Categories
Stothra Parayanam Audio

திருப்புகழ் பாடல்கள் ஒலிப்பதிவு – 4

பாடலைக் கேட்க பாடலின் தலைப்பில் உள்ள இணைப்பில் சொடுக்கவும்.

    1. இமராஜனி லாவதெ றிக்கும்

      இமராஜனி லாவதெ றிக்குங் …… கனலாலே
      இளவாடையு மூருமொ றுக்கும் …… படியாலேசமராகிய மாரனெ டுக்குங் …… கணையாலே
      தனிமானுயிர் சோரும தற்கொன் …… றருள்வாயேகுமராமுரு காசடி லத்தன் …… குருநாதா
      குறமாமக ளாசைத ணிக்குந் …… திருமார்பா

      அமராவதி வாழ்வம ரர்க்கன் …… றருள்வோனே
      அருணாபுரி வீதியி னிற்கும் …… பெருமாளே.

    2. ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

      ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
      ஆறுமுகம் ஆறுமுகம் …… என்றுபூதி

      ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
      யார்கள்பத மேதுணைய …… தென்றுநாளும்

      ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
      ஈசஎன மானமுன …… தென்றுமோதும்

      ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
      யேவர்புகழ் வார்மறையு …… மென்சொலாதோ

      நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
      நீலமயில் வாகவுமை …… தந்தவேளே

      நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
      நீடுதனி வேல்விடும …… டங்கல்வேலா

      சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
      தேவர்துணை வாசிகரி …… அண்டகூடஞ்

      சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
      தேவர்வர தாமுருக …… தம்பிரானே.

    3. பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய

      பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
      பவனி வரும்படி …… யதனாலே

      பகர வளங்களு நிகர விளங்கிய
      இருளை விடிந்தது …… நிலவாலே

      வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
      வரிசை தரும்பத …… மதுபாடி

      வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
      மகிழ வரங்களு …… மருள்வாயே

      அரஹர சுந்தர அறுமுக என்றுனி
      அடியர் பணிந்திட …… மகிழ்வோனே

      அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
      குறமக ளிங்கித …… மணவாளா

      கருதரு திண்புய சரவண குங்கும
      களபம ணிந்திடு …… மணிமார்பா

      கனக மிகும்பதி மதுரை வளம்பதி
      யதனில் வளர்ந்தருள் …… பெருமாளே.

    4. வாசித்துக் காணொணாதது

      வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
      வாய்விட்டுப் பேசொ ணாதது …… நெஞ்சினாலே

      மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
      மாயைக்குச் சூழொ ணாதது …… விந்துநாதஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
      லோகத்துக் காதி யானது …… கண்டுநாயேன்

      யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
      யூனத்தைப் போடி டாதும …… யங்கலாமோ

      ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
      லாகிப்பொற் பாத மேபணி …… கந்தவேளே

      ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
      ராரத்தைப் பூண்ம யூரது …… ரங்கவீரா

      நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
      நாடிற்றுக் காணொ ணாதென …… நின்றநாதா

      நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
      நாதர்க்குச் சாமி யேசுரர் …… தம்பிரானே.

    5. அறமி லாவதி பாதக

      அறமி லாவதி பாதக வஞ்சத் …… தொழிலாலே

      அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் …… றிளையாதே

      திறல்கு லாவிய சேவடி வந்தித் …… தருள்கூடத்

      தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் …… தருவாயே

      விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் …… பொரும்வேலா

      விமல மாதபி ராமித ருஞ்செய்ப் …… புதல்வோனே

      மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் …… புயவீரா

      மயிலை மாநகர் மேவிய கந்தப் …… பெருமாளே.

    6. நாடித் தேடித் தொழுவார்பால்

      நாடித் தேடித் …… தொழுவார்பால்

      நானத் தாகத் …… திரிவேனோ

      மாடக் கூடற் …… பதிஞான

      வாழ்வைச் சேரத் …… தருவாயே

      பாடற் காதற் …… புரிவோனே

      பாலைத் தேனொத் …… தருள்வோனே

      ஆடற் றோகைக் …… கினியோனே
      ஆனைக் காவிற் …… பெருமாளே.

    7. அற்றைக் கிரைதேடி

      அற்றைக் கிரைதேடி அத்தத் …… திலுமாசை
      பற்றித் தவியாத பற்றைப் …… பெறுவேனோ
      வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் …… தொளைசீலா
      கற்றுற் றுணர்போதா கச்சிப் …… பெருமாளே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.