Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 56வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 56வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 56)

Series Navigation<< சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 57வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 56வது ஸ்லோகம் பொருளுரை”

போன ஸ்லோகத்தில், ‘நன்றாக தாண்டவம் ஆடுவதில் விருப்பமுள்ளவனும், ஜடைகளை தரித்தவனும், மங்களத்தை அளிக்கும் சம்புவுக்கு இந்த நமஸ்காரம்’ என்று முடித்திருந்தார். இந்த ஸ்லோகத்திலும் அந்த தாண்டவத்தின் அழகில் லயித்து, ‘சாயங்கால தாண்டவமாக’ அதே வார்த்தைகளோடு வர்ணிக்கிறார் ஆசார்யாள். 🙏🌸

மிக அருமையான விளக்கம். பார்வதியின் தவத்தின் பலனாக பரமேஸ்வரனை வர்ணிக்கிறார் ஆசார்யாள். இதற்கு இணையாக மூகர் ‘பரமேஸ்வரனின் தவப்பயன் காமாக்ஷி’ என்ற மூகபஞ்சசதி மேற்கோள் அருமை. மஹா பெரியவாளின் சங்கர சரித்திரத்திலிருந்து ‘காரியமின்மையைச் சொல்லவே ஓயாக்காரிய அவதாரம்’ மற்றும் ‘தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் பராசக்தி அவருக்குள்ளேயே ஸூக்ஷ்மமாக அடங்கியிருக்கிறாள்’ என்பதையும் மேற்கோள் காட்டியது மிக அருமை 👌🙏🌸

எப்படி சிவனையும் சக்தியையும் பிரிக்க முடியாதோ, அதேபோல் திவ்ய தம்பதியரை பிரிக்க நினைத்தால் அவர்களுடைய கதி என்னவாகும் என்பதை ராமாயணத்தில் காண்கிறோம். ராமனை மட்டும் அடைய நினைத்த சூர்பனகைக்கும், சீதையை மட்டும் அடைய நினைத்த ராவணனுக்கும் என்ன நேர்ந்தது என்பதிலிருந்து தெரிகிறது.

‘மாயையால் மூன்று உலகங்களையும் ஸ்ருஷ்டிக்கிறார்’ என்கிறார் ஆசார்யாள்.
மகா பெரியவாளும் “ஒரே ஸமயத்தில் மாயையோடேயும் சேர்ந்திருப்பார். தனித்து ஆத்மாவாகவும் இருப்பார். அவருடைய ஆதிக்கத்திலுள்ள மாயை நமக்குத்தான் நம்முடைய ஆத்மா தெரியாத விதத்தில் மனஸ் என்ற தடுப்பைப் போட முடியுமேயொழிய அவருக்கே போட முடியாது. அதனால் அவர் எவ்வளவு மாயக்கூத்து அடித்துக்கொண்டு ஈச்வரனாக, அவருடைய நிஜ – நிலையில்லாத மாதிரி இருந்தாலும் அப்போதும் பூரண ஞானத்துடன் தான் ப்ரஹ்மமே என்ற அநுபவத்திலேயே உள்ளூற இருந்து கொண்டுதானிருப்பார்.

மாயைக்கு காரணமான ஈச்வரன் — தக்ஷிணாமூர்த்தியாக இருக்கப்பட்டவன் — லோக லீலை செய்வதை ஆசார்யாளே தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் சொல்லியிருக்கிறார்:

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் ப்ராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேசகாலகலனா வைசித்ரய சித்ரீக்ருதம் |
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ ய: ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||” என்கிறார். 🙏🌸

அருமையான அற்புதமான விளக்கங்களுடன் கூடிய பதிவு ! ஈஸ்வரனை சக்தியுடன் கூடியவராகப் பெரியவா குரலில் கேட்டது மேலும் அருமை !
சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று பெரியவா சொன்னது அம்பாளை kinetic energy& Eswaran potential energyஎன்பதன் தாத்பர்யம் அல்லவா?

நித்யராயும் ஸத்யம், ரஜஸ் தமஸ் என்ற குணமுடைய ப்ரம்மா, விஷ்ணு ருத்ரஸ்வரூபியாகவும் த்ரிபுரஸம்ஹாரம் செய்தவரும், பரமேஸ்வரியின் தவப்பயனாகவும், முக்காலத்திலும் அழிவற்றவராயும், உலகத்துக்கு முதல் குடும்பியாகவும், சித்ஸ்வரூபத்தை உடையவரும், மாயையால் மூவுலகங்களையும் ஸ்ருஷ்டித்தவரும், ஸகல உபனிஷத்துக்களாலும் போற்றப்படுபவரும் ,ஸாயங்காலத்தில் நர்த்தனம் செய்பவரும், ஜடாதாரியான பரமேஸ்வரனுக்கு என் நமஸ்காரங்கள்.
நம: பார்வதி பதே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.