ஸ்துதி சதகம் 93வது ஸ்லோகம் பொருளுரை – பரே ஜனனி பார்வதி
ப்ரணத பாலினி ப்ராதிப ப்ரதாத்ரி
परे जननि पार्वति प्रणतपालिनि प्रातिभ-
प्रदात्रि परमेश्वरि त्रिजगदाश्रिते शाश्वते ।
त्रियम्बककुटुम्बिनि त्रिपदसङ्गिनि त्रीक्षणे
त्रिशक्तिमयि वीक्षणं मयि निधेहि कामाक्षि ते ॥
பரே ஜநநி பார்வதி ப்ரணதபாலிநி ப்ராதிப⁴-
ப்ரதா³த்ரி பரமேஶ்வரி த்ரிஜக³தா³ஶ்ரிதே ஶாஶ்வதே ।
த்ரியம்ப³ககுடும்பி³நி த்ரிபத³ஸங்கி³நி த்ரீக்ஷணே
த்ரிஶக்திமயி வீக்ஷணம் மயி நிதே⁴ஹி காமாக்ஷி தே ॥
One reply on “ஞாபக சக்தியை அளிக்கும் மூகபஞ்ச சதீ ஸ்லோகம் – பரே ஜனனி பார்வதி ப்ரணத பாலினி ப்ராதிப ப்ரதாத்ரி”
கேட்பதற்கும் செல்வதற்கும் மிகவும் இனிமையான ஸ்லோகம். அதி அற்புதமான விளக்கம். ராமாயண காட்சி மேற்கோளும், குசேலர் கதைக்கு ஸ்வாமிகளின் கண்ணோட்டத்தை விளக்கியதும் மிக அருமை👌🙏🌸
இந்த ஸ்லோகம் முழுவதுமே அம்பாளுடைய நாமாவளிகளை அடுக்கிக் கொண்டு போவது போல் அமைந்திருக்கிறது. எல்லோருக்கும் தாயாராக ‘ஜனனி’ என்றழைத்து பர்வதராஜ புத்திரியாக ‘பார்வதி’ என்றும் அழைக்கிறார் மூககவி. மஹாபெரியவா, “தெய்வத்தையே தாயாராக பாவிக்கும் போதுதான் அம்பாள் என்று வழிபடுகிறோம். ‘எல்லாம் அவள் செய்வாள்’ என்று திட உறுதியோடு கவலையில்லாமல் பூர்ண நம்பிக்கையோடு ஒப்புக்கொடுப்பது, சரணாகதி பண்ணுவது, மனோவிகாரமில்லாமலிருப்பது குழந்தைப் பிராயத்தில்தான் – இப்படிக் குழந்தைத் தன்மையிலுள்ள தெய்வத்தன்மையெல்லாம் நம்மிடம் வருவதற்காகத்தான் பரமாத்மாவை அம்பாளாக பாவிப்பது. அம்மாவாக உபாஸிக்க ஆரம்பித்தால், நிறைந்த அன்பு வெள்ளம் இயல்பாக நம்மிடமிருந்து பெருக ஆரம்பித்து விடும். அதுவே ஸகல தாப சமனத்திற்கும், ஸமஸ்த பாப நிவாரணத்திற்கும் வழி என்பதாலேயே மஹான்கள் தங்களை குழந்தைகளாக்கி, பரமாத்மாவை ஜகஜ்ஜனனியாக பாவிப்பது.” என்கிறார்.
அப்படிப்பட்ட சர்வலோக ஜனனி, பர்வதராஜ புத்திரி பார்வதியாக, குழந்தையாக வந்த அதிசயத்தை போற்றுகிறார்.🙏🌸
அம்பாளை ‘த்ரிபத ஸங்கினீ’ என்கிறார். மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது. பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர். அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும். அதனால் ‘மூன்று வேதங்களின் சம்பந்தம் உடையவள்’ என்கிறார் போலும்.
அப்படிப்பட்ட காமாக்ஷி ‘ப்ராதிப’ ஞானத்தை அளித்து எல்லோரையும் கடாக்ஷிக்கட்டும் 🙏🌸