Categories
mooka pancha shathi one slokam

ஹேரம்பே ச குஹே ச

மந்தஸ்மித சதகம் 75வது ஸ்லோகம் பொருளுரை – ஹேரம்பே ச குஹே ச

हेरम्बे च गुहे च हर्षभरितं वात्सल्यमङ्कूरयत्
मारद्रोहिणि पूरुषे सहभुवं प्रेमाङ्कुरं व्यञ्जयत् ।
आनम्रेषु जनेषु पूर्णकरुणावैदग्ध्यमुत्तालयत्
कामाक्षि स्मितमञ्जसा तव कथङ्कारं मया कथ्यते ॥

9 replies on “ஹேரம்பே ச குஹே ச”

முதற்கண் சித்திரம் ! சௌம்யா கை வண்ணம் ! இந்த ஸ்லோகத்தை அடிப்படையாக வரைந்தால் போல் தோன்றுகிறது !
அல்லது சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்லோகத்தை தேர்வு செய்தாரா தெரியவில்லை ! எப்படியானாலும் மிக அழகான பொருளுரை விளக்கம் !!
தாய் என்றாலே அன்பின் இருப்பிடம் அல்லவா?
லோகத்துக்கே தாயார்..ஸ்ரீமாதா எப்படி இருப்பாள் ? அன்பின் உறைவிடம் அல்லவா? ஆக்குதல் என்ற படைத்தல் தொழில், காத்தல்
கோவிந்த ரூபிணி என்ற விஷ்ணு ரூபம் அவள்தான் அல்லவா?
விநாயகரிடம், சுப்ரமண்ய ரிடமும் மிக்க அன்பு பூண்டு மன்மத சத்ருவான சிவனிடம் மிகுந்த பீரீதியுடன் தன் பக்தர்களிடம் கருணையுடன் விளங்கும் தேவியின் புன்னகையை நம்மால் வர்ணிப்பது ஸ்ரம சாத்தியமான செயல் !!
பெரியவா இப்படித்தான் தாய் அன்புடன் அனைவரையும் அன்பினால் அணைத்து நம்மைக்.காத்து வருகிறார் இன்றளவும் !!
தன்னைப்பற்றி சொல்லும்போது கணபதி தன் பெயருக்குள்ள சிறப்பை அழகாகச் சொன்னார்! விநாயகர், முருகன் இரு பெயரும் இணைந்து வருவதால் சுவாமிகள் இந்த ஸ்லோகத்தை இரு முறை வாசிப்பது குறித்து தகவல் அருமை !! ஜய ஜாகதம்பா சிவே

மிகவும் அற்புதமான ஸ்லோகம் அழகான விளக்கம். ராமாயண மேற்கோள் அருமை. பெண்மையின் உயர்வை மூககவி இந்த ஸ்லோகத்தில் எத்தனை அழகாக வர்ணித்திருக்கிறார் என்று சொன்னது சிறப்பு.

“நம் குறையைப் போக்கக்கூடிய கருணா ஸமுத்திரமாக இருக்கிற பராசக்தியிடம், நாம், ‘அத்வைதத்தைக் கொடு, ஞானத்தை கொடு, நிறைவைக் கொடு’ என்று கூடப் பிரார்த்திக்க வேண்டியதில்லை. அன்பாகக் கடமையைச் செய்து கொண்டு அவளை ஆனந்தமாக பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும். பராசக்தி தானாக அநுக்ரஹத்தைப் பண்ணுவாள்.” என்கிறார் பெரியவா.

“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாதிருக்க வரம் தரவேண்டும்”

என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்ன மாதிரி, பகவத் ஸ்மரணம் எப்போதும் இருக்கவேண்டும்.

ஞான மார்க்கத்துக்கு, அத்வைதத்துக்கு பரமாசாரியாளாக இருக்கிற நம் சங்கர பகவத்பாதர், ‘சிவாநந்த லஹரி’யில், ‘நான் புழுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! இல்லை, கொசுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! அதனாலெல்லாம் என்ன மோசம் போய்விட்டது? இல்லை, ஒரு மாடாகத்தான் ஜன்மா எடுத்தால் என்ன? உன்னுடைய பாதத்தை ஸ்மரிக்கிற பரமானந்த வெள்ளத்தில் மட்டும் ஹ்ருதயம் தோய்ந்து கிடக்குமானால், அப்போது எந்த உடல் வாய்த்தால்தான் என்ன?” என்கிறார்.

எந்த உடம்பு வந்தாலும், எப்படிப்பட்ட ஜன்மா வாய்த்தாலும், அந்த பரமாத்மாவை அன்பே உருவான தாயாக பாவித்து, ஸாக்ஷாத் அந்தப் பரதேவதையின் சரணாரவிந்தத்தில் நீங்காத நினைவை வைத்து விட்டால் போதும். அவள் ஞானாம்பிகை. ஞானப்பால் கொடுப்பவள். கர்மாவினாலும், பக்தியினாலும் நம் மனஸிலிருக்கிற அழுக்கை எல்லாம் துடைத்து விடுவாள். அந்த நிலையை அவளே அநுக்ரஹிப்பாள்.

🙏🙏🙏🙏

In Sowndhayalahari Shankarar அம்பாளின் chubkkam (முகவாய்) and நகங்களின்
காந்தியை வர்ணிக்கும் ஸ்லோகங்களை Mookakavi நினைவு படுத்துகிரார்..(kathaya kathayama katha ume)(auvpomya rahitham) .
Wonderful drawings.Superb explanation. பௌர்ணமி தினத்தில் அற்புதமான prayer.Thank you.
We

ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம்!
இந்த ஸ்லோகத்தின் கருத்து மிக ஆழமாக உள்ளது.
வாத்ஸல்யம், பிரேமை, கருணை எல்லாம் அன்பின் வெளிப்பாடு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக ஸ்ரீ காமாக்ஷியின் மந்தஸ்மிதத்தினால் பரிமளிக்கும் என்பதை மிக நயமான, தேர்ந்த வார்த்தைகள் மூலம் அருமையானதொரு விளக்கம்.
Ms. Sowmya’s picture depicts the entire meaning of the slokam. Thanks for sharing this on this auspicious day. 💐 🙏

🙏🏻🙏🏻 romba azhaga irukku slokam. Romba thanks Anna. Keka keka romba inimaya Amrithama irukku🙏🏻🙏🏻

Sowmyaji and Saraswathiji thanks again for beautiful explanations. Also Sowmyaji, every drawing speaks, so beautiful and divine. Periyava thunai, periyava sharanam 🙏🏻🙏🏻

Drawing is so beautiful. இந்த ஸ்லோகம் அதை விடவும் இந்த உபன்யாசம் கேட்க கேட்க ஆனந்தம். நான்‌ தினம் ஒரு முறை கேட்கிறேன். தெவிட்டாத இனிமை. நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.