
ஆர்யா சதகம் 45வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே
जन्तोस्तव पदपूजनसन्तोषतरङ्गितस्य कामाक्षि ।
बन्धो यदि भवति पुनः सिन्धोरम्भस्सु बम्भ्रमीति शिला ॥
ஜந்தோஹோ தவ பதபூஜன சந்தோஷ தரங்கிதஸ்ய காமாக்ஷி |
பந்தோ யதி பவதி புனஹ சிந்தோரம்பஸ்ஸு பம்பிரீதி ஷிலா ||
இது ஆர்யா சதகத்தில 45-வது ஸ்லோகம்.
தவ பத பூஜன, உன்னுடைய பாதங்களை பூஜிப்பதினால் ஏற்படும் சந்தோஷ தரங்கிதஸ்ய, சந்தோஷ அலைகளில் எவன் ஒருவன் மிதக்கிறானோ, ஜந்தோஹோ, ஒண்ணும் பெரிய… படிப்பு எல்லாம் இருக்கவேண்டாம். மனுஷனா இருந்தா போதும். அவன் பந்தோ யதி பவதி புனஹ, கர்ம பந்தத்தில் மீண்டும் புகுவானானால், திரும்பவும் இந்த சம்சார பந்தத்தில சுத்திண்டே இருப்பான் என்று சொல்வது, சிந்தோரம்பஸ்ஸு, கடல் ஜலத்தில பம்பிரீதி ஷிலா, ஒரு கல் பாறை மிதக்கும், அப்படின்னு சொல்ற மாதிரி. அதாவது எப்படி ஒரு கல் பாறை கடல்ல மிதக்காதோ, அந்த மாதிரி காமாக்ஷியுடைய சரண த்வந்த்வங்களை பூஜிப்பதில் எவன் ஒருவன் சந்தோஷத்தை அடைகிறானோ அவன் உலக விஷயங்களில் மீண்டும் பந்தப்படமாட்டான் என்று ஒரு ரொம்ப ரீ அஸ்யூரிங் (reassuring) ஸ்லோகம் ஒண்ணு.
காமாக்ஷியுடைய சரணத்தை பிடிச்சுண்டா, நிச்சயம் மீட்சி உண்டு என்று ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம். இதுல கேட்ச் (catch) என்னன்னா, தவ பதபூஜன சந்தோஷ தரங்கிதஸ்ய காமாக்ஷீ, அப்படின்னு சொல்றாரு. உன்னுடைய பாத பூஜை பண்றதுல ஒருத்தனுக்கு சந்தோஷ அலைகள் உள்ளத்தில் பொங்கணும். அந்த நிலைமை வரதுக்குதான் கொஞ்சம் நாளாறது.
எப்படி நேத்தி ஸ்லோகம், மாதர் ஜயந்தி மமதாக்ரஹ மோக்ஷணானி, அப்படின்னு மமதைங்கிற பிசாசு நம்மள விடணும்ன்னா காமாக்ஷியுடைய கடாக்ஷம் தான் அந்த கருணையை பண்ண முடியும் அப்படின்னு பார்த்தோமோ, அதே மாதிரி உலக விஷயங்கள்ல நமக்கு மமதா, என்னோடது அப்படிங்கிற எண்ணம் இருக்கிறதுனால அதெல்லாம் பத்தி ஒரு சந்தோஷமும் பூரிப்பும் ஏற்படுது. கல்யாணம் ஆன புசுல கணவன் மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு அன்பா இருக்கா, அதே மாதிரி ஒரு குழந்தைன்னா அம்மாங்கிறவள் எவ்வளவு பூரிச்சு போறா. இத்தனைக்கும் எந்த இடத்துல நம்ப நிறைய கொடுக்கிறோமோ, குழந்தை வளர்க்குறதுல அம்மா அப்பா தங்களுடைய பணத்தை செலவு பண்ணி நேரத்தை செலவு பண்ணி அந்த குழந்தையையே உருவாக்குறா. ஆனா குழந்தைகள் எல்லாம் படிச்சு வெளியூர் போயிட்டா ரொம்ப தவிக்கதான் செய்றா இல்லையா? அந்த மாதிரி எந்த இடத்துல நம்ம ஆசையா கொடுக்கிறோமோ, அந்த இடத்திலேயே நமக்கு பந்தம் ஜாஸ்தியாறது. அந்த மாதிரி ஒரு பந்தம் நம்மால நம்முடைய நேரத்தையும், பணத்தையும், நம்முடைய அன்பையும் ஒரு குருவிடத்திலோ, ஒரு தெய்வத்தினிடத்திலோ கொடுத்து, எப்படி ஒரு குழந்தையைப் பத்தி, ஒரு கணவனைப் பத்தி ஒரு பெண் சந்தோஷப்படுவாளோ, அந்த மாதிரி நம்மால் அந்த குருவைப் பத்தி, அந்த தெய்வீகத்தைப் பத்தி பேசி ஸ்தோத்திரம் பண்ணி சந்தோஷப்பட முடிஞ்சா, அப்போ அந்த தெய்வம் நம்முடைய பொறுப்பை ஏத்துக்கிறது. அதுக்கப்புறம் நாம திரும்பியும் வந்து இந்த சம்சார சூழலில் மாட்டிக்க மாட்டோம் அப்படிங்கிறது இந்த ஸ்லோகத்துல சொல்லியிருக்கு.
இந்த மூக பஞ்சசதி அப்படிங்கிற ஸ்தோத்திரத்தை சுவாமிகள் நிறைய ஆவர்த்தி எனக்கு படிச்சார். நான் கேட்டுண்டே இருந்தேன். அவர் ஒண்ணும் அர்த்தமெல்லாம் சொல்லல. படிச்சுண்டே போனார். இத்தனை வருஷம் படிச்ச பின்ன எனக்கு அதை படிக்கிறதுல ஒரு சொட்டு சந்தோஷம் வந்திருக்கு.
ஆனா நான் எல்லாம் ஒரு ஈ மாதிரி இருக்கேன். ஈங்கிறது ஸ்வீட்டியையும் சாப்பிடும், வேற எதிலேயோ போய் உட்காரும். அந்த மாதிரி உலக விஷயங்கள்லயும் ஈடுபட்டுண்டு, ஏதோ ஸ்தோத்திரம் பண்ணும்போது ஒரு சந்தோஷம் கிடைக்கிறதுங்கிறது ஒரு லெவல்.
உலக விஷயங்களில் எல்லாம் பிரமிச்சுண்டு அதை ஸ்தோத்திரம் பண்ணிண்டு இருக்கிற வரைக்கும் நம்மளுமே ஊமைதான். எப்போ காமாக்ஷியைதான் ஸ்தோத்திரம் பண்ணனும் அப்படின்னு காமாக்ஷியை, நம்முடைய குருவை ஒரு சைதன்ய வஸ்துவா உணர்ந்து பொங்கிப் பொங்கி நமக்கு ஸ்தோத்திரம் பண்ண தோணுதோ, அன்னைக்குதான் நமக்கு வாக்குக் கிடைச்ச பயன் இல்லையா? அன்னியிலிலருந்துதான் நாம வந்து பேசவே ஆரம்பிச்சிருக்கோம். அப்படி ஆரம்பிச்சு இன்னும் அந்த அன்பைப் பெருக்கிக்கொண்டே போய் இறைவனோடு ஒன்றிக் கலக்கிற அந்த நாள் என்னைக்குன்னு ஏங்கிண்டே இருக்கணும்.
அந்த மாதிரி காமாக்ஷியுடைய ஸ்தோத்திரம் மட்டுமே பண்ணிண்டு, அதில் பேரின்பத்தை அனுபவிக்கிறதுங்கிறது கோல். நாராயணீயம், இந்த மூணாவது தசகம் முதல் ஸ்லோகம்
“படந்தோ நாமானி பிரமதபர சிந்தோ நிபதிதாஹா ஸ்மரன்தோ ரூபம் தே வரத கதயந்தோ குண கதாஹா |
சரந்தோ யே பக்தாஹா த்வயி கலு ரமந்தே பரமமூன் அஹம் தன்யாந் மன்யே சமதிகத ஸர்வாபிலஷிதான் ||”
அப்படின்னு ஒரு ஸ்லோகம். ஹே வரதா! உன்னுடைய நாமங்களைப் பாடிக்கொண்டு, ஆனந்த சாகரத்தில் மூழ்கி, தியானம் செய்து கொண்டு, குணங்களையும் கதைகளையும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு சஞ்சரிக்கும் எந்த பக்தர்கள் உம்மிடமே ரமிக்கிறார்களோ, அந்த பக்தர்களை நான் சர்வாபீஷ்டங்களையும் அடைந்த பாக்கியசாலிகளாகக் கருதுகிறேன், அப்படின்னு சொல்றாரு.
அது மாதிரி எல்லா அபிஷ்டங்களையும் அடைந்த பாக்கியசாலிகள் நம்ப ஒரு பணக்காரன் நினைச்சலாம் வாங்கிக்கிட்டு பெரிய வீட்ல இருக்கான், நல்ல ஃபேமிலி இருந்தா ரொம்ப கொடுத்து வெச்சவான்னு நினைக்கிறோம். இவர் சொல்றார், யார் இந்த மாதிரி சுவாமினுடைய கதைகளைப் பேசிண்டு, அதுல ரமிக்கிறாளோ அவாதான் ரொம்ப தன்யாஹா, அப்படின்னு சொல்றார். அந்த மாதிரி நம்ப பகவானுடைய ஸ்தோத்திரத்துல மட்டுமே ரமிச்சுண்டு இருக்கிற அந்த நிலைமையை பிரார்த்திக்கணும்.
சௌந்தர்ய லஹரியில 27-வது ஸ்லோகம், சுவாமிகள் என்னை இந்த ஒரே ஒரு ஸ்லோகம் படிக்க சொன்னார். அதுல கூட ஒரு வேடிக்கை ஆச்சு. இந்த ஸ்லோகம் படிச்சார். நான் கொஞ்சம் ஆவர்த்தி பண்ணிட்டு இந்த ஸ்லோகத்துக்கு ஆத்ம லாபம் கிடைக்கும்னு பல சுத்தி சொல்லி இருக்கா அப்படின்னு சொன்னேன். அப்புறம் ரெண்டு மூணு நாளைக்கு அப்புறம் ‘நீ மூக பஞ்சசதியே படி’ அப்படின்னு சொல்லி ட்டார். அதாவது நான் கொஞ்சம் செர்ட்டன் நம்பர் ஆஃப் ஆவர்த்தி பண்ணிட்டு எனக்கு ஏதோ ஆத்ம அனுபவம் வந்துடுத்து, ஞானம் வந்துடுத்து அப்படின்னு எங்கேயாவது சொல்லிட்டு அலையப் போறேன்னு அவருக்கு பயம் போல இருக்கு. இந்த ஸ்லோகம் ரொம்ப அழகா இருக்கும். ‘ஜபோ ஜல்பஹ, சில்பம் ஸகலமபி முத்ரா விரசனா, கதிஹி, ப்ராதக்ஷிண்யக்ரமணம் அஷனாத்யாஹுதி விதிஹி, பிரணாமஹ ஸம்வேஷஹ சுகமகிலம் ஆத்மார்பண த்ருஷா, ஸபர்யாபர்யாயஹ தவ பவது யன்மே விரசிதம்’.
இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் என்னன்னா:
ஜபோ ஜல்பஹ, ஜல்பஹன்னா உளறல்னு அர்த்தம். என்ன நான் பேசினேனோ, அது எல்லாமே உன்னுடைய ஜெபமாக ஆகட்டும். ஹே… ஹே காமாக்ஷி. ‘சில்பம் ஸகலமபி முத்ரா விரசனா’. நான் கை கால் அசைச்சு என்னெல்லாம் அசைவுகள் பண்றேனோ அது எல்லாமே உனக்கு பண்ற முத்திரையா இருக்கட்டும். ‘கதிஹி ப்ராதக்ஷிண்யக்ரமணம்’. நான் என்னெல்லாம் ஊர் சுத்துறேனோ அதெல்லாம் உனக்கு பண்ண பிரதக்ஷிணமாக ஆகட்டும். ‘அஷனாத் யாஹுதி விதிஹி’. நான் என்னெல்லாம் சாப்பிடுறேனோ வாயால மட்டும் இல்ல, கண்ணால, காதில எதெல்லாம் நான் சாப்பிடுறேனோ அதெல்லாம் உனக்கு பண்ண ஆஹுதியாக இருக்கட்டும். ‘பிரணாமஹ சம்வேஷஹ’. நான் தூங்குறது உனக்கு பண்ற நமஸ்காரமா இருக்கட்டும். ‘சுகமகிலம் ஆத்மார்பண த்ருஷா’. ஆத்மார்ப்பண புத்தியோடு நான் இருப்பதனால் நான் அனுபவிக்கிற எல்லா சுகங்களும், ‘சபர்யாபர்யாயஹ தவ பவது என்மே விரசிதம்’. நான் பண்றது எல்லாம் உன்னுடைய பூஜையாக ஆகட்டும்.
இந்த நிலையும் நாம் பிராத்தனை பண்ணனும். அது மாதிரி நம்ம பண்ற எல்லாமே அம்பாளுடைய பூஜை ஆகணும்ன்னா நமக்கு அப்பேற்பட்ட உயர்ந்த பக்தி வரணும். அதை வேண்டிப்போம்.
ஜந்தோஹோ தவ பதபூஜன சந்தோஷ தரங்கிதஸ்ய காமாக்ஷி |
பந்தோ யதி பவதி புனஹ சிந்தோரம்பஸ்ஸு பம்பிரீதி ஷிலா ||
நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹாதேவா!
jantohō tava padapūjana santōsha taraṅgitasya kāmākṣī |
bandhō yadi bhavati punaḥ sindhōrambassu pambirīti śilā ||
- This is the 45th sloka of the Arya Satakam.
- The words tava pada pūjana mean the worship of Your feet, and santōsha taraṅgitasya refers to a person who floats in these waves of joy.
- The term jantohō implies that one does not need profound education; simply being human is enough.
- The phrase bandhō yadi bhavati punaḥ means “if one enters the cycle of karma and bondage again”.
- Suggesting that such a person will keep revolving in worldly bondage is like saying a stone floats on the ocean water (sindhōrambassu pambirīti śilā).
- Just as a stone cannot float in the ocean, a person who attains joy by worshiping the lotus feet of Kamakshi will not be bound by worldly affairs again.
- It is a very reassuring and beautiful sloka that promises liberation if one holds onto the feet of Kamakshi.
- The catch here is that the waves of joy must surge within the person’s heart while worshiping the feet, and it takes time to reach this state.
Just as we saw in yesterday’s sloka, mātar jayanti mamatāgraha mōkṣaṇāni, for the demon of attachment (mamata) to leave us, only Kamakshi’s grace can bestow such mercy.
- In worldly affairs, we experience joy and excitement because we are driven by the concept of “this is mine”.
- This is similar to the deep affection of a newlywed couple or a mother’s immense joy in her child.
- Even when parents sacrifice their money and time to raise their children, they feel severely distressed when their children move away to study elsewhere.
- Wherever we give with affection, that is where our attachment (bandha) increases.
- If we can redirect our time, money, and love toward a Guru or a deity, and experience joy through praising the divine (just as a woman feels happy talking about her child or husband), the deity takes responsibility for us.
- The sloka states that after reaching this state, we will not get trapped in the worldly cycle of existence again.
Swamigal read the stotra called Mooka Panchashati to me many times, and I kept listening without needing any explanation. After reading it for so many years, I have gained a drop of joy from it.
- I am like a fly—a fly eats sweets and also sits on other things.
- Similarly, being involved in worldly affairs while finding a little joy in chanting is just one level.
- As long as we are amazed by worldly things, we are essentially mute.
- When we realize Kamakshi (our Guru) as a conscious entity (chaitanya vastu) and feel an overflowing desire to chant her stotras, only then does the gift of speech become meaningful.
- From that day on, we begin to speak meaningfully, and we must continue to grow that love, constantly yearning for the day we merge with the Lord.
The ultimate goal is to chant Kamakshi’s stotra and experience supreme bliss. The first sloka of the third canto of Narayaneem says:
paṭantō nāmāni pramathapara sindhō nipatitāḥ smarantō rūpaṁ tē varada kathayantō guṇa kathāḥ |
carantō yē bhaktāḥ tvayi kalu ramantē paramamūn ahaṁ tanyān manyē samadhikata sarvābilaṣitān ||
We often think that rich people who live in big houses and have good families are the truly blessed ones. However, Swamigal notes that those who speak about the Lord’s stories and rejoice in them are the truly blessed ones (the dhanyāḥ). We must pray to reach that state of rejoicing only in the Lord’s stotras.
Swamigal told me to read the 27th sloka of Soundarya Lahari. There was a funny incident regarding this: after doing some repetitions (avārti), I told him that it is believed that self-realization (atma labham) can be attained from this sloka. Two or three days later, he told me, “Leave this. You should just read only “Mooka Panchashati”. He was perhaps afraid that after a certain number of repetitions, I would go around claiming to have attained self-realization and wisdom.
The sloka is very beautiful:
japo jalpaḥ, śilpaṁ sakalamapi mudrā viracanā, gatiḥ, prādakṣiṇyakramaṇaṁ aśanātyāhuti vidhiḥ, praṇāmaḥ saṁvēṣaḥ sukhamakhilaṁ ātmārpaṇa dṛśā, saparyāparyāyaḥ tava bhavatu yanmē viracitaṁ.
Meaning of the sloka:
- japo jalpaḥ: Jalpaḥ means babbling. Whatever I speak, let it all become a chant of You, Oh Kamakshi.
- śilpaṁ sakalamapi mudrā viracanā: Whatever physical movements I make, let them all be mudras dedicated to You.
- gatiḥ prādakṣiṇyakramaṇaṁ: Whatever wandering I do, let it be a circumambulation (pradakshina) for You.
- aśanād yāhuti vidhiḥ: Whatever I consume—not just through my mouth, but through my eyes and ears—let it be an offering to You.
- praṇāmaḥ saṁvēṣaḥ: My rest or sleep should be a prostration to You.
- sukhamakhilaṁ ātmārpaṇa dṛśā: Since I am in a state of self-surrender, all the joys I experience
- saparyāparyāyaḥ tava bhavatu yanmē viracitaṁ: let everything I do become a worship of You.
We must pray to attain this state. For everything we do to become a worship of Ambal, we must develop a high level of devotion. Let us pray for this:
jantohō tava padapūjana santōsha taraṅgitasya kāmākṣī |
bandhō yadi bhavati punaḥ sindhōrambassu pambirīti śilā ||
Namah Parvatii pathayE ! Hara Hara Mahadeva!