இன்னிக்கு ரத சப்தமி. சூர்ய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வம். அவரை வழிபட இன்று உகந்த நாள்.
அவர் பேர்ல ‘நமஸ்ஸவித்ரே’ இந்த ஸ்லோகத்தை தினம் சொல்லி சந்த்யாவந்தனம் முடிவில் நமஸ்காரம் பண்ணுவோம். எல்லாரும் சொல்லலாம். அந்த ஸ்லோகத்தின் ஒலிப்பதிவை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் – நமஸ்ஸவித்ரே (Audio link of the slokam namassavithre)
नमस्सवित्रे जगदेक-चक्षुसे जगत्प्रसूति-स्थिति-नाशहेतवे ।
त्रयीमयाय-त्रिगुणात्म-धारिणे विरिञ्चि-नारायण-शंकरात्मने ।।
ध्येय: सदा सवितृ-मण्डल-मध्यवर्ती नारायण: सरसिजाऽसन सन्निविष्ट:।
केयूरवान् मकर-कुण्डलवान् किरीटी हारी हिरण्यमयवपु: धृत शंख-चक्र:।।
शङ्खचक्र-गादापाणे द्वारका-निलयाच्युत ।
गोविन्द पुण्डरीकाक्ष रक्ष मां शरणागतम् ।।
आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् ।
सर्वदेवनमस्कारः केशवं प्रतिगच्छति ।।
மூக பஞ்சசதில சூர்ய பகவானை பற்றி வரும் ஸ்லோகங்கள் நிறைய இருக்கு. காமாக்ஷி அம்பாள் பெருமையை சொல்லும்போதே சூர்ய பகவானுடைய பெருமையும் அதில் வந்து விடுகிறது. அவற்றில் சில ஸ்லோகங்களின் பொருளுரை இணைப்பை இங்கே பகிர்ந்துள்ளேன்.
One reply on “காமாக்ஷி தேவியும் சூர்ய பகவானும் – நமஸ்ஸவித்ரே”
மலைராஜனின் பெண்ணான அம்பாள் காமாக்ஷி தன் பாத ஒளியால் நாற்புறமும் அதாவது எல்லாத் திசைகளையும் ஒளி மயமாகச் செய்கிறாள் ! செக்கச் சிவந்த நிரமாக்குகிறாள். தேவியின் திருவடி உத்திதெழு ம் பால சூரியனுடைய கிரணங்களுக்கு மூல திரவியமாக இருப்பதோடு, தேவேந்திரன் திசையாகிய கிழக்குத்திசையில் சூர்யன் தன் கிரணங்களைப் பரப்புவது போல் அம்பாளின் திருவடிகள் தன்னை வணங்குவோர் ஆசையை நிறைவு செய்கிறது !! தேவியின் பாத
செவ்வொளி அஞ்ஞானம் என்ற அக இருளை அழிக்கிறது! கிழக்கு மட்டுமல்லாது எல்லாத்திசைகளிலும் உள்ள அனைத்து தேவருக்கும் மெய்ஞ்ஞானம் என்ற ஒளியை அளிக்கிறது ! அழகான உவமை அம்பாள் பாதத்தோடு சூர்ய ஒளியை ஒப்பிடுவது !
ஜய ஜய ஜகதம்ப சிவே…..
அழகான உவமைகளைப் பொறுக்கி எடுத்து வழங்குவதில் கணபதிக்கு நிகர் அவரேதான் !!