Categories
Narayaneeyam

அம்பரீஷ சரிதம்

அம்பரீஷ சரிதம் (25 min audio describing the story of Ambareesha Maharaja in Tamizh)

9 replies on “அம்பரீஷ சரிதம்”

பக்தி, பணிவின் இலக்கணம் என்ன என்பதனைத் தெளிவாக விளக்கும் அற்புதமான தசகம் அம்பரீஷ் தசகம் !
நாம் வினயம் என்பதை இது போன்ற மஹநீயர்கள் மூலமாகவே அறிய முடியும் .
இதனால் பக்தி மட்டும் அல்லாது பெரியவர்கள், ரிஷிக்களிடம் நாம்.காட்ட வேண்டிய பணிவு, அவர்களிடமிருந்து கிரகிக்க வேண்டிய பல ஸத் விஷயங்கள் கண் முன் விரிகிறது!
ஸ்வாமிகள் சொல்வது போல் பெரியவா எப்படிப்பட்ட தபஸ்வியானாலும் , நம்மிடம் பழகும்போது நம் நிலைக்கு இறங்கி வந்து எளியமையாக ப்பழகி, இதமான வார்த்தைகளால் மயில் பீலி போல் வருடும் இதம் யாருக்கு வரும்,?
எப்போதும் பகவத் சிந்தனையில் காலம் கடத்தி, அவர்தம் பாதத்தை மனதால் இறுக்கப் பற்றி சரணாகதி அடைந்தால் எத்தகைய இடரும் அம்பரீஷ் மஹாராஜா கடந்தது போல்.கடந்து விடலாம், தேவை இடைய றா த்யானம், பக்தி மட்டுமே !
ஸ்வாமிகள் சொன்னது இன்னொன்றும் குறிப்பிட விரும்புகிறேன். எல்லாரும் பீச் சென்று walking செல்வது என்ற பழக்கத்தை விட்டு, பகவான் சந்நிதியை வளம் வந்தால், தெய்வ அனுகிரகம், சரீர சம்பத் இரண்டுமே கிடைக்கும்!
பெரியவா வரதராஜ ெருமாள் கோவிலை விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் செய்தவாறு வளம் வருவார் தினமும் விடியற்காலையில் !
என் சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன்.. தினமும் விடியலில் எழுந்து அகத்தில் செய்யவேண்டிய நித்ய கர்மாக்களை முடித்து, கோவிலுக்குச் சென்று, விஸ்வரூப தசனம் கண்டு, பசு வலம் வந்து, நெய் விளக்கேற்றி, எல்லா கோஷ்டங்களுக்கும் கோலமிட்டு, எல்லா சந்நிதியி லும் விளக்கேற்றி, பிரகார வளம் 108 முறை செய்து, தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் என் ஜபங்களை முடித்து திரும்ப எனக்கு 1 1/2 மணி நேரம் ஆகும்.
இது எனக்கு நிம்மதி, திருப்தி ஏற்படுத்திய விஷயம் ! இன்று நான் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை இருந்தாலும் இதை நினைத்து என் எஞ்சிய தினங்களை ஓட்டிவிடுவேன் என்பது திண்ணம்!
பக்தி என்பது உணர வேண்டிய விஷயம், புகட்டி வராது !
அம்பரீஷ் பக்தி நமக்கும் வர வேண்டும்! வருமா என்பது கேள்விக்.குறி!
மௌனம் பற்றி சொன்னது மிக சிறப்பு !
பெரியவா மௌனம் இருந்த நாட்களிலும் நாம ஜபம், பாராயணம் தவறியதில்லை ! பேச்சைத் தவிர்க்க மௌனம்!
காஷ்ட மௌனம் அன்று கட்டை போல் அசைவில்லாமல் இருப்பார்.
மௌனத்தன்றும் பாராயணம், நாமா ஜபம் தவிக்கத் தேவையில்லை !!

மொத்தத்தில் துவாதசி அன்று சிறந்த ஒரு உபன்யாசம் கேட்க வாய்ப்பினைக்கொடுத்த கணபதிக்கு என் மனமார்ந்த நன்றி ஓம் நமோ நாராயணாய…

“மொத்தத்தில் துவாதசி அன்று சிறந்த ஒரு உபன்யாசம் கேட்க வாய்ப்பினைக்கொடுத்த கணபதிக்கு என் மனமார்ந்த நன்றி ஓம் நமோ நாராயணாய…”

🙏 🙏. Thanks for this Bhakti pravachanam. It is definitely a divine gift to listen to this Ambarisha charitham. May Bhagwan bless us more to be a part of this Satsangam Quotes of Sri Swamigal, wishes one to always take his blessings. Narayana Akhila guru Bhagavan namasthe.

உங்கள் உபன்யாசத்தைக்கேட்டு வேறு சிந்தை இன்றி பகவான் ஸ்மரணையில் ஆனந்தமாக திளைத்திருந்தேன்!

Excellent மிக அருமையான சரிதம்.நல்ல பல விஷயங்கள் சரிதம் மூலம் இப்படியே வழி வழியாய் வருகின்றன. . ஒரு முறை என் மாமனார் பழூர் பாலு மாமா இதனை சொல்லியிருக்கிறார்.

அம்பரீஷ சரிதம் போன்ற மிக உன்னதமான விஷயங்களை நாங்கள் அறிந்து கொள்ளும் வகையில் தாங்கள் இணைய தளத்தில் பதிவிட்டு எங்களுக்கு கேட்கும் பாக்கியத்தை ஏற்படுத்தி தரும் தங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள் சார்

It is definitely a great blessing to hear Ambarisha charitam.அதை இவ்வளவு அழகான சொன்ன உங்களை எங்களுக்கு கொடுத்த கோவிந்த தாமோதர சுவாமிகளுக்கு கோடி நமஸ்காரங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.