Categories
mooka pancha shathi one slokam

க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு

மந்தஸ்மித சதகம் 5வது ஸ்லோகம் பொருளுரை – க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு

येषां गच्छति पूर्वपक्षसरणिं कौमुद्वतः श्वेतिमा
येषां सन्ततमारुरुक्षति तुलाकक्ष्यां शरच्चन्द्रमाः ।
येषामिच्छति कम्बुरप्यसुलभामन्तेवसत्प्रक्रियां
कामाक्ष्या ममतां हरन्तु मम ते हासत्विषामङ्कुराः ॥

2 replies on “க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு”

விதி காணும் உடம்பை விடா வினையேன், கதி காண மலர்க் கழல் என நம் சரீரத்தை மறந்து ஆத்ம ஞானம் அடைய கந்தருனுபூதி சொல்கிறது.
அதுபோல் அறிவு ஒன்று அற நின்று , அறிவார் அறிவில் பிரிவு ஒன்று அற என்பதனையும் மனதில் கொள்ளவேண்டும் ! எப்படி ஸ்ரீ ரமண பகவான் தன் சரீரத்தை விடுத்து ஆத்ம ஞானம் பெற்றாரோ அது போல்!
இதனை கணபதி அழகாக விரிவாகச் சொல்லியுள்ளார் !
அத்தகைய ஞானம் நம் போன்ற சாமான்யனுக்கு இல்லாவிடினும் பகவத் பக்தி ,த்யானம் சரண ஸ்மரணை இவற்றால் ஒரளவு உய்வடையலாம் !
மூக கவி சொல்கிறார் அல்லி வெண்மை நிறம் அம்பாளின் மந்தஹாசம் முன்பு எப்படித் தோற்று விடுமோ, சரத் கால சந்திரன் அம்பாளின் அவள் புன்சிரிப்பு க்கு இணை நிலை அடைய எப்போதும் விரும்புகிறானோ வெண்மையான எந்த ஒரு நபரைப் பார்த்து வெண்சங்கு தாசனாக இருக்க ஆசைப் படு கிறதோ அத்தகைய காமாக்ஷியின் மந்தாஹாச முளைகள் என் மன அகங்காரத்தை போக்கட்டும்! என்ற பொருள்பட அம்பாளின் மந்தஹாச வதனத்தை, புன்சிரிப்பு வியக்கிறார் கவி,!

அழகான சொற்பொழிவு !
ஜய ஜய ஜகதம்ப சிவே…

மந்தஸ்மிதம் 5 வது ஸ்லோகத்தின் விளக்கம் கேட்கும் பாக்யம் இன்று அமைந்தது . தாங்கள் எப்போழுதும் பெரியவா, சிவன் சார், ஸ்வாமிகளைப் பற்றியும் அந்த அந்த ஸ்லோகங்களுக்கு உவமை கொடுப்பீர்கள். இந்த ஸ்லோகத்தில் “பூர்வ பஷத்திற்கு” பெரியவா, “ ஆருருக்ஷதி” கு சிவன் சார் , “அந்தே வஸத் “ கு ஸ்வாமிகள் உவமை ஆஹா அற்புதம். நினைவில் என்றும் ஸ்லோகம் சொல்லும் போது நிற்கும். 🙏🙏🙇‍♀️

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.