By Mahaperiyava’s grace and Govinda Damodara Swamigal’s grace, I am glad to share the audio recording of Arya Shatakam from mooka pancha shathi in mp3 format. Even if you are not able to visit Kanchipuram , chant this stothram and Kamakshi devi will come and bless you where you are.
ஸத்கதா ச்ரவணம்
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய 12வது ஆராதனை இன்னும் ரெண்டு நாட்களில் 26ம் தேதி (26-01-2017) திருச்சிக்கு பக்கத்தில் பழூர் என்ற அக்ரஹாரத்தில் அவருடைய அதிஷ்டானத்தில் அவருடைய பக்தர்கள் எல்லாரும் விமரிசையாக கொண்டாடப் போறா. ஸ்வாமிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ராமாயண பாகவத பாராயண பிரவசனம் பண்ணிண்டு இருந்தார். மஹாபெரியவா ஸ்வாமிகள் கிட்ட நிறைய பாகவத சப்தாஹம் கேட்டிருக்கா.
தர்மாத்மா சத்யசந்தஸ்ச (Click on the link to hear a 24 min audio in tamil. Transcript given below)



ஸ்ருங்கேரி சாரதாம்பா காஞ்சி காமாக்ஷி (Click on the link to hear the above speech – 23 min audio in tamil)
மஹாபெரியவா ஆராதனை
இன்னிக்கு மகாபெரியவாளோட ஆராதனை. உலகம் முழுக்க நாம எல்லாரும் சந்தோஷமா கொண்டாடறோம். “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய”, அப்டீன்னு கச்யப்ப சிவாச்சாரியார், முருகப் பெருமானுடைய அவதாரத்தை பத்தி கந்த புராணத்துல பாடின மாதிரி, ஸ்வாமிநாதனா வந்து அவதாரம் பண்ணி தர்ம செங்கோலை வெச்சுண்டு நூறு வருஷம், அருளாட்சி பண்ணிணா பெரியவா. மஹாபெரியவாளை நினைக்கறது, பூஜிக்கறதுனால நமக்குதான் க்ஷேமம். அவருக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை. அவரை தியானம் பண்ணோம்னா, அவரை கொண்டாடினோம்னா நமக்கு இக பர சௌபாக்யங்கள் எல்லாமே கிடைக்கும்.
சூர்பனகை வந்தாள்

128. ராமர் ரிஷிகளோடும் சீதாதேவியோடும் பேசிக் கொண்டு இனிமையாக பொழுதைக் கழிக்கிறார். ஒரு நாள் அங்கே சூர்பனகை என்ற ராக்ஷசி வருகிறாள். அவள் ராமரைக் கண்டவுடன் காமவசப்பட்டு அவரிடம் “என்னை மணந்து கொள்” என்று கேட்கிறாள். ராமர் விளையாட்டாக “என் அருகில் என் பிரியமான மனைவி சீதை இருக்கிறாள். நீ என் தம்பி லக்ஷ்மணனிடம் கேள்” என்கிறார்.
ஹேமந்த ருது வர்ணனை
ஸரஸ்வதி பெரியவா

[ஸரஸ்வதி பெரியவா] (12 min audio)
நான் ஸ்வாமிகளை தரிசனம் பண்ணின பதினைஞ்சு வயசுல இருந்து, மஹா பெரியவா ஸித்தி ஆகிற வரைக்கும், அந்த ஒரு எட்டு வருஷத்துல, ஸ்வாமிகள், அடிக்கடி “நீ போய் பெரியவாளை தரிசனம் பண்ணு. அவாதான் காமாக்ஷி. உனக்கு மூக பஞ்சசதி கிடைச்சிருக்கு, போயி பாத்துட்டு வா”, அப்டீன்னு சொல்லுவார். நான், காஞ்சிபுரத்துல வந்து பெரியவாளைத் தள்ளி நின்னு, தரிசனம் பண்ணிட்டு வந்துடுவேன்.






