து நாம நமஸ்காரம் பண்ணுவோம்.
जलधिद्विगुणितहुतवहदिशादिनेश्वरकलाश्विनेयदलैः ।
नलिनैर्महेशि गच्छसि सर्वोत्तरकरकमलदलममलम् ॥
ஜலதி⁴த்³விகு³ணிதஹுதவஹதி³ஶாதி³னேஶ்ரகலாஶ்வினேயத³லை꞉ |
நலினைர்மஹேஶி க³ச்ச²ஸி ஸர்வோத்தரகரகமலத³லமமலம் ||
5 replies on “குண்டலினி யோகம்”
ரொம்ப அழகான ஸ்தோத்திரம்.. குண்டலினி யோகம் மூலமா அம்பாள் ஸஹஸ்ராரத்தில் இருக்கிற பரமசிவனோட ஐக்கியமாறதை சொல்லியிருக்கார். ரொம்ப அழகான விளக்கம். 👌🙏🌸
ஸ்வாமிகள் சொன்னது, சிவன் சார் சொன்னது ரொம்ப அருமை.🙏🙏🙏🙏
மஹாபெரியவா, “குண்டலினி – அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதை யாரும் ‘டச்’ பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’ பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறார். குண்டலிநீ யோகம் அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன். ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.” என்று சொல்லி,
“பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது.” என்கிறார்.🙏🌸
சிரஸின் உச்சியில் ஸஹஸ்ரார கமலம் என்று ஆயிரம் இதழ்த் தாமரைப் பூ இருக்கிறது. மூலாதாரத்திலுள்ள குண்டலினீ சக்தியை ஸாதனைகள் பண்ணி அங்கே கொண்டு போனால், அந்தக் கமலத்திலே குரு ரூபமாக இருக்கிற ஈச்வரனின் பாதகமலம் தெரியும். அந்த கமலத்திலிருந்து தேனுக்குப் பதில் பெருகுகிற அம்ருதத்தில் -– சரணாம்ருதத்தில் -– நாடி நரம்பெல்லாம் குளிர்ந்து, ஜீவபாவமே அடித்துக் கொண்டு போய், பரமாத்மாவோடு பரமாத்மாவாக ஐக்யப்பட்டிருக்கிற மோக்ஷானந்தம் ஸித்திக்கும். பகவான் பாதத்தைத் தலைமேல் வைக்கும்படி மகான்கள் பிரார்த்திப்பதற்கு இதுதான் உள்ளர்த்தம்.
“சிரஸி தயயா தேஹி சரணௌ” என்று ஆசார்யாள் ‘ஸௌந்தர்ய லஹரி’யில் இந்தத் திருவடி தீக்ஷையைத்தான் அம்பாளிடம் வேண்டுகிறார்.
இந்த தீக்ஷை கிடைத்த ஆனந்த பரவசத்தில் அப்பர் ஸ்வாமிகள், “புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே” என்று பாடுகிறார்.
மூக கவி அடுத்த ஸ்லோகத்தில், சத்குருவை அடைந்த பாக்கியசாலிகள், அவர் காண்பித்த வழியில், உன் அனுக்கிரகத்தால் மோக்ஷம் என்னும் மேல் மாடி(ஸஹஸ்ராரம்) ஏறுகிறார்கள் என்று கூறினாரோ?
Always Learning from your comments. Thank you.
Absolutely right Sowmya ! We ordinary souls can’t attain this status unless we raise to the level of Sadhus, Mahans! We can always be in His, Her smaranai doing good deeds, thinking of only needy people, and serve selflessly. This can be attained only by Nama smaranai, chanting of Bhagawan Nama. Periyava sharanam.
🙏please post the meaning for all slokas.
From the books that are plenty about Kundalini, one may think that it has been experienced by all. I agree that this is to be left only to great Sadhus.