ஆர்யா சதகம் 2வது ஸ்லோகம் பொருளுரை – கஞ்சன காஞ்சீ நிலயம்
कञ्चन काञ्चीनिलयं करधृतकोदण्डबाणसृणिपाशम् ।
कठिनस्तनभरनम्रं कैवल्यानन्दकन्दमवलम्बे ॥
ஆர்யா சதகம் 2வது ஸ்லோகம் பொருளுரை – கஞ்சன காஞ்சீ நிலயம்
कञ्चन काञ्चीनिलयं करधृतकोदण्डबाणसृणिपाशम् ।
कठिनस्तनभरनम्रं कैवल्यानन्दकन्दमवलम्बे ॥
2 replies on “கஞ்சன காஞ்சீ நிலயம்”
ஸத்-சித்-ஆனந்தம்! ‘ஸத்’தான ப்ரஹ்மம், தான் ‘சித்’ பூர்ணமாக இருப்பதை அறிந்து அநுபவிப்பதில் பெறுகிற பெரிய நிறைவுதான் ‘ஆனந்தம்’.
முதல் ஸ்லோகத்தில் பரசித்ரூபிணியாக, ஸத்தின் சித் ரூபமாக, ஸத்தை விட்டு அகலாத சித் ஸ்வரூபமாக வர்ணிக்கிற மூக கவி, இந்த ஸ்லோகத்தில் கைவல்யானந்தத்தை, மோக்ஷ ஆனந்தத்தை அளிப்பவளாக, அவளுடைய ரூபத்தை வர்ணிக்கிறார்.
மஹாபெரியவா, “சித்-ஆனந்தம் என்கிற பெரிய தத்வம் நமக்குத் தெரியாமல், புரியாமல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். அவளுடைய ஸெளந்தர்யமே நமக்கு ஆனந்தம் தரத்தானே செய்கிறது? அம்பாளின் அழகுப் பிரவாஹத்தைப் பார்த்தாலே போதும்; நிறைந்த நிறைவாகி விடலாம். அதிலேயே ஊறி ஊறி அத்வைத மோக்ஷானந்தத்துக்குப் போய்விடலாம்.” என்கிறார்.
நமக்கு மஹாபெரியவா தான் காமாக்ஷி. இந்த ஸ்லோகம் மஹாபெரியவாளுக்கு பொருந்துகிற வகையில் சொன்னது மிக அருமை. அவருடைய ரூப த்யானமும் நமக்கு மோக்ஷத்தையே கொடுக்கும். 🙏🙏🙏🙏
மிக அருமையான விளக்கம்! பெரியவாளை யும் காமாக்ஷியன் நையையும் ஒப்பிட்டுப் பேசியது சாலப் பொருத்தம்!
உலக பசு பாச பந்தம் விலக அவள் பாதங்களை, பெரியவா இணையடி நீழலைப் பற்றிக் கொண்டால் சம்சாரம் எனும் சாகரத்தில் இருந்து விடுபடலாம் !
காஞ்சி என்ற ஸ்தலத்தில் தனது இருப்பிடமாகக் கொண்ட காமாக்ஷி,தனது நான்கு கைகளிலும், கரும்புவில், மலரம்பு,பாசம், அங்குசம்தரித்துத் தன் கனத்த குசங்களால் சிறிது வளைந்த திருமேனியுடன் உள்ள அவளை மனதால் நினைத்துப் பார்க்க வொண்ணாத மோக்ஷமெனும் ஆனந்தமான ஒன்றை மனதால் பற்றிக் கொள்கிறேன்.
தேவி ஸ்ரீவித்யா ஸ்வரூபினியாக வர்நிக்கப் படுகிறாள் முதல் இரண்டு ஸ்லோகங்கள் லிளும் . காதி வித்தை எனப்படும் மன்மத வித்தை க வில் ஆரம்பமாகிறது
கனத்த குடங்களுடன் சாய்ந்த நிலையில் உள்ளதை பட்டரும் பணிமலர்ப்பூங்கணையும் கறுப்புச் சிலையும், மேன் பாசாங்குசமும் கையில் அணையும் என வர்ணிக்கிறார் ..
அனுஷ தினத்தன்று, பெரியவாளை காமாக்ஷியுடன் ஒப்பிட்டு இந்த ஸ்லோகத்தைப் பகிர்ந்தது மிகப் பொருத்தம்!
கையில் தண்டம், காஷாய வஸ்த்ரம் கமண்டலுவுடன் சித்தரித்தது மிக அருமை !!
எங்கும் பெரியவா எதிலும் பெரியவா என்ற தத்வம் இது!
ரொம்ப மனசுக்கு நிறைவாக இருந்தது !!
ஜய ஜய சங்கரா…
ஜய ஜய ஜெகதம்ப சிவே ….