ஆர்யா சதகம் 100வது ஸ்லோகம் பொருளுரை – எங்கும் வெற்றியை அளிக்கும் மூக பஞ்ச சதீ ஸ்லோகம்
जय जय जगदम्ब शिवे जय जय कामाक्षि जय जयाद्रिसुते ।
जय जय महेशदयिते जय जय चिद्गगनकौमुदीधारे ॥
ஜய ஜய ஜக³த³ம்ப³ ஶிவே ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்³ரிஸுதே ।
ஜய ஜய மஹேஶத³யிதே ஜய ஜய சித்³க³க³னகௌமுதீ³தா⁴ரே ॥ 100 ॥
இது ஆர்யா சதகத்துல நூறாவது ஸ்லோகம்.
இந்த ஸ்லோகத்துல “ஜக³த³ம்ப³ “ அப்டின்னு சொல்றார். உலகத்தையே ஸ்ருஷ்டி பண்ணினது காமாக்ஷி. “ஸவித்ரீம் த்ரிஜகதாம்” னு சொல்வார். எல்லாருக்கும் அம்மா.
“ஶிவே” – மங்கல வடிவானவளே.
“ஜய ஜய காமாக்ஷி “- மஹாமந்த்ரம், காமாக்ஷிங்றது .
“ஜய ஜய அத் 3ரிஸுதே “ – மலைமகளே
“ஜய ஜய மஹேஷத 3 யிதே” – மஹேசனின் மனைவியே
“ ஜய ஜய சித்³க³க³னகௌமுதீ³தா⁴ரே” – கௌமுதி னா சந்திரன். சித்³க³க³னனா ஞானவானத்தில் விளங்கும் கௌமுதி னா, சந்த்ர தாரை. அப்படியே பாலாட்டம் நிலவு கொட்றது இல்லையா, அந்த மாதிரி காமாக்ஷி ஞானவானத்தில் ஒரு சந்திரன், அப்டின்னு சொல்றார். இது அவாளுடைய ஒரு அனுபவம். அந்த கவிகள் அந்த ஞானிகளுடைய ஒரு தர்ஸனம். அதை explain பண்ணி புரிஞ்சுக்க முடியாது. நமக்கும் ஒரு நாளைக்கு இந்த நிலை வந்தால் தான், இந்த வார்த்தைகள் எல்லாம் புரியும் னு நெனைக்கறேன்.
எனக்கு புரிஞ்சது, இந்த ஸ்லோகத்துல காமாக்ஷி மலைமகளாகவும், மஹேசனுடைய மனைவியாகவும், ஜகத்துக்கே அம்மாவாகவும், இப்படி எல்லா வடிவிலும் நம்மை சுத்தியே அம்மாவாகவும், மனைவியாகவும், பெண்ணாகவும் காமாக்ஷி இருக்கா.
அப்படி நாம நம்மோட இருக்கற பெண்களை போற்றினால் “ஜய ஜய ஜய ஜய: னு இந்த ஸ்லோகத்துல…”போற்றி போற்றி” னு திருவாசகத்துல சொல்ற மாதிரியும், “ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்” னு சுப்ரமண்ய புஜங்கத்துல முருகப்பெருமானை ஆதி ஆச்சார்யாள் கொண்டாடற மாதிரி , “சங்கரா ஜய போற்றி போற்றி” னு அப்பர் பெருமான் தேவாரத்துல சொல்வார்.
நம்ப பகவானை போற்றினால், பகவானுடைய பல்லாண்டு பாடினால், நம்ம பல்லாண்டு வாழ்வோம். நமக்கு வெற்றி வரும்.
அதனால எங்கும் எதிலும் வெற்றி கொடுக்க கூடிய ஸ்லோகம் இது. உலகத்துல போயி ஜயிச்சுட்டு வந்தா கூட, ஆத்துக்குள்ள வந்தா நமக்கு சந்தோஷம்ங்றது பெண்களை மதிச்சால் தான் கிடைக்கும் இல்லையா.
“சித்³க³க³னகௌமுதீ³தா⁴ரே”—அப்டின்னு சொல்றார். முறைப்படி நாம்ப பெண்களிடத்துல, விருப்பு வெறுப்பு இல்லாம அன்போட இருக்கறதுக்கு கத்துண்டா, வாழ்க்கையும் இனிமையாயிடும். உயர்ந்த ஞானமும் கிடைக்கும் அப்படிங்க்றது இந்த ஸ்லோகத்துலேர்ந்து தெரியறது.
பெரியவா “ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர” அப்டின்னு சொல்லும் போது இந்த மந்த்ரம் நமக்கு எங்கும் எதிலும் வெற்றியை கொடுக்கும். வெறும் வெளி உலக வெற்றி மாத்ரம் இல்லை, ஆத்ம ஜயமும் கிடைக்கும் அப்டின்னு சொல்லுவா. அந்த மாதிரி ஆச்சார்யாளை ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர னு சொல்ற மாதிரி நமக்கு பெரியவா காமாக்ஷி. அந்த மஹாபெரியவாளை நம்ப ஜய ஜய னு சொல்றதுக்கு இந்த ஸ்லோகத்தை வச்சுக்கலாம்.
பெண்களிடத்துல அன்பா இருக்கறது, மதிப்பா நடத்தறதுனா இந்த காலத்துல என்னனே புரியலையே அப்டின்னு, அதுக்கு என்ன explanation, அப்டின்னு கேட்டா அது situation specific தான். அது பெரியவா தெய்வத்தின் குரல்ல சொன்னதை direct ஆ apply பண்ணவும் முடியாது. நம்ப வேற extreme கும் போக முடியாது.
இந்த ஸ்லோகத்தை நம்ப சொல்லிண்டே இருந்தோம்னா நம்ப புத்தியில காமாக்ஷி இருந்துண்டு, நமக்கு எப்படி நடந்துக்கணும், எப்படி உலகத்துல ஜயிக்கறது, எப்படி ஆத்துக்குள்ள வந்தா பெண்களுடைய அன்பை ஜயிச்சு நாடும் வீடும் சந்தோஷமா இருக்கணும், மேலும் ஆத்ம ஜயம் அப்டிங்க்ற ஞானமும் கிடைக்கணும் அப்படிங்கற எல்லா ப்ரார்த்தனையும் இந்த ஒரு அழகான ஸ்லோகத்துல இருக்கு.
ஜய ஜய ஜக³த³ம்ப³ ஶிவே ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்³ரிஸுதே ।
ஜய ஜய மஹேஶத³யிதே ஜய ஜய சித்³க³க³னகௌமுதீ³தா⁴ரே …
இதை எப்பவும் மந்த்ரமா சொல்லிண்டே இருப்போம். பெரியவா காமாக்ஷி கூட இருந்துண்டு நமக்கு எங்கும் எதிலும் வெற்றியை கொடுப்பார்.
நம: பார்வதி பதயே !!! ஹர ஹர மஹாதேவா !!!
4 replies on “எங்கும் வெற்றியை அளிக்கும் மூக பஞ்ச சதீ ஸ்லோகம்”
Jaya Jaya Sankara! Really you are. Very blessed person. Of course we are also blessed Tobe with you in your journey.
Jaya Jaya Sankara Hara Hara Sankara Mahaperiyava Saranam
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA SARANAM SARANAM
JANAKIRAMAN NAGAPATTINAM
mahaperiava saranam, bhagvas exraordinary memory duradhrshti his karunyam ,let me pray ,to save this country and people