அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் (11 min audio in tamil. same as the script below)
இன்னிக்கு வால்மீகி இராமாயண ஸ்லோகம். பாலகாண்டத்துல பத்தொன்பதாவது ஸர்கத்துல விஸ்வாமித்ரர், தசரதர்கிட்ட, சொல்றார்.
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் (11 min audio in tamil. same as the script below)
இன்னிக்கு வால்மீகி இராமாயண ஸ்லோகம். பாலகாண்டத்துல பத்தொன்பதாவது ஸர்கத்துல விஸ்வாமித்ரர், தசரதர்கிட்ட, சொல்றார்.

கடந்த பதினைந்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, இரண்டாவது புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹாரிணீம்
பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே (8 min audio in tamil. same as the script below )

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது இதுவே என்று எனக்கு தோன்றுகிறது. அருள் நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும்.
2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகமும் சித்திக்கும்.
3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது.

ஸ்ரீராமர் தர்மத்தின் வடிவம். அவருடைய பட்டாபிஷேக வைபவம் என்பது
அதர்மத்தை தர்மம் வென்றதை கொண்டாடும் மஹோத்வஸம்.
முதலில் தசரதர் ராமரை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து பார்க்க ஆசைப்பட்டார். அது தடைப்பட்டாலும், முடிவில் ஸ்ரீராமர், ஸீதாதேவியும், ஹனுமாரும், சகோதரர்களும், வானர ராஜனான சுக்ரீவனும், ராக்ஷஸ ராஜனான விபீஷணனும் புடை சூழ பதினான்கு உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.
நம் போன்ற ராம பக்தர்களுக்கு என்றென்றும் ராஜா ராமபிரான் ஒருவரே அன்றோ!
ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் ஒலிப்பதிவு Srirama pattabhishekam slokams audio