ஸ்துதி சதகம் 13வது ஸ்லோகம் பொருளுரை – பெற்ற பெண்ணின் மூலம் பெருமை உண்டாக சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சிவன் சார் அர்த்த நாரீஸ்வரராக காட்சி அளித்ததைப் பற்றிய அனுபவ பகிர்வு – https://www.youtube.com/watch?v=qPD8XtWtgUk
ऐक्यं येन विरच्यते हरतनौ दम्भावपुम्भाविके
रेखा यत्कचसीम्नि शेखरदशां नैशाकरी गाहते ।
औन्नत्यं मुहुरेति येन स महान्मेनासखः सानुमान्
कम्पातीरविहारिणा सशरणास्तेनैव धाम्ना वयम् ॥
ஐக்யம்ʼ யேன விரச்யதே ஹரதனௌ த³ம்பா⁴வபும்பா⁴வுகே |
ரேகா² யத்கசஸீம்னி ஶேக²ரத³ஶாம்ʼ நைஶாகரீ கா³ஹதே ||
ஔன்னத்யம்ʼ முஹுரேதி யேன ஸ மஹான்மேனாஸக²꞉ ஸானுமான் |
கம்பாதீரவிஹாரிணா ஸஶரணா: தேனைவ தா⁴ம்னா வயம் ||
இது ஸ்துதி ஶதக்கதுல 13வது ஸ்லோகம்.
இதோட அர்த்தம் என்னனா,
’’கம்பாதீரவிஹாரிணா” – கம்பா நதியின் கரையில் விஹாரம் பண்ணும்
“தா⁴ம்னா” – ஒரு பேரொளியால், அந்த ஒளியை நாங்கள் சரணடைந்து இருக்கிறோம். அந்த ஒளியால் நாங்கள் புகலிடம் கிடைத்தவர்களாக ஆகிவிட்டோம், அப்படினு முடிக்கறார் ..அந்த ஒளி எப்பேற்பட்டதுனா?
“யேன” – எந்த ஒளியால்
“ஹரதனௌ” – பரமேஸ்வரனுடைய உடம்பில்
“த³ம்பா⁴வபும்பா⁴வுகே” – பெண்ணின் தன்மையும் , ஆணின் தன்மையும் இணைக்கபட்டதோ..அம்பாள் பரமேஸ்வரன் கிட்ட தபஸ் பண்ணி, உடம்பில் பாதியை வாங்கிண்டுடறா ..
அபிராமி அந்தாதில கூட,
உமையும், உமையொருபாகனும், ஏக உருவில் வந்து, இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
அப்படினு அந்த அர்தநாரீஸ்வர த்யானம் பன்றார்…
இந்த ஸ்லோகத்துலையும் அதான் வருது.
“ரேகா² யத்கசஸீம்னி ஶேக²ரத³ஶாம் நைஶாகரீ கா³ஹதே ”
‘நைஶாகரீ’ அப்படினா சந்திரன்னு அர்த்தம். சந்திரனுடைய ‘ரேகா’ அதவாது மூன்றாம் பிறை சந்திரன்.
எந்த ஒளியின்
“கசஸீம்னி” கசம் – கூந்தல்.கூந்தலுக்கு மேலே,
’ஶேக²ரத³ஶாம்கா³ஹதே’
“ஶேக²ரத³ஶாம்” – ஷிகரம் போல, அந்த தலை மேலே, அழகாக அந்த மூன்றாம் பிறை சந்திரன், விளங்கிக்கொண்டு இருக்கிறது..
“ஔன்னத்யம்ʼ முஹுரேதி யேன ஸ மஹான்மேனாஸக²꞉ ஸானுமான்”
ஹிமவானுடைய மனைவிக்கு ‘மேனா’ னு பெயர்..
‘மேனாஸக²’꞉ அப்படிங்கறது இங்க ஹிமவான்
“மஹான் மேனாஸக²꞉” ஏற்கனவே அவர் ரொம்பபெரியவர்..
“ஸானுமான் :” அந்த இமய பர்வதமானது..காமாக்ஷியை பெண்ணாக பெற்றதால்..
“‘ஔன்னத்யம்ʼ முஹுரேதி” இன்னுன்னு வளர்ந்து கொண்டே போகிறது..இன்னும் இன்னும் பெருமை அடைந்து கொண்டு இருக்கிறது.
அப்படினு சொல்றார்.
அப்பேற்பட்ட அந்த பேரொளியான காஞ்சி காமாக்ஷியை, நாங்கள்சரணடைந்து, ரக்ஷிக்கப்பட்டுள்ளோம்..
அப்படினு ஒரு அழகான ஸ்லோகம்.
இந்த ஸ்லோகத்தோட விசேஷம் என்னனா?, ஸ்வாமிகளுடைய மனசுல தோன்றியது.. காமாக்ஷியை பெண்ணாக பெற்றதால் ஹிமவான் இன்னும் இன்னும் வளர்ந்துண்டே போறார், இன்னும் இன்னும் அவருக்கு பெருமை, அப்படினு சொல்றார். அதனால இந்த வரியை வச்சுண்டு, ஸ்வாமிகள்.. பெண்ணை பெற்றவர்கள், பெண்ணால தனக்கு பெருமை வரணும் அப்படினு இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிக்கலாம். அப்படினு ரொம்ப அழகான ஒருஅர்த்தம் சொல்லுவார். இது ஒரு particular contextல சொன்னார்.
ஒரு பெண்ணால அவ அப்பாவுக்கு ஒரு பராபவம் வருமோ? அப்படினு அவர் பயந்த போது, ஸ்வாமிகள் இந்த ஸ்லோகத்தை சொல்லி..கவலைபடாதிங்கோ… அந்த பெண்ணால உங்களுக்கு பெருமை வரும் அப்படினு சொன்னார். அந்த பெண்ணால, அவருக்கு ரொம்ப பெருமை வந்தது, நான் கண்கூடா பார்த்துருக்கேன். இந்த காலத்துல பெண்களும், அப்பா அம்மாவை நன்னா பார்த்துக்கறா. அதனால பெண்ணாக பிறந்தவர்களும், இந்த ஸ்லோகத்தை சொல்லி, என்னால என்னுடைய அப்பா அம்மாவுக்கு சந்தோஷம் வரணும், பெருமை வரணும்..அப்படினு பிரார்த்தனை பண்ணிக்கலாம்..ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம். பார்வதி பரமேஸ்வராள அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபத்தையும் இதுல த்யானம் பண்ணி இருக்கார்.. அதனால ஒரு பெண்ணுக்கு, தன்னுடைய கணவனுடைய அன்பும் கிடைக்கும், இந்த ஸ்லோகத்தை சொன்னா…ஏன்னா, உடம்புலேயே பாதியை கொடுக்கறதுனா, இதுக்கு மேல என்ன பண்ண முடியும், ஒரு கணவன். அப்படி ஒரு பிரார்த்தனை இதுல இருக்கு. இந்த ஸ்லோகத்தை சொல்லி நம்ம வேண்டிப்போம்..
ஐக்யம்ʼ யேன விரச்யதே ஹரதனௌ த³ம்பா⁴வபும்பா⁴வுகே
ரேகா² யத்கசஸீம்னி ஶேக²ரத³ஶாம்ʼ நைஶாகரீ கா³ஹதே .
ஔன்னத்யம்ʼ முஹுரேதி யேன ஸ மஹான்மேனாஸக²꞉ ஸானுமான்
கம்பாதீரவிஹாரிணா ஸஶரணாஸ்தேனைவ தா⁴ம்னா வயம்
பெண்களுடைய பெருமையை பத்தி சிவன் சார், “ஏணி படிகளில் மாந்தர்கள்” புஸ்தகத்துல சொல்லும் போது சொல்றார், சென்ற காலங்களில் பெண்களுக்கு பால்ய வயதிலேயே விவாஹம் நடத்த பட்டு வந்தன. பெண்கள் மருமகள்களான பிறகு, அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகள் அனைத்தையும், மாமியார்கள் கண்டிப்புடன் போதித்து வந்தனர்.
இந்த போதனைகளை கவனத்துடன் கடை பிடித்து வந்த இந்த மருமகள்கள், தாங்கள் மாமியார்களாக மாறிய பிறகு, தங்களுடைய மருமகள்களுக்கு போதித்து வந்தனர். pen and paper இல்லாத, இத்தகைய ஓர் இணையற்ற பெண் கல்லூரியை ஒவ்வொரு வீட்டிலும் நமது முன்னோர்கள் அமைத்து இருந்தனர். சென்ற காலங்களில் உத்தியோகத்திற்கான படிப்புகள் கிடையாது. அதே மாதிரி குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட வரையில், அவர்கள் தலைவிகளாக அமர்ந்து வந்ததுடன், குடும்பத்தில் எந்த விதமான குறையும் நேராதவாறு பொறுப்பேற்றும் வந்தனர். மேலும் பாலர்களுக்கு நீதி கதைகளையும், தெய்வ பக்தியையும் புகட்டி வந்ததன் மூலம், நேர்மையையும், ஒழுக்கத்தையும் அவர்கள் வளர்த்து வந்தனர்.
இத்தகைய திண்ணை கல்வியை, மக்கள் சுடுகாடு வரையில் பயன்படுத்தி வந்தனர். அனால், மாந்தர்களை மனிதர்களாக வாழ வைத்த அத்தகைய university professors பரம்பரையினர்கள், தற்போது முக்காலும் மறைந்து விட்டது நினைத்து எனது கவலையை கூறாமல் இருக்க முடியவில்லை. புருஷர்கள் தங்களை கௌரவத்துடன் நடத்தி வந்ததில் மகிழ்ச்சியுடன் இயங்கி வந்த ஸ்த்ரீகள், தங்களுடைய பெண்மையை இழக்க தயாராய் இல்லை .தங்களுக்கு வேண்டாத வெளி விவகாரங்களில் ஈடுபட அவர்களுடைய மனம் நாடவும் இல்லை. புருஷர்களோ ஜீவனுக்கு இருக்க வேண்டிய அலுவலல்களில் ஈடுபட்டு வந்தனர், அப்படினு சொல்றார்.
அந்த மாதிரி பெண்மையை இப்போ ரொம்ப இழந்துட்டோம் வருத்தப்பட்டு நிறைய சொல்லியிருக்கார். அதனால இந்த காலத்தில், நாம் பெண் குழந்தைகளை படிக்க வைக்காமலோ, வேலைக்கு அனுப்பாமலோ இருக்க முடியாது. முடிஞ்ச வரைக்கும் சார் சொல்றா மாதிரி உயர்ந்த பெண்மை குணத்துடன் நல்ல மாந்தர்களை உருவாக்குபவர்களாக, நம்மளுடைய பெண் குழந்தைகளும் வரணும், போன தலைமுறை மாதிரி அப்படினு வேண்டிக்க தான் முடியும். மஹா பெரியவாளையும், சிவன் சாரையும், ஸ்வாமிகளையும், நாம்ப வேண்டிப்போம்.. இந்த மாதிரி ஸ்தோத்ரங்களை சொல்லி, நிச்சயமா ஒரு வழி காமிப்பார்…
ஐக்யம்ʼ யேன விரச்யதே ஹரதனௌ த³ம்பா⁴வபும்பா⁴வுகே
ரேகா² யத்கசஸீம்னி ஶேக²ரத³ஶாம்ʼ நைஶாகரீ கா³ஹதே .
ஔன்னத்யம்ʼ முஹுரேதி யேன ஸ மஹான்மேனாஸக²꞉ ஸானுமான்
கம்பாதீரவிஹாரிணா ஸஶரணாஸ்தேனைவ தா⁴ம்னா வயம்
சிவன் சாரை பத்தி சொன்ன உடனே, இந்த ஸ்லோகத்துல அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் வருது..சிவன் சார் ஒரு பக்தருக்கு, தானே அர்த்தநாரீஸ்வரராக தர்ஷனம் கொடுத்து இருக்கார். ரொம்ப esoteric விஷயம் அது.அந்த வீடியோ நான் share பண்றேன். அவருடைய அனுபவத்தை கேட்டு பாருங்கோ.
நம: பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவா…
English translation by Sridhar Seshagiri
ऐक्यं येन विरच्यते हरतनौ दम्भावपुम्भावुके
रेखा यत्कचसीम्नि शेखरदशां नैशाकरी गाहते ।
औन्नत्यं मुहुरेति येन स महान्मेनासखः सानुमान्
कम्पातीरविहारिणा सशरणास्तेनैव धाम्ना वयम् ॥13॥
This is the 13th shloka of the stuti shatakam. The meaning of this shloka is as follows:
“कम्पातीरविहारिणा” – kampAtIravihAriNA – one whose residence is at the banks of the kampA river
“धाम्ना” dhAmnA – by that effulgence
“सशरणास्तेनैव” – sasharaNAH tEnaiva – that we have sought refuge with, and have been been granted refuge by, he concludes…
what is the nature of that effulgence ?
“येन विरच्यते हरतनौ दम्भावपुम्भावुके” – yEna haratanau dambhAvapumbhAvakE – by which, in the body of the Lord (haratanu), the masculine and feminine aspects are intertwined.. by Her tapas (penance), Ambal has overlordship of the Lord’s body.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Translator’s note: In his copious commentary on the saundarya-laharI, when talking about the verse 28, mahAperiyavA quotes the verse 23
(see http://www.krishnamurthys.com/profvk/gohitvip/DPDS41-45.html)
and says “This idea that the Lord has within Himself another body which is wholly that of Shivaa and the usual idea that the Lord has an ardha-nArishvara (half-male, half-female) form are together combined in another shloka (#23) where ambaa is branded as one who has appropriated for Herself the entire body of Her husband! ”
tvayA hRtvA vAmaM vapur-aparitRptena manasA
sharIrArdhaM shambhor-aparaM api shangke hRtam abhUt /
yad-etat-tvad-rUpaM sakalam aruNAbhaM trinayanaM
kuchAbhyAm AnamraM kuTila-shashi-chUDAla-makuTaM //23//
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
The same sentiment is echoed by the great devotee Abhirami Bhattar, when he sings thus in the Abhirami Antaadhi (அபிராமி அந்தாதி - verse 31)
உமையும், உமையொருபாகனும், ஏக உருவில் வந்து, இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Translator’s note:
a) For another post by Shri Ganapathy Anna with title “உமையும், உமையொருபாகனும்”, please see https://valmikiramayanam.in/?p=3994 (thisis the 20th verse in the stuti shatakam)
b) A tamizh commentary and audio recording of this verse from a session by Guruji Thiruppigazh Sri Raghavan, please see http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2018/05/31.html
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
"रेखा यत्कचसीम्नि शेखरदशां नैशाकरी गाहते" - rEkhA yatkachasImni shEkharadashAM naishAkarI gAhatE
The word naishAkarI literally means "night-maker" and hence means the moon,
when combined with the word rEkhA, this refers to the (third phase of the) crescent moon (மூன்றாம் பிறை சந்திரன்)
कच-सीम्नि शेखरदशां - kacha-sImni - the word kacha means hair, sImni is that which borders, and shEkharadashAM means that which adorns (the word shikharam means "crest"), so that the phrase kacha-sImni-shEkharadashAM describes Ambal's lovely tresses adorned by the crescent moon
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Translator’s note:
a) We have already seen this in verse 23 of the saundarya-laharI mentioned above, in the phrase “kuTila-shashi-chUDAla-makuTaM”
b) For mahAperiyavA’s matchless description from the saundarya-laharI, where the same ideas appear in multiple verses, please see
http://www.krishnamurthys.com/profvk/gohitvip/DPDS56-60.html
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
To continue, let us look at the line
"औन्नत्यं मुहुरेति येन स महान्मेनासखः सानुमान्" - aunnatyaM muhurEti yEna sa mahAnmEnAsakhaH sAnumA.n
The name of Himavan's wife is mEnA, therefore mEnAsakha refers to Himavan.
(Already He was great and famous but) On account of having the Mother of the Universe Parashakti Herself as his daughter, his fame (औन्नत्यं - aunnatyaM literally means elevation/height) keeps growing !
The poet concludes thus by seeking refuge/protection from the effulgent form of Kanchi Kamakshi.
Swamigal mused on the speciality of this shlokam thus: On account of having jagadambA Herself as his daughter, the Mountain Lord's fame keeps growing; therefore, fathers of daughters can recite this shloka, and pray that they attain a good name through their daughters. He would often contextualize this with the following incident:
Once a devotee came to Swamigal fearing shame to the family on account of his daughter. Swamigal assuaged the person's fears by reciting this verse, and reassured him saying "do not worry, your daughter will only bring you a good name".
I (this is Ganapathy Anna) personally saw Swamigal's words come true.
Daughters today take good care of their parents. On account of the power in Swamigal's words, daughters, who are desirous of the happiness of their parents, can also recite this (very beautiful) verse with devotion.
Mukakavi has done deep contemplation of the conjoined ardhanArIshavara-rUpa through this verse. In addition to happiness of parents, the recitation of this verse will also lead to marital accord, and a harmonious marriage (Swamigal had also advised the recitation of the durgA saptashlOkI and the ardhanArIshavara-stOtram for this purpose). When the Lord has given up half of His body to the Divine Mother, what greater proof is there of what a good husband will do for his spouse. Let us also recite this lovely verse and seek the blessings of the Divine Couple.
---------------------------------------------------------------------------------------------------------
Sivan-Sir, in describing the role of women in dharmic life in the book “ஏணி படிகளில் மாந்தர்கள்” (eeNii paDigaLil maandhargaL) says:
(Translator's note: I'm sorry, the phrase பெண்களுடைய பெருமை is lost in translation, Rather than my own feeble attempt at translation of Sivan-Sir's words, I recommend reading the gist from the article
"Protect and cherish womanhood" by Smt. Tara Jagannathan
https://medium.com/@seshadri4/protect-and-cherish-womanhood-9c1fdb51ccbf
I have tried my best to translate what is written here, interspersing it with some points from the above article, but the link above is several times better..)
Traditionally, ladies would get married off at a young age. Post marriage, their mother-in-laws scrupulously carried out the responsibility of advising them on how to conduct themselves in accordance with dharmic principles. In turn, when these young ladies became mothers-in-law themselves, they passed on the same values to their daughters-in-law. Without the use of pen-and-paper (i.e., without “codifying” these values in writing), such a “domestic women’s college” that educated/nurtured young ladies had been instituted in every household by our illustrious ancestors.
In those days, women did not get educated in order to seek (outside) employment. Assuming leadership roles in running the family, they ensured that domestic affairs proceeded without any hitches. They imparted spiritual instruction to the children, through moral and stories of devotion, ensuring that the children grew up with good conduct. The good qualities inculcated thus (through this “dharmic home-schooling”) stood people in good stead throughout their lifetimes.
I am unable to not express my disappointment/dissatisfaction at how this hoary tradition has diminished with the passage of time. Back then, husbands treated their wives with respect, enabling them to continue their role tending to home affairs. Women solely focused on the well-being of their families. There was no such advent as pursuing an education to get a job, or indulgence in non-domestic affairs, and the concomitant loss of femininity.
(Ganapathy Anna says:) Sivan-Sir lamented that that this ideal of womanhood had eroded/degraded greatly in modern times. I am not advocating that in today’s world, we deny our daughters education or prevent them from going to work. But it is my fervent desire/hope, that as Sir expressed, to the extent possible, we retain the high ideals of womanhood that our ancestors upheld, and our daughters also be raised in that spirit. One can but pray to Mahaperiyava, Sivan-Sir and Swamigal. If we continue to recite such stuti-s with devotion, there is no doubt that our prayers will be answered.
When I speak of Sivan-Sir, I am reminded of the ardhanArishvara-principle. Sivan-Sir has Himself given darshanam to a devotee of His in this very form. I am sharing the link to a video where the disciple shares his experience, so you can all hear/see it firsthand from him.
namaH pArvati patayE hara hara mahAdEvA.
4 replies on “பெற்ற பெண்ணின் மூலம் பெருமை உண்டாக சொல்ல வேண்டிய ஸ்லோகம்”
Thank you so much Anna. Slokam with meaning romba Pramaddhama iruku. Keep blessing us more like this🙏🏻🙏🏻
Thank you so much Anna. Slokam with meaning romba pramadhama iruku. Keep blessing us like this🙏🏻🙏🏻
தேஜஸ் ரூபமான காமாக்ஷி தன் உடலின் சரி பாதி சிவனைக் கொண்டிருக்கிறாள் ! அது அர்த்த நாரீஸ்வர ரூபம் ! தன்னுள் சிவத்தைக் கொண்ட திருமேனி ! அவள் சிரசில்.மூன்றாம் பிறை சிரோ பூஷண் மாய் விளங்குகிறது! இங்கு கசம் என்ற பதம் கூரை, மேற்கூரை, தலை மயிர் என்ற இரு பொருள் பட அமைந்துள்ளது ! மேனா தேவியை துனையாகக் கொண்ட இமவான் பல கோடு முடிகளைக் கொண்டவனாய் உயர்ந்து விளங்குகிறான் ! கம்பா நதி தீரத்தில் திருவிளையாடல் புரியும் காமாக்ஷி என்ற உயர்ந்த சம்பத்தை நம் புகலிடமாக க்கொண்டு நாம் பேரின்பம் என்ற மோக்ஷத்தை அடையலாம் என்ற கருத்துள்ள இந்த ஸ்லோகம், இமயமலையில் பிறந்து, காம்பா நதிக்.கரையில் வந்து புகளிடமாய்க் கொண்டு புகுந்த ஈரத்தை உயர்விக்கும் காமாக்ஷி போல் நாமும் புகுந்த இடத்திற்குப் பெருமை சேர்ப் பொமாக !
என்ற இந்த ஸ்லோகம் அடுத்த தலைமுறையினர் வாழும் வழி அமைக்கும்.கருத்துள்ள ஸ்லோகம்.!
அற்புதமான விளக்கத்துடன் சிவன் சார் வாழ்க்கை முறையையும் தெளிவு படுத்துகிறது !
ஜய ஜய ஜகதம்ப சிவே…..
Sri Kamakshi Padham sharanam!
Sri Mahaperiyava Thunai !
Highly delighted to listen to this slokam and it’s meaning. Thanks to you and Ms Uma Ram for sharing this in the group.
It took me to a different plane and felt like being with Kamakshi Sametha Ekambareshwarar (Ardhanaereeshwarar).
The experience shared by Sri Venkatraman with Sri Sivan Sar was an enlightenment.
Let Kamakshi bless this world with women of such divine qualities. 🙏 🙏 🌹🌹