Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 75வது 76வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 75வது 76வது ஸ்லோகம் பொருளுரை (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 75 and 76)

கல்யாணினம்ʼ ஸரஸசித்ரக³திம்ʼ ஸவேக³ம்ʼ
ஸர்வேங்கி³தஜ்ஞமனக⁴ம்ʼ த்⁴ருவலக்ஷணாட்⁴யம்.
சேதஸ்துரங்க³மதி⁴ருஹ்ய சர ஸ்மராரே
நேத꞉ ஸமஸ்தஜக³தாம்ʼ வ்ருʼஷபா⁴தி⁴ரூட⁴

ஹே பரமேஸ்வரா, நீங்கள்
‘ஸமஸ்தஜக³தாம் நேத꞉’ – எல்லா உலகங்களுக்கும் தலைவர். அதனால் உங்களுக்கு பல இடங்களுக்கு போக வேண்டியது இருக்கும்.

‘வ்ருʼஷபா⁴தி⁴ரூட⁴’ – ஒரு கிழ காளை மாட்டை வைத்து கொண்டு, அதுல ஏறிண்டு எப்படி நீங்க எல்லா இடத்துக்கும் போக முடியும்?

அதனால்,‘சேதஸ்துரங்க³ம்’ – என்னுடைய மனமாகிய குதிரையை

‘அதி⁴ருஹ்ய’- எடுத்துகோங்கோ! அதுல ஏறிக்கோங்கோ.

‘சரஸ்மராரே’ – நீங்க எங்கும் வேகமாக போகலாம்… மனசுங்கறது ரொம்ப வேகமா போறதே! அந்த மனசு அடங்க மாட்டேங்கறது. அதை பரமேஸ்வரன் கையில் கொடுத்தா, அந்த மனசு அடங்கும். இப்படி ஒரு உவமை சொல்றார்.

இதுல இந்த முதல் பாகத்துல, குதிரைனா அது எப்படி இருக்கணும்? குதிரைனுடைய லக்ஷணங்கள் எல்லாம் சொல்றார்.அதுவே மனசுக்கும் பொருந்தறா மாதிரி ரொம்ப அழகா இருக்கு.

‘கல்யாணினம்’ – பரம மங்களமா இருக்கணும். பஞ்ச கல்யாணினு கூட சொல்லுவா குதிரையை….ஐந்து விதமான மங்கள லக்ஷணங்கள்.

1. காது உள் பக்கமா திரும்பி இருக்கணும்.
2. முகத்து மேல வெள்ளையா ஒரு திட்டு இருக்கணும், இப்படிலாம் சுழி இருக்கணும்.
3. எவ்ளோ உயரம் இருக்கணும். எவ்ளோ நீளம் இருக்கணும், எவ்ளோ எடை இருக்கணும். ரொம்ப weight இருக்க கூடாது..ஏன்னா, வேகமா ஓடணுமே..இதெல்லாம் பொறுத்து, நல்ல மங்களமான குதிரை அப்படினு சொல்லுவா.அப்படி

‘‘கல்யாணினம்’ என் மனமாகிய குதிரை, ரொம்ப மங்களமானது..

‘ஸரஸசித்ரக³திம்’ குதிரைங்கறது train பண்ணா அழகா ஆடும். ரொம்ப அழகா வினோதமான நடனங்களை புரிய கூடியது..

‘ஸவேக³ம்’ வேகத்துடன் கூடியது.. என் மனசு ரொம்ப வேகமா தான் போயிண்டே இருக்கு எப்ப பார்த்தாலும்.. அதனால, என் மனமாகிய குதிரையை நீ எடுத்துக்கோ.. அதுல ஏறிக்கோ…

‘ஸர்வேங்கி³தஜ்ஞம்’ இங்கிதம் தெரிஞ்சு நடக்கணும்..
இந்த காலத்தில் எப்படி 2 wheeler, காரோ, அந்த மாதிரி அந்த காலத்தில் எல்லோர்கிட்டேயும் குதிரை இருந்து இருக்கும்..
வீடுகளில் பசு மாடு, வெளில போறதுக்கு குதிரை.. குதிரை வண்டி ஆவது இருக்கும், குதிரைகள் இருக்கும்.. அதனால், குதிரைகளடைய லக்ஷணங்கள், சாஸ்திரங்கள், ரொம்ப விஸ்தாரமா நம்ப படிச்சு வச்சிருக்கோம். அஷ்வசாஸ்திரம் எல்லாம் இருக்கு., அதுல, குதிரை கிட்ட பேசினா, அதுக்கு காது கேட்கும்..அது புரிஞ்சுக்கும், அப்படிங்கறது ராமாயண காலத்தில் ராமாயணத்தில் வரும்.

ராமர் காட்டுக்கு கிளம்பறார்..அந்த தேரை 4 பேர் இழுத்துண்டு போறா..ப்ராஹ்மணா பின்னாடி வந்து, அந்த குதிரைகள் கிட்ட சொல்றா..

“கர்ணவந்திகி பூதானி விஸேஷேன துரந்கமா:” குதிரைகளுக்கு காது கேட்கும்ன்னு சொல்லுவாளே.. நாங்களாம் இவ்ளோ கதறறோமே? இந்த ராமனை நீ போய் காட்டில் விடலாமா? நீ அங்கே இருந்து திரும்பி அல்லவா அழைச்சுண்டு வரணும்.. அப்படின உடனே, குதிரை நின்னுடறது. ராமர் கீழ இறங்கி நடந்தே போறார்.. இவா பின்னாடி போய் கெஞ்சறா. நீ ப்ரஹ்மண்ய தேவன்.. நீ எங்களை கை விடலாமா? ஆனால், ராமர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.. அப்பா வார்த்தையை காப்பாத்தணும் அப்படிங்கறது அவருடைய தீர்மானம். இப்படி எல்லாம் scene வரும்.

எல்லார் கிரஹத்துலயும் யானைகளும், குதிரைகளும், பசுக்களும் இருந்தன அப்படினு அயோத்தி நகர வர்ணனை வரும், அப்படி குதிரைங்கறது..part and parcel of life ஆ..உலகம்’ முழுக்க இருந்தது. இப்போ பசு மாடுனா நம்ம தேசத்தில் ரொம்ப பவித்ரமா அதை வெச்சுருக்கோம்…பசு மாட்டோட கோமியம், பால், நெய், தயிர் எல்லாத்தையும் நம்ப பவித்ரம் னு நினைக்கறோம்.. பஞ்சகவ்யத்தை சாப்பிட்டா, பாவம் போகும் னு நினைக்கிறோம். ஹவிஸை ஹோமத்தில் உபயோகப்படுத்தறோம்.. அப்படி, பசுமாடு எல்லாரும் ஆத்துல வளர்த்து இருப்பா. ஏன்னா, பால் வேணும். பசுமாடு வளர்த்தானா.. அது அவ்வளவு அன்பு பாராட்டும்.. நம்மளுடைய அன்பையும் அது விரும்பும். .அப்படிங்கறது வளர்த்தவாளுக்கு அந்த அனுபவம் இருக்கும்..

foreignல பன்றி கிட்ட ரொம்ப பிரியமா இருக்கா. ஒரு ஒரு கலாச்சாரம் ஒவ்வொரு மாதிரி.. அது ரொம்ப புத்திசாலி மிருகம் அப்படினு அவாளுடைய அனுபவம். அந்த மாதிரி, மிருகங்களுக்குளாம் நம்ம பண்றது புரியும்..ஓரளவு அதோட அறிவு எவ்ளோவோ..

அதுல, இந்த குதிரைங்கறது.. ‘ஸர்வேங்கி³தஜ்ஞம்’ இங்கிதம் தெரிஞ்சது..அதனால,வேகமா போனு சொன்னா போகணும், நில்லுனா நிக்கணும்..அந்த மாதிரி, மனசறிஞ்சு ஒரு சின்ன, கையால ஒரு சைகை காமிச்சா, அதை ஒரு தொட்டாலே அதை புரிஞ்சுண்டு, அதுக்கு ஏத்தா மாதிரி நடந்துக்கணும்.. அதான்..ஸர்வேங்கி³தஜ்ஞம்..

‘அனக⁴ம்’ – ஒரு குறையில்லாதது..ஒரு நல்ல குதிரை ஜாதி குதிரைனா, அதுல, எதுவும் குறைகள் இருக்க கூடாது..

‘த்⁴ருவலக்ஷணாட்⁴யம்’; சிறந்த ரேகைகளும், சுழிகளும் இருக்கணும். மனசுக்கு வரும் பொழுது,ரொம்ப நிலை பெற்று இருக்கணும்… த்⁴ருவலக்ஷணாட்⁴யம் னா.. பகவானுடைய மனசு புரிஞ்சு நடக்கணும் அது இங்கி³தஜ்ஞம்.. ‘அனக⁴ம்’ – மனசுல பாவமே இருக்க கூடாது.

அப்பேற்பட்ட மனசை பகவான்கிட்ட அர்ப்பணிக்க முடியும்.அப்படி என்னுடைய மனமாகிய குதிரையை” ஹே பரமேஸ்வரா! உன்கிட்ட கொடுக்கறேன்.” நீ இதுல ஏறிண்டு, உலகெமெல்லாம் சுத்து.
காளைமாட்டை வச்சுண்டு எவ்ளோ சுத்த முடியும்? அப்படினு வேடிக்கையா சொல்றா மாதிரி சொல்றார்.. அப்படி நம் மனமாகிய குதிரையை, சம்சாரம் என்னும் காட்டுல, வேகமா சுத்திண்டே இருக்கு. அதை அடக்கணும்னா,அதை பரமேஸ்வரன் பேரில் ஒப்படைச்சா, அவர் அது மேல ஏறிக்கொள்வார். அப்ப தான் மனசு அடங்கும். அப்புறம் அவர் அதை நல்வழியில் செலுத்துவார்..
இதே மாதிரி நம்முடைய மனஸை அடக்கறது, அதை பகவானால் தான் முடியும்.இதற்கு, மூக பஞ்ச ஶதீ ல ஒரு அழகான ஸ்லோகம் இருக்கு..

கடாக்ஷ ஶதகத்துல 29வது ஸ்லோகம்.

உன்மத்²ய போ³த⁴கமலாகாரமம்ப³ ஜாட்³ய-
ஸ்தம்பே³ரமம்ʼ மம மனோவிபினே ப்⁴ரமந்தம்.
குண்டீ²குருஷ்வ தரஸா குடிலாக்³ரஸீம்னா
காமாக்ஷி தாவககடாக்ஷமஹாங்குஶேன

ஹே காமாக்ஷி!அம்பா!

‘போ³த⁴கமலாகாரம்’ – என்னுடைய நல்ல புத்தி அப்படிங்கிற தாமரை தடாகத்தை,

‘உன்மத்²ய’ – நசுக்கி கொண்டு, காட்டில் யானைகள் ஒரு குளத்தில் இறங்கினதுனா, த்வம்சம் பண்ணிடும், அங்க இருக்கிற தாமரைகாட்டை அழிஞ்சிடும். அந்த மாதிரி, என்னுடைய புத்தில நானே கஷ்டப்பட்டு கொஞ்சம், நல்ல புத்தி நல்ல எண்ணங்களை சம்பாதிச்சு வச்சுக்கறேன்.

இந்த, ‘ஜாட்³யஸ்தம்பே³ரமம்ʼ ஜாட்யம்- அஞ்ஞானம் என்கிற, ஸ்தம்பே³ரமம்ʼ, அப்படினா ஸ்தம்பம்னா கட்டு மரம். அதுல நின்னுண்டு, ஆடிக்கொண்டே இருக்கும். அதனால, யானைக்கு, ஸ்தம்பே³ரமம்ʼ னு பேரு…

அந்த மாதிரிஅஞ்ஞானமாகிய யானை, இந்த தாமரை குளத்தை, த்வம்சம் பண்ணின்டு, ‘மம மனோவிபினே’ என்னுடைய மனமாகிய காட்டில் ‘ப்⁴ரமந்தம்’ – அலைஞ்சுண்டு இருக்கு. அதாவது, என்னுடைய புத்தியை கெடுத்துண்டு, அஞ்ஞானம்ங்கறது, என் மனசை ஆக்கிரமிச்சுண்டு இருக்கு.
ஹே காமாக்ஷி! ‘குடிலாக்³ரஸீம்னா’ – வளைந்த நுனியுடைய

‘தாவககடாக்ஷ மஹாங்குஶேன’ – உன்னுடைய கடாக்ஷம் என்னும் சிறந்த அங்குசத்தினால், அதாவது காமாக்ஷி கடாக்ஷம் வளைந்து இருக்கு. அதனால, கடாக்ஷத்துக்கு பொருந்தும். அதை ஒரு அங்குசம் மாதிரி வைச்சுண்டு,

‘தரஸா’ – சீக்கிரமா, இந்த யானையை, ‘குண்டீ²குருஷ்வ’ – அடக்கிடு அம்மா! அப்படினு ஒரு அழகான பிரார்த்தனை.

அந்த மாதிரி நம்மளுடைய மனசை, நம்மால அடக்க முடியாது. அதை பகவான் கிட்ட ஒப்படைத்து விட்டால், அவர் அதை அடக்கி நல்வழி படுத்துவார், அப்படிங்கறது இந்த ஸ்லோகங்களில் இருந்து தெரிகிறது..

சிவானந்தலஹரில அடுத்த ஸ்லோகம்,

ப⁴க்தி: மஹேஶபத³புஷ்கரமாவஸந்தீ
காத³ம்பி³னீவ குருதே பரிதோஷவர்ஷம்
ஸம்பூரிதோ ப⁴வதி யஸ்ய மனஸ்த்தடாக:
தஜ்ஜன்மஸஸ்யமகி²லம்ʼ ஸப²லம்ʼ ச நா(அ)ன்யத்
அப்படினு 76வது ஸ்லோகம்.

ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம். இதோட, அர்த்தம் என்னனா
பக்தியானது,

மஹேஶபத³புஷ்கரம் – பரமேசவரனுடைய பாதம் என்கிற வானத்தில் இருந்து கொண்டு,

‘காத³ம்பி³னீவ’ – ஒரு மேக கூட்டத்தை போல,

‘பரிதோஷவர்ஷம்’ – திருப்தி அல்லது இன்பம் என்ற..

‘வர்ஷம்’ – மழையை..

‘குருதே’ – பொழியறது..

‘ யஸ்ய மனஸ்த்தடாக:’ – யாருடைய மனமாகிய குளம்,

‘ஸம்பூரிதம் ப⁴வதி’ – இதனால் நிரம்பி இருக்கோ,

‘தஜ்ஜன்மஸஸ்யம்’ – அவனுடைய பிறவி பயிர் தான்,

‘அகி²லம்ʼ ஸப²லம்’ – நல்ல பயன் பெற்றதாகிவிட்டது..

‘ந அன்யத்’ – மற்றவாளுடைய பிறவி எல்லாம் பயனற்றது தான்..
அப்படினு சொல்றார்..
அதாவது ஆகாசத்துல மேகம் இருக்கணும்.. மேகம் மழையை கொடுக்கணும். மழை வந்தா தான் பயிர் விளையும்..இல்லைனா shabby யா போய்டும்.. அப்படி பகவானிடத்தில் பக்தி இருக்கணும்..அந்த பக்தி மூலம் ஆத்மானந்தம் ஏற்படும் …
அது தான் வாழ்க்கைனுடைய பயன்..

‘ ஜீவஸ்ய தத்வ ஜிங்கியாஸ்யா’ அப்படினு ஞானத்தை அடைவது தான் ஜென்ம பலன்.. ஜென்மன:பலம் கிம்? அப்படினு மஹாபெரியவா ஒரு உபன்யாசம் பண்ணியிருக்கா சமஸ்க்ரிதத்தில். நான்கூட அதோட meaningயை கூட ஒரு வாட்டி பகிர்ந்துண்டு இருக்கேன்.. அந்த மாதிரி ஜென்மா பலன்.. மனத்தை தூய்மைப்படுத்தி பகவானிடத்தில் செலுத்தி, அதன் மூலமா ஞானத்தை அடையறது தான்.

அது எப்படி கிடைக்கும்ங்கறதுக்கு? அந்த உபன்யாசத்தில் மஹாபெரியவா, அம்பாளுடைய சரண த்யானம் அப்படிங்கிற ஜலத்தினால், நம்முடைய மனசை நித்யம் அலம்பனும்..

எப்படி உடம்பை அலம்பறோமோ, எப்படி துணிகளை அலம்பி, அழுக்கு போக தோய்ச்சு போட்டு கொள்கிறோமோ, அந்த மாதிரி நம்ம மனசையும் அம்பாளுடைய சரண த்யானம் என்கிற தீர்த்ததுனால நித்யம் அலம்பனும்னு சொல்லுவா.. அந்த மாதிரி இங்க, மனசுல பக்தியை வளர்த்துக்கணும்.. பரமேஸ்வரனுடைய பாதத்தில் மனசை வைக்கணும், அதுல திருப்தி அடைந்தோம்னா, நம்மளுடைய ஜென்மா ஸபலம் ஆகும், அப்படிங்கறது இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யாள் சொல்றார்…

கீதைல
யஸ்து ஆத்ம-ரதிரேவ ஸ்யாத் ஆத்ம-த்ருப்தச்ச மானவ:
ஆத்மன்யேவ ச லந்துஷ்ட: தஸ்ய கார்யம் ந வித்யதே

எவன் ஆத்மனிடத்தில் ரமித்து, அதில் திருப்தி அடைந்து, அதில் சந்துஷ்டன் ஆகின்றான், அவனுக்கு உலகத்தில் காரியங்களே எதுவும் கிடையாது.. ஆனா, அர்ஜுனா, நீ இப்போ போய் யுத்தம் பண்ணு..ஆனால், பற்று இல்லாம பண்ணு..அப்படினு அவன் கிட்ட சொல்றார்..

” தஸ்ய கார்யம் ந வித்யதே” அப்படிங்கிற நிலைமைக்கு, கர்மாவில் இருந்து அந்த ஞானத்துக்கு போறதுக்கு இடையில், ஆத்மாவில் ரமிக்க தெரியவில்லைனாலும், பரமேஸ்வரனிடத்தில் நீ ரமித்தாயானால், நீ வெகு விரைவில் உலக காரியங்களில் இருந்து விடுபட்டு, அந்த ஆத்மாவில் ரமிக்கலாம்.. உன்னுடைய ஜென்மா ஸபலம் ஆகும்..அப்படினு ஒரு அழகான ஸ்லோகம்.

ப⁴க்தி: மஹேஶபத³புஷ்கரமாவஸந்தீ
காத³ம்பி³னீவ குருதே பரிதோஷவர்ஷம்
ஸம்பூரிதோ ப⁴வதி யஸ்ய மனஸ்த்தடாக:
தஜ்ஜன்மஸஸ்யமகி²லம்ʼ ஸப²லம்ʼ ச நா(அ)ன்யத்

நம:பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ |

Series Navigation<< சிவானந்தலஹரி 73வது 74வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 77வது ஸ்லோகம் பொருளுரை >>

5 replies on “சிவானந்தலஹரி 75வது 76வது ஸ்லோகம் பொருளுரை”

போன ஸ்லோகத்தில் ஆசார்யாள், நம் மனது ஆசாபாசங்களால் பந்தப்பட்டு, அதனால் கிலேசம் அடைந்து, துர்வாசனைகளால் நிரம்பி இருக்கிறது. அதை ஸதாசிவனுடைய பாதாரவிந்தம் என்னும் சுகந்த வாசனையால் நிரப்பும்படி பிரார்த்திக்கிறார்.

எப்பொழுதும் பரமேஸ்வரனுடைய பாதாரவிந்த நாம ஸ்மரணையால், என் மனமானது குற்றம் குறையில்லாத பரமமங்களமாக ஆகிவிட்டது. அதனால் மனதை ‘கல்யாணி’ என்று அழைக்கிறார்.

மேலும் ஆசைகள் உள்ளே நுழையாமல் இருப்பதற்காக மன்மதனின் எதிரியை (ஸ்மராரே) நினைக்கிறார். மனதினுடைய லக்ஷணங்கள் குதிரைக்கு ஒப்பாக இருப்பதால், அதனுடைய லக்ஷணங்கள் முழுவதையும் விவரித்துக் கூறி, ரிஷப வாகனனே! (வ்ருஷபாதிரூட) மெதுவாக செல்லும் ரிஷபத்தை விடுத்து, தன் மனமாகிய குதிரையில் பயணிக்கச் சொல்லிப் பிரார்த்திக்கிறார். ஸகல லோகங்களுக்கும் தலைவனான (நேத ஸமஸ்த ஜகதாம்) சர்வேஸ்வரனின் ஆதிக்கத்தில் மனதை ஒப்படைத்துவிட்டால் பிறகென்ன கவலை!

மிக மிக அற்புதமான விளக்கம். ராமாயணம் மேற்கோளும், மூகபஞ்சசதி மேற்கோளும் மிக அருமை 👌🙏🌸

அடுத்த ஸ்லோகமும் மிக அழகு. அற்புதமான விளக்கம் 👌🙏🌸

‘ஜன்மன: கிம் பலம்’ – மஹாபெரியவாளுடைய உபன்யாச மேற்கோள் மிக அருமை.. பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கும் மேற்கோளும் அருமை.🙏🌸

இந்த ஸ்லோகத்தில் ஆசார்யாள் ஆகாசத்தை மகேசனின் பாதமாகவும், பக்தியை மேக மாலையாகவும், நம் மனதை குளமாகவும் வர்ணிக்கிறார்.

எங்கும் பரவியிருக்கும் வெளியை மாஹாகாசம் என்பார்கள். அந்த வெளியே நமக்குள்ளே ஆத்மாவாக, ஞான மயமாக இருக்கிறபோது, பேரம்பலம் சிற்றம்பலமாகிறது. மஹாகாசம் தஹராகாசமாகிறது. நம்மை நாமே அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகும்போது, நம்முடைய சகல எண்ணங்களுக்கும் மூலமான வஸ்து, நம்முடைய சுவாசத்துக்கும் மூலமாக இருதய ஆகாசமாக இருப்பதை அநுபவிக்க முடியும்.

நம்முடைய ஹ்ருதய ஆகாசத்தில் மஹேசனுடைய பாதத்தை தியானித்து, பக்தி என்னும் ஆனந்த பாஷ்பத்தால் நம் மனமென்னும் குளத்தை நிரப்புவதே ஜன்ம பலன்.🙏🌸

இங்கு பஞ்ச கல்யாணி என்ற உயர்ந்த வகைக் குதிரை லக்ஷணங்களை ,யாஜமானுக்கு சுப சூசகங்களை வெளிப்படுத்தும் நல்ல எண்ணங்களை,மிக வேகமாகச் செல்லும் குதிரைக்கு ஒப்பாக மனம் வர்ணிக்கப் படுகிறது ! மனோ வேகம் வாயு வேகம் என்று அதனால்தான் சொல்லும்.வழக்கம் ஏற்பட்டது!

அப்படிப்பட்ட மனமாகிய குதிரையில் ஏறி ப்பல இடங்களுக்குச் செல்லும்படி ஆசார்யாள் ஈஸ்வரணிடத்தில் சொல்கிறார் !
ஏ பரமேஸ்வரா தாங்கள் லோகத்தில் பல இடங்களுக்குச் சென்று , பல காரியங்களை கவனிக்க வேண்டியுள்ளது. என் மனமாகிய குதிறதான் அதற்கு சரியான வாகனம் என பிரார்த்திக்கி றார் ,!
மனம் ஒரு நிலைப் படாது மாயையில் தத்தளிக்கும் , உழலும்; அதனை அடக்கித் தன் வசப்படுத்த ஈசன் அதன் மேல்.அமர்ந்து நம்மை நற்கதியில் செலுத்த இந்த அழகான ஸ்லோகம் !
அதனை ஒப்பிட்டு, கடாக்ஷ சதக ஸ்லோகம் அருமையாக விளக்கப்பட்டுள்ளது !
மனம் எனும் காட்டில் அலைந்து திரியும் அஞ்ஞானம் எனும் காட்டு யானையை அம்பாளின் வளைந்தகடைக் கண் நோக்கால் அங்குசம் போன்று உபயோகித்து தன் வசமாக்கி வேகமாக அடக்க நாம்.தேவியிடம் பிரார்த்திக்க வேண்டும் என்ற பொருள் பொதிந்த ஸ்லோகம் தக்க உவமை !

பரமேஸ்வரா பக்தியில் திளைத்து அவர் சரணாரவிந்தத்தில் நிலை பெற்றிருக்கும் பாவம் மேகங்களின் வரிசை போல் ஆனந்தமான வர்ஷத்தைப் பொழிகிறது!
எவனுடைய மனதாகிய குளம் அந்த ஆனந்த வர்ஷத்தால் நிரம்பியதாய்
ஆகிறதோ, அவனுடைய பிறவியான பயிர் லோகம் முழுதும் பயனுடையதாக ஆகிறது .அதாவது, பரமேஸ்வரா பஜனத்தாlல் நித்ய ஆனந்தம் உண்டாகிறது என்று ஆசார்யாள் சொல்கிறார் !

அருணகிரியார் ஒரு நிலை படாது மாயை இரு வினை விடாது நாளும் உழலும் அனுபோகம் என்று முதலில் குறிப்பிட்ட ஸ்லோகத்துக்குப் பொருத்தமாக சொல்கிறார் !
அருமையான பிரதோஷ பிரசங்கம் !
ஓம் நம: சிவாய…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.