பாதாரவிந்த சதகம் 63வது ஸ்லோகம் பொருளுரை – சூர்ய ஒளிக்கு மூலத்ரவியம் எது? காமாக்ஷி பாதங்கள்
प्रतीमः कामाक्षि स्फुरिततरुणादित्यकिरण-
श्रियो मूलद्रव्यं तव चरणमद्रीन्द्रतनये ।
सुरेन्द्राशामापूरयति यदसौ ध्वान्तमखिलं
धुनीते दिग्भागानपि च महसा पाटलयते ॥
कदाचिदाद्या ललिता पुंरुपा कृष्ण विग्रहा । वेणुनादविनोदेन करोति विवशं जगत् ॥
मित्राय नमः।
रवये नमः।
सूर्याय नमः।
भानवे नमः।
खगाय नमः।
पूष्णे नमः।
हिरण्यगर्भाय नमः।
मरीचये नमः।
आदित्याय नमः।
सवित्रे नमः।
अर्काय नमः।
भास्कराय नमः।
छाया सुवर्चलांबा समेत सूर्यनारायणाय स्वामिने नमः।
One reply on “சூர்ய ஒளிக்கு மூலத்ரவியம் எது? காமாக்ஷி பாதங்கள்”
அம்பாளுடைய பாதக் கமலத்தை உதயக்கால சூர்யனுடைய கிரணங்களின் சோபைக்கு மூலகாரணமாக ஸ்தோத்திரிக்கும் அழகான ஸ்லோகம். அருமையான விளக்கம். சீர்பாத வகுப்பு மேற்கோள் மிக அருமை. 👌🙏🌸
மஹாபெரியவா, சிவத்தின் சக்தியை நாராயண சகோதரி என்று சொன்னாலும் அம்பாளுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதைத் தத்துவ ரீதியில் விளக்கியிருப்பார். ஸ்வாமிகளும் கிருஷ்ணன்தான் லலிதா என்று சொல்வதை கேட்கும்பொழுது மஹான்களுடைய எண்ணங்கள் ஒரே கோணத்தில் ஒத்துப் போவதை காட்டுகிறது. 🙏🌸
அம்பாளை ‘உத்யத்–பாநு ஸஹஸ்ராபா’ – ஆயிரம் உதய ஸூர்யர்களின் காந்தி படைத்தவள் என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம். ‘உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்’ – ‘கோடி சூர்யப்ரகாசமாக விளங்கும் மீனாக்ஷி தேவியை’ என்று ஆசார்யாளும் மீனாக்ஷி பஞ்சரத்தினத்தில் வர்ணிக்கிறார்.🙏🌸
ஆசார்யாள் ஸௌந்தர்யலஹரியில், “‘அவித்யாநாம் அந்தஸ் – திமிர – மிஹிர – த்வீபநகரீ’ – ‘மிஹிரன்’ என்றால் ஸூர்யன். ஸ்வயஞ்ஜோதியாக உள்ள ஆத்மா தெரியாதபடி அஞ்ஞான இருட்டு செய்கிறது. இப்படி அஞ்ஞானியாக இருப்பவர்களுக்கு ஸூர்யோதய ஸ்தானமான ஒரு பிரகாசமான நகரம் மாதிரி ஞான வெளிச்சத்தை அம்பாளின் பாததூளி கொடுக்கிறது.” என்கிறார். இன்னொரு ஸ்லோகத்தில் அம்பாளை சூர்யசேகரியாக வர்ணிக்கிறார். ஒரு ஸூர்யன் மாத்ரமில்லை; பன்னிரண்டு ஸூர்யர்களையும் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார்.🙏🌸
அம்பாளுடைய பாதக்கமலம் நம் அஞ்ஞான இருளை நீக்கி ஞானத்தை அருளட்டும்🙏🌸