மந்த்ஸ்மித சதகம் 55வது ஸ்லோகம் – கங்கா தேவியின் பெருமைக்கு காரணம் எது?
उत्तुङ्गस्तनमण्डलीपरिचलन्माणिक्यहारच्छटा-
चञ्चच्छोणिमपुञ्जमध्यसरणिं मातः परिष्कुर्वती ।
या वैदग्ध्यमुपैति शङ्करजटाकान्तारवाटीपतत्-
स्वर्वापीपयसः स्मितद्युतिरसौ कामाक्षि ते मञ्जुला ॥
3 replies on “கங்கா தேவியின் பெருமைக்கு காரணம் எது?”
Namaskaram …Romba santhosham..If I come to your home, may I get Ganga Jalam and also wants to get details about doing Sraartham..
Of course mama. Please come home. I will send you my number in email
மிக அழகான வர்ணனையுடன் கூடிய ப்ரசங்கம்! கண் முன் தோற்றுவிக்கும் கங்கையின் வர்ணனை! அம்பாள் மந்தஹாஸத்தை மாணிக்க மாலையின் ஊடாகப் பாயும் வெள்ளை ஒளிக் கீற்றாக இங்கு வர்ணிக்கப் படுவது சாலச் சிறந்த வர்ணனை!
இந்த ஸ்லோகம் கங்கை நீரோடு அம்பாள் மந்தஹாஸத்தை ஒப்பிட்டு வர்ணிக்கப் படுகிறது,!
தேவியின் உயர்ந்த மார்பகங்களில் அசைந்தாடும்
மாணிக்க மாலையின் கொத்துப் போல் திகழும் சிவப்பு நிறக் குவியலின் மத்ய ப்ரதேசத்தை அழகு படுத்துவது போல் அம்மையின் ஒளிவீசும் சிரிப்பானது , சிவனின் சடைக்காட்டின் நடுவே பாய்கின்ற கங்கை நீரின் தன்மை பெற்று மிக அழகாகத் தோற்றம் அளிக்கிறது
அதாவது தேவியின் சிரிப்பு ஒன்றே மிகுந்த வனப்புடையதாக எல்லா அழகுகளையும் தோற்கச் செய்யும் ஆற்றலுடையதாக இருக்கிறது !
அவள் மந்தஹாஸ வதனி அல்லவா?
ஜய ஜய ஜகதம்ப சிவே