அம்பா பஞ்சகம் என்று அழைக்கப்படும், இந்த, அம்பாளுடைய திவ்ய நாமங்கள் நிறைந்த அழகான ஸ்தோத்ரத்தின் முடிவில் ‘இதை காலையிலும் மாலையிலும் படிப்பவன், வித்தையும், செல்வமும், தர்மத்தில் பற்றுள்ள நல்ல மனைவியையும் அடைவான்‘ என்ற பலஸ்ருதி சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த வலைதளத்தில் முப்பத்து மூன்று பகுதிகளாக நிகழ்த்திய ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன்.
இணைப்பு இங்கே ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ராமாயண பாகவதத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணினார். எப்போதும் ராமாயண பாகவதம் படிக்கறது, ப்ரவசனம் பண்றது அப்படின்னு இருந்தார். அதுக்கு நடுவுல நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் ஆச்சார்யாளோட ஸ்லோகங்கள் எல்லாம் விரும்பி படிப்பார். மேலும் முகுந்த மாலை, ஆனந்த ஸகாரஸ்தவம், மூகபஞ்ச சதி போன்ற ஸ்தோத்திரங்கள், இந்த பக்தி மார்கத்துல போகறதுக்கு எதெல்லாம் ஹேதுவா இருக்குமோ, அதெல்லாம் விரும்பி பாராயணம் பண்ணுவார்.
பகவன் நாம மஹிமை – ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு
கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், தன்னிடம் வந்த எல்லோருக்கும் “இடைவிடாது ராம நாம ஜபம் பண்ணுங்கள். அது ஒன்றே உங்களுக்கு பக்தி, விரக்தி, ஞானம் அளித்து முக்தி அளிக்கும்” என்று சொல்வார். அதற்கு அவர் மஹாபெரியவாளின் இந்த கீழ்கண்ட அருள்வாக்கை அடிப்படையாக கொண்டிருந்தார்.
இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவா ஜயந்தி. மகாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அதை, சிவராமன் அண்ணா கேட்டுக் கொண்டபடி நான் படித்து, ஒலிவடிவில் வெளியிட்டார். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இங்கே பெரியவா பாதத்தில் சமர்பிக்கிறேன். (இரண்டாம் பகுதி)
இன்று வைகாசி அனுஷம். மகாபெரியவா ஜயந்தி. மகாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அதை, சிவராமன் அண்ணா கேட்டுக் கொண்டபடி நான் படித்து, ஒலிவடிவில் வெளியிட்டார். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இங்கே பெரியவா பாதத்தில் சமர்பிக்கிறேன்.
இன்று வைகாசி விசாகம். முருகப் பெருமான் அவதரித்த திருநாள். அதை கொண்டாட அருணகிரிநாதர் அருளிய சீர்பாத வகுப்பு என்ற அற்புதமான முருகனுடைய துதிக்கு, பொருள் சொல்லி இங்கே சமர்பிக்கிறேன்.
சீர் பாத வகுப்பு பொருளுரை (42 min audio file)

ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் (13 min audio file)
ஸுப் ர மண்ய புஜங்கம் முப்பத்து இரண்டாவது ஸ்லோகம் (5 min audio file)
ஸுப்ரமண்ய புஜங்கத்துல முப்பத்திரெண்டாவது ஸ்லோகம்,
जयानन्दभूमञ्जयापारधाम-
ञ्जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।
जयानन्दसिन्धो जयाशेषबन्धो
जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥ ३२॥





