
126. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் உத்தரவின்படி பஞ்சவடிக்கு வருகிறார். வழியில் ஜடாயு என்ற கழுகு அரசர் அவர்களை பார்த்து “நான் உன் தந்தை தசரதரின் நண்பன். இங்கு உங்களுக்கு அருகில் இருந்துகொண்டு முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சீதை தனியாக இருக்கும்போது அவளை பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறுகிறார்.

உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள் (30 min Audio in tamizh. Transcript given below)
ஸ்ரீமத்பாகவதத்தில் உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள்
அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார்
125. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியரை தரிசிக்கிறார். அகஸ்தியர் அவர்களை மிகுந்த அன்போடு வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு உணவு அளிக்கிறார். பின் அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு பகவானின் வில்லையும் அம்புறாதூணியையும் அளித்து “எப்படி இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டுள்ளானோ, அது போல ராமா, வெற்றியின் பொருட்டு நீ இந்த விஷ்ணு தனுசை ஏற்றுக் கொள். ” என்று வாழ்த்துகிறார்.
அகஸ்தியர் மஹிமை
124. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில், அகஸ்த்ய முனிவரின் மஹிமையை அவர்களுக்கு சொல்கிறார். அகஸ்தியர், வாதாபி இல்வலன் போன்ற ராக்ஷசர்களை அழித்ததும், விந்திய மலையின் கர்வத்தை அடக்கியதும், தென் திசைக்கே அகஸ்தியர் அபயம் அளித்ததும் கூறி “மிகுதியுள்ள வனவாசத்தை அகத்தியருக்கு தொண்டு செய்து இனிமையாக கழிப்போம்” என்று கூறுகிறார்.
ரிஷிகளோடு பத்து வருடங்கள்

123. ராமர் சீதையோடும் லக்ஷ்மணனோடும் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் இனிதே கழிக்கிறார். ஓரிடம் போகும் வழியில் ஒரு ஏரியின் உள்ளிருந்து இனிமையான சங்கீதமும் நாட்டிய சப்தமும் கேட்கிறது. ராமர் அருகிலிருந்த தர்மப்ருத் என்ற முனிவரிடம் என்ன இந்த ஆச்சர்யம் என்று கேட்கிறார். தர்மப்ருத் “மாண்டகர்னி என்ற முனிவர் தவத்தை கலைக்க இந்திரன் ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பினான். அந்த முனிவர் தன் தவத்தால் இளமையை வரவழைத்துக் கொண்டு இந்த ஏரியின் உள்ளே ஒரு மாளிகை அமைத்து அங்கு அவர்களோடு சுகித்து வருகிறார்’ என்று சொல்கிறார்.
ஸீதா ராம ஸம்பாஷணை
சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமத்தில் ராமர்
முனிவர்களுக்கு அபயம்
120. ராமர், சரபங்கர் ஆஸ்ரமத்திலிருந்து கிளம்புகிறார். தண்டக வனத்து முனிவர்கள் ராமரிடம் வந்து ராக்ஷசர்களால் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கூறி தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். ரிஷிகள் காமத்தையும் கோபத்தையும் தவத்தினால் கடந்து செல்ல முயன்று வருவதால், சாபம் கொடுக்க விரும்பாமல் க்ஷத்ரியரான ராமரிடம் முறையிடுகிறார்கள். ராமர் அவர்கள் பிரார்த்தனையை ஆணையாக ஏற்று, அவர்களுக்கு அரக்கர்களிடமிருந்து அபயம் அளிக்கிறார். பின்னர் ராமர் சுதீக்ஷ்ணர் என்ற முனிவரை சென்று வணங்குகிறார். சுதீக்ஷ்ணர் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்.
[தண்டகவனத்து முனிவர்களுக்கு அபயம்]




