Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரை(9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 53)

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார

Series Navigation<< சிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரை”

மிக அழகான விளக்கம். கடாக்ஷ சதக மேற்கோளும் மயில் விருத்தம் பாடல்களும் மிக அருமை 👌🙏🌸

சிவபெருமானை அற்புத மயிலாக ஆச்சார்யாள் நம் கண் முன்னே கொண்டு வருகிறார். எந்த வஸ்துவை பார்த்தாலும் அவருக்கு சிவபெருமானாகத் தான் காட்சியளிக்கிறது. இப்படி ரசித்து ரசித்து ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். போன ஸ்லோகத்தில் சிவபெருமானை மேகமாக சிலேடை செய்தார். இந்த ஸ்லோகத்தில் அம்பாளையே கருமேகமாகவும் அதனைப் பார்த்து நடமாடும் மயிலாக சிவபெருமானை ஸ்தோத்திரிக்கிறார். 🙏🌸

பொதுவாக முருகனைத்தான் மயிலோடு ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம். முருகப்பெருமான் ஸ்வாமிநாதனாக சிவபெருமானுக்கு பிரணவோபதேசம் செய்திருக்கிறார். அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று திருப்புகழில் பாடுகிறார்.

சிவபெருமான் அந்தணர் வடிவில் குருவாக வந்து மாணிக்கவாசகருக்கு சிவபஞ்சாக்ஷரத்தை திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் கீழ் உபதேசம் செய்திருக்கிறார். இந்த ஸ்லோகத்தில் சிவபெருமான் ‘குருவாக வந்து தன்னை வணங்குபவர்களுக்கு பிரணவோபதேசம் அநுக்ரஹித்து அருள்பவர்’ என்று ஆச்சார்யாள் ஸ்தோத்திரம் செய்கிறார்.🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.