Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 72வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 72வது ஸ்லோகம் பொருளுரை (14 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 72)

Series Navigation<< சிவானந்தலஹரி 71வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 73வது 74வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 72வது ஸ்லோகம் பொருளுரை”

பக்தி என்பதன் முழு சாராம்சம் அடங்கியது சிவாநந்தலஹரி ! ஒரு பொக்கிஷம் !.
திருப்புகழில் பல பாக்களில் பக்தியும், சரணங்களில் மனம் லயித்து, ஒன்றி இறுதியாக இறைவனை அடையும் மார்கத்தையும் பல இடங்களின் சொல்கிறார் . முக்கடைப் பிறப்பி நுட்கிடப்பதைத் தவிர்த்து முத்தி சற்றெனக் கருள்வாயே என்று ஒர் இடத்திலும்,பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப்புகழ் பாடி முத்தனாம் ஆறு எனைப்பாடி முக்தியே சேர்வதற்கருள்வாயே என‌ மற்றோர் இடத்திலும் பக்தியின் சிறப்பைச் சொல்கிறார். சிவானந்த லஹரி பக்தியின் கருவூலம் !
இந்த ஸ்தோத்ரத் தில் ஆசார்யாள் பல வித சாதனங்கள் கொண்டு அகழ்ந்து ஒரு புதையலைத் தோண்டி எடுப்பதை உவமைப் படுத்தி, பக்தியின் மூலம் எப்படி ஈஸ்வரனின் பாத சரணங்களை அடையலாம் என்பதனை விளக்குகிறார்!
அதற்கு ஈடாக மூல பஞ்ச ஸ்துதி இங்கு மேற்கோளாக கையாண்ட விதம் அற்புதம்!
சாஸ்த்ரமெனும் அமுதப் பொய்கையில் ஸ்நானம் செய்து தெளிவு பெற்று ஆனந்தம் ஆகிய அமுதத்தை சுவைத்துள்ள முனிவர்களின் மனம்.இந்த பூமிக்கு ஒர் அணிகலன் ! சித்சக்தி எனும் ஆழ் கடலில் உன் திருவடியைத் தேடுகிறது ! அது ஒர் சிறந்த ரத்னம்,! ஸத் சித் ஆனந்தம் அல்லவா ? ஸத் ஆகிய சிவனுடன் இணைந்துள்ள சித் !
அம்பாளின் திருவடி வர்ணனை நன்றாகச் சொல்லப்பட்டுள்ளது !
சோம வார சொற்பொழிவு சிவ சக்தி ஸ்வரூபமாக வெளிப்பட்டு ஆனந்தத்தை அளிக்கிறது.
ஜய ஜய சங்கரா…
ஜய ஜய ஜகதம்ப சிவே….

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.