Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 64வது 65வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 64வது 65வது ஸ்லோகம் பொருளுரை(15 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 64 and 65)

Series Navigation<< சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 66வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 64வது 65வது ஸ்லோகம் பொருளுரை”

யமனுடைய மார்பில் உதைத்தல், பாதத்தால் அபஸ்மாரம் எனும் பூதத்தை துகைத்தல், மலைகளில் சஞ்சாரம் செய்தல், தன்னை வணங்கும் தேவர்களின் கிரீடத்தில் உறைதல் போன்ற காரியங்களை, கௌரி பதி யான தங்கள் மிருதுவான சரணங்களுக்குப் பொருந்துமா? என் மனதாகிய மணிமயமான பாதுகைகளை அணிந்து கொண்டு எங்கும் சுற்றுதலை ஸதா ஏற்றுக்கொள்ளுங்கள்!
எப்போதும் தன் மனதில் வாசம் செய்யும்படி ஆசார்யாள் ஈசனிடம் வேண்டுகிறார்!!
பரமேஸ்வரா பக்தனைக் கண்டு எமன் நடுங்குகிரான்.ஏன் அவன் அவரது பாத பத்மத்தில் தன் மனம் முழுதும் ஈட்டுப்படுத்தி பக்தி செய்கிறான்! முக்தி என்ற மாது பக்தர் விருப்பம் கொண்டு வருகிறாள்! இந்த உலகத்தில் அவனுக்குக் கிடைக்காதது ஒன்றுமே இல்லை !பாத பஜனம் என்ன செய்யாது?
பரதன் அண்ணல் பாதுக்கையை பாதமாக நினைந்து அதன் மேல் வெயில் படாமல் காப்பது, இங்கு பொருத்தமானது! பாத தூளி பட்டு பாதுகையும் பாதத்துக்குச் சமமாக ஆவது இங்கு குறிப்பிடத்தக்கது!
மூக பஞ்ச சதியில் பாதாரவிந்த சதகம் முழுதும் பாதத்தின் சிறப்பை வர்ணித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது!
இந்த சமயத்தில் பெரியவா பற்றிய ஒர் சம்பவம் மனதில் தோன்றுகிறது. ஒரு சமயம், ஒரு கோவில் உள்ளே பெரியவா செல்லும்போது, ஒரு பக்தர், வயதில் இளைஞர் பாதுகைகளை தன் சிரசில் தாங்கி நின்ற கோலம் மனதில் உறைந்திருக்கிறது!
அதுவே பாதுகையின் சிறப்பு!
வேறொரு சமயம் சுடும் வெயிலில் ஒரு பக்தர் பெரியவா ஸ்நானம் செய்யும் வரையில் நதிக் கரையில் பாதுக்கைகளை சிரசில் வெறும் காலோடு காத்திருந்தார்! பக்தியின் எல்லை பாதுகா பூஜை !!
அழகான மேற்கோள்களுடன் நல்ல ஒர் பிரசங்கம்! அதுவும் பாதுகா மஹிமை பற்றி! பாதுகா பூஜா பலன் கிட்டியது போன்ற உணர்வு!
நன்றி கணபதி,.

ஜய ஜய சங்கரா….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.