Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்

கடாக்ஷ சதகம் 24வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்

अत्यन्तशीतलमतन्द्रयतु क्षणार्धं
अस्तोकविभ्रममनङ्गविलासकन्दम् ।
अल्पस्मितादृतमपारकृपाप्रवाहम्
अक्षिप्ररोहमचिरान्मयि कामकोटि ॥

அத்யந்தஶீதலமதந்த்³ரயது க்ஷணார்த⁴ம்
அஸ்தோக விப்⁴ரமமனங்க³விலாஸகந்த³ம் ।
அல்பஸ்மிதாத்³ருʼதமபாரக்ருʼபா ப்ரவாஹம் அபாரக்ருʼபா ப்ரவாஹம்
அக்ஷிப்ரரோஹமசிரான்மயி காமகாேடி ॥

இந்த ஸ்லோகம் சொல்றதுக்கே ரொம்ப Sweet ஆன ஒரு ஸ்லோகம்.

அத்யந்தஶீதலமதந்த்³ரயது க்ஷணார்த⁴ம்
அஸ்தோக விப்⁴ரமமனங்க³விலாஸகந்த³ம் ।
அல்பஸ்மிதாத்³ருʼதமபாரக்ருʼபா ப்ரவாஹம் அபாரக்ருʼபா ப்ரவாஹம்
அக்ஷிப்ரரோஹமசிரான்மயி காமகாேடி ॥
ஸ்வாமிகள் சொல்லுவார். இந்த மூக பஞ்சசதிக்கும் மத்த ஸ்லோகங்களுக்கும் என்ன வித்தியாசம்னா திரும்ப திரும்ப திரும்ப காமாக்ஷியுடைய கருணையை பேசற ஒரு ஸ்தோத்ரம் இது. காமாக்ஷியுடைய கருணை என்ற மான் உலாவும் ஒரு நந்தவனம். அப்படீம்பார் காமாக்ஷியுடைய கடாக்ஷத்த. க்ருபை என்ற பெண் நடமாடும் மேடை காமாக்ஷியுடைய கடாக்ஷம். காமாக்ஷியுடைய கருணையின் திறத்தை வியந்து போற்றி புகழ்ந்து பேசற ஒரு ஸ்தோத்ரம் இந்த மூக பஞ்சசதி. அபார க்ருபா ப்ரவாஹம் அப்படீன்னு ஸ்வாமிகள் நிறைய வாட்டி இத சொல்லி சொல்லி சந்தோஷப் படுவார். அபார க்ருபா ப்ரவாஹம் அக்ஷிப்ரோரஹமசிராத் மயி காமகோடி. அத்யந்த ஷீதலம் அப்படீங்கற அந்த வார்த்தைய சொல்லும் போதே குளிர்ச்சியாயிடறது. மிக மிக குளிர்ந்ததும் காமாக்ஷியுடைய கடாக்ஷம். ரொம்ப குளிர்ச்சியாயிருக்கு. பெரியவா முன்னாடி போய் நின்னு அந்த கடாக்ஷம் மேல பட்டுடுத்துன்னா உடம்பே குளிர்ந்துடும், மனசு குளிர்ந்துடும். அந்த மாதிரி காமாக்ஷி கடாக்ஷம் ரொம்ப தாப சாந்திய குடுக்கறது. அஸ்தோக விப்ரமம் அப்படீன்னா ரொம்ப அழகானதும், அனங்க விலாஸ கந்தம். மன்மத விலாஸம். மன்மதனுடைய சக்திக்கு ஒரு கந்தம் போல, force போல இருக்கு காமாக்ஷியின் கடாக்ஷம் தான் மன்மதனுக்கு சக்திய கொடுக்கறது. அந்த பார்வையே பரமேஸ்வரனுக்கு ஆசைய தூண்டறது. அப்படி அனங்க விலாஸ கந்தம் அல்பஸ்மிதா த்ருதம். அல்பஸ் மிதம்னா மந்தஸ்மிதம். மந்தஸ்மிதத்தோட கூடியதுமான அபார க்ருபா ப்ரவாஹம். கரையில்லாத கருணா ப்ரவாஹத்தோடு கூடியதுமான அந்த அக்ஷிப்ரரோஹம். உன்னுடைய கடாக்ஷம், அசிராத் – வெகு விரைவில், மயி – என்னிடத்தில் க்ஷணார்த்தம் அனந்த்ரயது. ஒரு அரை க்ஷணமாவது என் மேல களைப்பாறட்டும். அதாவது, என் மேல உன்னுடைய கடாக்ஷம் படட்டும். இந்த அபார க்ருபா ப்ரவாஹம் அப்படீங்கறது ஸ்வாமிகள் சொல்வார். ஒரு மழை போல காமாக்ஷியுடைய கடாக்ஷம் எப்பவும் கொட்டிண்டிருக்கு. நம்ம மேல படாம நம்ம தான் ego வெச்சு குடையா பிடிச்சு தடுத்துடறோம். அத விட்டுட்டோம்னா நம்ம அந்த கருணையை உணரலாம். அப்படீன்னு சொல்வார். மகான்கள் எல்லாருமே இந்த மாதிரி சொல்லியிருக்கா. ரமண பகவான்ட்ட போய் எனக்கு அனுக்ரஹம் பண்ணனும் அப்படீன்னா அனுக்ரஹம் எப்பவுமே இருந்துண்டிருக்கு அப்படீன்னு சொல்லியிருக்கார். நம்முடைய ego தான் குறுக்க நிக்கறது. அது போறது. காமாக்ஷி கடாக்ஷம் தான் அனுக்ரஹம் பண்ணனும்.
ராமாயணத்துல சீதா தேவி ராமர் எப்படி இருக்கார்? அப்படீன்னு ஹனுமார்ட்ட கேக்கும் போது
தர்மா பதேஶாத் த்யஜத: ஸ்வராஜ்யம்
மாம் சாப்யரண்யம் நயத: பதாதிம் |
நாஸீத் யதா யஸ்ய ந பீர் ந ஶோக:
கச்சித் ஸ தைர்யம் ஹ்ருதயே கரோதி ||
அப்படீன்னு கேக்கறா. தர்மா பதேஶாத் த்யஜத: ஸ்வராஜ்யம் – தர்மத்தின் பொருட்டு ராஜ்யத்தை உதறித் தள்ளினவரும், மாம் சாபி: அரண்யம் நயத: பதாதிம் – நடத்தி என்னை காட்டுக்குக் கூட அழைச்சுக் கொண்டு வந்தவரும், ஒரு நாளும் ராமர் அத பொறுக்க மாட்டார். சீதாதேவி நடந்து காட்டுல கூட வர்ரதுங்கறது ரொம்ப ஒரு அவருக்கு துக்கத்தக் குடுக்கக் கூடிய விஷயம். ஆனா ராஜ்யத்த இழந்ததயோ, இந்த மாதிரி மனைவிய நடத்திக் காட்டுக்குக் கூட்டிட்டு வர்ரோம்கறதயோ நினைச்சு அவர் ஒரு நாளும் வருத்தப்படல.
நாஸீத் யதா யஸ்ய ந பீர் ஶோக: – அது குறித்து அவர் எந்த சோகமும், பயமும் அடையலயோ, அப்பேர்ப்பட்ட ராமர்,
கச்சித் ஸ தைர்யம் ஹ்ருதயே கரோதி – அந்த தைர்யத்தை இன்னும் விடாமல் இருக்கிறாரா? அப்படின்னு கேக்கறா சீதை. ஸ்வாமிகள் இந்த இடத்துல சொல்லுவார் – ego இல்லாம இருந்தா தான் மேலும் மேலும் கஷ்டம் வரும் போது நம்மால தைர்யத்தை விடாம இருக்க முடியும். நா அவ்ளோ பெரிய ராஜாவா இருந்தேன். எல்லா ஜனங்களுக்கும் என்னை பிடிச்சுது. அவ்ளோ படிச்சிருக்கேன். அவ்ளோ அப்பாக்கு சிஸ்ருஷை பண்ணியிருக்கேன். அப்படில்லாம் ராமர் நினைச்சார்னா அந்த மாதிரி மேலும் மேலும் துக்கம் வரும் போது மனம் தளர்ந்து போயிடும். ஏதோ ஈஸ்வராக்ஞம் இதெல்லாம் நடக்கறது. அப்படீன்னு தன்ன பத்தி பெரியவா நினைக்காததால் தான் இத்தனை கஷ்டத்தையும் பொறுத்துண்டார். அதே மாதிரி சீதை கிட்ட ஹனுமார் இவ படற துக்கத்த பார்த்து “நான் உன்ன தூக்கிண்டு போய் ராமர்ட்ட சேர்த்துடறேன்”, அப்படின்னு சொல்லும் போது, சீதை, “இல்லை, ராமருக்கு ப்ரியமானது தான் பண்ணனும். ராவணன் என்னை தூக்கிண்டு வந்தான். அந்த மாதிரி, நீ என்னை தூக்கிண்டு போறதுங்கறது ராமருடைய புகழுக்குக் குறைவு. அவர் வந்து ஜெயிச்சு, அவருடைய வீரத்தை நிலைநாட்டி, ராவண வதம் பண்ணி என்னை எடுத்துண்டு போனா தான் அவருடைய புகழ், அதான் அவருக்கு பெருமை சேர்க்கும். அதனால, நீ தூக்கிண்டு போறதுங்கறது சரியில்லப்பா “.

ஸ மே ஹரிஶ்ரேஷ்ட ஸலக்ஷ்மணம் பதிம்
ஸயூதபம் க்ஷிப்ர மிஹோப பாதய|சிராய ராமம் ப்ரதி ஶோக கர்ஶிதாம் குருஷ்வ மாம் வாநர முக்ய ஹர்ஷிதாம் ||
அப்படின்னு “நான் தவிச்சுண்டிருக்கேன் ராமருக்காக. எப்படியாவது அவாள சீக்ரம் அழைச்சுண்டு வா ராம லக்ஷ்மணாள” அப்படின்னு கேக்கறா சீதை. அந்த மாதிரி தனக்குன்னு ஒரு opinion இல்லாம ராமருக்கு எதுவோ, ராமருடைய பெருமைக்கு இழுக்கு வராம பண்ணனும் காரியங்கள் அப்படின்னு அவளும் அவ்ளோ ego இல்லாம இருக்கா. அவ்ளோ கஷ்டத்துல இருந்தா கூட, ஒரு Solution குடுத்தா கூட, சீதை ராமருக்கு த்ருப்தியா நடந்துக்கணும் அப்படீன்னு ரொம்ப ஜாக்ரதையா இருக்கா.
மஹா பெரியவா 1957 ல சென்னைக்கு வந்தா. ஒன்றரை வருஷம் இருந்தா. 58 ல பெரியவா பட்ணத்த விட்டு கிளம்பப் போறா. அப்ப ஒரு பிரிவு உபசாரம் எல்லாரும் சேர்ந்து பண்றா. ரொம்ப அழகழகா பேசி கி.வா. ஜெகந்நாதன் சொல்றார், “ராமரோட கூட பொறக்கலேயேன்னு ஒரு குறை இருந்தது. கிருஷ்ணரோட இருக்கலயே, நாயன்மார்களோட கூட வாழலையே, பட்டினத்தார் மாதிரி மகான்களை பாக்கலையே, அப்படியெல்லாம் குறை இருந்தது. அந்த எல்லா குறையும். இன்னிக்கு பெரியவாளோட நம்ம பொறந்திருக்கோம், பெரியவாள தர்சனம் பண்ணோம். பெரியவாள் வாக்கு கேட்டோம், அப்படீங்கறதுல அந்த குறை போயிடுத்து”, அப்படீன்னு பேசறார். ராஜாஜி பேசறார். அப்படி பல பேர் பேசி முடிச்ச உடனே, பெரியவா ஏற்புரை. அந்த அரை மணி Cassette இருக்கு. அத கேட்டா கண் ஜலம் விடாம இருக்கவே முடியாது. பெரியவா சொல்றா, “எல்லாரும் என்னை இந்திரன், சந்திரன்னு புகழ்ந்து பேசினா, ரொம்ப நன்னா என்னை பாத்துண்டா, இந்த ஒன்றரை வருஷத்துல. 10 நாள் visit to Chennai அப்படின்னு கூட ஹிண்டு ல போட்டா வந்த போது. நான் இங்கயே இருந்துண்டிருந்தேன். ஜனங்கெள்லாம், இங்க பண்டிதர்லாம் இருக்காளே, அவாள்லாம் பேசி கேட்டு ஏதாவது நிறைய சந்தேகங்கள் தெளிவு படுத்திக்கறதுக்கு எனக்கு இது ரொம்ப செளகரியமா இருந்தது இந்த பட்டிணவாசம். நா முதல்ல பட்டிணங்களுக்கு வரதில்லைனு ரொம்ப strictஆ வெச்சிருந்தேன். யாரா வந்து கேட்டா நீங்க குடுமி வச்சுக்கோங்கோ, பஞ்சகச்சம் கட்டிக்கோங்கோ, அப்படீன்னு சொல்லிண்டிருந்தேன், அவா ஒண்ணும் மாறல, ஆனா கேட்டுண்டே இருந்தா, சரி நமக்கு எதுக்கு பிடிவாதம்னு வந்துட்டேன், வந்த இடத்துல இவ்ளோ நாள் இருந்தேன். எனக்கு ரொம்ப செளகர்யம் பண்ணிக் குடுத்து நன்னா பூஜை எல்லாம் இவ்ளோ ஜனங்கள் வந்து பாத்து, எனக்கு எல்லாம் ரொம்ப த்ருப்தி, எல்லாரும், பேசினவா எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கல. ஆனா எல்லாரும் ஒரு விஷயம் சொன்னா, இனிமேலாவது பெரியவா சொன்னதெல்லாம் நாம கேட்டு நடக்கணும், அப்படின்னு ஒண்ணு சொன்னா, இத்தன நாள் நான் இங்கிருந்து, நான் தர்ம சாஸ்த்ரங்கள் ல இருக்கறதெல்லாம் சொன்னேன். இப்ப நான் சொன்னத நீங்க கேட்டு நடந்தா, நான் அந்தண்ட போன உடனே அதெல்லாம் விட்றதுக்கு வாய்ப்பிருக்கு. அப்படி இல்லாம நான் போனப்புறம் தான் நான் சொன்னத நீங்க கேட்டு நடக்கப் போறேள்னு அப்படீன்னு நான் நெனச்சேன்னா எனக்கு budget planning லாம் தெரியாதுன்னு அர்த்தம். இந்த மாதிரி உக்காந்து, lecture பண்ணி ஜனங்கள மஹான்கள் மாத்தினதா, சரித்திரத்துல இல்ல. இந்த உபன்யாசங்கள்லாம் ஒரு தற்கால சாந்தி தான். நெஜமாவே ஜனங்கள மாத்தணும்னா அதுக்கு ஆத்ம சக்தின்னு ஒண்ணு வேணும். அந்த ஆத்ம சக்தி எனக்கு வந்துடுத்துன்னா நீங்கள்லாம் என்னோட சிஷ்யர்கள், என்ட்ட ரொம்ப ப்ரியமா இருக்கேள், அதனால உங்களுக்கெல்லாமும் அந்த, நான் எந்த ரிஷிகள் சொன்ன சாஸ்திர வழில இருக்கேன்னு, இருக்கணும்னு சொல்றேனோ, தானா நீங்க அந்த வழிக்கு வந்துருவேன். எனக்கு அதுல நம்பிக்கை வந்து, நான் அத நடத்தி காமிச்சு மேலும் காமாக்ஷி அனுக்ரஹத்துனால நான் என்னை தூய்மை படுத்தின்டு எனக்கு இந்த ஆத்ம சக்தி வந்துடுத்துன்னா நீங்கள்லாம் தானா மாறிடுவேன். அதனால, பெரியவா சொன்னத கேக்கலியே, நான் ஏதாவது condition போட்டிருந்தாலும் சரி, நான் சொன்னத கேக்கணும், அப்படின்னு அதெல்லாம் கூட வாபஸ் வாங்கிக்கறேன். எனக்கு ரொம்ப சந்தோஷம், உங்கள்ட்ட திருப்தி, எந்த ஒரு குறையும் நீங்க வச்சுக்க வேண்டாம். அப்படீன்னு பெரியவா சொல்றா. என்ன ஒரு கருணை. எனக்கு என்ன தோணுதுன்னா இந்த அத்யந்த ஶீதலம், அதுல அபார க்ருபா ப்ரவாஹம்கறது பெரியவாளோட இந்த promise தான். அவா சத்தியம் பண்ணி குடுத்துருக்கா. என்ட்ட நீங்க பக்தி பண்ணா, எந்த நல்ல வழில நீங்க இருக்கணுமோ, அதுக்கு நான் பொறுப்பு. என்னோட ஆத்ம சக்தி நான் உறுதி படுத்தறதுக்கு என்ன தபஸ் பண்ணனுமோ, அத நான் பண்றேன். அப்படீன்னு பெரியவா சொல்லிருக்கா. பெரியவா அன்னிக்கு முடிக்கும் போது, நான் இந்த ஒன்றரை வருஷமா பேசினதெல்லாம் நீங்க மனசுல அலசிப் பாருங்கோ, தர்ம சாஸ்திர விஷயங்கள் சொன்னதெல்லாம் நமக்கு க்ஷேமந்தானா? அப்படீன்னு அத மனசுல சிந்தனை பண்ணிப் பாருங்கோ, அந்த காரியம் நீங்க பண்ணுங்கோ, அப்படின்னு சொல்றா. சார் book லயும், அதத் தான் அவர் வந்து விவேகி, சிறந்த விவேகி, தெய்வ விவேகி, சாது அப்படீன்னெல்லாம் போட்டு வாழ்க்கையினுடைய பயனை உணர்ந்து வாழ்பவர்கள், அவா என்ன பண்றா, எப்படி நடந்துப்பா, அப்படீன்னு நம்மளுடைய மனசுல அந்த தர்ம சாஸ்த்ரத்துல இருக்கறதெல்லாம் நம்மளுடைய மேலான நன்மைக்காக ரிஷிகள் சொன்னது, அப்படீங்கறத நமக்கு புரிய பாஷைல சார் சொல்றார். பெரியவா கிட்ட இருந்து அந்த ஆத்ம சக்தி நம்ம மேல work பண்றத தடுக்காம இருக்கணும். அதுக்கு பெரியவாட்ட பணிவா நம்ப humble ஆ, பெரியவா சொன்னதெல்லாம், அதெல்லாம் ஒண்ணும் இந்த காலத்துக்கு ஒத்து வராது. அப்படின்னெல்லாம் நினைக்காம, அவரே சொல்றார். பெரியவாளே அந்த lecture ல நான் சொல்ற தர்மசாஸ்திரத்துல இருக்கறதெல்லாம் நீங்கள்லாம் follow பண்றதுங்கறது எவ்ளோ கஷ்டம்கறது எனக்குத் தெரியும். அப்படீன்னு அவ்ளோ kind ஆ, அவ்ளோ pragmatical ஆ சொல்றார். பெரியவா வந்து உணர்ச்சி வசமா சொல்லல. ஆனா கேக்கறவாளுக்கு அப்படி பொங்கி பொங்கி அழுகை வரும். அந்த மாதிரி உருக்கமா பேசியிருக்கா பெரியவா. நான் குருன்னு உக்காந்திருக்கேன். அதனால நான் தான் உங்களோட பொறுப்பு. உங்களோட நடத்தைக்கு பொறுப்பு. நீங்க கவலைப்படாதீங்கோ, அப்படீன்று சொல்றார். அவ்ளோ கருணையா அந்த வார்த்தைகள். அதனால பெரிய வா அனுக்ரஹம் நமக்கு கிடைக்கறதுக்கு நம்ப humble ஆ இருந்து, பெரியவாளே, என்னை வழி நடத்துங்கோ. அப்படீன்னு சொல்லிண்டே இருந்தாலே, அந்த கருணை மழை நம்ம மேல பொழிஞ்சிடும், அப்படீன்னு தோணித்து. இந்த ஸ்லோகத்துக்கு அப்படி ஒரு அர்த்தமும் நம்ம எடுத்துக்கலாம். நம்ம நம்முடைய குரு-க்கு த்ருப்தியா நடந்துண்டா காமாக்ஷி கடாக்ஷம் கிடைக்கும். கருணை மழைல நனஞ்சு ஆனந்தத்த அனுபவிக்கலாம்.

அத்யந்தஶீதலமதந்த்³ரயது க்ஷணார்த⁴ம்
அஸ்தோக விப்⁴ரமமனங்க³விலாஸகந்த³ம் ।
அல்பஸ்மிதாத்³ருʼதமபாரக்ருʼபா ப்ரவாஹம் அபாரக்ருʼபா ப்ரவாஹம்
அக்ஷிப்ரரோஹமசிரான்மயி காமகாேடி ॥

நம: பார்வதி பதயே | ஹர ஹர மகாதேவா ||

5 replies on “காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்”

“‘அபார க்ருபா ப்ரவாஹம்’ போன்ற காமாக்ஷியினுடைய கடாக்ஷம் என் மேல் விழ வேண்டும்” என்று மூககவி ப்ரார்த்திக்கும் அற்புதமான ஸ்லோகம். உங்களுடைய விளக்கம் ஆனந்த ப்ரவாஹம் 👌🙏🌸

இந்த ஸ்தோத்திரம் முழுக்க அம்பாளுடைய கருணையே பேசறதுன்னு ஸ்வாமிகள் சொல்றதுக்கேற்ப தன்னுடைய முதல் ஸ்லோகத்திலேயே “அம்பாளை ‘பர-சித்-ரூபா’ என்று சொல்லி, அந்த சித்தே கருணை வடிவமாகி, குங்குமப்பூவின் பூங்கொத்து மாதிரி அத்தனை கோமளமான சரீரம் எடுத்து, காஞ்சீபுரத்தில் ஒரு கொடி படர்கிற மாதிரி எழுந்தருளியிருக்கிறது” என்று பாடியிருக்கிறார்.🙏🌸

மஹா பெரியவாளின் ப்ரவசனத்திலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டியது மிக அருமை 👌🙏🌸

கீதை உபதேசம் முடிந்த பிறகு, பகவான் அர்ஜுனனிடம், “நான் சொன்னதையெல்லாம் மனஸு குவிந்து ஸரியாகக் கேட்டுக் கொண்டாயா?” என்று விசாரிக்கிறார். ஏன் அப்படிக் கேட்டாரென்று ஆசார்யாள் பாஷ்யம் பண்ணுமிடத்தில், “தாம் சொன்னதை சிஷ்யன் பிடித்துக் கொண்டானா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காகவே பகவான் இப்படிக் கேட்பது. ‘அப்படி இவன் பிடித்துக் கொள்ளவில்லையானால் நாம் மறுபடி வேறேதாவது உபாயம் பண்ணியாவது பிடித்துக் கொள்ளப் பண்ணணும்’ என்ற அபிப்ராயத்தில் தான் கேட்கிறார்” என்று சொல்லி, அதற்கு மேலும் “சிஷ்யன் உபதேச லக்ஷ்யத்தைப் புரிந்து கொண்ட க்ருதார்த்தனாக ஆவதற்குப் பல விதங்களில் முயற்சி பண்ண வேண்டியது ஆசார்ய தர்மம்” என்று சொல்லியிருக்கிறார். பெரியவா, தன் வாழ்நாள் முழுவதும் உயர்ந்த தர்மங்களை உபதேசித்து, உபதேசம் இறங்காத ஜனங்களுக்கும் எப்பாடு பட்டாவது கடைதேற வழி செய்வது அவருடைய அபார கருணையைக் காட்டுகிறது 🙏🌸

அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தருபிணம் |
ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம் ||

என்னையும் உங்கள் அநுக்கிரஹத்துக்கு லாயக்கு ஆக்குங்கோ பெரியவா

தன்னடக்கம், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் தன்மை
இந்த ராமரின் குணங்களை எல்லாம் எடுத்துக் காட்டி சீதாதேவிவின்
பொறுமை எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி பின், பெரியவாளோட
தன்னடக்கத்தையும் அழகா நம் தர்ம சாஸ்த்ரங்களையும் எடுத்துச்
சொல்லி, எப்படி நாம எல்லாம் பின்பற்றணும் ந்னு அழகா சொல்லி
நம் மனதில் சாஸ்த்ரங்களை நாம எப்ப்டி follow பண்ணணும் ந்னு
ரொம்ப அழகா எடுத்துரைக்கிறார் கணபதி!

வாஸ்தவமாகவே நாம் ராமர், க்ருஷ்ணர் காலத்தில்
பிறக்கல்லை, ஆனா பெரியவா காலத்தில் பிறந்து அவர்
உபதேசங்களை நேரடியாகவும், பத்திரிக்கை வாயிலாகவும்
அறிய ரொம்பக்கொடுத்து வைத்திருக்கிறோம்!
இங்கு காமாக்ஷியையும்,பெரியவாளையும் ஒப்பு நோக்கி ஓர்
ப்ரசங்கம்! எப்படி?

காமாக்ஷித் தாயே! மிகவும் குளிர்ந்ததான அழகான ஸ்ருங்கார
ரசத்தின் மூலமான மெல்லிய புன் சிரிப்பு .கருணைப்ரவாகம்
கொண்ட உன் கண் வீச்சு என் மேல் அரை நொடியாவது தங்கி
இளைப்பாறட்டும் என மனமுருகி வேண்டுகிறார் மூக கவி!
அபார கருணா ஸிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் என்ற
பெரியவா ஸ்தோத்ரம் ஞாபகம் வருகிறதல்லவா?

இங்கு அருணகிரியார் சரணகமலாலயத்தை அரை நிமிஷ
நேர மட்டில் தவமுறையில் த்யானம் வைக்க என்ற திருப்புகழ்
நினைவுக்கு வரது! த்யானம் செய்யும் போதே நம் மனதில்
கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்புடன் பெரியவா வரார்
இல்லையா?காமாக்ஷி வேறு பெரியவா வேறல்ல!

இதம்,மிருதுவான ,கனிவான பேச்சு, கருணா கடாக்ஷம்
இதுதான் பெரியவா இலக்கணம்!
அதை அனுபவித்தால்தான் புரியும்! அவர் சொல்படி நாம்
யாவரும் கிஞ்சித்தாவது நடக்க முயற்சிக்க வேண்டும்!

நல்ல ஓர் ப்ரவசனம் பெரியவா அம்பாள், ஸ்வாமிகள் பற்றி!

ஜய ஜய ஜகதம்ப சிவே…

ஜய ஜய சங்கரா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.