Categories
Narayaneeyam

யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள்

யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ஓலிப்பதிவு

ஸ்வாமிகள் குரலில் யோகீந்த்ராணாம் ஸ்லோகம்

இன்னைக்கு செப்டம்பர் அஞ்சாம் தேதி 2020. 2003-ஆம் வருஷம் செப்டம்பர் அஞ்சாம் தேதி சுவாமிகள்கிட்ட போயிருந்தேன். சாயங்காலம் அவர்கிட்ட போய் நமஸ்காரம் பண்ணும்போது “யோகீந்த்ராணாம் த்வதங்கேஷு” அப்படின்னு அவருடைய கணீர்ங்கற குரல்ல அமிர்தம் கொட்டும்படியா அந்த ஸ்லோகத்தை சொன்னார்.
அப்புறம் அதுக்கு விரிவா அர்த்தம் சொன்னார். அப்புறம் இந்த நாராயணீயம் டே-ங்கறத (narayaneeyam day) பத்தி அன்னைக்குதான் எனக்கு சொன்னார். ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை 28-ஆம் தேதி நாராயணீயம் டே அப்படின்னு குருவாயூர்ல கோவில்ல கொண்டாடுறா. அதாவது நாராயண பட்டத்திரி தினம் ஒரு தசகமா பண்ணி கார்த்திகை 28-ஆம் தேதி நாராயணீயத்தை பூர்த்தி பண்ணி அன்னைக்கு பகவானுடைய தர்சனம் கிடைச்சது, “அக்ரே பஷ்யாமி”-ன்னு பாடினார் அப்படின்னு அத கொண்டாடுறா.
அதுபோல 100 நாள் பின்னாடி கணக்கு பார்த்துண்டு தினம் ஒரு தசகமா நாராயணீயத்தை ஒரு ஆவர்த்தி பண்றது அப்படின்னு வழக்கம் அப்படின்னு சொல்லிட்டு, இன்னைக்கு ஆரம்பிக்கிறேன், நீ வந்த உடனே அத பத்தி சொல்லிட்டு இந்த யோகீந்த்ராணாம் முன்ன மாதிரி சொல்ல வரதான்னு பார்த்தேன் அப்படின்னார். அவருக்கு நல்ல கணீர்னு குரல், ஆனா அதுல ஒரு தனியான ஒரு மெலடி இருக்கும். ரொம்ப ஸ்பஷ்டமா சொல்வார். நிறுத்தி பிரிச்சு பிரிச்சு சொல்வார். இதெல்லாம் நிறைய நான் சொல்லிருக்கேன். எனக்கு ஆனா அதோட பெருமைய மேலும் மேலும் நான் உணர்றதுனால அத சொல்லிண்டே இருக்கேன்.
ஸம்ஸ்கிருத ஸ்லோகங்களை படிக்கணும்னா இப்படித்தான் படிக்கணும் அப்படின்னு அது ஒவ்வொரு வாட்டியும் சுவாமிகள் சொல்றத கேட்கும்போது தெரியறது. அப்படி படிச்சாலே அர்த்தங்கள் புரியறது. ஸம்ஸ்கிருத பாஷையில இருக்கிற வார்த்தைகள் யோகம் அப்படின்னா டிக்ஷனரில இங்கிலீஷ்ல ஏதோ ஒன்னு போட்டிருப்பான். தமிழ்ல ஏதோ போட்டிருப்பான். அஷ்டாங்க யோகத்து மூலமா இந்த ஜீவன் பரம்பொருள அடையணும், யம நியமங்கள் அப்படின்னு எவ்வளவோ இருக்கு. ஏதோ யோகா பேண்ட் போட்டுண்டு யோகா மேட் வாங்கி ஆசனங்கள் பண்றதுதான் யோகான்னு கொண்டு போய் விட்டோம் இல்லையா?
இந்த மாதிரி ஸம்ஸ்கிருத பாஷையில இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கு. அந்த ஸ்லோகங்களை முறைப்படி திரும்ப திரும்ப படிச்சா, அதோடு ரிஷிகள் சொன்னபடி ஆசார அனுஷ்டானத்தோடு ஸத்யம், தர்மம், கருணை இதெல்லாம் வாழ்க்கையில கடைபிடிச்சா, அவாளுக்கு அந்த ரிஷிகளும் அந்த தெய்வமும் அந்த அர்த்தத்தை காமிச்சு கொடுக்கறது. இதுதான் சாஸ்த்ரார்த்தம்னு சொல்லுவா. அதனாலதான் வெறும் ட்ரான்ஸ்லேஷனை வெச்சுண்டு அர்த்தம் பார்த்தா போறாது அப்படிங்கறது மகான்களுடைய கொள்கை. அதனாலதான் ஸ்லோகங்களை ஸ்பஷ்டமா சொல்லணும். அது ஒரு உபாசனை, அதுவே ஒரு தவம்.
அப்படி சுவாமிகள் ஸ்லோகங்களை திரும்ப திரும்ப படிப்பார். இந்த யோகீந்த்ராணாம் ஸ்லோகத்துக்கு அன்னைக்கு அர்த்தம் சொன்னார். நாராயணீயம் டே பத்தி சொன்னார். அப்படி அன்னைக்கு சொல்லிட்டு அந்த கார்த்திகை 28-ஆம் தேதி பூர்த்தி பண்ணி சுவாமிகளுக்கு கிருஷ்ண தர்சனம் கிடைச்சிருக்கும். அதனாலதான் அதுக்கப்புறம் கொஞ்ச நாள்லயே அவர் ஸித்தியாயிட்டார் அப்படின்னு சொல்லிண்டு இருந்தேன்.

அந்த யோகீந்த்ராணாம் அர்த்தம் அவர் சொன்னது பகிர்ந்துக்கோங்கன்னு கேட்டா. எனக்கு ஞாபகமிருக்கிறது வரைக்கும் சொல்றேன். முதல்ல பதத்துக்கு அர்த்தம் சொல்றேன்.
> யோகீந்த்ராணாம் த்வதங்கேஷு > (Yogīndrāṇāṃ tvadaṅgeṣu)
>
யோகி என்பவன் பகவானை அடைந்தவன். யோகீந்த்ரஹ, எப்படி கீதையில பகவான் டெஃபைன் பண்றாரோ அந்த மாதிரி ஞானத்தினுடைய எல்லையில் இருப்பவன். அப்பேற்பட்ட ஒரு யோகீந்த்ரனுக்கும் உன்னுடைய ரூபத்தில், தலையிலிருந்து கால் வரைக்கும் கிருஷ்ணனுடைய அந்த மதுரமான ரம்யமான ரூபத்தை வர்ணிச்சு, பாதங்களை வர்ணிக்கும்போது இந்த ஸ்லோகத்தை சொல்றார்.
உன்னுடைய அங்கங்களுக்குள் அதிக ஸுமதுரம். மதுரம்னா இனிமை. ஸுமதுரம் – மிக இனிமை. அதிக ஸுமதுரம் – மிக மிக இனிமையானது உன்னுடைய பாதங்களை.

முக்தி பாஜாம் நிவாஸஹ. முக்தியை விரும்புபவர்களுக்கு அவர்கள் வசிக்குமிடமாக உன்னுடைய பாதம் இருக்கு. அதாவது முமுக்ஷுக்கள் எப்போதும் உன்னுடைய பாதத்துடைய தியானத்துலேயே இருக்கா.

பக்தானாம். பக்தர்களுக்கு காமவர்ஷ த்யுதரு கிஸலயம். வேண்டிய வரங்களை எல்லாம் அளிக்கும் கற்பக விருட்சத்தின் தளிர் போல உன்னோட பாதம் இருக்கு.
இந்த இடத்துல சுவாமிகள், குழந்தையோட தர்சனம், குழந்தையோட பாதங்கள் அப்படி மென்மையா இருக்கு. அதனால தளிர் போல இருக்குன்னு சொல்றார்.

நாதா தே பாதமூலம். உன்னுடைய அந்த பாதங்கள் நித்யம் சித்த ஸ்திதம் மே. எப்பொழுதும் என்னுடைய மனத்தில் இடையறாது இருந்து கொண்டு பவனபுரபதே கிருஷ்ணா. குருவாயூரில் குடிகொண்டிருக்கும் ஹே கிருஷ்ணா, நாதா, உலகத்துக்கெல்லாம் தலைவனே, காருண்ய ஸிந்தோ. கருணைக்கடலே, என் மனத்தில் உன்னுடைய திருப்பாதங்கள் எப்பொழுதும் விளங்கிக்கொண்டு ஹ்ருத்வா நிஃக்ஷேஷ தாபான். என்னுடைய எல்லாவிதமான தாபங்களையும் அடியோடு களைந்து, ப்ரதிஷது பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீம். பேரானந்தத்தை அளிக்கக்கூடிய மோக்ஷம் என்ற செல்வத்தை எனக்கு அளிக்கட்டும் அப்படின்னு ஒரு ஸ்லோகம்.
சுவாமிகள் முதல் வருஷம் பெரியவாட்ட போய் பாகவத ஸப்தாகம் பண்ணி முடிச்சபோது கோகுலாஷ்டமி அன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு சுவாமிகளை பூஜை பண்ண சொல்லிட்டு, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை சொல்லி ஸஹஸ்ரநாமார்ச்சனை பண்ணுங்கோன்னு சொல்லிருக்கா பெரியவா. அப்போ “துளசி தளம்”-னு தியாகையர்வாள் எல்லாம் பாடிருக்கா. துளசி ஒவ்வொரு துளசிதான் ஒரு தளம். வில்வம்லாம் மூணு சேர்ந்தா ஒரு தளம். துளசிங்கறது ஒவ்வொரு இலையா எடுத்து அர்ச்சனை பண்ணனும் அப்படின்னு அந்த மாதிரி துளசி ஆய சொல்லி, அந்த மாதிரி துளசி தளங்களை எடுத்து சுவாமிகளை ஸஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை பண்ண சொல்லிருக்கார். பெரியவா உட்கார்ந்து பார்த்திருக்கா.
ரொம்ப கொண்டாடிருக்கா. அதுல சுவாமிகளுக்கு ஒரு சந்தோஷம்.

சுவாமிகள் எங்குமே ரொம்ப ஹம்பிளா இருப்பார். பெரிவா சன்னிதினா கேட்கணுமா? பெரிவாகிட்ட போகும்போது “விதிதாநமயா விஷதைக கலா” அப்படிங்கற ஸ்லோகத்தை சொல்லி எனக்கு ஒரு படிப்பும் இல்லை, என்னை நீங்கதான் பேச வைக்கணும் அப்படின்னு நமஸ்காரம் பண்ணிட்டுதான் ஒவ்வொரு வாட்டியும் நான் பெரியவா முன்னாடி உட்கார்ந்து பேச ஆரம்பிப்பேன் அப்படின்னு சொல்வார். ஒவ்வொரு க்ஷணமும் அப்படி ஒரு பாவத்தோட சுவாமிகள் இருந்ததுனால சுவாமிகள்ட்ட ‘இது அப்படி இல்லையே, இது அப்படி’ அப்படின்னு திருத்தங்கள் சொல்றதோ இல்ல ‘இதுக்கு என்ன அர்த்தம் சொல்லு பார்க்கலாம்’ அப்படின்னு கேள்விகள் கேட்கறதோ மத்த பண்டிதர்கள் கிட்ட பெரியவா பண்ற மாதிரி அத்தனை வருஷத்துல ஒரு நாளும் பெரியவா அந்த மாதிரி கேட்டதில்லை, அப்படின்னு சொல்வார்.
சுவாமிகள் ஆனா அந்த மாதிரி பெரியவாளோட நெருக்கம் கிடைச்சுது, பெரியவா நம்மள ஒத்துண்டுருக்கா அப்படின்னு தெரிஞ்ச பின்ன, தனக்கு படிக்கும்போது ஏற்படக்கூடிய சந்தேகங்களை பெரிவா சன்னிதில சொல்லிடுவார். உபன்யாசத்துல. பெரிவா அத எப்படி கேட்டுக்கறான்னு பார்த்துப்பார். ஒரு வாட்டி வியாசர் மத்த எல்லா புராணங்கள் பண்ணியும் அதுல திருப்தி ஏற்படாமல் ஹரியினுடைய கதைகளை பேசணும் அப்படின்னு பாகவதம் பண்ணார். அந்த பாகவதத்தை சுகர் அத்யயனம் பண்ணிண்டார். சுகர் ஞானி. அவர் எதுக்கு பாகவதத்தை அத்யயனம் பண்ணிண்டார் அப்படின்னார், ஞானிகளும் கிருஷ்ண கதையில ரமிப்பா, அவர்களுக்கு பக்தர்களுடைய சங்கம்தான் ரொம்ப பிடிக்கும். கிருஷ்ண கதைய பேசினா பக்தர்கள் வருவா, அதுவும் ஏழு நாள் விஸ்தாரமா இந்த பாகவதத்தை அத்யயனம் பண்ணி இத பேசினா ஏழு நாள் பக்தர்களுடைய சங்கத்துல இருக்கலாம் அப்படின்னு சுகர் பாகவதம் அத்யயனம் பண்ணிண்டார் அப்படின்னு பெரியவாட்ட சொல்றா.
பெரிவா ‘எவ்வளவு பெரிய ஞானியா இருந்தாலும் “ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ, கமலாநாதாய நமஹ, வாஸுதேவாய நமஹ, ஸநாதநாய நமஹ” அப்படின்னு அர்ச்சனை பண்ணும்போது ஒரு சந்தோஷம்’ அப்படின்னு சொல்றாளோ? அப்படின்னாளாம். தன்னுடைய அனுபவத்தை பெரியவா பகிர்ந்துக்கறா. இந்த மாதிரி பெரியவா சொன்ன பின்ன சுவாமிகள் ஒரு கருத்து சொன்னாராம். பகவத் கீதையில ஸ்திதப்ரக்ஞன், யோகி, உத்தம பக்தன், குணாதீதன் என்கிற ஞானி அப்படின்னு பதங்கள் வருது, ஆனா இந்த பதங்களுக்கெல்லாம் பகவான் சொல்ற லக்ஷணங்களை பார்த்தா, இதெல்லாமே பரியாய பதங்கள் தான் அப்படின்னு தோண்றது அப்படின்னு சொன்னாளாம்.
பெரிவா “ஆஹஹா” அப்படின்னு கொண்டாடினாளாம். பரியாய பதம்னா ஸினானிம்ஸ் (Synonyms). பகவான் இவாளுக்கு கொடுக்கிற லக்ஷணங்கள்னா இலக்கணம், அடையாளங்கள். அந்த அடையாளங்களை பார்த்தா உத்தம பக்தனும் ஞானியும் ஒரே மாதிரிதான் இருப்பான் அப்படின்னு, சுவாமிகளுக்கு பாகவத கொள்கை என்னன்னா உத்தம பக்தியின் மூலமாவே ஞானத்தை அடையலாம் அப்படிங்கற அந்த பாகவத கொள்கைய சுவாமிகள் வாழ்ந்துண்டுருக்கார். அதனால இது மூலமாவே ஞானத்தை அடையலாம் அப்படிங்கறத பெரிவா வாயால ஆசிர்வாதம் வாங்கிக்கணும்ங்கறதுக்காக சொன்னவுடனே, பெரிவாளும் மகிழ்ந்து ஆசிர்வாதம் பண்ணிருக்கா.
இந்த யோகீந்த்ராணாம் ஸ்லோகத்துல முதல்ல வர வரி:
> யோகீந்த்ராணாம் த்வதங்கேஷு அதிக ஸுமதுரம்
> (Yogīndrāṇāṃ tvadaṅgeṣu adhika sumadhuram)
>
கீதையில பக்தர்கள் நாலு விதம்: ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி. இவா நாலு பேருமே என்னோட பக்தர்கள் தான்னு பகவான் கீதையில சொல்றார். அதுல ஞானியும் பகவான் பக்தன்னு சொல்றார். அந்த ஞானிகள் பகவானோட பாதத்துல ரமிச்சிருப்பா. சுகர் பாகவதம் அத்யயனம் பண்ணிண்டார் அதெல்லாம் சொன்னார்.
முக்தி பாஜாம் நிவாஸஹ. மோக்ஷத்தை விரும்புபவர்கள் பகவானோட பாதத்துலேயே லயிச்சிருப்பா அப்படின்னு முமுக்ஷுக்களும் பக்தி பண்ணுவா, உன்னுடைய பாதத்தை விரும்புவார்கள். அர்த்தார்த்தி என்று உலகத்துல நன்மைகளை விரும்புபவர்கள். அவா என்கிட்ட புத்திசாலித்தனம் இருக்கு நான் சாமர்த்தியமா எல்லாம் சாதிச்சுப்பேன்னு நினைக்காம பகவானுடைய அருளும் இருந்தாதான் நமக்கு நன்மைகள் கிடைக்கும் அப்படின்னு தெரிஞ்சுக்கறதே ஒரு இன்டலிஜென்ஸ் (Intelligence) தானே?
அப்படி பக்தி பண்ணி பகவான்ட்ட பிரார்த்தனை பண்ணி அது மூலமா உலகத்துல நன்மைகளை அடைஞ்சு அனுபவிக்கும் போது ஒரு பாயிண்ட்ல அவா மனசு பழுத்து, முமுக்ஷு ஆயிடறா. பக்தானாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம் அப்படின்னு அந்த பாதத்துல பஜனம் பண்ணி பிரார்த்தனை பண்ணி அது மூலமா செல்வத்தை அடைந்தவர்கள் அந்த பாத பஜனத்தோட ருசியினால முமுக்ஷுக்களா ஆயிடறா.
அதே மாதிரி ஹ்ருத்வா நிஃக்ஷேஷ தாபான் அப்படின்னு என்னுடைய மனசுல இருக்குற தாபங்கள் எல்லாம் போகணும் அப்படின்னு கேட்கறதுனால ஆர்த்தி. ஏதோ ஒரு கஷ்டம், உலக விஷயங்கள்ல சுகத்தை நாடுறோம், சுகமும் வருது துக்கமும் வருது, அந்த துக்கம் என்னை பாதிக்காம இருக்கணும், என்னோட தாபங்கள் போகணும் அப்படின்னு பகவானை வேண்டிண்டா தாபங்கள் போகும். அப்படி ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி அந்த நாலு பக்தர்களும் உன்னுடைய பாதத்துல ரமிக்கிறார்கள். அந்த பாதங்கள் இடையறாது என் மனசுல இருக்கணும். இருந்து என்னுடைய தாபங்களை போக்கி எனக்கு மோக்ஷத்தை கொடுக்கணும். அந்த பாதங்கள் எப்படி இருக்குன்னா குழந்தையோட பாதங்கள் தளிர் போல இருக்கு அப்படின்னு இதெல்லாம் தான் சுவாமிகள் அன்னைக்கு சொன்னார்.
எனக்கு இந்த ஒரு ஸ்லோகம் தான் சுவாமிகள் நாராயணீயத்துல இருந்து சொல்லிக் கொடுத்ததுன்னு பார்த்தா, ஆனா சுவாமிகள் எல்லாம் டீச்சர் பார் எக்ஸலன்ஸ் (Teacher par excellence). அவர் அன்னைக்கு சொன்ன விதத்திலேயே அது அப்படியே மனசுல பதிஞ்சுடுத்து. மேலும் அது அவருடைய கடைசி உபதேசம்ங்கற மாதிரி சரம சந்தேசம்னு எடுத்துண்டு தினம் படுத்துக்கும்போது ‘ஹனுமான் அஞ்சனா ஸுனு’-ன்னு ஒரு ஸ்லோகம் சொல்லுவேன், அதோட இந்த யோகீந்த்ராணாமும் தினம் சொல்லிண்டு இருக்கேன். அதோட அனுக்ரஹமும் நம்ம இந்த வருஷம் நாராயணீயம் முழுக்க கத்துண்டு இன்னைல இருந்து ஆரம்பிச்சு தினம் ஒரு தசகமா நாராயணீயம் டே அன்னைக்கு முடிக்கிற மாதிரி படிக்கணும்னு ஆரம்பிச்சிருக்கேன். முயற்சி பண்ண போறேன்.
கோபிகா ஜீவன ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா!

Today is September 5th, 2020. On September 5th, 2003, I had gone to visit Swamigal (Govinda Damodara Swamigal). When I went to prostrate (offered namaskaram) before him in the evening, he recited the shloka, “yogīndrāṇāṃ tvadaṅgeṣu,” in his resonant voice, sounding as if nectar were pouring out.
Then, he gave a detailed explanation of its meaning. It was on that day that he first told me about Narayaneeyam Day. Every year, on the 28th day of the Karthigai month, Narayaneeyam Day is celebrated at the Guruvayur temple. It is celebrated because Narayana Bhattathiri composed one dasakam (ten verses) every day, and on the 28th of Karthigai, he completed the Narayaneeyam and was blessed with the vision (darshanam) of the Lord Guruvayurappan. It is said he then sang, “agre pashyāmi” (I see Him before me).
Following that tradition, the custom is to count 100 days back from that date and complete one full cycle of the Narayaneeyam by reciting one dasakam daily. Swamigal told me, “I am starting this today; So I told you about this as soon as you arrived. I was wondering if I could recite this ‘yogīndrāṇāṃ’ shloka like I used to.” He had a very resonant voice, but it possessed a unique melody. He would read slokams very clearly, pausing and enunciating every word. I have mentioned this many times before, but because I feel its greatness more and more, I keep repeating it.
Whenever I hear Swamigal speak, I realize that if one wants to study Sanskrit shlokas, this is exactly how they should be studied. By reading them that way, the meanings become clear automatically. Take a word like “Yoga” in the Sanskrit language; a dictionary might give one definition in English and another in Tamil. There are so many aspects—attaining the Supreme through Ashtanga Yoga, the Yamas and Niyamas, and so on. But nowadays, we have reduced “Yoga” to just wearing yoga pants, buying a yoga mat, and performing physical postures (asanas), haven’t we?
In this manner, every single word in the Sanskrit language has a deep meaning. If one recites those shlokas systematically and repeatedly, while following the conduct (achara) and discipline (anushthanam) prescribed by the Rishis—adhering to Truth (Satyam), Dharma, and Compassion (Karuna) in life—then those Rishis and the Divine Himself will reveal the true meaning to them. This is what is called Shastrartha (the true intent of the scriptures). That is why the Great Masters hold the principle that merely looking at a translation is not enough to understand the meaning. That is why shlokas must be recited clearly. That is a form of worship (upasana) in itself; it is a penance (tapas).
Swamigal would recite shlokas repeatedly in that manner. On that day, he explained the meaning of this “yogīndrāṇāṃ” shloka. He spoke about Narayaneeyam Day. Having spoken thus on that day, and having completed the cycle by the 28th of Karthigai, Swamigal would have received the darshanam of Krishna. I was just saying to friends that this is why he attained Siddhi (passed away) shortly thereafter.
They asked me to share the meaning of that “yogīndrāṇāṃ” shloka as explained by him, I will share what I remember. First, I will explain the word-for-word meaning:
> yogīndrāṇāṃ tvadaṅgeṣu
>
A Yogi is one who has attained the Lord. A Yogindra is one who stands at the very peak of knowledge (Jnana), as defined by Lord Krishna in the Gita. Describing the form of Guruvayurappan, for such a Yogindra—from head to toe, describing the sweet and beautiful form of Krishna—the poet speaks of the Feet while reciting this shloka.
Among all your limbs, [the Feet are] adhika sumadhuram. Madhuram means sweetness. Sumadhuram means very sweet. Adhika Sumadhuram means the sweetest of the sweet—such are Your Feet.
mukti bhājām nivāsaḥ. Your Feet serve as the dwelling place for those who desire liberation (Mukti). This means that the Mumukshus (seekers of liberation) are always immersed in meditation upon Your Feet.
bhaktānām. For the devotees, [the Feet are] kāmavarṣa dyutaru kisalayam. Your Feet are like the tender sprout of the Kalpavriksha (celestial wish-fulfilling tree) that rains down all desired boons. At this point, Swamigal mentioned the vision of the Child (Krishna); a child’s feet are so soft, which is why they are compared to a tender sprout.
nāthā te pādamūlam. Those Feet of Yours, nityam citta sthitam me. May they reside eternally in my mind. pavanapurapate kṛṣṇā. O Krishna, Lord of Guruvayur! O Natha, Master of the entire universe! kāruṇya sindho. O Ocean of Mercy! May Your holy Feet always shine in my heart, hṛtvā niḥśeṣa tāpān. Removing every single one of my afflictions (tapas) completely, pradiśatu paramānanda sandoha lakṣmīm. May they grant me the wealth of Moksha, which provides a flood of Supreme Bliss. This is the shloka.
During the first year Swamigal went to Periyava (Kanchi Mahaperiyava) and completed a Bhagavata Saptaham, on the night of Gokulashtami at 12 AM, Periyava asked Swamigal to perform puja and do Sahasranama Archana by reciting the Vishnu Sahasranamam. At that time, Periyava said ‘Saint Tyagaraja has sung “Tulasi Dalam” (Tulsi leaves). In a Tulsi plant, each individual leaf is considered a dalam (petal/leaf). For Vilvam (Baal), three leaves together make one dalam. But for Tulsi, one must take each leaf individually to perform archana. Periyava asked for Tulsi to be split in that manner and asked Swamigal to perform archana with those Tulsi leaves while reciting the Sahasranamam. Periyava sat and watched.
He celebrated it greatly. That brought great joy to Swamigal.
Swamigal was always very humble. And in the presence of Periyava, need one even ask? Whenever he went to Periyava, he would recite the shloka “viditānmayā viśadaika kalā” (I know not even a single clear art/branch of learning) and say, “I have no education; you alone must make me speak.” Only after offering such a namaskaram would I sit before Periyava each time and begin to speak. Because Swamigal maintained that state of being in every moment, Periyava never once in all those years corrected him by saying “this isn’t like that” or tested him by saying “tell me the meaning of this,” as Periyava often did with other scholars.
However, after gaining that closeness with Periyava and realizing that Periyava had accepted him, Swamigal would mention the doubts that arose during his studies in Periyava’s presence—during his discourses (upanyasams). He would observe how Periyava listened. Once, Sage Vyasa, having composed all other Puranas but still feeling unsatisfied, composed the Srimad Bhagavatam to speak of the stories of Hari. Shuka studied Bhagavatam. Swamigal explained, “Shuka is a realized Jnani. Why did he study the Bhagavatam?” He explained that even Jnanis revel in the stories of Krishna; they love the company of devotees. Speaking the stories of Krishna brings devotees together, and by studying and speaking this Bhagavatam for seven days, one can remain in the company of devotees for those seven days. Swamigal said this in front of Periyava.
Periyava replied, “No matter how great a Jnani one is, doesn’t it bring joy to perform archana saying ‘Śrī Kṛṣṇāya Namaḥ, Kamalānāthāya Namaḥ, Vāsudevāya Namaḥ, Sanātanāya Namaḥ’?” Periyava was sharing his own experience. After Periyava said this, Swamigal shared an observation. In the Bhagavad Gita, terms like Sthitaprajna, Yogi, Uttama Bhakta, and Gunatita (the Jnani) appear. But if one looks at the characteristics the Lord attributes to each, it seems they are all Paryaya Padams.
Periyava exclaimed, “Aha!” and agreed to this. Paryaya Padam means synonyms. The Lakshanams, definitions, given by the Lord. If you look at those, an Uttama Bhakta and a Jnani appear exactly the same. Swamigal lived by the Bhagavata principle that one can attain Jnana (knowledge) through Uttama Bhakti (supreme devotion) alone. He mentioned this to receive the blessing from Periyava’s own mouth, and Periyava too rejoiced and blessed him.
In this “yogīndrāṇāṃ” shloka, the first line is:
> yogīndrāṇāṃ tvadaṅgeṣu adhika sumadhuram
>
In the Gita, devotees are of four kinds: Arthi (the distressed), Artharthi (the seeker of wealth/benefit), Jignasu (the seeker of knowledge), and Jnani (the wise). The Lord says in the Gita that all four are His devotees. He even calls the Jnani a devotee. Those Jnanis revel in the Feet of the Lord. I mentioned how Shuka studied the Bhagavatam.
mukti bhājām nivāsaḥ. Those who desire liberation reside in the Feet of the Lord; thus, the Mumukshus also practice devotion and desire Your Feet. The Artharthi are those who desire well-being in the world. Realizing that “I shouldn’t think I can achieve everything just with my cleverness or capability, but that we receive good only if the Lord’s grace is there”—isn’t that very realization a form of intelligence?
By practicing devotion and praying to the Lord, and through that attaining and experiencing well-being in the world, at some point their minds ripen, and they become Mumukshus. bhaktānām kāmavarṣa dyutaru kisalayam—those who have attained wealth through worship and prayer at those Feet eventually become Mumukshus because of the “taste” (ruchi) of that worship.
Similarly, hṛtvā niḥśeṣa tāpān—the Arthi asks because they want the afflictions (tapas) in their mind to be removed. There is some suffering; we seek pleasure in worldly matters, but both pleasure and pain come. Praying to the Lord, “May that pain not affect me, may my afflictions go,” removes those afflictions. Thus, the four kinds of devotees—Arthi, Artharthi, Jignasu, and Jnani—all revel in Your Feet. May those Feet eternally reside in my mind. Residing there, may they remove my afflictions and grant me Moksha. And what are those Feet like? They are like tender sprouts. This is what Swamigal taught me on that day.
I see now that this was the only shloka Swamigal taught me from the Narayaneeyam, but Swamigal was a “Teacher Par Excellence.” The way he said it that day, it became etched in my heart. Furthermore, taking it as his final instruction—a Charama Sandesham—I recite it every day. When I go to bed, I recite a shloka starting ‘Hanuman Anjana Sunu,’ and along with that, I recite this ‘yogīndrāṇāṃ’ every day. With that grace, I have started a resolve this year to learn the entire Narayaneeyam, starting today and completing it by Narayaneeyam Day by reciting one dasakam daily. I am going to make the effort.
Gopika Jeevana Smaranam, Govinda! Govinda!

3 replies on “யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள்”

Sep 5th 2003 to 2020 – 17 long years have gone.Though our swamigal had so many disciples, I consider you as an important disciple for taking up all his parayanams and in each and every post you talk/explain in detail abour Govinda Damodara Swamigal.May Swamigal bless his showerings on you and the family.Thanks.
Ravishankar, Perambur.

Your devotion to Triplicane Periava keeps you and us all in good stead. I have been following your audios and comments that are straight from the heart.

மதுரம் ஸுமதுரம் என்பது ஸ்வாமிகள் குரலுக்கும் அல்லவா? அதுவும் கிருஷ்ண காருண்ய ஸிந்தோ என்று திரும்பத் திரும்ப சொல்லும்போது, நிஜமாகவே அவருக்கு கிருஷ்ண தரிசனம் கிடைத்தது போல் குரலில் குழைவு , பக்தி பிரவாகம்!!
சாதாரணமாகவே எல்லா தெய்வங்கள் பாதங்களையும் மனதில் இருத்திக் பக்தி பண்ணினால் விசேஷம் அதிகம்!
அதுவும் குழந்தை கிருஷ்ணன் பாதம் தளிர் ஒத்தது! அப்படிப்பட்ட தளிர் பாதங்களை நெஞ்சில் ஒருத்தி.பக்தி பண்ணினால் குழந்தை அங்கு ஓடோடி வருவான் என்பது, பட்டத்ரி ஸ்லோத்திலும் ஸ்வாமிகள் அதை நெகிழ்ச்சியுடன் பாராயணம் செய்யும் பாங்கிலும் உணர முடிகிறது !
கிருஷ்ண தரிசனம் அவருக்குக் கிடைத்திருக்கும் உறுதியாக !
கணபதிக்கு குரு பக்தி ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது !
குரு பக்தி மேலும் மேலும் உயர உறு துணை நிற்கும் !

ஹரே கிருஷ்ணா, குருவாயூரப்பா….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.