Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 63)

मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते

गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।

किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते

भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ||63||

மார்கா³வர்திதபாது³கா பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே

க³ண்டூ³ஷாம்பு³நிஷேசனம்ʼ புரரிபோர்தி³வ்யாபி⁴ஷேகாயதே |

கிஞ்சித்³ப⁴க்ஷிதமாம்ʼஸஶேஷகப³லம்ʼ நவ்யோபஹாராயதே

ப⁴க்தி கிம்ʼ ந கரோத்யஹோ வனசரோ ப⁴க்தாவதம்ʼஸாயதே ||63||

இந்த ஸ்லோகம் சிவானந்த லஹரியில 63 வது ஸ்லோகம்.  கண்ணப்ப நாயனாரோட கதையை சொல்றார்.

ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோதி –  பக்தி எதை தான் செய்யாது?

அஹோவனசர: – ஒரு வேடன்

ப⁴க்தாவதம்ʼஸாயதே – எல்லா பக்தர்களுக்குள்ளும்  மிகச்சிறந்தவனாக .. பக்தஸ்ரேஷ்டனாக ஆயிட்டானே …அப்டின்னு சொல்றார்.

பக்தி னா என்னனு சொல்லிக் கொடுத்தார். அந்த பக்தியை எப்படி வளர்க்கறது அப்டின்னும் சொல்லிக்கொடுத்தார்.  அந்த மாதிரி என்னத்துக்கு பக்தியை வளர்த்துக்கணும் அப்டின்னா…. அப்படி உத்தம பக்தி வந்துடுத்துன்னா பகவான் நம்பளோட குறைகளெல்லாம் நிறையாக்கி நம்பளை ஏத்துக்கறார் அப்டின்னு புரிய வைக்கறதுக்காகவும்,  போன ஸ்லோகத்துல  ஸ்வாமிகளுடைய கதைகளை பேசுவதால் பக்தி வளரும்னு சொன்னார்.  இங்க ஒரு சிவபக்தனுடைய உத்தம பக்தனுடைய கதையை சொல்றார்.  இதை பேசுவதாலயும் நமக்கு இது மாதிரி பக்தி நமக்கும் வராதா அப்டின்னு  எத்தனையோ மஹான்கள் வேண்டிக்கறா…

மாணிக்கவாசகர்,

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ

அப்டின்னு பாடறார்.  கண்ணப்பனை போல ஒரு அன்பு எங்கிட்ட இல்லை என தெரிந்திருந்தும் கூட என்னப்பன் என் தந்தையான சிவபெருமான்  என்னொப்பில் – எதற்கும் ஒப்பு சொல்ல முடியாது.. கண்ணப்பனோட  இல்ல சாதாரண பக்தரோட கூட என்னை ஒப்பிட முடியாது …. அப்பேர்பட்ட என்னையும் ஆட்க்கொண்டருளி வண்ணப்பணித்து –நான் எப்படி நடந்துகக்ணும் என சொல்லிக்கொடுத்து வா என்ற – வா – தில்லைக்கு வா அப்டின்னு என்னை கூப்பிட்டாரே அந்த கருணையை நான் எப்படி சொல்வேன் அப்படின்னு வியக்கறார்.

அதே மாதிரி பட்டிணத்தடிகளும்….

 நாளாறில் கண்இடந்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று

ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?

அப்படின்னு கண்ணப்பர் பெருமையை சொல்றார். அப்படி கண்ணப்பர் பக்தியை எல்லாரும் சொல்றா.  நாமும் கண்ணப்பன் கதையை சொல்வோம்.  குழந்தைலேர்ந்து பல முறை கேட்டாலும் அவ்வளவு அற்புதமான சிவனடியார் சரித்திரம்.

திண்ணன்னு காட்டுல ஒரு வேடுவன். அவன் அப்டியே மிருகங்களை அடிச்சி சாப்ட்டுண்டு காட்டுல இருந்துண்டிருக்கான்..  வேடுவ ராஜாவோட புள்ளை அவன். ஒரு நாளைக்கு நண்பர்களோட மலை மேல ஏறி காளத்தி மலையில ஏறினவுடனே, அங்க குடுமித தேவர் அப்டின்னு அங்க இருக்கற சிவபெருமானை பார்த்தவுடனே அங்க பூர்வ புண்யத்துனால பக்தி வந்திடுத்து. அவனோட நண்பர்களை எல்லாம் “நீங்க எல்லாம் போங்கோ நான் இவரோட தான் இருப்பேன். இவரை பாத்துக்கணும் ராப்பகலா எனக்கு” அப்டின்னு சொல்லி அங்கயே இருக்கான்.

சாயங்காலம் ஆனவுடனே போய், ஒரு பன்றியை வேட்டையாடி,  அவனுக்கு எப்படி பிடிக்குமோ அது மாதிரி சுடப்பண்ணி அந்த மாம்சத்தை தேன் ஊற்றி கடிச்சு பார்த்து சரியான பக்குவத்துல இருப்பதை சுவைத்து தெரிந்துகொண்டு அதை நெய்வேத்யமாக ஒரு இலையில் வைச்சுண்டு அதை எடுத்துக்கறான்.  ஸ்வாமிக்கு அபிஷேகம் பண்ணனும் னு வாய்ல ஜலத்தை ரொப்பிக்கிண்டு – ஏன்னா பாத்திரம் எதுவும் இல்லை..  பூக்களை எல்லாம் பறிச்சு தலையில வச்சுண்டு.. ஏற்கனவே அபிஷேகம் பண்ணினவர் இதெல்லாம் பண்ணிருக்கார் என பார்த்து வச்சுண்டதால, இது மாதிரி எல்லாத்தையும் எடுத்துண்டு வந்து, ஸ்வாமி மேல முன்ன அபிஷேகம் பண்ணி சாத்தியிருந்த பூவெல்லாம் காலால தள்ளி விட்டுட்டு, வாய்ல இருந்த ஜலத்தால அபிஷேகம் பண்ணிட்டு, பன்றி மாம்சத்தை நைவேத்யம் பண்ணிட்டு, தலைல இருந்த பூவால அர்ச்சனை பண்றான்.  அதை தான் இந்த ஸ்லோகத்துல சொல்றார். இந்த ஸ்லோகத்தினுடைய அர்த்தம் என்னன்னா

மார்கா³வர்திதபாது³கா  – நடந்து தேய்ந்து போன கண்ணப்பனோட செருப்பு

பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே –பசுபதியின் உடம்புல ஒரு கூர்ச்சம் போல இருக்கு.  அபிஷேகத்துக்கு முன்னாடி கூர்ச்சம் வைப்பளோல்யோ அது மாதிரி இருக்கு..

க³ண்டூ³ஷாம்பு³- வாயில கொண்டு வந்த ஜலமானது நிஷேசனம்ʼ —   துப்பறான் அவன் ஸ்வாமி மேல அந்த ஜலம்

 புரரிபோ:–  முப்புறங்களை எரித்தவருக்கு

தி³வ்யாபி⁴ஷேகாயதே—திவ்ய அபிஷேகமாக ஆகிவிடுகிறது.

கிஞ்சித்³ப⁴க்ஷித—கொஞ்சம் சாப்டு பார்த்து அவன் கொண்டு வந்த

மாம்ʼஸஶேஷகப³லம்  அந்த மாமிசத்தின் மீதி

 நவ்யோபஹாராயதே  — புதிதாக சமைத்து எடுத்துவந்த ஹவிஸ் போல ஆகிவிடுகிறது.

ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோதி –  பக்தி என்ன தான் செய்யாது – அப்டின்னு ஆச்சார்யாள் சொல்றார்.

இப்படி அவன் ஐந்து நாள் பண்றான்.  சிவகோசரர்னு ஒரு சிவாச்சாரியார் காளத்தியப்பனுக்கு பூஜை பண்ணிட்டு இங்க வந்து புஜை பண்ணிண்டிருக்கறவர்.  தினம் காத்தால வந்து இதை பார்த்தா ரொம்ப கோபமும் வெறுப்பும் வர்றது. “என்னடா இது பகவானே நீ இப்படி இதுக்கு இடம் கொடுக்கலாமா”னு துக்கப்பட்டுண்டு அதை எல்லாம் எடுத்து போட்டுட்டு சுத்தம் பண்ணி புண்யாஹவாசனம் செய்து பூஜை பண்ணிட்டு போறார்.  இப்படியே ஐந்து நாளும் ஆனதும் ரொம்ப தாபப்பட்டு “என்னப்பா பகவானே இப்படி நடக்கறதே இதை நீ அனுமதிக்கலாமா”னு வருத்தப்படும் போது “இன்னிக்கு ராத்திரி வந்து பார்” என அசரீரியாக கேட்கிறது. அவரும் மிகச்சிறந்த பக்தர். சரின்னு ராத்திரி வந்து ஒளிந்திருந்து பாத்துண்டிருக்கார். அப்ப கண்ணப்பன் வந்து அவன் பூஜையை பண்றான். பகவானுக்கு அது கங்கா ஜலம் மாதிரியும் உத்தமமான பூஜையாகவும் இருக்கு.

கண்ணப்பனுடைய பக்தியை காண்பிக்கறதுக்காக பகவான் தனது வலது கண்ணிலிருந்து இரத்தம் கொட்டுகிறது. இவன் தவிச்சு போய்டறான். “ஸ்வாமியே என்ன இது”னு தனக்கு தெரிந்த பச்சிலை வைத்தியம் எல்லாம் செஞ்சும் நிக்காததால “எனக்கு கண் இருக்கே” அப்டின்னு தன் அம்பால வலது கண்ணை பிடுங்கி ஸ்வாமிக்கு வைக்கும் போது இரத்தம் நின்னுடறது.  ஆஹா ஹா னு ஆனந்த கூத்தாடறான். அப்படி இந்த உடம்பு தான்னு நெனைக்காம பகவானுடைய உடம்பும் தன்னுடைய உடம்பும் ஒண்ணுனு நெனைக்கிறானே. இதுக்கு மேல பக்தி உண்டா.  அவனுக்கு இதுக்கு மேல பக்தில achieve பண்றதுக்கு ஒண்ணுமே இல்லியே.. பகவான் அவனை மேலும் சோதிக்கறதுக்காக அவரோட இடது கண்ணுல இருந்து ரத்தம் வர்றது.  ஆனா அவன் கவலையே படலை “எனக்கு தான் இப்பொ வழி தெரியுமே.. நான் தான் இப்ப வழி கண்டுபுடிச்சுட்டேனே” அப்டின்னு சொல்லி சந்தோஷப்பட்டுண்டு அம்பால அவனோட இடது கண்ணை எடுக்க போறான். அப்ப அவனுக்கே தோண்றது.. இடது கண்ணையும் எடுத்துட்டா குருடாயிடுவேனே என சொல்லிட்டு இடது கால் செப்பலால பகவானோட கண் எங்க இருக்கு என அடையாளத்துக்கு காலை வச்சுண்டு இடது கண்ணை புடுங்க போறான்.  அப்ப பகவான் காக்ஷி கொடுத்து தன்னோட சேர்த்துக்கறார். அப்பேர்பட்ட கண்ணப்பனோட பக்தி நம்ப எல்லாரும் விரும்பணும்.. யாராவது அவாளுக்கு தெரிந்த விதத்தில பக்தி பண்ணினா, இதெல்லாம் மூட பக்தி அப்டின்னு நினைக்காம எந்த புத்துல எந்த பாம்போ .. யாருடைய பக்தியை பத்தி யார் சொல்ல முடியும். அதனால நம்ப humbleஆ நம்பளுடைய, நமக்கு தெரிந்த பக்தியை பண்ணிண்டு போகணும்.

இன்னொரு திருவாசக பாடல் இருக்கு.

பொருட் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்
செருப்புற்ற சீரடிவாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் தேடறிய மெய்குளிர்க் தங்கு
அருட்பெற்று நின்றவா  தோனோக்கம் ஆடாமோ !

அப்படி நம்ப கண்ணப்பனுடைய பக்தியை மெச்சணும்.  அது மாதிரி பக்தி நமக்கும் வரணும்னு வேண்டிக்கணும்.

இராமாயணத்துல கூட ஒரு மாமிசம் சாப்பிடற கழுகு ஜடாயு, பகவானோட கையால சம்ஸ்காரம் பெற்று வைகுண்டத்தை அடஞ்சது.  வேடுவஸ்‌த்ரீ சபரி அவ பகவான் கிட்ட  வச்ச அன்பினால உத்தம கதியை அடஞ்சா… அது மாதிரி பிறப்போ படிப்போ ஆசாரமோ எதுவுமே பக்திக்கு ஒரு தடை இல்லை அப்டிங்கறது இந்த கதைல இருந்து தெரியறது.

கடைசி ஏழு எட்டு ஸ்லோகங்களிலயும் பசுபதி, பசுபதி ன்னு சொல்றார்.  இந்த பசுக்களாக இருக்கற நமக்கு பதி அந்த பகவான் தான். அவர் தான் நமக்கு இந்த உலகத்தில இருக்கற பாசங்களை விலக்கி அவரிடத்தில ஒரு தெய்வ பாசம்….அதுவும் கண்ணப்பன் போன்ற ஒரு பாசம் ஏற்படறதுக்கு அனுக்ரஹம் பண்ணணும்.  நமக்கு தெரிஞ்ச பக்தி வளர்க்கறதுக்கு போன ஸ்லோகத்துல சொன்னாரே அது மாதிரி பக்தியினுடைய அடையாளங்களாக விபூதி இட்டுக்கறது, ருத்ராக்ஷம் போட்டுக்கறது, பகவானுடைய கதையை பேசறது,  பகவானுடைய கதையை கேட்கறது  இதெல்லாம் பண்ணுவோம்… கூடயே “உத்தம பக்தியை கொடுப்பா .. உன்னிடத்தில் நிஜமான பக்தியை கொடு” அப்டின்னு கூட கூட வேண்டிப்போம்.

மார்கா³வர்திதபாது³கா பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே

க³ண்டூ³ஷாம்பு³நிஷேசனம்ʼ புரரிபோர்தி³வ்யாபி⁴ஷேகாயதே .

கிஞ்சித்³ப⁴க்ஷிதமாம்ʼஸஶேஷகப³லம்ʼ நவ்யோபஹாராயதே

ப⁴க்தி கிம்ʼ ந கரோத்யஹோ வனசரோ ப⁴க்தாவதம்ʼஸாயதே

நம: பார்வதி பதயே  !! ஹர ஹர மஹா தேவா… !!!

Series Navigation<< சிவானந்தலஹரி 62வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 64வது 65வது ஸ்லோகம் பொருளுரை >>

7 replies on “சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை”

சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை – whoever spoke in this audio, made me cry for a minute when I heard Kannappa’s story (although heard several times earlier). Thanks for wonderful explanation and making me drenched in the Bhakti Sagaram.

நம சிவாய நம சிவாய
நண்பர்கள் உடன் விளையாட சென்ற வேடுவ இளவரசர் கண்ணப்பரை இறைவன் தன் கருணையால் ஆட்கொண்டார்.
இந்த கதையைக் கேட்க ஆனந்தமாக இருக்கு.
பக்தியில் திளைத்து அந்த உணர்வுடனே, எவையெவை அநாசாரமாக கருதப்பட்டவையோ அவைகள் எல்லாம் அந்தக் கண்ணப்ப நாயனாரின் அன்பு ததும்பிய பக்தி மூலம் புனிதமாயிற்று.
இறைவனின் கண்ணில் இருந்து ரத்தம் கசிவதைப் பார்த்து அவர் பச்சிலை மருத்துவம் செய்தும் ரத்தம் நிற்கவில்லை என்ற நிலையில் ஊனனுக்கு ஊன் (plastic surgery) என்று கருதி தன் கண்ணை இறைவனின் கண்ணில் அப்பினார். இது போன்ற உத்தமமான உள்ளுணர்வு உந்திய பக்திக்கு அவர் செயல் பக்தி எடுத்துக் காட்டாக உள்ளாது.
இந்த தூய்மையான பக்தியில் பகவானை ஸ்மரிக்க அவர் நம்மை ஆட்கொள்ள ப்ரார்த்திக்க வேண்டும்.
மற்றவை, பக்தி அனுக்ரஹம் செய்வது அவர் கருணையினால் மட்டும் நடக்கும்.
🙏🙏💐

எத்தனை முறை கேட்டாலும் , இந்த கண்ணப்ப நாயனார் கதை , மனதில் பக்தியை மேலும் தூண்டி இழுக்கும் விதமாக உள்ளது, அலுக்காது.
இளம் வயதில் பக்தி செய்ய பூர்வ புண்ணித்துடன், அந்தப் பரம் பொருளின் அருள் மிக அவசியம்., ‘அவனருளால் அவன் தாள் வணங்கி’, பக்திக்கு ஒரு ப்ரஹல்லாதன், துருவன், மார்கண்டேயன் அந்த வகையில் கண்ணப்பரின் சரித்திரம் பக்திக்கு இரையாக இருந்து கொண்டே இருக்கும்.
ஷிவாய நமஹ 🙏🙏💅

பக்திக்கு எடுத்துக்காட்டு கண்ணப்ப நாயனாரின் பக்தி! வேடுவ குலத்தில் பிறந்திருண்தும், அபிஷேகம், அர்ச்சனை போன்ற எந்த வழி முறைகள் பற்றியும் ஏதும் அறியாத வேடுவ குலத்தில் உதித்தவரானாலும் பரமேச்வரன் லிங்க மூர்த்தியின் கண்களிலிருந்து ரத்தம் வடிவது கண்டு, அடையாளத்துக்கு புருவ மத்தியில் தன் பாதங்களை வைத்துக் கொண்டு அவரது கண்களைப் பிடுங்கி ஸ்ரீ பரமேச்வரனுக்குபர்ப்பணித்தார் ! வாயினால் ஏந்திய ஜலத்தால் அபிஷேகம் செய்தார்! அந்த ஜலம் கங்கா ஜலத்தால் செய்கின்ற அபிஷேகத்துக்கு ஒப்பாக ஆகின்றது! கொஞ்சம் உண்ணப்பட்டு மீதி இருக்கும் மாம்ஸத்தின் மிச்சம், புதிதாக உண்டாக்கிய நி வே தனத்து க் க்கு ஒப்பாக ஆகிறது! வேடன் ஒப்பற்ற பக்திமான் ஆகிறான்! என்ன ஓர் வியப்பு ! வேடன் பக்திமார்களுள் ச்ரேஷ்டமான பதவியை அடைகிறான்! இதுவன்றோ பக்தி!! தர்ப்பமுஷ்டி போல் பரிசுத்த் வஸ்துவாக ஆகின்றது,! அவனிடம் இருந்த பக்தி பரமேச்வரனின் நெருங்கிய, முதன்மையான பக்தனானான் !
பக்திக்கு ஆசார விவஹாரம் எல்லாம் தாண்டி ச்ரத்தையான பூஜை ஈடுபாடுதான் முக்கியம் என்பதைச் சொல்லும் ஸ்லோகம் இது ! பக்தி எதைத்தான் செய்யாது? முத்ல் ஸ்தானத்தில் உள்ள பக்தன் அல்லவா கண்ணப்ப நாயனார் ?
ஓம் நம: சிவாய சிவாய நம ஓம்!

ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோதி – பக்தி எதை தான் செய்யாது?
பகவத் பக்திக்கு பாடமாக இருக்கும் வரி.
மோக்ஷத்திற்கு வழி.
வாதவூராரின் வாசகமும், பட்டினத்தாரின் பாடலும் மேற்கோள் காட்டி கண்ணப்பரின் பக்திக்கு சிறப்புடன் உங்களது.
இந்த பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை தியானம் செய்ய ஹேதுவானது. மிக்க மகிழ்ச்சி
சிவ சிவ 🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.