மந்தஸ்மித சதகம் 73வது ஸ்லோகம் – பக்தி மார்கத்தை போல இனிமையானது வேறில்லை
वैमल्यं कुमुदश्रियां हिमरुचः कान्त्यैव सन्धुक्ष्यते
ज्योत्स्नारोचिरपि प्रदोषसमयं प्राप्यैव सम्पद्यते ।
स्वच्छत्वं नवमौक्तिकस्य परमं संस्कारतो दृश्यते
कामाक्ष्याः स्मितदीधितेर्विशदिमा नैसर्गिको भासते ॥
2 replies on “பக்தி மார்கத்தை போல இனிமையானது வேறில்லை”
🙏 🙏
கருணை நிறைந்த காமாக்ஷியின், மந்தஸ்மிதம், அதோட பெருமை மிக அருமையானதொரு விளக்கம்.
இந்த மந்தஸ்மிதத்தோட அழகிற்கு தடையாக எதுவும் இருக்க முடியாது.
ஆம்பலின் வெண்மைக்கும், சந்திரனின் வெண்மைக்கும், முத்து பரிமளிக்கும் வெண்மைக்கும் உள்ள வேறுபாடு, மற்றும் காமாக்ஷியின் மந்தஸ்மிதத்தின் நிரந்தர வெண்மை ஒளி ❇ அழகான உரை. காமாக்ஷி அருள் ஒவ்வொரு க்ஷணமும் கிடைக்க வேண்டும்.👌💐
பக்தி எளிதான மார்கம் வழிபடுதலில் !பூஜைக்கு நிரம்ப ஏற்பாடுகள் ,திரவ்யங்கள் செய்ய வேண்டும் . மனம் உருகி பிரார்த்தனை பகவானிடம் பக்தி செய்வதால் எந்த வித சிறப்பு ஏற்பாடுகளும் இன்றி அவரிடம் மனம் ஒன்ற சாலஸ் சிறந்த வழியாகும் !
இரு கைகளையும் குவித்து மனதில் இஷ்ட தேவதை நிறுத்தி பக்தி செலுத்துதல் மிக எளிமையான ஆனால் வலிமையான முறை !
இதை அருணகிரியார் ” பக்தியால் உனைப் பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாடி முத்தனாம் ஆறு எனைப் பெருவாழ்வின் முக்தி சேர்வதற்கு அருள்வாயே “.என மிக அழகாகச் சொல்கிறார் !
அபிராமி பட்டர் கொள்ளேன் மனதில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டந்தனை வில்லேன் என பக்தி இலக்கணத்தை சொல்கிறார்.
இங்கு அம்பாளின் மந்தாஸ்மிதம் எப்படி இயற்கையாகவே வெண்ணெயுடன் விளங்குகிறது என்பதை மூலர் அழகாகச் சொல்கிறார் ,.
நிலவின் ஒளி வந்தால்தான் அல்லி வெண்மை நிறத்துடன் மலர்கிறது,!
பிரதோஷ காலம் வந்தால்தான் முழுமை அடைகிறது. புதிய முத்து அதனை செம்மைப்.படுத்துவதால் வெண்மை நிறம் கூடி தள தளப்புடன் விளங்குகிறது! ஆனால் தேவியின் புன்னகை எப்போதும் இயற்கையாகவே வெண்மையுடன் பிரகாசிக்கிறது என்ற அழகான வர்ணனை !
இதை சொன்ன வீதம் விளக்கிய வீதம் ரொம்ப அழகா மனதில் நிற்கும்படியா இருந்தது,!
சுவாமிகளின் பக்தி, எதிலும் ஒட்டாத பகவத் சிந்தனை, பக்தி இவை நமக்கும்.சிறிதாவது சிததிக்க அவனாலாலே அவன் தாள் வணங்குகிறேன்.
தேவி சரணம்
குருவே சரணம்…