Categories
Ramayana sargam meaning

ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி ஒன்று


ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி ஒன்று

Series Navigationஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி இரண்டு >>

4 replies on “ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி ஒன்று”

மிக அருமையான வர்ணனை‌. ஒரு ஜீவனை பரமாத்மாவோடு அந்த நித்தியானந்தத்தோடு சேர்ப்பிப்பது குருவின் லட்சியம் என்ற இந்த சில ஸ்லோகங்களில் மிகவும் அழகாக எடுத்துச் சொன்னீர்கள். 👌🙏🌸

மூக பஞ்ச சதியில் “ஸத்க்ருத தேசிக சரணா:” ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி, “தத:” என்ற சொல்லிற்கு பலவிதமான அர்த்தங்களை எடுத்துரைத்தது மிக அற்புதம்.

ஒரு குருவானவர் ரிஷபம் போலவும், சிம்மத்தை போலவும், யானையை போலவும் இருக்க வேண்டும் என்று அவருடைய லக்ஷணங்களை கூறிய விதம் மிக அருமை.

மஹாபெரியவா இதற்கு உருவகமாகவே நம்முடன் வாழ்ந்த காட்டினார். எப்படி ஒரு யானையின் பின்னால் நாய் குறைத்தாலும் அதை கண்டுகொள்ளாதோ, அதே மாதிரி மஹாபெரியவா தன்னை மேடை போட்டு திட்டியவர்களையும் ஆசீர்வதித்து சென்றது நினைவிற்கு வருகிறது.🙏🙏🙏🙏

முதல் ஸர்க்கத்தில் தன்னுடைய குருவான சூரியனுக்கும், பிதாவான வாயுவிற்கும், மஹேந்திரனுக்கும், பிரம்மாவிற்கும் நமஸ்கரித்துவிட்டு புறப்படுகிறார். யாராலும் சுலபமாக செய்யமுடியாத காரியங்களை செய்கிறார். ஆனால், அம்பாளுடைய தர்சனம் கிடைக்க வேண்டுமென்றால் அம்பாளைப் ப்ரார்த்தித்து நமஸ்கரித்தால் தான் கிடைக்கும் என்பதற்கேற்ப, 13வது ஸர்க்கத்தில்,

நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை |
நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய:
நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||

என்று ராமலக்ஷ்மணாளையும், சீதாதேவியும் சேர்த்து நமஸ்கரித்தவுடன் அம்பாளுடைய தர்சனம் கிடைக்கிறது.🙏🌸

முதல் ஸர்க்கத்தின் விளக்கம் முழுவதும் ஆனந்த அனுபவமாக இருந்தது. முழு ஸுந்தர காண்டமும் கேட்க ஆவலாக உள்ளது 🙏🌸

மிகவும் அருமையாக உள்ளது. சுந்தரகாண்டம் முழுவதும் கேட்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

உங்கள் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. சுந்தர காண்டத்தின் மீதி ஸர்க்களுக்கு பொருள் அறிவதற்கு ஆவலாக உள்ளோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.