रोधस्तोयहृतः, श्रमेण पथिकश्छायां तरो:, वृष्टित:
भीतः स्वस्थगृहं, गृहस्थमतिथि:, दीनः प्रभुं धार्मिकम् ।
दीपं सन्तमसाकुलश्च, शिखिनं शीतावृत:, त्वं तथा,
चेतः, सर्वभयापहं व्रज सुखं, शम्भोः पदाम्भोरुहम् ॥
ரோத⁴ஸ்தோயஹ்ருʼத꞉ ஶ்ரமேண பதி²கஶ்சா²யாம்ʼ தரோர்வ்ருʼஷ்டிதோ
பீ⁴த꞉ ஸ்வஸ்த²க்³ருʼஹம்ʼ க்³ருʼஹஸ்த²மதிதி²ர்தீ³ன꞉ ப்ரபு⁴ம்ʼ தா⁴ர்மிகம் .
தீ³பம்ʼ ஸந்தமஸாகுலஶ்ச ஶிகி²னம்ʼ ஶீதாவ்ருʼதஸ்த்வம்ʼ ததா²
சேத꞉ ஸர்வப⁴யாபஹம்ʼ வ்ரஜ ஸுக²ம்ʼ ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம்
இது சிவானந்தலஹரியில் 60வது ஸ்லோகம். இதோட அர்த்தம் என்னனா ?
தோயஹ்ருʼத꞉ – ஆத்துல வெள்ளம் வந்து தீடீர்னு இழுத்துண்டு போறதுனா, அவன்
ரோத⁴: எப்படியாவது கரையை அடைந்து விட வேண்டும் என்று எப்படி தவிப்பானோ, அது போல
பதி²க: – வழிப்போக்கன், இப்படி போயிண்டே இருக்கான், நல்ல வெயில்,
ஶ்ரமேண – ரொம்ப களைப்பா இருக்கும் போது
தரோ:சா²யாம் – ஒரு மரத்தின் நிழலை எப்படி விரும்புவானோ,
வ்ருʼஷ்டிதோ பீ⁴த: போயிண்டே இருக்கும் போது மழை கொட்டுகிறது திடீர்னு. ரொம்ப ஜாஸ்தியாகி பயமாயிருக்குனா, அவன்
ஸ்வஸ்த²க்³ருʼஹம் – ஒரு வீட்டில் போய் நிம்மதியாக, மழையிலிருந்து தப்பிச்சு ஒதுங்கமாட்டோமா ?, என்று எப்படி விரும்புவானோ,
அதிதி²: க்³ருʼஹஸ்த²ம் – ஒரு அத்தியானவன், ப்ரயாணி, ஒரு கிரஹஸ்தனோட வீட்டை பார்த்தால், சரி இங்க போனால் நமக்கு சாப்பாடு கிடைக்கும். அந்த காலத்தில் வாசல் வந்து, அதிதி யாராவது வருவாளானு பார்த்துண்டு, ஒரு அதிதிக்கு சாப்பாடு போட்ட பின்ன தான், தான் சாப்படறதுனு வச்சுண்டுஇருந்தா. அதனால், அதிதிகள் யாரு ஆகத்துக்கு வேணாலும் போகலாம், அப்படினு இருந்தது
தீ³ன꞉ ஒரு ஏழையானவன்
தா⁴ர்மிகம் ப்ரபு⁴ம் – தர்மசிந்தனையுள்ள ஒரு பிரபு கிடைப்பானா? நம்ப அவனை போய் பார்த்து ஏதாவது யாசிக்கலாம் என்று எப்படி விரும்புவானோ
ஸந்தமஸ: ஆகுல: கடுமையான இருளால் துன்புற்றவன்
தீ³பம்: ஒரு தீபம், தீடீர் ஒரு இருட்டில், ஒண்ணுமே தெரியவில்லை, தடுக்கி விழுந்துண்டு இருக்கோம், அந்த torchlight எங்க பா? அப்படினு கேட்க மாட்டோமா? அந்த மாதிரி, தீபத்தை எப்படி கும் இருட்டில் பயந்தவன் விரும்புவானோ.
ஶீதாவ்ருʼத: – குளிரினால் பீடிக்கப்பட்டவன்
ஶிகி²னம்ச – ஒரு நெருப்பு கிடைத்தால், குளிர் காயலாமே என்று எப்படி விரும்புவானோ
ததா² – அப்படி
சேத: – என் மனமே
த்வம் – நீ
ஸர்வ ப⁴யாபஹம் – எல்லா பயத்தை போக்குவதும்
ஸுக²ம்ʼ – சுகத்தை அளிப்பதுமான
ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம் – ஶம்புவினுடைய திருவடி தாமரையை
வ்ரஜ – விரும்பி அடைவாயாக!
இந்த ஸ்லோகத்தில் நிறைய, உதாரணங்கள் கொடுத்து எப்படி பயத்தில் இருப்பவன் பயத்தை போக்கி கொள்ள தவிப்பானோ, தன்னுடைய கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த தவிப்பு desperate னு Englishல சொல்லுவா, அந்த மாதிரி, நம்பிக்கையே இல்லை, ஏதாவது பற்றுகோடாக ஏதாவது கிடைக்காதா?அப்படினு நினைக்கின்ற மாதிரி, ஶம்புவினுடைய பாதங்களை பிடித்து கொள்ள வேண்டும், அப்படினு மனசு கிட்ட சொல்றார் . மனசு கிட்ட சொல்றா மாதிரி, நம்மகிட்ட எல்லாம் சொல்றார். ஏன் என்றால் ஆச்சார்யாளுக்கு ஒரு பயமும் கிடையாது,
शिव शिव पश्यन्ति समं, श्रीकामाक्षीकटाक्षिता: पुरुषा: ।
विपिनं भवनं, अमित्रं मित्रं, लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥
ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம், ஶ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: ।
விபிநம் ப⁴வநம், அமித்ரம் மித்ரம், லோஷ்டம் ச யுவதிபி³ம்போ³ஷ்ட²ம் ॥
அப்படினு மூக பஞ்ச சதியில் சொன்னா மாதிரி,
மஹான்கள் காமாக்ஷி கடாக்ஷத்தினால் கோபம், பயம், எல்லாத்திலிருந்து விடுபட்டவர்கள். ஆனால் நம்மள மாதிரி இருப்பவர்களுக்காக, நீ ஒவ்வொன்றுக்கும் பயப்படறயே, அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உபாயத்தை தேடுகிறாய். ஸர்வ பயாபகம், எல்லா பயத்தையும் போக்க கூடியது, பரமேஸ்வரனுடைய பாத தாமரை, அதை நீ அடைந்தால், உனக்கு ஒரு பயமும் இருக்காது. மேலான சுகம் கிடைக்கும். அப்படினு சொல்லி கொடுக்கிறார். வள்ளுவர் கூட,
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அப்படினு சொல்றார்.
அந்த மாதிரி, கவலைகள், பயங்கள் இதெல்லாம் போறது என்பது, அது தான் உத்தம பக்தி. Definition of bhaktiயே அதுதான். அந்த உத்தம பக்தி ஏற்பட்டால், சார் சொல்லுவார்.
‘ வாழ்வும், தாழ்வும், சாவும் அவன் அருள் என்பான் தெய்வ சாது.’ அப்படினு.
அந்த மாதிரி உத்தம பக்தியை ஆச்சார்யாள் சொல்றார். அதுக்கு இந்த ஒவ்வொரு உதாரணம்ல சொல்லி இருப்பது மாதிரி, பசியோடு இருப்பவன் ஒரு கிரஹஸ்தன் வீடு கண்ல படாதா? கூப்பிட்டு சாப்பாடு போட மாட்டாளா?அப்படினு நினைக்கிறா மாதிரியும், குளிரில் நடுங்குகிறவன் எங்கயாவது கொஞ்சம் ஒரு நெருப்பு கிடைச்சா கொஞ்சம் குளிர் காயலாமே, அப்படினு நினைக்கிறா மாதிரி, எல்லாம் அந்த அவ்ளோ ஆவலோட நம்ம பகவானோட பஜனத்தை பண்ணனும். அவனுடைய பாதத்தை பற்றி கொள்ள வேண்டும். பகவத் பாத: மஹான்கள் தான். மஹான்களை த்யானம் பண்ணனும். அவாளுடைய உத்தம சரித்திரத்தையும், அவாளுடைய வாக்கையும், இந்த சிவானந்த லஹரி மாதிரி ஸ்தோத்திரங்களை திரும்ப திரும்ப படிக்கணும். அப்போ ஒரு நாள் நமக்கு அந்த உத்தம பக்தி ஏற்படும். அப்புறம் எந்த பயமும் கிடையாது, மேலான சுகத்தை பேரின்பத்தை அனுபவிக்கலாம்.
இந்த மாதிரி ஒரு நிலைமையை கோவிந்த தாமோதர ஸ்வாமிகளிடத்தில் பார்த்து இருக்கேன். இவ்ளோ பணகஷ்டம் இருக்கே, இவ்ளோ உடம்பில் வியாதி இருக்கே, என்ன ஆகுமோ? அப்படினு ஸ்வாமிகள் ஒரு நாள் கூட பயந்து கவலைப்பட்டு நான் பார்த்ததே இல்லை. இந்த பாராயணம் நடக்கணும், அதுக்கு எந்த இடைஞ்சல் வந்துவிட கூடாது, அப்படினு அதையே பார்த்துண்டே போயிண்டு இருப்பார். அதனால, அவருக்கு உத்தம பக்தி அது மூலமாக ஞான, வைராக்கியம் எல்லாம் இருந்தது. அவா எல்லாம் காட்டின வழியில் இந்த மாதிரி ஸ்தோத்திரங்கள் எல்லாம் பாராயணம் பண்ணி, நம்மளும் அந்த பக்தியை பிரார்த்திப்போம்.
ஸ்லோகம்:
ரோத⁴ஸ்தோயஹ்ருʼத꞉ ஶ்ரமேண பதி²கஶ்சா²யாம்ʼ தரோர்வ்ருʼஷ்டிதோ
பீ⁴த꞉ ஸ்வஸ்த²க்³ருʼஹம்ʼ க்³ருʼஹஸ்த²மதிதி²ர்தீ³ன꞉ ப்ரபு⁴ம்ʼ தா⁴ர்மிகம் .
தீ³பம்ʼ ஸந்தமஸாகுலஶ்ச ஶிகி²னம்ʼ ஶீதாவ்ருʼதஸ்த்வம்ʼ ததா²
சேத꞉ ஸர்வப⁴யாபஹம்ʼ வ்ரஜ ஸுக²ம்ʼ ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம்
ஸ்லோகம்:
अङ्कोलं निजबीजसन्तति:, अयस्कान्तोपलं सूचिका,
साध्वी नैजविभुं, लता क्षितिरुहं, सिन्धुः सरिद्वल्लभम् ।
प्राप्नोतीह यथा तथा, पशुपतेः पादारविन्दद्वयं,
चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा, सा भक्तिरित्युच्यते ॥
அங்கோலம்ʼ நிஜபீ³ஜஸந்ததிரயஸ்காந்தோபலம்ʼ ஸூசிகா
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்ʼ லதா க்ஷிதிருஹம்ʼ ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் .
ப்ராப்னோதீஹ யதா² ததா² பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம்ʼ
சேதோவ்ருʼத்திருபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே
இது சிவானந்தலஹரியில் 61வது ஸ்லோகம்,
பக்தினுடைய லக்ஷணம்.
பக்தி என்றால் என்ன?அப்படினு கேட்டுண்டு ஆச்சார்யாள் பதில் சொல்றார். இந்த ஸ்லோகத்துக்கு பெரியவா ஒரு 10 நிமிடம் விஸ்தாரமா ஒரு உதாரணமாக எடுத்து, அதில் தன்னுடைய அனுபவ ஞானத்தை கலந்து, அவ்ளோ அழகா பேசியிருக்கா. நான் அந்த இணைப்பை உங்களோடு share பண்றேன், அதுக்கு மேல நமக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை, என் மனஸில் தோன்றின ஒன்று, இரண்டு மற்றும் சொல்லிவிட்டு, இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்லிட்டு ஒன்று, இரண்டு விஷயங்கள் சொல்லிவிட்டு பூர்த்தி பண்ணிக்கறேன்.
‘அங்கோலம்’ங்கறது அழிஞ்சில் மரம் அப்படினு ஒரு மரம். அந்த மரத்தில் விதைகள் கீழே விழுந்து, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து மரத்துக்கு கிட்ட போயி, மரத்தோடயே ஒட்டிண்டு மரத்தோடு மரமாக ஆயிடும். இதை பெரியவா நான் பார்த்து இருக்கிறேன் காட்டிலனு சொல்றா. அப்படி அங்காலத்தினுடைய விதை வரிசைகள் எப்படி மரத்தை போய் அடைகிறதோ,
ஐயஸ்காந்தோபலம் அப்படினா காந்த கல், அந்த காந்த கல்,
ஸூசிகானா ஊசி, எப்படி காந்த கல்லை போய்சேருகிறதோ
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம் பதிவ்ரதையான ஒரு ஸ்த்ரீ, எப்படி தன்னுடைய கணவனிடத்திலேயே மனஸை வைத்துஇருப்பாளோ, இந்த இடத்தில் ‘விபு⁴ம்’ங்கறதுக்கு எங்கும் நிறைந்ததுனு அர்த்தம். பெரியவா சொல்றா, ஒரு பதிவ்ரதையான ஸ்த்ரீக்கு எங்கும் எதை பார்த்தாலும் தன் கணவனுடைய ஞாபகமே வரும். அந்த மாதிரி, அங்கேயே மனசு போயிண்டே இருக்கு
க்ஷிதிருஹம் – அப்படினா மரம், லதான கொடி. ஒரு கொடியானது எப்படி மரத்தை பற்றி கொள்கிறதோ, சுற்றி கொள்கிறதோ
ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் ஒரு நதியானது சமுத்திரத்தை போய் அடைகிறதோ, இப்படி
ப்ராப்னோதீ நாடி அடைகிறதோ
ததா² அப்படி
சேதோவ்ருʼத்தி: என் மனத்தினுடைய வ்ருʼத்தியானது, என் மனத்தினுடைய நாட்டமானது
பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம் பசுபத்தினுடைய இரு பாதாரவிந்தங்களை, திருவடி தாமரைகளை
உபேத்ய அடைந்து
ஸதா³ திஷ்ட²தி அங்கேயே நிலைபெற்று இருக்கணும்.
இங்க சொன்ன ஒவ்வொரு உதாரணத்தையும், நதிக்கு ஓடிண்டு இருக்கும் போது காவேரி கங்கைனு பெயர். கடல்லில் கலந்து விட்டால் பெயர் போய் விடுகிறது. அந்த மாதிரி, தன்னுடைய நாம ரூபங்களையும் இழந்து அந்த பகவானோட போய் இரண்டற கலந்து அந்த நிலையில் ஸ்திரமாக இருக்கிறது, அப்படிங்கிற விஷயத்தை insist பன்றார்.
ஸா ப⁴க்திரித்யுச்யதே அது தான் பக்தின்னு சொல்லப்படுகிறது, அப்படினு ஒரு ஸ்லோகம்.
59வது ஸ்லோகத்தில், 4 பறவைகளுடைய உதாரணத்தை சொல்லி, எப்படி சாதக பக்ஷி மழையை நாடி இருக்குமோ, எப்படி சகோர பக்ஷி நிலவையே பார்த்துண்டு இருக்குமோ, அப்படிங்கிற உதாரணத்துல, அனன்ய பக்தி! எந்த ஒரு விஷயமோ, அந்த சந்திரனா சந்திரன் தான், வேற உயிரைனாலும் விடுவேன், ஆனால் சந்திரன் நிலவை தவிர வேற ஒன்றையும் குடிக்க மாட்டேன், சாதக பக்ஷி மழையை தவிர வேற ஒன்றையும் குடிக்காது. அந்த மாதிரி, அந்த வேறு இடத்தில் மனஸை வைக்காமல் பரமேஸ்வரனிடத்தில் மனஸை வைக்கறது, அப்படிங்கிற அந்த அனன்ய பக்தியை பற்றி சொன்னார்.
போன ஸ்லோகத்தில் ஆத்துல அடிச்சுண்டு போகிறவன் எப்படி கரையை விரும்புவானோ, அந்த மாதிரி உதாரணம் சொன்ன போது, அந்த ஆவல் எனக்கு பகவானுடைய பாதாரவிந்தம் கிடைக்காதா?
அப்படினு desperateஆக அந்த ஏக்கம். அந்த ஆவல். அது வெளிப்படும் படியா பலவித உதாரணம் சொன்னார். இந்த ஸ்லோகத்தில் பார்த்தால், அந்த ஆவலும் இருக்கும், அந்த ஏக்கம் என்கிற அனன்ய பக்தியும் இருக்கு. அது ரெண்டுக்கும் மேல, இந்த ஸ்லோகத்தில் கொடுத்து இருக்கிற உதாரணத்தில், எந்த தடையும் மீறிண்டு விடாம முயற்சி பண்ணி அந்த perseverance சொல்லுவா Englishல, அந்த மாதிரி விடா முயற்சியோடு, தடைகள் எல்லாம் மீறிண்டு, ஒரு நதியானது எப்படி கடலை சென்று அடைகிறதோ, அந்த மாதிரி, பகவானோட பாதாரவிந்தத்தில், தைல தாரை போல மனசு அங்கேயே நிற்கணும். எந்த விதமான distractionsக்கும் இடம் கொடுக்காம, தடைகள்ங்கிறது வெளில இருந்து வரலாம், நமக்கு உள்ள இருந்து வரும், மனைவி மக்கள் ரூபத்திலயோ அல்லது நம் மனதுக்குள்ள இருந்து, ஏதோ நப்பாசைகள் ரூபத்திலயோ, பல விதத்தில் இந்த பக்திக்கு இடைஞ்சல் வரும். ஸ்வாமிகளுக்கு நிஜமாக கஷ்டங்கள் வந்தது. அது எல்லாத்தையும் தாண்டிண்டு அவர், இடையறாத பக்தி பண்ணின்டு ஞான, வைராக்கியத்தை அடைஞ்சு விளங்கினார். அதுக்கு அவர் அந்த பஜனத்தை ஒரு கடமையாக காலை 5 மணியில் இருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் இந்த புஸ்தகங்கள் வச்சுண்டு பாராயணம் பண்றது, ப்ரவசங்கள் பண்றது, பாடம் எடுக்கறது, வேற பேச்சுக்கே இடம் கொடுக்காம, அந்த பகவானுடைய பேச்சிலேயே, அந்த பகவானோட கதைகளை கேட்கறதுலையே தன்னால் வாழ்நாள் முழுக்க செலவு பண்ணார். அதுக்கு தடைகள் இடைஞ்சல்கள் எல்லாம் அவ்வளவு வந்தது. அது ஒண்ணுத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை தானும் எந்த ஒரு ஆசைக்கும் இடம் கொடுக்காம அப்படி பக்தி பண்ணி காமித்தார்.
நமக்கு நம் ஆசா பாசங்கள் அப்படிங்கிற ரூபத்தில் தான் அதிகமாக தடைகள் வரும். என்னடா நம்மளும் பக்தின்னு ஒண்ணு பண்றோமேனு தோணும். ஆனாலும், அப்படி அந்த தடைகள் எல்லாம் மீறிண்டு, விடாமுயற்சியோடு, மஹான்கள் குரு சொன்ன வழியில் போயி, அந்த பகவானுடைய சரணம் என்ற எல்லா பயத்தையும் போக்கும், பேரானந்தத்தை அளிக்கும் அந்த திருவடி தாமரைகளை பற்றி கொண்டு, அப்புறம் விடாமல் பக்தி பண்ணி, அந்த பாதங்களில் நிலைத்து இருப்பது, அப்படினு இந்த ஸ்லோகத்தில் அழகா சொல்றார். மஹாபெரியவாளுடைய 10 நிமிடம் உபன்யாசத்தையும் இதோட இணைத்திருக்கிறேன், கேட்டு பாருங்கோ. அவா வாக்கில் இந்த ஸ்லோகத்தை கேட்டாலே பக்தி வந்து விடும். அவ்ளோ இனிமையா இருக்கு.
அங்கோலம்ʼ நிஜபீ³ஜஸந்ததிரயஸ்காந்தோபலம்ʼ ஸூசிகா
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்ʼ லதா க்ஷிதிருஹம்ʼ ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் ப்ராப்னோதீஹ யதா² ததா² பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம்ʼ
சேதோவ்ருʼத்திருபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே
நம: பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ !
2 replies on “சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை”
நம சிவாய நம சிவாய
அனன்ய பக்தி, ஆவல் நிரம்பிய பக்தி, இவை இரண்டோடு கூடிய விடாமுயற்சியுடன் கூடிய த்ருட பக்தி. பக்தியின் லக்ஷணங்களாகப் பார்க்கப்படுகிறது இந்த 3 ஸ்லோகங்களில்.
ஆதி ஆசார்யாள் நம் போன்று பக்தியில் தீனர்களாக இருப்பவர்களுக்கு எவ்வாறு பரமேஸ்வரனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டால் ஸம்ஸாரத்தை கடக்கவும், இந்த புற உலகத்தில் ஏற்படும் பயங்களிலிருந்து விடுபடவும், இந்த பக்தி மார்கத்தை பிடித்துக் கொள்ள வழி வகுத்துள்ளார்.
த்ருஷ்டாந்ததிற்கு சகோர பறவையும் சாதகப் பறவையும் சக்ரவாஹ பறவையும்
குறிக்கோள் (focus) மாறாது இருப்பது போல் பக்தி செய்யும் விதம் விளக்கியுள்ளார் மேலும் அங்கோல மரத்தின் பழம் மரத்தில் ஒன்றி விடுவதையும் காந்தக்கல் சிறிய ஊசியை தன் வசம் சேர்த்து கொள்வதைப்போல் அனன்ய பக்தி மூலம் பகவானை அடைய முடியும் என்று தந்த விளக்கம் மஹா பெரியவா ஒலியில் பக்தி மேம்பட அனுக்ரஹித்துள்ளார்.
தங்கள் ஒலிப்பதிவும் நிறைவாக பக்தி செய்ய தூண்டுதலாக இருக்கிறது
ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர
🙏🙏🌹🌼
உத்தம பக்தியின் குணாதிசயங்களை இந்த மூன்று ஸ்லோகங்களில் அழகாக எடுத்துக்காட்டுகிறார் ஆச்சார்யாள். உங்களுடைய விளக்கம் மிக மிக அருமை.
60ஆவது ஸ்லோகத்தில் நாம் செய்த துஷ்கர்மங்களால் ஸம்ஸாரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். “ஈஸ்வரனுடைய சரண கமலத்தை ஏ மனமே! நீ பக்தியோடு நாடுவாயாக. அதுவே நமக்கு புகலிடம்” என்று மிகப்பொருத்தமான மேற்கோள்களைக் கொண்டு நமக்கு காட்டுகிறார்.
ஐந்து வயதான துருவன் தன்னுடைய சிற்றன்னையின் கடுஞ்சொற்களை நாள் புண்பட்டபோது தன் தாயிடம் சென்றான்.
स्वकर्मगतिसन्तरणाय पुंसां, त्वत्पादमेव शरणं, शिशवे शशंस
“ஸ்வகர்மக³திஸந்தரணாய பும்ஸாம், த்வத் பாத³மேவ ஶரணம்,
ஶிஶவே ஶஶம்ஸ” – மனிதர்களுக்கு தங்களது துஷ்கர்ம பலன்கள் நிவ்ருத்தியாவதற்கு பகவானின் திருவடிகளே புகலிடம் என்று தன் குழந்தைக்கு உபதேசிக்கிறாள்.
அடுத்த ஸ்லோகத்தில், நம்முடைய லக்ஷ்யம் என்ன என்பதை நமக்கு நினைவுறுத்துகிறார் ஆசார்யாள். ஈச்வர சரணாரவிந்தங்களை அடைவது தான் நம்முடைய ஒரே குறிக்கோள்.
‘நம்முடைய மனதும் உருகி கரைந்து ஒருமுனைப்பாட்டுடன் ஈச்வர சரணார விந்தங்களை பக்தியுடன் நாட வேண்டும்’ என்பதை இந்த ஸ்லோகத்திலும் இயற்கையின் மேற்கோள்களைக் காட்டியே வலியுறுத்துகிறார் ஆச்சாரியாள்.
ஸீதா தேவியை அசோகவனத்தில் ராவணன் சிறை வைத்திருக்கிறான். ஹனுமாருக்கு ஸீதையைப் பார்த்து மிகவும் வருத்தம் மேலிட்டது. ‘என்னுடைய ராமனுக்கு இவள் எல்லா விதத்திலும் தகுதியுடையவள். ராக்ஷஸிகள் பயமுறுத்தியதையும் அவள் பார்க்கவில்லை. சுற்றியுள்ள அசோகவனத்தின் அழகையும் பார்க்கவில்லை.’
“एकस्थ हृदया नूनम् रामम् एव अनुपश्यति”
“ஏகஸ்தஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநுபஷ்யதி” – எப்பொழுதும் ‘ராமா ராமா’ என்று ராமனையே ஒருமுகமாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த உத்தம பத்தியை பெற நாமும் பிரார்த்திப்போம்.🙏