வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில், விஷ்வாமித்ர மகரிஷி ராம லக்ஷ்மணர்களுக்கு, பகீரதன் தன் முன்னோர்களை கரையேற்ற, ஆகாய கங்கையை பூமிக்கும், பூமியிலிருந்து பாதாள உலகிற்கும் கொண்டு சென்ற கதையை சொல்கிறார். அந்த கங்காவதரணம் என்ற பகுதியில் பாலகாண்டம் 42, 43, 44 ஸர்கங்களை அமாவாசை அன்று படிப்பது வழக்கம். இன்று கார்த்திகை அமாவாசை. ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் என்ற மஹான், ஒரு கார்த்திகை அமாவாசை அன்று கங்கையை திருவிசைநல்லூர் என்ற தான் வாழ்ந்த கிராமத்தில் தன் வீட்டு கிணற்றிலேயே வரவழைத்த அற்புதம் நிகழ்ந்த நாள்.
வால்மீகி ராமாயணத்திலிருந்து கங்காவதரணம் பகுதியை ஒலிப்பதிவு செய்து பகிர்ந்துள்ளேன்.