Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 66வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 66வது ஸ்லோகம் பொருளுரை(8 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 66)

சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்…66வது ஸ்லோகம்.

क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।
शम्भो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६॥

க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்ʼ க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜனா꞉
யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ ப்ரீத்யை ப⁴வத்யேவ தத் |
ஶம்போ⁴ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்ʼ மச்சேஷ்டிதம்ʼ நிஶ்சிதம்ʼ
தஸ்மான்மாமகரக்ஷணம்ʼ பஶுபதே கர்தவ்யமேவ த்வயா || 66 ||

இந்த ஸ்லோகத்துல ஞானிகள் ஆத்மவிசாரம் பண்ணி ப்ரஹ்மசூத்திர பாஷ்யங்கள் எல்லாம் படிச்சு எத உணர்றாளோ, அந்த மனப்பக்குவத்தை தன்னை முழுமையா பகவானிடத்தில் ஒப்படைத்து ஒரு பக்தன் அடைந்து விடுகிறான்,  அப்டிங்கறத ஆச்சார்யாள் காண்பிக்கறார்

‘க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்’ – ஹே ஸம்போ! ஹே பசுபதே! உன்னுடைய விளையாட்டுக்காக, லீலையாக, நீ எல்லா உலகங்களையும் – ‘ ஸ்ருஜசி’- ஸ்ருஷ்டி பண்ற, தேவலோகம் ஒருவிதமா இருக்கு, அசுர லோகம் ஒருவிதமா இருக்கு..மிஸ்ர லோகம் – நம்ம லோகம் கலந்தாங்கட்டியா ஒண்ணு இருக்கு..ஏன் இப்டியிருக்கு? எதுக்கு இப்படி நம்ம பொறந்து வந்துருக்கோம்? அப்டிங்கறதுக்கு, ப்ரஹ்மசூத்திரத்துல, ஒரு காரணமும் கிடையாது; பகவான் விளையாட்டுக்காக ஸ்ருஷ்டி பண்றார் அப்படின்னு சொல்றார்…அத அசார்யாள் சொல்றார்…’ப்ரபஞ்சமகிலம் க்ரீடார்த்தம் ஸ்ருஜஸி’. .ஒரு .விளையாட்ட்டா நீ ஸ்ருஷ்டி பண்ணியிருக்க.

‘க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜனா꞉’….இங்க இருக்கற ஜனங்கள் எல்லாம், உன்னோட ‘pet animals’…விளையாட்டு ப்ராணிகள் போல அப்டிங்கறார்..ஒரு circus இது, அப்டிங்கறார்…இந்த circusல எல்லா ஜனங்களும் உன் ஆணைப்படி ஆடுகிறார்கள்.

‘ யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ ப்ரீத்யை ப⁴வத்யேவ தத்’ – அதனால நான் என்ன காரியம் பண்றேனோ அதெல்லாம் உன் ப்ரீதிக்காகவே ஆறது. உலகத்துல ஜனங்கள் மாயை வசப்பட்டு தன்னுடைய egoனால, நான் பண்றேன்னு நெனைச்சுண்டு என்ன பண்றாளோ, அத பக்தன் வந்து, எல்லாம்  நீ பண்ண வெக்கற, உன் த்ருப்திக்காக  நான் பண்ணிண்டு இருக்கேன்..நான் என்ன பண்ண முடியும்?..சூரியன வரவழைக்க முடியுமா? மழைய வரவழைக்க முடியுமா? எல்லாம் நீ பண்ணினதால நான் எழுந்துக்கறேன், நான் குளிக்கறேன், நான் சாப்பிடறேன்…நான் தாண்யத்த விளைவிக்க முடியுமா? மரத்துல நீ நெனைக்கலைன்னா பழம் பழுக்குமா? அப்படி எல்லாமே நீ கொடுக்கறதனால, நான் இந்த உலகத்தில்  வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..அதனால நான் பண்ணறது எல்லாமே  உன் ப்ரீதிக்காகவே அமையறது..

‘மச்சேஷ்டிதம்’ – முதல்ல சொன்னார் “நான் பண்ற காரியங்கள்ன்னு”.. இப்ப நீ ஆட்டுவித்து,  நான் பண்ற எல்லா காரியங்களுமே
– ‘ஸ்வஸ்யகுதூகலஸ்ய’ ‘ஸ்வஸ்ய’ங்கற்த்துக்கு உன்னுடையதுன்னு ஒரு அர்த்தம் வச்சிக்கலாம், உன்னைச்சேர்ந்த அதாவது பக்தனுடைய குதூகலத்துக்காக, அதாவது ஒரு circus நடத்தறான்னா, ,அவன் ticket வித்து கொஞ்சம் பேர உட்கார வெச்சு, அந்த மிருகங்கள ஆட்டி வைக்கிறான்..அந்த மாதிரி பகவான், தன்னைச் சேர்ந்தவர்களான பக்தர்கள் பார்த்து சந்தோஷ படட்டும் அப்படிங்கற்துக்காக மத்த எல்லாரையும் ஆட்டி வைக்கிறார்..அப்படின்னும் எடுத்துக்கலாம்.
‘ஸ்வஸ்யகுதூகலஸ்ய கரணம்’ – அப்படி, உன்னுடைய அல்லது உன் பக்தர்களுடைய சந்தோஷத்துக்காக, ‘மச்சேஷ்டிதம் கரணம் நிஸ்சிதம்’ – நாம் பண்றது எல்லாம் அவாளுடைய சந்தோஷத்துக்காக என்பது நிச்சயமாகிறது..அதனால்,

‘ தஸ்மான்மாமகரக்ஷணம்ʼ பஶுபதே கர்தவ்யமேவ த்வயா !’ –  நான் உன்னுடைய த்ருப்திக்கான காரியம் எல்லாம் பண்றேன் இல்லையா, அதனாலஎன்ன காப்பாத்தற பொறுப்பும் உன்னுடையதாயிடுத்து அப்படின்னு சொல்றார்.
“நின் கடன் அடியேனையும் தாங்குதல்;
என் கடன் பணி செய்து கிடப்பதே” அப்படின்னு அப்பர் பெருமான்
பாடறார். என்னையும் காப்பாதுவது உன்னுடைய கடமை, உன்னுடைய பணி செய்து உன் காலடியில ஒரு நாய் மாதிரி கிடக்கறது என்னுடைய பணி அப்படின்னு சொல்றார். அது மாதிரி தன்னுடைய ‘ஸ்வயம்’ன்னு ஒண்ணுமே இல்லாம அத முழுக்க கை விட்டு பகவான சரண் அடஞ்சு, அதுமூலமா எத ஞானிகள் உண்மைன்னு உணர்றாளோ அத பக்தர்களும் உணர்கிறார்கள் அப்படிங்கறது இந்த ஸ்லோகத்துல தெரியறது.

பக்திமான்கள் என்னன்னா, இந்த ஞானம் ஒரு ‌ஷணம் வருகிறது, அடுத்த ‌ஷணம் திரும்ப நான்னு நெனைசுண்டு தன் திருப்திக்காக் எதோ பண்ணி அதனால அவஸ்தப்பட்டு அப்படியெல்லாம் பண்ணினா கூட, அப்புற்ம் சரி பகவானே என்னமோ உன்னுடைய ஸ்ருஷ்டி தானே…இதுவும் உன்னுடைய திருப்தி போல இருக்கு..என்ன இன்னிக்கு இப்படி ஆட வெச்சியே..இதையும் உனக்கு அர்ப்பணம் பண்றேன்..நாளைலேர்ந்து என்ன ? – “மேன்மை தொழிலில் பணியி னையே.” அப்படின்னு சொல்லி..
இதவிட அழகான காரியங்கள், உனக்கு பிடிச்ச மாதிரியான காரியங்கள பண்ண வை, அப்படின்னு சொல்லிக்கலாம்.
ஞானத்துக்கு அது மாதிரி சறுக்கலுக்கு வழியில்ல..அது பெரிய சறுக்கலா போயிடும்…
அப்படி பகவானுக்கு ப்ரியமா நடக்கணும் அவருடைய  காரியங்கள் பண்ணனும் ..அவர்தான் நம்மள ஆட்டி வைக்கிறார்ன்னு அப்படின்னு உணர்ந்து கொள்ள வேண்டும், அப்படின்னு இதுல ஒரு ப்ரார்த்தனை..மஹான்கள் இந்த உண்மைய உணர்த்த தான் வந்திருக்கா..அதனால அவாளோடபோய் சேர்ந்துண்டு அவாளுக்கு ப்ரியமான காரியங்கள் செஞ்சா, வெகு விரைவில் நம்மளும், இந்த ஸ்லோகத்துல இருக்கற உன்மைய உணர முடியும் அப்படிங்கற குறிப்பும் இந்த ஸ்லோகத்துல இருக்கு. இந்த மாதிரி, என்ன காப்பாத்தணும்னு மட்டும் சொல்லனுமா? என்ன காப்பாத்தறது அவரோட விளையாட்டுல ஒண்ணு தானே, அவர் காப்பாத்தத்தானே போறார் அப்படின்னா, அப்படி பக்தர்கள் வேண்டிக்கறதும் ஸரணாகதில ஒரு அங்கமா இருக்கு..
” உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.”
அப்படின்னு திருவெம்பாவைல மாணிக்கவாசகர் சொல்றார்…உன் கையில் இருக்கற குழந்தை.நீதான் பாத்துக்கணும் அப்படின்னு ..இந்த பழமொழிய ஞாபகப் படுத்தறேன். எனக்கு வேண்டியது உன் காரியத்த செய்யனும்..உன்னுடைய அடியாரோட சேரணும்…அத தவிர வேற எதையும் கண்ணாலக்கூட பார்க்கக்கூடாது. அப்படி ஒரு அனுக்ரஹம் நீ பண்ணிட்டேனா, அப்புறம், .சூரியன் கிழக்குல உதிச்சா என்ன மேற்குல உதிச்சா என்ன அப்படின்னு தன்னை அடைக்கலமா பகவான்கிட்ட ஒப்படச்சிக்கறார்.இதே பாவத்த ஆசார்யாள் இந்த ஸ்லோகத்துல சொல்றார்

க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்ʼ க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜனா꞉
யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ ப்ரீத்யை ப⁴வத்யேவ தத் |
ஶம்போ⁴ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்ʼ மச்சேஷ்டிதம்ʼ நிஶ்சிதம்ʼ
தஸ்மான்மாமகரக்ஷணம்ʼ பஶுபதே கர்தவ்யமேவ த்வயா

நம: பார்வதீபதயே!! ஹர ஹர மஹாதேவா!

Series Navigation<< சிவானந்தலஹரி 64வது 65வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 67வது 68வது ஸ்லோகம் பொருளுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.