Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 57வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 57வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 57)

Series Navigation<< சிவானந்தலஹரி 56வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 57வது ஸ்லோகம் பொருளுரை”

மிகவும் அருமையான விளக்கம். நீங்கள் எடுத்துக் காட்டிய மேற்கோள்கள் எல்லாம் அருமை.👌🙏🌸

இந்த வயிற்றை வளர்க்கவே நாம் வீணாக திரிவதை இந்த பாடலில் எடுத்துக் கூறுகிறார் ஆசார்யாள். அவ்வை பாட்டி இந்த வயிறு படுத்தும் பாட்டை தன்னுடைய நல்வழி பாடல்களில் கூறுவது நினைவிற்கு வருகிறது.
‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது!’ – “ஏ, வயிறே! ஒரு நாள் உணவை உண்ணாமல் இரு என்றால் நீ கேட்பதில்லை. அல்லது இரண்டு நாளைக்குச் சேர்த்துச் சாப்பிடு என்றாலும் அவ்வாறு செய்வதில்லை. நீ மிகவும் துன்பம் தருகிறாய். உன்னோடு வாழ்வது என்பது அரிது.” என்று கூறுகிறார்.

பணத்தாசையால் பலரையும் நாடி செல்கிறேன் என்று ஆச்சார்யாள் கூறுகிறார். அபிராம பட்டர் அந்த நிலை தனக்கு வேண்டாம் என்று அபிராமியிடம் வேண்டுகிறார்.
“இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே” 🙏🌸

ஆசார்யாள் ‘முற்பிறவிகளில் செய்த புண்ணிய பலனால் எல்லோருக்குள்ளும் இருக்கும் அந்தர்யாமியாக உன்னை அறிகிறேன்’ என்று சொல்லி, ‘அதனால் ஹே பசுபதி! உன்னால் நான் காப்பாற்றப்பட தகுதியானவன் ஆகிறேன்’ என்கிறார்.

இந்த இடத்தில் காரணத்தோடுதான் பசுபதி என்ற நாமாவை போட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. மஹாபெரியவா பசுபதி பற்றி விஸ்தாரமாக விளக்கியிருப்பார். “ஒரு ஜீவன் மனஸடக்கமில்லாமல் இயற்கையும் இந்த்ரியமும் ஆட்டிவைக்கிறபடியே போய்க் கொண்டிருக்கும் வரையில் ம்ருக ப்ராயமாகவே அவனைச் சொல்வது. அந்த நிலையைத்தான் ‘பசு’ என்பது. ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.

நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி. அந்தக் கயிறுதான் ‘பாசம்’. இவனுடைய ஆசை என்பதேதான் அப்படிப் பாசமாகி இவனை ஸம்ஸார சக்ரத்திலேயே சுற்றிச் சுற்றி வரும்படிப் பண்ணுகிறது. இந்த ஆசை கட்டுப் போக வேண்டுமானால் நாமே தர்ம காரியங்கள் என்கிற சாஸ்திர கட்டை போட்டாக வேண்டும். தார்மிகமாக மநுஷ்ய காரியம், தேவகாரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும்.

ஆசைக்கட்டுப் போனபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும். ஞானம் என்கிற கத்தி அந்தக் கயிற்றைத்தான் துண்டித்து ஜீவாத்மப் பசுவை ஜன்மச் சுழலிலிருந்து விடுவித்து மோக்ஷம் அருளுவது. அப்போது அவன் பசுவேயில்லை. பசுபதியான சிவமே ஆகிறான்.” என்கிறார்.🙏🌸

திருப்புகழில் எப்படி மந்திரம் ஓதாமல் பகவானை நினையாமல் ஒரு தர்மமும் பண்ணாமல் யாரிடமும் நேயமில்லாமல் ஞானம் என்பதே இல்லாமல் உழன்று மனிதன் வாழ்வை வீனாக்குகிரான் என்பது மூல மந்திரம் ஓதலின்கில்lai என்ற திருப்புகழில் பக்தி ஞானம் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும்.நாம் மனதை செலுத்துகிறோம் என்கிறார் அருணகிரி நாதர்!
இங்கு ஆசார்யாள் தானே பரமேஸ்வராக இருந்தும் லோகாயத வாழ்வை ஒட்டி, பகவான் சேவையைத் தவிர அனைத்தும் தான் செய்வதாக சொல்கிரார் !
நமக்கு இவாழ்வின் அனித்யத்தை
உணர்த்த! ஆனால் ஈஸ்வர பக்தி இல்லாதவர்களை k கூட ஈஸ்வரன் தன் கருணா கடாக்ஷத்தால் காப்பாற்ற வேண்டியவர்களே என்று உணர்த்துகிறார்.
பக்தியின் எல்லை சிவானந்த.லஹரி! தன்னடக்கத்துடன் தான் ஆசார்யாள் என்ற பாவமில்லாமல் எளிய பிரஜையாய் அவர் பிரார்த்திப்பது எழிமைக்கு ஒர் எடுத்துக் காட்டு!
ஜய ஜய சங்கரா….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.