Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 53)

Series Navigation<< சிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை >>

6 replies on “சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை”

அற்புதமான ஸ்லோகம். அருமையான விளக்கம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை கண் முன்னே தரிசித்த பேறு பெற்றேன். 👌🙏🌸

போன ஸ்லோகத்தில் ஆச்சார்யாள், சிவபெருமானை மயிலாக‌ வர்ணித்து, கருமேகமாக இருக்கும் அம்பாளை தர்சித்ததும், சந்தோஷமாக நடனம் ஆடுவதாக ஸ்தோத்திரம் பண்ணினார். இந்த ஸ்லோகத்தில், ஸந்தியா வேளையில் சிவபெருமான் என்கிற மயிலின் உஜ்ஜவல (ஒளிபொருந்திய ப்ரகாசமான) தாண்டவத்தை கண்டுகளிக்க சபையே கூடிவிடுகிறது. அம்பாளுக்கும் அந்த நடனத்தை காண ஆசை! கருமேகமாக வந்து அவர் நடனமாட தூண்டியவள், தான் அதை கண்டு களிக்க ‘மயூரி சிவா’ – பெண் மயிலாக உருவெடுத்து சிவபெருமானின் நடனத்தை ரசிக்கிறாள்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பங்கு. ஆண்டாள் ‘வலம்புரி போல் நின்றதிர்ந்து’ என்று பாடினாள். ஆச்சார்யாள் விஷ்ணு பகவானின் மிருதங்க த்வனியை மேகங்களின் இடி முழக்கமாக கூறுகிறார். தேவர்களின் கண்பார்வையே மின்னல்.🙏🌸

பக்தர்களின் ஆனந்தக் கண்ணீர் பிரவாகத்தை மழையோடு ஒப்பிடுகிறார். ஒருவனுடைய மனதில் பக்தி வந்துவிட்டால், பகவத் த்யானத்தில் ஈடுபடுகிறான். பாபங்கள் தொலைந்து, புண்ணியங்கள், நற்குணங்கள், நற்கர்மங்கள் எல்லாம் பிரகாசிக்கிறது. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்று அவ்வைப் பாட்டி சொன்னது போல் அவனுடைய நற்கர்மங்கள் உலகத்திற்கு மழையைத் தருகிறது.🙏🌸

அழகான விளக்கம்! மயிலை கற்பகாம்பாள் பற்றி ஒரு documentary film பார்த்த நிறைவு!
அற்புத விளக்கம் !
சந்தியா காலத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆனகம் போன்ற வாத்தியங்களை முழங்க , தேவர்கள் புஷ்ப மாரியைச் சொரிய, ஸ்ரீ பரமேஸ்வரன் நர்த்தனம் செய்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ! இதனை ஆசார்யாள் வருஷ கால ஆரம்பத்தில் , மேகங்கள் கர்ஜிக்க,மின்னல்கள் மின்ன, மழை பொழியும் வேளையில், ஒரு மயில் எப்படி நடனம் செய்யும் என்பதைக் கற்பனையாக ஒப்பிட்டு வர்ணனை செய்கிறார் !! நீலகண்டன் என்பது மயிலையும், ஈஸ்வரணையும் குறிப்பிடுவது!!
எத்தகைய அழகான வார்த்தை விளையாட்டு டன் கூடிய ஸ்லோகம்!

இந்த நாள் ஒர் இனிய ஆரம்பம்!

ஜய ஜய சங்கரா..

ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீசுவரர் துணை 🙏🙏
இன்று இந்த ஊரடங்கிலும் மைலைபுரியை மனதிலே வலம் வந்து வணங்க ஓர் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
வாயிலார் நாயனார் மனதில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததை விளக்கம் சொல்லிய நேரம் இந்த கோவில் தரிசனம் (மனதில்) தோன்றியது.
நம சிவாய நம சிவாய 🙏🙏🌼🌼

Very nice explanation about the Verse from Shivaananda Lahari. Please pardon me for bringing this up. The story that was attributed to Vaayilar Nayanar actually that of Poosalar Nayanar according to Periya Puranam. I am not here to find fault. Your service is immense and praiseworthy. Thank you.

Thank you for Mylapore Sthala Puranam. Unknowingly, I end up circling in Govinda Damodara Swamigal’s disciples circle when I want to hear various Upanayanam. Brahmasri B. Sundarkumar’s contributions are immense as well as yours for seekers like us. Ram Ram 🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.