102. ராமர் சீதையை அழைத்துக் கொண்டு சித்ரகூட மலையில் உள்ள அழகான குகைகள், மரங்கள், மூலிகைச் செடிகள், பூக்கள், பறவைகள், மிருகங்கள், கின்னரர்கள், வித்யாதரர்கள், இவற்றை காண்பிக்கிறார். ‘உன்னோடும் லக்ஷ்மணனோடும் இந்த சித்ரகூடத்தில் நூறு வருடங்கள் இருந்தாலும் எனக்கு எந்த கஷ்டமுமே தெரியாது. நீங்கள் எனக்கு அனுகூலமாக இருப்பதாலும், இந்த மலையும் நதியும் ரிஷிகளும் உள்ள சூழ்நிலை மிக ரம்யமாக இருப்பதாலும் நான் மிக ஆனந்தமாக இருக்கிறேன். இது அயோத்தியில் அரசாட்சியை விட மேலான சந்தோஷத்தை எனக்கு அளிக்கிறது’ என்று கூறுகிறார். பின்னர் அவர்கள் மந்தாகினி நதியில் ஸ்நானம் செய்துவிட்டு ஆஸ்ரமத்தை வந்து அடைகிறார்கள்.
[சித்ரகூடத்தில் சீதையோடு ராமர்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/102%20chitrakootathil%20sitaramar.mp3]
Tag: valmiki ramayanam in tamil
முனி குமாரன் வதம்

87. தசரதர் கௌசல்யா தேவியிடம் தான் இளமையில் அறியாமல் செய்த ஒரு தவற்றைப் பற்றி கூறுகிறார். காட்டில் வேட்டையாட சென்றபோது ‘யானை நீர் அருந்துகிறது’ என்றெண்ணி தசரதர் ஒரு முனிகுமாரனின் மீது அம்பு எய்து விடுகிறார். அந்த முனி குமாரன் ‘ஒரு அம்பினால் என்னையும் என் கண்ணில்லாத பெற்றோரையும் கொன்று விட்டீர். என் தந்தை உங்களை சபிக்காமல் என்று கூறி உயிர் விடுகிறான். தசரதர் நடந்த விஷயத்தை அவன் பெற்றோரிடம் சென்று தெரிவிக்கிறார்.
[முனி குமாரன் வதம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/87%20muni%20kumaran%20maranam.mp3]
ராமர் சித்ரகூடம் அடைந்தார்

83. ராமர் சித்ரகூடத்தின் இயற்கை அழகை வியந்து ‘இங்கு நாம் ரிஷிகளுடன் சுகமாக வசிப்போம்’ என்று சொல்கிறார். பிறகு அவர்கள் வால்மீகி முனிவரை தரிசித்து வணங்குகிறார்கள். பின்னர் மந்தாகினி நதி தீரத்தில் ராமர் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, லக்ஷ்மணர் அங்கு ஒரு பர்ணசாலை கட்டுகிறார். ராமர் உரிய மந்திரங்களை ஜபித்து, எல்லா தேவதைகளுக்கும் பலி கொடுத்து வாஸ்து சாந்தி செய்து, அந்த பர்ணசாலையில் அவர்களோடு இந்திரனைப் போல சுகமாக வசிக்க ஆரம்பிக்கிறார்.
[ராமர் சித்ரகூடம் அடைந்தார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/83%20chithrakoota%20vaasam.mp3]
சுமந்திரரின் ராம பக்தி

80. ராமர் படகின் அருகில் போகும் போது சுமந்திரரிடம், தசரதருக்கும் பரதனுக்கும் கூற வேண்டிய செய்திகளைச் சொல்லி, அவருக்கு விடை கொடுக்கிறார். சுமந்திரர் ராமரின் பிரிவை நினைத்து பலவாறு வருந்துகிறார். தன்னையும் வனவாசத்திற்கு கூட அழைத்துச் செல்லும்படி வேண்டுகிறார். ராமர் அவரிடம் ‘நீங்கள் திரும்பிச் சென்று ராமரை காட்டில் விட்டு விட்டேன் என்று சொன்னால் தான், கைகேயி என் தந்தையை சந்தேகப் படாமல் இருப்பாள். அதனால் போய் வாருங்கள்’ என்று கூறி விடைபெறுகிறார். ஆலம் பாலினால் சிகையை ரிஷிகளைப் போல் ஜடையாக தரித்துக் கொண்டு, படகில் ஏறுகிறார்.
[சுமந்திரர் ராமனிடம் பிரார்த்தனை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/80%20sumanthrar%20ramar.mp3]
ஸீதா கல்யாண வைபோகமே

36. முனிவர்கள் குறித்த மங்கள நன்னாளில், ஜனகர் தன் நான்கு பெண்களை அலங்கரித்து அழைத்து வர, தசரதரும் தன் நான்கு புதல்வர்களையும் அழைத்து வருகிறார். ஸீதா தேவியின் கரங்களை ஜனகர் ஸ்ரீ ராமரின் கரங்களில் கொடுத்து ‘இந்த என் பெண் சீதையை உன் மனைவியாக ஏற்றுக் கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவள் கைகளைப் பற்றிக்கொள். இவள் கணவனையே தெய்வமாக கொண்டு உனக்கு தர்மங்களை பின்பற்றுவதில் துணை நிற்பாள். உன்னை எங்கும் நிழலெனப் பின்தொடர்வாள்.’ என்று கூறி மந்திரங்களால் தூய்மை செய்யப்பட்ட ஜலத்தை கைகளில் விட்டு கன்யகாகாதானம் செய்து கொடுக்கிறார். அவ்வாறே மற்ற மூன்று பெண்களான ஊர்மிளை மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்தியை முறையே லக்ஷ்மண பரத சத்ருக்னருக்கு கன்யகாகாதானம் செய்து தருகிறார்.
[ஸீதா கல்யாணம்]

35. ஜனகர் சபையில் வசிஷ்ட பகவான், தசரதரின் பூர்வ வம்சத்தைக் கூறி ராமனுக்கு சீதையை பெண் கேட்கிறார். ஜனகர் தன் பூர்வ வம்சத்தைகச் சொல்லி ராமருக்கு சீதையையும் லக்ஷ்மணனுக்கு ஊர்மிளையையும் மணம் செய்து தர சம்மதிக்கிறார். விஸ்வாமித்ரர், பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் ஜனகரின் தம்பியின் பெண்களான மாண்டவியையும் சுருதகீர்த்தியையையும் மணமுடிக்கலாம் என்று கூற, ஜனகர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறார்.[வசிஷ்டர் சீதையை ராமருக்கு பெண் கேட்கிறார்]
தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்

34. ஜனகர், விஸ்வாமித்ரர் அனுமதி பெற்று, தசரதரை அழைத்து வர தூதர்களை அனுப்புகிறார். தசரதர் கல்யாண சேதி கேட்டு சந்தோஷத்துடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு மிதிலை வந்து சேர்கிறார். ஜனகர் அவர்களை வரவேற்று உபசரித்து கல்யாணத்திற்கு நாள் குறிக்கிறார்.[தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்]
சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்

33. விஸ்வாமித்ரரின் உத்தரவின் பேரில் ஜனக மஹாராஜா தன்னிடமிருந்த சிவ தனுசை ராம லக்ஷ்மணர்களுக்கு காண்பிக்கிறார். இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால் என் மகள் ஸீதையை அவனுக்கு மணமுடித்து தருவேன் என்று கூறுகிறார். ராமர், முனிவரிடம் உத்தரவு பெற்று அந்த வில்லை எடுத்து நாண் பூட்டும் போது அந்த வில் அவருடைய அபார பலத்தினால் இரண்டாக முறிந்து விழுகிறது. ஜனக மஹாராஜா தன் மகளுக்கேற்ற மணாளன் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார். [சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்]