பாதாரவிந்த சதகம் 97வது ஸ்லோகம் – என் மனமாகிய வண்டு உன் பாதத்தாமரையிலேயே எப்போதும் ரமிக்கட்டும்
सुरागे राकेन्दुप्रतिनिधिमुखे पर्वतसुते
चिराल्लभ्ये भक्त्या शमधनजनानां परिषदा ।
मनोभृङ्गो मत्कः पदकमलयुग्मे जननि ते
प्रकामं कामाक्षि त्रिपुरहरवामाक्षि रमताम् ॥
One reply on “என் மனமாகிய வண்டு உன் பாதத்தாமரையிலேயே எப்போதும் ரமிக்கட்டும்”
த்ரிபுரம் எரித்த ஈசன் வாம பாகத்தில் இருப்பவளே! காமாக்ஷி மதி போன்ற முகம் உடையவளே! மிக்க பக்தியும், மன்ச்சாந்தியும் உடைய சீலர்களுக்கும் ரிஷிகளுக்கும், பல காலம் சென்றே கிடைக்கக் கூடிய, மிகச்சிவண்த உன் பாதங்களில் என் மனம் ஆகிய தேன் விரும்பும் வரை இன்புற்று த்ருப்தி அடையட்டும். முனிவர்கள் தவங்களால் மட்டும் வருந்தி அடையும் உன் பாதத் தாமரை, பக்தி எனும் வண்டாக மாறினால் எளிதில் அடையலாம் என்பது இங்கு கூறப்படுகிறது.
நம் நல்கதிக்கு ஈசனின் வாம பாகத்தில் இருக்கும் காமாக்ஷி நம்மோகத்தை எல்லாம் நீக்கி நற்கதி அருள்வாள் என இங்கு கூறப்படுகிறது !
அன்னையைச் சரணடைந்தால் என்னதான் கிட்டாது ?
மிக அழகான சொல் நயம், பொருள் நயம் உடைய ஸ்லோகம் !
கணபதி விளக்கம் அருமை எப்போதும் போல் !
ஜய ஜய ஜகதம்ப சிவே