உலகிலேயே பழமையான க்ஷேத்ரம் காசி. அந்த காசி க்ஷேத்ரத்தின் காவல் தெய்வம் காலபைரவ மூர்த்தி. அவர் சிவபெருமானின் ஒரு அம்சமாவார். அவர் மீது ஆசார்யாள் அருளிய ஒரு அருமையான ஸ்துதி காலபைரவாஷ்டகம். அதை பல விதங்களில் பாடி மகிழலாம். இங்கே இரண்டு வித மெட்டில் பாடி பதிவு செய்துள்ளேன். அதன் கீழே சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் ஸ்லோகம் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகத்திற்கு ஆசார்யாள் – மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, மற்றும் பல வகைப்பட்ட புண்ணியங்களையும் அளிக்கும். மோகம், பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளை நீக்கும். இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள் – என்று ஒரு அபூர்வமான பலஸ்ருதியை அருளி இருக்கிறார்கள்.
Categories
One reply on “காலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3”
Namaskaram sir, Thank you very much. Good information