Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 46வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 46 தமிழில் பொருள் (5 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 46)

Series Navigation<< சிவானந்தலஹரி 45வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 47வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 46வது ஸ்லோகம் பொருளுரை”

போன ஸ்லோகத்தில் மனஸை சிறந்த பறவையாக உருவகப்படுத்தி, வேத மரத்தில் உபநிஷத் என்ற கிளையில் ஈச்வர பாதத் தாமரைகளான கூட்டில் வஸிக்க சொன்னார். வேத உபநிஷதங்களை நன்றாக கத்துண்டு, அந்த அம்ருதத்தில் நன்றாக ஊறி, முடிந்த முடிவாக காட்டுகிற பரம்பொருளை தெரிஞ்சண்டு, ராஜ ஹம்ஸமாக பதவி உயர்வு கிடைத்துவிட்டது மனஸுக்கு!🙏🌸

இந்த ஸ்லோகத்தில், பரமசிவனின் பாதங்களை மாளிகையாக உருவகப்படுத்தி, பக்தி என்னும் ‘வது’வை கல்யாணம் பண்ணிக்கொண்டு, மனமென்னும் ராஜ ஹம்ஸத்தை அங்க வஸிக்க சொல்றார்.
பரமசிவனை கிரிஜாநாதன் என்று சொல்றதால், கிரிராஜ புத்ரியா அம்பாள் செய்த பக்தி, தபஸை மேற்கோள் காட்டுகிறார் போல இருக்கு.

உயர்ந்த பக்தியில் திளைச்சு ஞானம் அடைந்த பரமஹம்ஸர்கள் ஏற்கனவே அங்க வஸிக்கிறார்கள் என்று சொல்லி, “அது தான் மனமே உன்னுடைய இலக்கு!” என்று படிப்படியாக உயர ஆசார்யாள் வழி காண்பிக்கிற மாதிரி இருக்கு.🙏🌸

ஆசார்யாள் ரகசியமா வஸிக்க சொல்வதால், ஸ்வாமிகள் சொன்ன தனி பஜனத்துக்கு ஒப்பிட்டது மிக அருமை 👌🙏🌸

இந்த ஸ்லோகத்தின் கருத்தை ஒட்டியே உள்ள மூகபஞ்சசதி ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியது மிகச்சிறப்பு👌🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.