2 replies on “ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி ஐந்து”
அழகான வர்ணனை. அருமையான விளக்கம். 👌🙏🌸
ஹநுமான் பறந்து செல்லும் அழகை கம்பரும் பல உவமைகளோடு வர்ணித்துள்ளார்.🙏🌸
‘இந்திரனின் பார்வைக்கும் எட்ட முடியாத வேகமுடைய அனுமன், புஷ்பக விமானம் இலங்கைக்குப் போவதைப் போன்றிருந்தான்.’ என்கிறார். ‘வெண்ணிறமுடைய அனுமன் இராவணன் மேல் கொண்ட சீற்றம் அதிகரிக்க அவனை அமுக்கச் செல்லும் கயிலாயம் போன்றிருந்தான்!’ என்கிறார்.
மேலும், ‘அனுமன் திரிகூடமலையாகிய மைந்தனைத் தேடிச் செல்லும் மேருமலையைப் போன்றிருந்தான். வேகமாகச் செல்லும் அனுமன், ஊழிக் காலத்தில் யாவும் அழிய சினந்து செல்கின்ற வேகத்தையுடைய (தன்) தந்தையான வாயுதேவனைப் போலவும் இருந்தான். ‘ என்கிறார்.
‘வானத்தில் கீ்ழ்த்திசையில் உதித்தலாகிய இயல்பிலிருந்து விலகி வடக்குத் திசையில் உதித்து இலங்கை நோக்கிப் போகும் சூரிய பகவானை ஒத்திருந்தான்.’ என்றும், ‘ஊழிக்காலத்தில் வடக்குத் திக்கில் உதிக்கும் முழுமதி போன்றிருந்தான்.’ என்றும், ‘சக்கரப்படை ஏந்திய திருமாலுக்குத் தன்னுடைய வலிமையைக் காட்டப் பறந்து சென்ற கருட பகவானைப்போல அனுமன் விளங்கினான்.’ என்றும்ம் அடுத்தடுத்த செய்யுள்களில் வர்ணிக்கிறார்.
வாலின் தன்மையை விளக்கும்போது, ‘மாயன் திருமால் காலால் அளந்த உலகத்தை, அனுமன் வாலால் அளந்தானோ என்று வானவர் மருளச் சென்றான்.’ என்றும், ‘அனுமன் வால் துப்பறியும் அரக்கர்களுக்கு அஞ்சி அனுமனுக்குப் பின்னே மறைந்து போகும் காலபாசத்தை ஒத்தது.’ என்றும், ‘மேருமலையைப் பிணித்திருந்த ஆதிசேஷன் கருடன் வந்ததும் பிணிப்பு நீங்கி விலகிச் செல்வதுபோல் அனுமன் வால் இருந்தது. ‘ என்றெல்லாமும் வர்ணிக்கிறார்.
‘அனுமனின் கைகள்அடக்க முடியாத பெருமிதத் தோற்றத்தால் ஒன்று போலிருந்தன. (அனுமனுக்கு) இரண்டு புறத்திலும் பாதுகாப்பாகச் செல்லும் ராம லஷ்மணாளை ஒத்திருந்தன. ‘ என்கிறார்.🙏🌸
Loading...
Thanks for the interesting quotes from Kamba Ramayanam