கடாக்ஷ சதகம் 58வது ஸ்லோகம் பொருளுரை – மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யன்
हृत्पङ्कजं मम विकासयतु प्रमुष्णन्
उल्लासमुत्पलरुचेस्तमसां निरोद्धा ।
दोषानुषङ्गजडतां जगतां धुनानः
कामाक्षि वीक्षणविलासदिनोदयस्ते ॥
ஹ்ருʼத்பங்கஜம் மம விகாஸயது ப்ரமுஷ்ணன்
உல்லாஸமுத்பலருசேஸ்தமஸாம் நிரோத்³தா⁴ ।
தாே³ஷானுஷங்க³ஜட³தாம் ஜக³தாம் து⁴னான:
காமாக்ஷி வீக்ஷணவிலாஸதி³னோத³யஸ்தே ॥
அப்படீன்னு ஒரு ஸ்லோகம். “காமாக்ஷி, வீக்ஷணவிலாஸ தி³னோத³யஸ்தே” – அவளுடைய வீக்ஷணம் அழாகாயிருக்கு. அந்த கண் நோக்கம் அது, “தினோதய:” – பகலை உண்டாக்குபவனைப் போல, அதாவது, சூரியன். அப்படி உன்னுடைய கண் நோக்கமாகிய சூரியன் – “ஹ்ருʼத்பங்கஜம் மம விகாஸயது” – என்னுடைய மனமாகிய தாமரையை மலரச் செய்யட்டும். அப்படீன்னு இந்த ஸ்லோகம். காமாக்ஷி கடாக்ஷம் என்ற சூரியன் நம்முடைய மனமாகிய தாமரையை மலரச் செய்யட்டும். இது கடாக்ஷ சதகத்துல 58வது ஸ்லோகம்.
இதுல மத்ததுக்கும் அர்த்தம் சொல்றேன்.
“ப்ரமுஷ்ணன்
உல்லாஸமுத்பலருசே:” காமாக்ஷியினுடைய கடாக்ஷம் கருப்பா இருக்கறதனால நீலோத்பலத்தைக் காட்டிலும் ரொம்ப அழகா இருக்கு. நீலோத்பலத்தினுடைய காந்திய மட்டுப்படுத்தறது. அப்படீன்னு கடாக்ஷத்துக்கு. சூரியனா சொல்லும் போது, சூரியன் வந்தா தாமரை மலரும். நீலோத்பலம் வாடிடும். சாயங்காலம் ஆனா தான் நீலோத்பலம் மலரும். அதனால, நீலோத்பலத்தை வாடச் செய்வதும் – “தமஸாம் நிரோத்³தா⁴” – தமஸ்னா இருள் – சூரியன் வந்தா இருள் போகும். காமாக்ஷியினுடைய கடாக்ஷம் கிடைச்சா நம்முடைய பாபங்கள் எல்லாம் போயிடும். தமஸ்னா இருட்டு, பாபம்னு ஒரு அர்த்தம். நம்முடைய பாபங்களைப் போக்குபவையுமான அந்த காமாக்ஷியினுடைய கடாக்ஷங்கள் – “தாே³ஷானுஷங்க³ஜட³தாம்” – தோஷம்னா ப்ரதோஷம்னு வெச்சுக்கணும். ப்ரதோஷ வேளை வந்தா, இரவு வேளை வந்தா, ஒரு ஜாட்யம், உடம்புல ஒரு சோம்பேறித்தனம் வரது, எங்கும் குளிர் வரது, அதனால நமக்கு, தூங்கணும்னு தோண்றது. சூரியன் வந்தா, அந்த ஜாட்யத்தை – “ஜக³தாம் ஜாட்யம் து⁴னான:” – அந்த சோம்பேறித்தனத்தை போக்குகிறது சூரியன். விரட்டியடிக்கறதுன்னு அர்த்தம். காமாக்ஷியினுடைய கடாக்ஷம் நம்முடைய அக்ஞானத்தை போக்கிடும். அப்பேர்ப்பட்ட அந்த கடாக்ஷம் என்னுடைய மனதை மலரச் செய்யட்டும். அப்படீன்னு ஒரு அழகான பிரார்த்தனை.
ஹ்ருʼத்பங்கஜம் அப்படீன்னு இருக்கறதுக்குனால ஹ்ருதயத்துக்கு ஏதாவது கோளாறு வந்து, நமக்கு சரியா மூச்சு வாங்க முடியல அப்படின்னு இருந்தாக் கூட இந்த ஸ்லோகத்த சொல்லி வேண்டிக்கலாம்னு தோண்றது. ஹ்ருதயமாகிய தாமரை மலர்ந்தா ஸ்வாசம் நன்னாருக்கும். ஸ்வாசம் நன்னாருந்தாலே உடம்புல எல்லாமே நன்னாயிருக்கும் அப்படீன்னு ஆயுர்வேதத்துல சொல்றா இல்லையா.
மனம் மலர்ரதுன்னா இன்னொரு அர்த்தம், நம்முடைய mind இன்னும் ரொம்ப broad minded ஆ ஆகும். நான், எனது அப்படீன்னு நம்ப இப்போதைக்கு இந்த உடம்பையும், இதுக்கு ஏற்பட்ட சில உறவுக்காராளையும், நம்பள த்ருப்திபடுத்துறவாளயும் மட்டும், நான் என்னதுன்னு வெச்சுண்டிருக்கோம். மனசு மலர மலர இந்த நான், என்னுது அதோட definition மாறும். மஹாபெரியவாள்லாம், உலகத்தையே தன்னுடைய குடும்பமா பாத்தா. உள்ளுக்குள்ள பார்வதி பரமேஸ்வராளப் பார்த்தார், நான்ங்கறது இந்த உடம்புன்னு நினைக்காம.
அந்த காமாக்ஷியின் கடாக்ஷத்துனால மலர்ந்த மனத் தாமரைய பரமேஸ்வரனுடைய பாதத்தில, சிவானந்தலஹரில வரும் – அங்க இங்க போய் ஏன் தேடற. மனத் தாமரைய அர்ப்பணம் பண்ணு அப்படீன்னு. அப்படி அந்த தாமரைய பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம் பண்ணா பார்வதி பரமேஸ்வரா 2 பேருமே நம மனசுல வந்து குடியிருப்பா. அனுகூலம் பண்ணுவா.
நம: பார்வதி பதயே|
ஹரஹர மஹாதேவா ||
hṛt-paṅkajaṃ mama vikāsayatu pramuṣṇan
ullāsam-utpala-ruces-tamasāṃ niroddhā |
doṣānuṣaṅga-jaḍatāṃ jagatāṃ dhunānaḥ
kāmākṣi vīkṣaṇa-vilāsa-dinodayaste ||
This is a sloka that says: **”Kamakshi, vīkṣaṇa-vilāsa-dinodayaste”** — Your glance is so beautiful. That gaze is **”dinodayaḥ”** — like the rising sun that creates the day. May that sun, which is Your glance, **”hṛt-paṅkajaṃ mama vikāsayatu”** — make the lotus of my heart blossom. This is the 58th verse in the *Kataksha Shatakam*.
I will explain the meaning of the other parts as well:
**”pramuṣṇan ullāsam-utpala-ruceḥ”**:
Because Goddess Kamakshi’s glance is dark/black in hue, it is more beautiful than the blue lily (*Nilotpala*). It diminishes the splendor of the blue lily. In the context of the sun: when the sun rises, the lotus blooms, but the blue lily fades (as it blooms only at night). Therefore, it “withers” the blue lily.
**”tamasāṃ niroddhā”**:
*Tamas* means darkness. When the sun arrives, darkness disappears. Similarly, when Kamakshi’s glance falls upon us, all our sins are destroyed. *Tamas* can mean both darkness and sin.
**”doṣānuṣaṅga-jaḍatāṃ jagatāṃ dhunānaḥ”**:
Here, *Dosha* should be understood as *Pradosha* (the evening/night). When the night falls, a certain *jaḍatā* (lethargy or dullness) sets in; the body feels a sense of laziness and a chill spreads everywhere, making us feel like sleeping. When the sun rises, it drives away that lethargy of the world (**”jagatāṃ jaḍatyaṃ dhunānaḥ”**). It means it chases it away. Similarly, Kamakshi’s glance destroys our ignorance (*Ajnana*). May such a glance make my heart blossom. This is a beautiful prayer.
Because the phrase **”Hṛt-paṅkajaṃ”** (Heart-Lotus) is used, I feel that even if one has physical heart ailments or difficulty breathing, they can pray using this sloka. If the “heart-lotus” blossoms, breathing will be good. Doesn’t Ayurveda say that if the breath is good, everything in the body will be healthy?
The blossoming of the mind has another meaning: our mind becomes **broad-minded**. Currently, we limit the definition of “I” and “Mine” to this body, a few relatives, and those who please us. As the heart blossoms, the definition of “I” and “Mine” changes. Great souls like Maha Periyava saw the whole world as their family. He saw Parvati and Parameswara within, rather than identifying “I” with the body.
In the *Sivananda Lahari*, it is said: “Why search here and there? Offer the lotus of your mind [at His feet].” If we offer that heart-lotus, which has blossomed due to Kamakshi’s glance, to Lord Parameswara, then both Parvati and Parameswara will come to reside in our hearts and bless us.
**Namaḥ Pārvatī Pataye |**
**Hara Hara Mahādevā ||**
2 replies on “மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யன்”
இந்த சொற்பொழிவு கேட்கும்போது, அபிராமி பதிகத்தில் பட்டர் சொன்னது ஞாபகம் வருகிறது! ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற நல்லோர் இடத்திநில் போய் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு, ஈனந்தனைத் தள்ளி எனது எனும் மானம் இல்லாமலே துரத்தி , இந்திரிய வாயில்களை இறுக்கப் புதைத்து, நெஞ்சம் இருளற விளக்கேற்றியே எனத் துதிக்கிரார் பட்டர்.
இங்கு மூக பஞ்ச சதியில் மூகர் அம்பாள் கண்ணோக்கத்தில் கிளர்ந்த சூர்ய ஒளியானது சூர்யா ஒளியை கண்டால் கூம்பும் நீலோத்பல மலர்களின் காந்தியைச் கவர்ந்து கொண்டு, கரு நீலமானாலும், உலகத்தவரின் அஞ்ஞான இருளை விலக்குவதாகவம், தோஷங்கள், மலினங்களை விளக்கி ஜனங்களின் அகத் தாமரையில் ஒளி ஏற்றி, விகசிக்க செய்வதாகவும் ஆகட்டும் என அழகுபட வர்ணிக்கிறார்!!
சௌந்தர்ய லஹரியில் விசாலா கல்யாணி என்ற ஸ்லோகத்தில் ஆசார்யாள் எங்கெல்லாம் அம்பாள் திருஷ்டி படுகிறதோ அங்கெல்லாம் ஜெயம் உண்டாகிறது என்று சொல்கிறார்!
அருமையான விளக்கம் !! இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!!
ஜய ஜய ஜகதம்ப சி வே…
வாடாமலே உயிரினம் பயிர் தழைத்து ஓங்கி வர அருள் மழை பொழிந்து இன்ப வாரிதியில் நின்னதம்பெனும் சிரகால் வருந்தாமலே அனைக்கும் தாயல்லாவா ஜெகன் மாதா? கோடானு கோடி ஜீவங்களையும் , சிற்றும்பு முதல் குஞ்சாரக் கூட்டம் முதலான ஜீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பைக் குறையாமல் வாரு வழங்கும் வாரிதி காமாக்ஷி அம்பாள் !அவள் படியலந்து நாம் நித்தம் வாழ்கிறோம் ! இது பெரியவாளுக்கு பொருந்தும் !
சங்கராந்தி என்பது நன்றி நாவிலும் பண்டிகை அல்லவா ?
சூர்யா உக்கும், அவரின் ஒளி கொண்ட அம்பாளுக்கும் பெரியவாலுக்கும் இது சாலப் பொருந்தும் !
அழகான கவி நயத்துடன் வர்ணிக்கப்பட்ட ஸ்லோகம் , கணபதி ரொம்ப அழகா விவரமா சொல்லி இருக்கார் !!
அம்பாள் சரணம்…