மந்தஸ்மித சதகம் 33வது ஸ்லோகம் – மங்களங்களைத் தரும் காமாக்ஷி மந்தஸ்மிதம்
कुर्युर्नः कुलशैलराजतनये कूलङ्कषं मङ्गलं
कुन्दस्पर्धनचुञ्चवस्तव शिवे मन्दस्मितप्रक्रमाः ।
ये कामाक्षि समस्तसाक्षिनयनं सन्तोषयन्तीश्वरं
कर्पूरप्रकरा इव प्रसृमराः पुंसामसाधारणाः ॥
2 replies on “மங்களங்களைத் தரும் காமாக்ஷி மந்தஸ்மிதம்”
அம்பாளுடைய மந்தஸ்மிதம் கற்பூரப் பொடி போல் பரமசிவனை களிப்புறச் செய்வதாக கூறும் அருமையான ஸ்லோகம். அற்புதமான விளக்கம்.👌🙏🌸
சிவே என்றால் மங்களமானவள். அம்பாள் மங்களமே வடிவானவள். அப்படிப்பட்ட மங்களமானவளிடம் அளவு கடந்த மங்களங்களைப் ப்ரார்த்திக்கிறார் மூககவி. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே’ என்றே எப்போதும் நாம் அம்பாளை ஸ்தோத்திரம் செய்கிறோம்.
மஹாபெரியவா, “ஆனந்தமாக – அதிலேயே ஒரு கம்பீரத்தோடு தூய்மையோடு ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதுதான் மங்களம். பணத்தை வாரிக் கொடுப்பதை விட, வேறு ஸர்வீஸ்கள் பண்ணுவதை விட, நாம் போகிற இடமெல்லாம் நம் மங்களத்தாலேயே ஆனந்தத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதுதான் மற்ற ஜீவர்களுக்குப் பெரிய தொண்டு. நாமும் மங்களமாக இருந்து கொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.” என்பார்.🙏🌸
ஸ்வாமிகள் போன்ற மகான்கள், மக்களின் கஷ்டங்களுக்கு வருத்தப்பட்டு சுகங்களில் சந்தோஷப்படுவார்கள் என்பதைக் கேட்ட போது,
“ராமன் மக்களின் கஷ்டங்களுக்கு மிகவும் வருத்தப்படுவான். குழந்தை பிறப்பு போன்ற எல்லா கொண்டாட்டங்களிலும், தங்கள் சொந்த தந்தையைப் போலவே மகிழ்ச்சி அடைவான்.” என்ற வாக்கியம் நினைவுக்கு வருகிறது.
व्यसनेषु मनुष्याणां भृशं भवति दुःखितः |
उत्सवेषु च सर्वेषु पितेव परितुष्यति |
வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருஷம் பவதி துக்கித:৷৷
உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி |
🙏🌸
மங்கள சரணே மங்கள வதனே
மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் என்ற பெரியவா செய்த அம்பாள் ஸ்லோகம் ஞாபகம் வறது ! இது ஒர் அஷ்டகஸ்தோத்ரம் !!
இதைச் சொன்னால் தடைப் படும் திருமணம் இனிதே நடக்கும் என்று பெரியவா சொல்வார்கள். மங்கலமான ஸ்தோத்ரம்!
அதுபோல் பதிகத்தின் கடைசி ஸ்தோத்ரம் சகல செல்வங்களும் இமயகிரி ராஜா தனயை மாதேவி நின்னை சத்தியமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் அன்பருக்கு மிகவும் அகிலமதில் நோயின்மை, கல்வி தன தான்யம் ,அழகு ,புகழ் எளிமை, அறிவு சந்தானம் வழி துணிவு வாழ் நாள் வெற்றியாகும் நல் நூழ் நுகர்ச்சி, தொகை தரும் பதினாறு பேரும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய், சுகிர்த குணசாலி, அனுகூலி திரி சூலி மங்கள விசாலி நு ஒரு ஸ்லோகம் . நான் எந்த மங்கள விழாவிலும் பாடுவேன்.
நம் பாரத தேசம் ஞானிகள் வாழ்ந்த புண்ய பூமி !!
ஒவ்வொருவரும் நமக்கு அமுதத்தை வாரி வழங்கியிருக்கிறார்கள் ! அமுதத்தை பருக நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்!!
ஜய ஜய ஜகதம்ப சிவே….