Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 67வது 68வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 67வது 68வது ஸ்லோகம் பொருளுரை (12 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 67 and 68)

Series Navigation<< சிவானந்தலஹரி 66வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 69வது 70வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 67வது 68வது ஸ்லோகம் பொருளுரை”

பக்திக்கு எடுத்துக் காட்டு சிவாநந்தலஹரி! இதற்கு மேல் பக்தி செய்ய முடியாது, அதுவும் வினயத்துடன் கூடிய பக்தி என்பதன் எடுத்துக்காட்டு!
இதுதான் இந்தக் காலக்கட்டத்தில் அவசியம் ஜனங்களுக்கு வேண்டும். ஆசார்யாள் எளிமையின் உருவாக, தமக்கு ஒன்றுமே தெரியாது என்பதாகவே காண்பித்துக் கொள்ளக் கூடிய ஸ்தோத்ரக் குவியல்!

67)தயவுடன் கூடிய ஜீவர்களாகிய பசுக்களுக்குப் பதியான ஈசனே,
பலவித ஆனந்த பாஷ்பப் பெருக்கிற்கும், தெளிவான மயிர்க் க்கூச்சலுக்கும், அழகிய போகஸ்தானம் போன்ற, அழிவற்ற பதவியாகிற மோக்ஷத்தை விரும்புகிறவர்களால் வணங்கப்படுகிறதுமான ,எல்லா தெய்வங்களையும் விடச் சிறந்தவரும், நித்ய ஆனந்த ஸ்வரூபியான ஸ்ரீ பரமேஸ்வர த்யானத்தை சரணமாக அடைகிறேன்!

68)பரமேஸ்வரா ! அளவு கடந்த பாலை அடிக்கடி கறந்து கொண்டே இருப்பதும், பரிசுத்தமான, தங்கள் சரணங்களாகிற கொட்டிலில் வாசஞ் செய்கிறது ம், புண்யத்தின் பயனாகப் பெற்றதுமான என்னிடமுள்ள பக்தியாகிற பசுவை மட்டும் தாங்கள் வளர் த்து ப் போஷிக்க வேண்டும்!
ஏ பரமேஸ்வரா! தங்களிடம் எனக்குள்ள பக்தியை மேன்மேல் விருத்தி யாகும் படி யான, அனுக்ரஹத்தை எனக்கு அருளல் வேண்டும் என்பதாக ஆசார்யாள் இங்கு ப்ரார்த்தனை செய்கிறார்!
பொருள் விளக்கம் மிக எழுதலாம் நேர்முகமாக, ஆனால் ப்ரவசனம் செய்து எளியவர்க்கும் புரியும் வண்ணம் சொல்வது கடினம். கணபதி எளிமையாக, சுருங்கச் சொல்லி எப்போதும் விளக்குவதில் வல்லுனர்! We are all blessed!
ஓம் நம: சிவாய சிவாய நம ஓம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.