Categories
mooka pancha shathi one slokam

குருரேவ கதி: குருமேவ பஜே


பாதாரவிந்த சதகம் 38வது ஸ்லோகம் – குருரேவ கதி: குருமேவ பஜே
दिनारम्भः सम्पन्नलिनविपिनानामभिनवो
विकासो वासन्तः सुकविपिकलोकस्य नियतः ।
प्रदोषः कामाक्षि प्रकटपरमज्ञानशशिनः
चकास्ति त्वत्पादस्मरणमहिमा शैलतनये ॥

गुरुरेव गतिः गुरुमेव भजे गुरुणैव सहास्मि नमो गुरवे ।
न गुरोः परमं शिशुरस्मि गुरोः मतिरस्ति गुरौ मम पाहि गुरो ॥

தினாரம்ப: ஸம்பன்னளினவிபினானாம் அபினவோ
விகாஸோ வாஸந்த: ஸுகவிபிகலோகஸ்ய நியத: |

ப்ரதோஷ: காமாக்ஷி ப்ரகடபரமஜ்ஞானசசின: சகாஸ்தி தவத்பாதஸ்மரணமஹிமா சைலதனயே || 

இது பாதாரவிந்த சதகத்துல 38-வது ஸ்லோகம்.

ஹே காமாக்ஷி! சைலதனயே, மலையரசனின் மகளே!

தவத்பாதஸ்மரணமஹிமா – உன்னுடைய திருப்பாதங்களை ஸ்மரணம் செய்வது, தியானம் செய்வதின் மகிமை எப்பேர்ப்பட்டது அப்படின்னா?

தினாரம்ப: ஸம்பன்னளினவிபினானாம் – சம்பத்துக்கள், செல்வங்கள் என்ற நளினவிபினானாம், தாமரைக் காடுகளுக்கு தினாரம்ப:, தினத்தை யார் ஆரம்பிச்சு வைக்கிறா? சூரியன். தாமரைக் காடுகள் சூரியனைக் கண்டா என்னாகும்? மலர்ந்து பிரகாசிக்கும், இல்லையா? ஒரு தாமரை மலர்ந்தாலே அழகா இருக்கு. தாமரைக் காடுன்னா? அப்படி அம்பாளுடைய சரண தியானம் பண்றவனுக்கு செல்வம் வந்து குவியும் அப்படின்னு சொல்றார்.

அடுத்தது, அபினவோ விகாஸோ வாஸந்த: ஸுகவிபிகலோகஸ்ய நியத:
ஸுகவி – நல்ல கவிகள் என்ற, பிக:ன்னா குயில். பிகலோகஸ்ய – குயில் கூட்டத்திற்கு, அபினவோ விகாஸோ வாஸந்த: – புது வசந்தத்தின் அழகைப் போல, வரவைப் போல உன்னுடைய பாதஸ்மரணம் அமைகிறது. நியத: – வசந்தம் வருஷத்துல ரெண்டு மாசம் தான் வரும். ஆனா இந்த வசந்தம் எப்பொழுதும் இருக்கக் கூடிய வசந்தம். எப்ப காமாக்ஷியினுடைய சரணத்தை ஸ்மரணம் பண்ணினாலும், நல்ல கவிகளுக்கு வசந்தம் வந்தா குயில் எப்படி பாடுமோ, அந்த மாதிரி இனிமையான கவிகள் அவாளுடைய வாக்குல வந்துண்டே இருக்கும் அப்படின்னு சொல்றார்.

ப்ரதோஷ: காமாக்ஷி ப்ரகடபரமஜ்ஞானசசின: – ப்ரகடமான, தெளிவான, பரமஜ்ஞானம் – உத்தம ஞானம் என்ற, சசின: – சந்திரனுக்கு ப்ரதோஷ: – ப்ரதோஷ வேளையா இருக்கும். உன்னுடைய பாதஸ்மரணம் ஒருவன் செய்தானானால், அவனுக்கு மிகத் தெளிவான, உயர்ந்த ஞானம் ஏற்படும் அப்படிங்கறதை எப்படி சொல்றார்! எத்தனை அழகழகான உவமைகள்! எவ்வளவு பாசிடிவ் வைப்ரேஷன்ஸ்! அந்த மாதிரி ஒரு பக்தனுக்கு என்னென்ன வேணுமோ, அது எல்லாத்தையும் காமாக்ஷியினுடைய சரண தியானம் கொடுக்கும்.

ஆரம்பத்துல செல்வம் வேணும் இந்த உலகத்துல வாழறதுக்கு. செல்வத்தைக் கொடுக்கும். அதுக்கப்புறம் புகழ் வேணும். நல்ல வாக்கைக் கொடுத்து, அது மூலமா புகழைக் கொடுக்கும். அதுக்கப்புறம், “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” அப்படின்னு, எல்லாத்துலிருந்தும் விலகிப் போகப் போகத்தான் நமக்கு நிம்மதி. எது இருந்தாலும், அது சந்தோஷமா இருந்தாலும் துக்கக் கலப்பாதான் இருக்கு. அதனால எதெல்லாம் விட்டோமோ, அதிலிருந்து நமக்கு ஒரு துக்கமும் இல்லை. எப்படா இதெல்லாம் விடப்போறது அப்படிங்கற ஒரு ஸ்டேஜ்ல, உயர்ந்த ஞானத்தைக் கொடுத்து, அந்த ஜீவனுக்கு அம்பாளுடைய சரண தியானம் மோக்ஷத்தைக் கொடுக்கும் அப்படின்னு … இந்த ஸ்லோகம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்லோகம் மூக பஞ்சசதியில. ஆனா, இதோட அர்த்தத்தை நான் இவ்வளவு நாள் சொல்லலங்கறது ஆச்சரியமா இருக்கு. அதுக்குக் காரணம், இன்னிக்கு இந்த குரு பௌர்ணமி அன்னிக்கு, வியாச பௌர்ணமி அன்னிக்கு இதைச் சொல்லணும் அப்படின்னு அம்பாள் நினைச்சிருக்கா.

என்னுடைய வாழ்வுல, காமாக்ஷியினுடைய பாதஸ்மரணம் எங்கறது ஒரு சத்குருவை ஸ்மரிக்கிறது தான். நான் என்னுடைய 15 வயசுல கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பார்த்தேன். அன்னியில இருந்து நான் ஸ்மரிக்கிறேனான்னு தெரியல. அவர் ஸ்தோத்திரம் படின்னார். அவர் சொல்லிக் கொடுத்த ஸ்தோத்திரங்களைப் படிக்கிறேன். இதான் அவரோட தியானம்னு அவரே சொல்லிட்டார். அந்த காரியமானது, நான் மனசு வச்சு படிக்கிறேனோ, மெக்கானிக்கலா படிக்கிறேனோ, எனக்குத் தேவையான நேரத்துல தேவையான செல்வத்தைக் கொடுத்தது. அதுக்கப்புறம், ஏதோ ஒரு நல்ல வாக்கைக் கொடுத்து, உலகத்துல ஒரு நல்ல பேரை வாங்கி கொடுத்து, அடுத்து சரியான வேளையில ஞானத்தையும் கொடுக்கும் அப்படின்னு எனக்கு இந்த ஸ்லோகத்தைப் படிக்கும்போது தோண்றது.

ஸ்வாமிகள் ஸித்தியான பின்ன, ஒரு 10, 15 நாள் ரொம்ப வருத்தத்துல இருந்தேன். அப்போ ஸ்வாமிகள் கனவுல வந்து, மூக பஞ்சசதி ஸ்தோத்திரத்தை ஒரு பௌர்ணமில இருந்து இன்னொரொரு பௌர்ணமிக்குள்ள அஞ்சு தடவை படி அப்படின்னு சொன்னார். அதை அப்போல இருந்து ஆரம்பிச்சு பண்ணிண்டு இருக்கேன். அதுக்கு அவ்வளவு நல்ல பலன்கள் கிடைச்சுண்டு இருக்கு.

குருவோட மகிமைகளைப் பேசணும், அவரால நமக்கு கிடைச்ச நன்மைகளைப் பேசணும், அவருடைய குண நலன்களைப் பேசணும். என்னை பொறுத்த வரைக்கும் எனக்கு அதிகமா என்கிட்ட குறைகள்தான் தெரியறது. ஆனா அந்த குறைகளெல்லாம் உலகத்துல காமிச்சு கொடுக்காம, என்னுடைய நிறைகளைக் காமிச்சு, இந்த லோகத்துல எனக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை அந்த காமாக்ஷி கொடுத்துருக்கான்னா, அந்த ஸ்வாமிகள் வாக்குதான்.

ஸ்வாமிகள்ட்ட வந்தவா எல்லாருமே இந்த மாதிரி க்ஷேமங்களை அடைஞ்சாங் எகறதுக்கு வேல்முருகேந்த்ரன் அப்படின்னு ஜி.ஹெச்.-ல நியூரோ டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. அவர் வந்து, ஸ்வாமிகளுக்கும் அவரோட குழந்தைகளுக்கும் வைத்தியம் பண்ணுவார். அவர் பிள்ளையார் பக்தர். அவர் வந்தார்னா, கை கால் அலம்பிண்டு வந்து, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணுவார். ஸ்வாமிகள் ‘கணேசோ வ: பாயாத்’னு ஒரு ஸ்லோகம், அப்புறம் இந்த ‘குருரேவ கதி:’னு ஒரு ஸ்லோகம், இந்த ரெண்டுத்தையும் சொல்லி முடிக்கிற வரைக்கும் நமஸ்காரம் பண்ணிண்டே இருப்பார் அவர். கீழே கிடப்பார். அப்புறம் எழுந்து கை கூப்பி, கேட்டுப்பார்.

அந்த ஸ்லோகத்தை நான் சொல்றேன்:

குருரேவ கதி: குருமேவ பஜே குருணைவ சஹாஸ்மி நமோ குரவே

ந குரோ: பரமம் சிசுரஸ்மி குரோ: மதிரஸ்தி குரௌ மம பாஹி குரோ

இதோட அர்த்தம் என்னன்னா, குருரேவ கதி: – எனக்கு அடைக்கலம் குரு, என் குரு ஒருத்தர்தான். குருமேவ பஜே – என் குரு ஒருவரையே நான் வழிபடுவேன். குருணைவ சஹாஸ்மி – குரு கூடயே நான் எப்பவும் இருப்பேன். நமோ குரவே – அந்த குருவுக்கு நமஸ்காரம். ந குரோ: பரமம் – எனக்கு குருவுக்கு மேல ஒருத்தருமே கிடையாது. எல்லாத்துக்கும் மேல எனக்கு பரம்பொருளே எனக்கு குருதான். சிசுரஸ்மி குரோ: – அந்த குருவுக்கு நான் குழந்தையா இருக்கேன். மதிரஸ்தி குரௌ மம – என்னுடைய புத்தி முழுக்க என்னுடைய குருவினிடத்திலேயே நிலைச்சிருக்கு. பாஹி குரோ – இங்க ‘மாம்’ங்கறதை வர வச்சுக்கணும். ஹே குரோ, மாம் பாஹி! ஹே குருவே, என்னைக் காப்பாத்து. எட்டு விபக்திகளும் வருது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லி நம்ம, நம்ம குருவை வேண்டிப்போம்.

ஸ்வாமிகளை மாதிரி, மகா பெரியவாளை மாதிரி, சிவன் சார் மாதிரி ஒரு மகானை தியானம் பண்றவாளுக்கு இந்த ஸ்லோகத்துல இருக்கிற எல்லாமே கிடைக்கும். எல்லாருமே அந்த மாதிரி ஒரு குருவோட அனுக்ரஹத்தினால தானே மேல வந்துருக்கா. நம்ம தேசத்துல இது ஒரு சிறப்பு. இந்த மாதிரி ஒரு குருவை நினைச்சு, அந்த குருவைக் கொண்டாடுறது அப்படிங்கறது நம்மளுடைய கலாச்சாரத்தினுடைய சிறப்பு. நம்ம அதை விடாம பண்ணணும். இந்த ஸ்லோகத்துல சொல்லியிருக்கிற எல்லா அனுக்ரஹமும் கட்டாயம் குருவுடைய பிரசாதத்தினால கிடைக்கும். வேண்டியபோது வேண்டிய போகங்களையும், இனிமையான வாக்கையும், உயர்ந்த ஞானத்தையும் அடையலாம் அப்படின்னு இன்னைக்கு எனக்கு இதைச் சொல்லணும்னு தோண்றது.

தினாரம்ப: ஸம்பன்னளினவிபினானாம் அபினவோ
விகாஸோ வாஸந்த: ஸுகவிபிகலோகஸ்ய நியத: |

ப்ரதோஷ: காமாக்ஷி ப்ரகடபரமஜ்ஞானசசின: சகாஸ்தி தவத்பாதஸ்மரணமஹிமா சைலதனயே || 

நம: பார்வதீ பதயே, ஹர ஹர மஹாதேவா!

dinArambhaH sampannalinavipinAnAm abhinavo

vikAso vAsantaH sukavipikalokasya niyataH |

pradoShaH kAmAkShi prakaTaparamaj~nAnaSacinaH 

cakAsti tavatpAdasmaraNamahimA shailatanaye ||

 

This is the 38th Slokam in the Pādāravinda Śatakam.

 

O Kāmākṣī! O Śailatanaye, daughter of the King of Mountains!

What is the greatness of tavatpādasmaraṇamahimā—remembering and meditating upon your holy feet?

Dinārambhaḥ sampannaliṇavipinānām — What marks the dinārambhaḥ (beginning of the day)? It is the Sun. For the naḷinavipinānām (forests of lotuses) that represent wealth and prosperity remembering your feet is the Sun! What happens to a lotus forest when it beholds the Sun? It blooms and shines brilliantly, doesn’t it? If a single lotus blooming looks so beautiful, imagine an entire lotus forest! Similarly, he says that for one who meditates upon the lotus feet of Amba, wealth will come and pile up.

Next, abhinavo vikāso vāsantaḥ sukavipikalokasya niyataḥSukavi means good poets, and pikaḥ means a cuckoo. For the pikalokasya (group of cuckoos)—which refers to good poets— remembrance of your feet (pādasmaraṇam) forms a fresh spring season (abhinavo vāsantaḥ). Niyataḥ — The spring season comes only for two months a year. But this spring is ever-present. Whenever one meditates upon the feet of Kāmākṣī, just like cuckoos sing at the arrival of spring, sweet poetry will continuously flow from the words of good poets.

Pradoṣaḥ kāmākṣi prakaṭaparamajñānaśacinaḥ — It serves as the pradoṣa time for śačinaḥ (the moon) which is prakaṭa parama jñāna (manifested, clear, and supreme wisdom). Look at how beautifully he describes how meditating on your feet grants a person very clear, high spiritual knowledge! What beautiful metaphors! What positive vibrations! Whatever a devotee truly needs, meditating on Kāmākṣī’s lotus feet grants it all.

Initially, one needs wealth to live in this world; it bestows wealth. After that, one desires fame; it gives good speech and through that, earns fame. Following that, as the verse says, “Yāthanin yāthanin nīṅkiyān nōtal athanin athanin ilan” (from whatever a person detaches, from that he is freed from pain)—the more we step back from everything, the more peace we get. Whatever we possess, even if it brings joy, comes mixed with sorrow. Therefore, whatever we let go of causes us no pain. At a stage when one wonders, “When am I going to let go of all this?”, Amba’s foot-meditation gives that soul supreme wisdom and bestows mokṣa (liberation). 

This is my absolute favorite Slokam in the Mūka Pañcaśatī. Yet, it surprises me that I haven’t shared its meaning for so long. The reason for this is that Amba wanted me to speak about it today, on this auspicious Guru Pūrṇimā, on Vyāsa Pūrṇimā.

In my life, remembering the feet of Kāmākṣī means remembering a Sadguru. I met Govinda Dāmodara Swāmigaḷ when I was 15 years old. I don’t know if I’ve been remembering him properly ever since that day, but he told me to chant stotrams, and I read the stotrams he taught me. He himself mentioned that this alone is his meditation. Whether I chant it mindfully or mechanically, that practice gave me the required wealth at the precise time I needed it. After that, it granted me good speech, earned me a good name in the world, and I feel that reading this Slokam assures me it will also grant right knowledge at the right time.

After Swāmigaḷ attained siddhi, I was deeply grieved for about 10 to 15 days. Then Swāmigaḷ appeared in my dream and asked me to read the Mūka Pañcaśatī stotram five times between one full moon (Pūrṇimā) and the next. I started doing that back then, and I have been continuing it ever since. It has been granting so many good benefits.

One must speak about the greatness of the Guru, the benefits received through him, and his noble qualities. As for me, I mostly see only my own flaws. Yet, without exposing those flaws to the world, if Kāmākṣī has highlighted my good points and granted me a happy life in this world, it is purely because of Swāmigaḷ’s words (vāk).

To show how everyone who came to Swāmigaḷ achieved such well-being: there was Dr. Velmurugendran, HOD of the Neuro Department at GH. He used to treat Swāmigaḷ and his children. He was a devotee of Lord Ganesha. Whenever he came, he would wash his hands and feet, and offer his prostrations (namaskāram) to Swāmigaḷ. Swāmigaḷ would recite a Slokam called ‘Gaṇeśo vaḥ pāyāt’ and then this ‘Gurureva gatiḥ’ Slokam; until Swāmigaḷ finished reciting both, the doctor would remain prostrating on the floor. He would lie on the ground. Then he would get up, fold his hands, and listen.

I will recite that Slokam:

gurureva gatiH gurumeva bhaje guruNaiva sahAsmi namo gurave

na guroH paramam shiSHurasmi guroH matirasti gurau mama pAhi guro

The meaning of this is:

Gurureva gatiḥ — The Guru alone is my refuge.

Gurumeva bhaje — I worship my Guru alone.

Guruṇaiva sahāsmi — I am always with my Guru.

Namo gurave — Salutations to that Guru.

Na guroḥ paramam — There is nothing superior to the Guru for me; above all, the Supreme Being itself is my Guru.

Śiśurasmi guroḥ — I am a child to that Guru.

Matirasti gurau mama — My entire intellect is fixed upon my Guru.

Pāhi guro — Here, we must imply the word ‘mām’. O Guru, protect me (mām pāhi)!

All eight grammatical cases (vibhakti-s) are used here. Reciting this Slokam, let us pray to our Guru.

For those who meditate on a Mahān like Swāmigaḷ, Mahā Periyavā, or Śivan Sār, everything mentioned in this Slokam will be attained. Everyone has come up in life only through the grace of such a Guru, haven’t they? This is the uniqueness of our culture—remembering such a Guru and celebrating him. We must continue doing it without fail. All the blessings mentioned in this Slokam will surely be obtained through the prasāda (grace) of the Guru. One can attain whatever comforts are needed at the right time, sweet speech, and supreme wisdom—this is what I felt like sharing today.

dinArambhaH sampannalinavipinAnAm abhinavo

vikAso vAsantaH sukavipikalokasya niyataH |

pradoShaH kAmAkShi prakaTaparamaj~nAnaSacinaH 

cakAsti tavatpAdasmaraNamahimA shailatanaye ||

Namaḥ Pārvatī Pataye, Hara Hara Mahādevā!

2 replies on “குருரேவ கதி: குருமேவ பஜே”

அம்பாளின் திருவடி ஸ்மரணம் செல்வங்கள்தாமரைக் காடுகள் மலர உதவும் சூரிய ஒளியயாகவும், நல்ல கவிகளாகிற குயில் கூட்டத்துக்கு வசந்தத்தை போன்றும், பரம ஞானம் எனக்கருதப்படும்
நிலவு உதயமாகும் முன்னிரவு கருதப் படுகிறது!!

சந்த்ரமண்டல மத்யஸ்த்தா என அமுதைப் பொழியும் நிலவாகக் காட்சி கொடுக்கிறாள்.! மனதால் நினைத்த மாத்திரத்தில் அவள் திருவடிகள்கண் முன் தோன்றும்!!

அம்பாள் பாத த்யானம் என்னதான் செய்யாது?
தெளிவான ஞானம் கிடைக்கும், ! ஆரம்பத்தில் சில வாழ்வுக்கு
ஆதாரமான சுகங்களையும், மேல ஒவ்வொரு படியாக உயர்ந்து,
கடைசி பட்சமான தெளிவு உயர்ந்த ஞானம் கிடைக்கும் என்பதில்
சந்தேகம் சிறிதும் இல்லை!!
அதுவும் குரு கடாக்ஷம் இருந்தால் வாழ்வின் எந்த நிலையிலும் அம்பாள் தன் அருள் கடாக்ஷத்தை அள்ளி வழங்குவாள் என்பதில்
ஐயம் சிறிதும் இல்லை!!

ஆசார்யாள் ஸௌந்தர்யலஹரியில் ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா
விதிஹரிஸபத்னோ விஹரதே என்பதாக பலஸ்துதிக்கு
முன்னதாக உள்ள ஸ்லோகம் வருகிறது.
அம்பாள் பக்தர்களுக்கு அவர்களுக்கு என்னென்ன வெல்லாம்
தேவையோ அவை அனைத்தும் கிடைக்கும் என்ற அர்த்ததில்
வருகிறது
ஸஹஸ்ர நாமத்தில் ஸசாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண
ஸேவிதா என்பதகா.
அம்பாளுக்கு ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் இரு புறமும் சாமரம்
வீசுகிறார்களாம்!!
கிம்கரோமி என்று கேட்டு அம்பாளுக்கு சேவைசெய்கிறார்கள்!
அப்படிப்பட்ட தேவியின் பாதங்களை சரணடைந்தால்
நாம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்று பெரியவா சொல்கிறார்!

பசு பாசத் தொடர்பு அற்றுப்போவதற்கும் அவள் த்யானம் தான் எல்லை!

படிப்படியாக இவற்றை அடைய அவள் திருப்பாதத்தை பிடித்து
கறையேற குரு பக்தியும் உடன் வேண்டும்!
இவற்றைத் தெளிவாக அழகாக உரைத்த கணபதிக்கு என் நன்றி!

ஜய ஜய சங்கரா…

ஜய ஜய ஜகதம்ப சிவே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.